Sunday, August 31, 2014

மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான 1ம், 2ம் திருவிழாக்கள் ! ! ! 30.08.2014, 31.08.2014 (படங்கள் இணைப்பு)



மண்டைதீவு திருவெண்காடு சித்தி விநாயகர் தேவஸ்தான 1ம், 2ம் திருவிழா சிறப்பு பூஜை வழிபாடும் அர்ச்சனை ஆராதனையும் அத்துடன்  பண்ணிசை, சொற்பொழிவு போன்ற நிகழ்வுகளும்  இடம் பெற்றது.படங்கள் இணைப்பு

Saturday, August 30, 2014

அடியவர்களின் அரோகரா கோசம் முழங்க மண்டைதீவு திருவெண்காடனுக்கு கொடியேற்றம் ! ! ! 30.08.2014 (வீடியோ இணைப்பு)




வீடியோ www.thiruvenkadu.com
நன்றி.





முழுமையான  வீடியோ  www.nainativu.org
நன்றி.


அடியவர்களின் அரோகரா கோசம் முழங்க மண்டைதீவு திருவெண்காடனுக்கு கொடியேற்றம் ! ! ! 30.08.2014 (படங்கள் இணைப்பு)


மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவம் அடியவர்களின் அரோகராக்கோசத்ததுடனும் ஆலய காண்டா மணி ஒலிக்க மேளதாளங்கள் முழங்க கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. சித்தி விநாயகப்பெருமானின் திருவருளைப்பெறுவதற்கான பெருந்திரளா பக்தர்கள் ஆலயத்திற்கு வருகைதந்திருந்தனர்.படங்கள்  இணைப்பு

Friday, August 29, 2014

திருவெண்காட்டில் ஆவணி சதுர்த்தி விரத அனுஸ்டான சிறப்பு பூஜை வழிபாடு ! ! ! 29.08.2014 (படங்கள் இணைப்பு)


மண்டைதீவு-திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானத்தில் வீற்றிருந்து திருவருள் பாலித்துக்கொண்டிருக்கும் அம்பலவாணர் ஸ்ரீ சித்தி விக்கினேஸ்வரப் பிள்ளையாருக்கு அவணி சதுர்த்தி விரத அனுஸ்டான சிறப்பு பூஜை வழிபாடும் அர்ச்சனை ஆராதனையும் இடம் பெற்றது. படங்கள் இணைப்பு

விநாயக விரதங்களுள் மிக விசேஷமானது இந்த விரதம்.

Monday, August 18, 2014

ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி வரலாற்று சிறப்பும் பூஜைவழிபாடும் ! ! ! (17.08.2014)



அஷ்டமி திதியில் அவதரித்தவர் ஸ்ரீகிருஷ்ணர். இதனால் இந்த திதியானது கோகுலாஷ்டமி என்று போற்றப்படுகிறது. அஷ்டமி, நவமி திதியில் சுபகாரியங்கள் செய்யக் கூடாது என்பார்கள். காரணம், இந்த திதிகளில்தான் கிருஷ்ணரும், இராமரும் பிறந்து, அதிக கஷ்டங்களை சந்தித்துவிட்டார்கள் என்ற காரணம் சொல்லப்படுகிறது. (இராமர் பிறந்த நாள், இராம நவமி) ஆனால் முதலில் துன்பங்களை கண்ட இந்த இருவருமே, பிறகு சாதனையும், சக்தியும் படைத்தவராக திகழ்ந்தார்கள்.

Saturday, August 16, 2014

திருவெண்காட்டில் சனியின் தோஷத்தை போக்கும் சங்கடஹர சதுர்த்தி விரத அனுஷ்டானம் ! ! ! 14.08.2014



"அல்லல்போம் வல்வினைபோம் அன்னை வயிற்றில் பிறந்த 
தொல்லைபோம் போகாத் துயரம்போம் - நல்ல
குணமதிகமாம் அருணைக் கோபுரத்துள் வீற்றிருக்கும் செல்வக்
கணபதியைக் கைதொழுதக் கால்"

Tuesday, August 12, 2014

மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வருடாந்த மகோற்சவ பெருவிழா - 2014

வரலாற்று சிறப்புமிக்க மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகப் பெருமானின் (ஐய வருஷ) வருடாந்த மகோற்சவ பெருவிழாவானது 30.08.2014 சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 10 தினங்கள் சிறப்பாக நடை பெற எம் பெருமான் திருவருள் பாலித்துள்ளார்.


சித்திவிநாயகப்பெருமான் மெய்யடியார்களே!  அனைவரும் ஆச்சார சீலர்களாக ஆலயத்திற்கு வருகை தந்து எம்பெருமானின்  அபிஷேக, அலங்கார, தீபாராதனை, திருவீதியுலாகளில் கலந்துகொண்டு அவனது திருவருளை பெற்றுய்யும் வண்ணம் வேண்டுகின்றோம்.

Friday, August 8, 2014

திருவெண்காட்டில் மிகவும் சிறப்பாக நடைபெற்ற வரலட்சுமி விரதம்..08.08.2014 . (படங்கள் இணைப்பு)

இரண்டாம் இணைப்பு

பெண்கள் கொண்டாடும் முக்கியமான விரதங்களில் வரலட்சுமி விரத பூஜை குறிப்பிடத்தக்கது. மகாலட்சுமி வரங்களை அள்ளிக்கொடுப்பதற்கு பிரசித்தி பெற்ற தெய்வம் என்பதால் லட்சுமியை நினைத்து மேற்கொள்ளும் இந்த விரதம் வரலட்சுமி விரதம் என்று அழைக்கப்படுகிறது.

திருவெண்காட்டில் சகல சௌபாக்கியங்களையும் தரும் பிரதோச விரத வழிபாடு ! ! ! 08.08.2014


இறை வழிபாடு குறைகளை நீக்கி நிறைவு தரும். முக்கியமாக புண்ணிய நாட்களில் இறைவனை வழிபடுவது பெரும் பயன் தரும். காலத்திற்கு அதிக வலிமையுண்டு. காலமறிந்து ஒரு தர்மம் செய்தால் ஞால முழுவதும் நமது வசமாகும். காலத்தில் செய்வதற்கு அதிக பயன் கிட்டும்.

Thursday, August 7, 2014

திருவெண்காட்டில் மங்கலம் தரும் வரலட்சுமி விரதம் ! ! ! 08.08.2014


நலம் தரும் சொல் நாராயணா' என்பர். அதுபோல் மங்கலம் தரும் சொல் மகாலட்சுமி ஆகும். எங்கு மகாலட்சுமி இருக்கிறாளோ அந்த இடம் செல்வச் செழிப்பு பெறும். மகாலட்சுமியின் திருவருள் பார்வையில் படுவோர் அனைவரும் அனைத்து நலனும் பெற்றுச் சிறப்பாக வாழ்வார்கள். "அலைமகள்' என்று சொல்லப்படும் லட்சுமி தேவியைப் போற்றும் வகையில் பெண்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் விரதங்களில் முதன்மையானது வரலட்சுமி விரதம்.