Saturday, January 30, 2016

விநாயகப் பெருமானிடம் ஔவையார் என்ன கேட்டார் ? சிறப்புக்கட்டுரை ! ! !


வையார் சங்க காலத்தில் வாழ்ந்த ஒரு தலைச்சிறந்த புலவர் ஆவார். செழுமையான தமிழ்மொழியும், செங்கோல் மன்னர்களின் நல்லாட்சியும் நிலவியிருந்த பொற்காலம். பக்திக்கு இலக்கணமாய்த் திகழ்ந்தவர், ஔவையார். அவர் விநாயகப் பெருமானிடம் மனமுருகி பாடுகிறார்.

“பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் இவை 
நாலும் கலந்து உனக்கு நான் தருவேன் 
கோலம்செய் துங்கக் கரி முகத்துத் தூமணியே! 
நீ எனக்குச் சங்கத் தமிழ் மூன்றும் தா.”

Tuesday, January 26, 2016

திருவெண்காட்டில் வேண்டுவோருக்கு வேண்டுவன அருளும் சங்கடஹர சதுர்த்தி ! ! ! 27.01.2016


விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதற்கு பல விரத தினங்கள் இருந்தாலும் விரதத்தில் மிகச் சிறந்ததும், பழமையானதும் சங்கடங்கள்
அனைத்தையும் தீர்க்கக்கூடிய சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்தால் அளவு கடந்த ஆனந்தத்தை அடையலாம். சகல சௌபாக்கியங்களையும் பெறலாம்.

Monday, January 25, 2016

திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான பஞ்சதள இராஜகோபுர கட்டுமான திருப்பணிகளின் தற்போதைய நிலை 25.01.2016 (படங்கள் இணைப்பு)


"கோபுர தரிசனம் கோடி புண்ணியம்" கோபுரத்தை தரிசிப்பதே கோடிபுண்ணியம் என்றால் அக்கோபுரத்தை அமைக்கும் திருப்பணிக்கு உதவுவது எவ்வளவு பெரிய புண்ணியம்.  இவ் வருடம் (2016) ஆவணி மாதம் சித்திவிநாயப் பெருமானின் பஞ்சதள இராஐகோபுர மகா கும்பாபிஷேக பெருஞ்சாந்தி விழா நடைபெற இருப்பதனால்

இப் பெருங் கைங்கரியத்தில் உங்களுடைய உழைப்பும் சேர விரும்பும் எம் பெருமான் மெய்யடியார்கள் விரைந்து இணைந்து வெண்காட்டு பெருமானின் பெருங்கருணைக்கு பாத்திரமாகி மனிதப் பிறவியின் பெரும் பேற்றை அடைவோம்.

Saturday, January 23, 2016

திருவெண்காட்டில் “ தொட்டதெல்லாம் துலங்கும்” தைப்பூசத் திருநாள் ! ! ! 24.01.2016

மிழ் கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும். 27 நட்சத்திர மண்டலங்களில் எட்டாவது நட்சத்திரம் பூசம் ஆகும். தை மாதத்திலே வரும் பூச நட்சத்திரம் புண்ணிய நாள் தைப்பூச விழாவாக இந்துக்களால் கொண்டாடப்படுகின்றது. தைப்பூசம் வரும் நாள் பெரும்பாலும் நிறைமதி நாளாக (பூரணை நாளாக) இருக்கும்.

தைப்பூசம் முருகப்பெருமானுடைய விஷேட தினமாகும். அன்றைய தினம் குழந்தைகளுக்கு தோடு குத்துதல், ஏடு தொடக்குதல் போன்றவற்றை சிறப்பாக செய்து வைப்பார்கள்.

Wednesday, January 20, 2016

திருவெண்காட்டில் இதயம் கனிந்து ஈசன் நமக்கு அதிகமான நலன்களை வழங்கும் பிரதோச வழிபாடு ! ! ! 21.01.2016


பிரதான தோஷங்களை நீக்குவதுதான் பிரதோஷ வழிபாட்டின் முக்கிய சிறப்பு. யார் ஒருவரது ஜாதகத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் குறைந்தது 4 தோஷங்களாவது இருக்கும். எத்தனை தோஷங்கள் இருந்தாலும், பிரதோஷ தினத்தில் சிவனை வழிபடுவதன் மூலம் பயன்பெறலாம். 

Thursday, January 14, 2016

தைப்பொங்கல் திருநாள் வழிபாடு நேர அட்டவணை - 2016


மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகப்பெருமான் மெய்யடியார்கள் அனைவருக்கும் தைப்பொங்கல் திருநாள் , தமிழர்திருநாள் நல்வாழ்த்துக்கள். 

இவ் இனிய திருநாளில் திருவெண்காடு புண்ணியசேஷ்திரத்தில் வீற்றிருந்து திருவருள் பாலித்துக்கொண்டிருக்கும் ஸ்ரீ சித்திவிநாயகப்பெருமானை வழிபட்டு அவன் திருவருவளைப் பெற்றுய்யும் வண்ணம் வேண்டுகின்றோம்.

Tuesday, January 12, 2016

திருவெண்காட்டில் எல்லா வளங்களும் தரவல்ல விநாயகர் சதுர்த்தி விரதம் ! ! ! 13.01.2016


விநாயகர் சதுர்த்தி விரதத்தை ஒரு கொண்டாட்டமாகவே நாம் கருதலாம். விநாயகர் மிகவும் எளிமையான கடவுள். யார் கூப்பிட்டாலும் ஓடோடி வந்து அருள் தருவார். 

அதனால்தான் அவர் எல்லாருக்கும் பொதுவாகவும், யாரும் சுலபமாக வழிபடும் வகையிலும் இருக்கிறார்.

Saturday, January 9, 2016

திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் வணக்கம் ! ! !


திருவெண்காடு சித்தி விநாயகர் வணக்கம் ! ! !

மங்கலத்து நாயகனே மண்ணாளும் முதலிறைவா! 
பொங்குதன வயிற்றோனே பொற்புடைய ரத்தினமே 
சங்கரனார் தருமதலாய் சங்கடத்தைச் சம்கரிக்கும் 
எங்கள் குல விடிவிளக்கே எழில்மணியே சித்தி விநாயகனே! 

Wednesday, January 6, 2016

திருவெண்காட்டில் துன்பங்கள் நீங்கி இன்பங்கள் பெற பிரதோச வழிபாடு ! ! ! 07.01.2016


சிவபெருமானை நாம் நாள் தோறும் வணங்குகிறோம். ஆனாலும் பிரதோஷ காலத்தில் எம்பெருமானை ஆலயம் சென்று வணங்குவது சிறந்த பயனை அளிக்கும். 

மாதந்தோறும் இருமுறை - வளர்பிறை, தேய் பிறை திரயோதசி (13 ம் நாள்) நாட்கள் பிரதோஷ தினங்களாகும்.