Wednesday, February 12, 2020

மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தானத்தில் சங்கடஹர சதுர்த்தி ! ! ! 12.02.2020


அற்புதக் கீர்த்தி வேண்டின் மண்டைதீவு சென்று சித்திவிநாயகரைத் தரிசிக்கவேண்டும் .

இன்று 12/2/2020 புதன்கிழமை சங்கடஹர சதுர்த்தி நாள் அன்று திருவெண்காடு சென்று சித்திவிநாயகரைத் தரிசிக்க அந்த சித்தி விநாயகரின் பரிபூரண அருளும் முக்தியும் கிடைத்த உணர்வு!-அதனை வார்த்தைகளால் விவரிக்க முடியாது பிள்ளையார் என்ன சொல்கிறார்? ‘யாமிருக்கும் இடத்தில் சகல செல்வங்களும் பெருகும் திருவெண்காடு சித்தி விநாயகர் திருவடிகளே சரணம் !

Saturday, February 8, 2020

ஆனந்தம் விளையாடும் திருவெண்காட்டில் தைப்பூசத் திருநாள் ! ! ! 08.02.2020

மிழ் கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும். 27 நட்சத்திர மண்டலங்களில் எட்டாவது நட்சத்திரம் பூசம் ஆகும். தை மாதத்திலே வரும் பூச நட்சத்திரம் புண்ணிய நாள் தைப்பூச விழாவாக இந்துக்களால் கொண்டாடப்படுகின்றது. தைப்பூசம் வரும் நாள் பெரும்பாலும் நிறைமதி நாளாக (பூரணை நாளாக) இருக்கும்.