Friday, September 25, 2015

திருவெண்காட்டில்அருள்மிகு ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமத் ஆனந்த நடராஐமூர்த்திக்கு புரட்டாதி மாத மகாபிஷேகம் ! ! ! 26.09.2015


பூலோக கயிலாயம் என்று அழைக்கப்படும் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமத் ஆனந்தநடராஜப் பெருமானுக்கு இடம்பெறுவதைப் போன்று திருவெண்காடு சுவேதாரணியம்பதி பூலோககைலாய புண்ணிய திவ்விய நாமசேஷ்திர பொற்சபையில் (பொன்னம்பலம்) வீற்றிருந்து ஆனந்த தாண்டவம்புரியும் அருள்மிகு ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமத் ஆனந்த நடராஐமூர்த்திக்கு புரட்டாதி மாத மகாபிஷேகம்  சனிக்கிழமை  26.09.2015  மாலை நடைபெறுகிறது.

Thursday, September 24, 2015

திருவெண்காட்டில் வாழ்வில் சகல நலன்களும் தரவல்ல பிரதோச வழிபாடு ! ! ! (25.09.2015)


பிரதோச வழிபாடு சிவ வழிபாட்டிற்குரிய மிகச் சிறப்பான மிக முக்கியமான வழிபாடாகும். தோசம் என்ற வடமொழிச்சொல்லிற்கு குற்றம் என்று பொருள். பிரதோசம் என்றால் குற்றமற்றது என்று பொருள். குற்றமற்ற இந்தப்பொழுதில் ஈசனை வழிபட்டோமானால் நாம் செய்த சகல பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம். 

Saturday, September 19, 2015

திருவெண்காட்டில் முக்தி தரும் புரட்டாசி சனி விரத ஆரம்பம் ! ! ! 19.09.2015


சனீஸ்வரன் காயத்ரி மந்திரம்:
பங்கு பாதாய வித்மஹே! சூர்ய புத்ராயா தீமஹி!!
தந்நோமந்த ப்ரசோதயாத்!!

ன்மத வருடம் 2015  புரட்டாதிச் சனி விரதம் இன்று 19 ஆம் திகதி புரட்டாதித் திங்கள் 2 ஆம் நாள் முதலாம் வார விரதமாகும். இவ்வருடம் ஐந்து சனிக்கிழமை விரதம் நிகழவுள்ளது.

Friday, September 18, 2015

திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானத்தில் நடைபெற்ற ஆவணி விநாயசதுர்த்தி விரத அனுஸ்டானங்கள் ! ! ! 17.09.2015 (படங்கள் இணைப்பு)


ண்டைதீவு-திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானத்தில் வீற்றிருந்து திருவருள் பாலித்துக்கொண்டிருக்கும் ஸ்ரீ அம்பலவாணர் சித்தி விக்கினேஸ்வரப் பிள்ளையாருக்கு அவணி சதுர்த்தி விரத அனுஸ்டான சிறப்பு அபிஷேக, ஆலங்கார, தீபாரதனை நடைபெற்று எம் பெருமான் திருவீதியுலா வந்து அடியவர்களுக்கு திருவருள் காட்சி கொடுத்தார். படங்கள் இணைப்பு

Wednesday, September 16, 2015

திருவெண்காட்டில் விநாயகப்பெருமானின் திரு அவதாரத்திருநாள் ஆவணிச் சதுர்த்தி ! ! ! 17.09.2015


ஆவணி மாதம் வரும் 'சதுர்த்தி' திதியை 'விநாயகர் சதுர்த்தி' என்று அழைக்கின்றோம். அன்றைய தினம் நாம் விரதமிருந்து முறையாக ஆனை முகனை வழிபட்டு அருகிலிருக்கும் விநாயகர் ஆலயங்களுக்குச் சென்று அருகம்புல் மாலையிட்டு கணபதியைக் கொண்டாடினால், பெருகும் பொன்னை அள்ளி அவர் பெருமையுடன் நமக்களிப்பார்.

Saturday, September 12, 2015

மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான தேர்த் திருவிழா சிறப்பு மலர்கள் - 28.08.2015


மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர்  தேவஸ்தான தேர்த் திருவிழா சிறப்பு மலர்கள். வலம்புரி நாளிதழ் மற்றும் சென்னியூர் இணையத்தளத்தினால் 28.08.2015 அன்று வெளியிடப்பட்ட சிறப்பு மலர்கள் இணைப்பு.

Thursday, September 10, 2015

‪திருவெண்காட்டில் பாவங்களை போக்கும் பிரதோஷ வழிபாடு‬ ! ! ! (10.09.2015)


சிவபெருமானை நாம் நாள் தோறும் வணங்குகிறோம். ஆனாலும் பிரதோஷ காலத்தில் எம்பெருமானை ஆலயம் சென்று வணங்குவது சிறந்த பயனை அளிக்கும். 

மாதந்தோறும் இருமுறை - வளர்பிறை, தேய் பிறை திரயோதசி (13 ம் நாள்) நாட்கள் பிரதோஷ தினங்களாகும். 

Monday, September 7, 2015

மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகப் பெருமானுக்கு 1008 சங்காபிஷேகம். 05-09-2015 (படங்கள் இணைப்பு)


திருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து திருவருள் பாலித்திக் கொண்டிருக்கும் ஸ்ரீ சித்திவிநாயகப் பெருமானுக்கு 1008 சங்காபிஷேகமும் ஸ்ரீ காசிவிசாலாட்சியம்மையம்மை சமேத ஸ்ரீ காசிவிஸ்வநாத பெருமானுக்கும் ஸ்ரீ மஹாலட்சுமி, ஸ்ரீதேவி பூதேவி சமேத நாராயணர், மகாவல்லி, கஜவல்லி சமேத செந்தில்நாதபெருமானுக்கும் , வைரவபெருமானுக்கும் 108 சங்காபிஷேகமும் ஏனைய பரிவார முர்த்திகளுக்கு ஸ்நமன கலச சங்காபிஷேகமும் இடம்பெற்றது. படங்கள் இணைப்பு