Tuesday, May 21, 2019

யாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காட்டில் சகல சௌபாக்கியங்களும் தரவல்ல சங்கடஹர சதுர்த்தி ! ! ! 22.05.2019



ஒரு நாளில் ஒரு வேளை திருவெண்காட்டில் உறையும்

சித்தி விநாயகனை நினைத்துவிடு

உயிர்கள் யாவும் உந்தனது சொந்தம் என கருதிவிடு

நீயும் இன்று வாழ்ந்துவிடு பிறரையும் வாழ விடு...


இந்த எண்ணம் உனக்கிருந்தால்

திரு அருள் துணை இருக்கும்

தினம் தினம் மனம் துதிக்கும்

அவன் அருள் நலம் சேர்க்கும்


பிள்ளையார் சுழி போட்டு நீ நல்லதை தொடங்கிவிடு . . .

Thursday, May 16, 2019

யாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காட்டில் வையகத்தில் நல்ல வாழ்க்கை அமையும் வைகாசி விசாக திருநாள் ! ! ! 18.05.2019


நாளை மறுதினம் வைகாசி விசாக திருநாள். வைகாசி விசாகம் அன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டால் மழலைப்பாக்கியம் உடனே கிடைக்கும்.

சக்தியிடம் முருகன் விசாகனாக தோன்றிய நாள்தான் வைகாசி விசாகம் ஆகும். அதனால்தான் முருகப் பெருமானுக்கு வைகாசி விசாகத்திருநாள் ஓர் பெருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இதன் பின்னணியில் ஒரு வரலாறு உள்ளது. ஒருமுறை அசுரர்களின் கொடுமைகளை தாங்க முடியாமல் தேவர்கள் சிவபெருமானிடம் சென்று தமது குறைகளை முறையிட்டனர். 

சிவபெருமான் அசுரர்களுடைய கொடுமையை களைந்து அவர்களை காத்தருள விரும்பினார். தமது நெற்றிக்கண்ணில் இருந்து தீப்பொறிகளைத் தோற்று வித்தார். அவை தேவர்களினால் கங்கையில் கொண்டு விடப்பட்டன. கங்கை சரவணப் பொய்கையிலே கொண்டு சேர்த்தது.