Saturday, February 21, 2015

திருவெண்காட்டில் விநாயகர் சதுர்த்தி விரத அனுஸ்டானங்கள் ! ! ! ( 22.02.2015 )


திருக்கயிலை மலையில் சிவபெருமான் - அம்பிகை இருவரின் திருப்பார்வை கடாட்சத்தில் இருந்து தோன்றி அருளியவர் பிரணவ சுவரூபரான ஸ்ரீவிநாயகக் கடவுள்.

Monday, February 16, 2015

திருவெண்காட்டில் மகத்துவம் பொங்கும் மகா சிவராத்திரி விரத அனுஸ்டானங்கள் ! ! ! ( 17.02.2015)


மகா சிவராத்திரி நாளில் சிவன் கோயில்களுக்குச் சென்று ஈஸ்வரனை வழிபட்டால் மன அமைதி, முன்னேற்றம், தீய சக்திகள் வேரோடு அகலுதல் போன்ற  நன்மைகள் நமக்கு உண்டாகும்.

திருவெண்காட்டில் பிரதான தோசங்கள் நீக்க வல்ல பிரதோச வழிபாடு 16. 02. 2015 ! ! !


பிரதான தோஷங்களை நீக்குவதுதான் பிரதோஷ வழிபாட்டின் முக்கிய சிறப்பு. யார் ஒருவரது ஜாதகத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் குறைந்தது 4 தோஷங்களாவது இருக்கும். எத்தனை தோஷங்கள் இருந்தாலும், பிரதோஷ தினத்தில் சிவனை வழிபடுவதன் மூலம் பயன் பெறலாம்.

Thursday, February 12, 2015

ஸ்ரீ விநாயகப் பெருமானின் முதல் அவதாரம் (விநாயகர் புராணம் விளக்கும் அவதார ரகசியம்)


விநாயகப் பெருமான், அனைத்தையும் உள்ளடக்கிய, அனைத்துக்கும் மூலமான பிரணவத்தின் பரிபூரண திருவடிவம். ஒரு முறை சிவபெருமானும், அம்பிகையும் திருக்கயிலை மலையில் அமைந்துள்ள பிரணவ மண்டபத்துக்கு எழுந்தருளும் பொழுது, திருச்சுவற்றில் உள்ள 'ஆனை வடிவ' சிற்பத்தில் இறைவன் - இறைவி' இருவரின் திருப்பார்வையும், ஒரு சேரப் பதிந்தது.

Saturday, February 7, 2015

திருவெண்காட்டில் சகல யோகமும் தரவல்ல சங்கடகர சதுர்த்தி ! ! ! 07. 02 . 2015



பிள்ளையாரை வழிபட சங்கடகர சதுர்த்தி நாள் மிகவும் ஏற்றது. பவுர்ணமியை அடுத்த நான்காம் நாள் தேய்பிறையில் வரும் சதுர்த்தி நாளையே ‘சங்கடஹர சதுர்த்தி’ என்பர். சங்கடங்களை அழிப்பதால் இது சங்கடஹர சதுர்த்தி எனப்படுகிறது. 

Tuesday, February 3, 2015

திருவெண்காட்டில் தன்னிகரற்ற தைப்பூச திருநாள் தரிசித்தால் ஞானம் நம்வசம் ! ! ! 03.02.2015 (சிறப்புக் கட்டுரை)



தைமாதத்தில் வரும் பூச நட்சத்திரம் இந்துக்களால் பண்டுதொட்டு புண்ணியநன்னாளாகக் கணிக்கப்பட்டு இறைவழிபாட்டுக்குரிய முக்கிய தினமாகக் கொள்ளப்பட்டு வருகின்றது. இந்துக்களால் கணிக்கப்படும் இருபத்தியேழு நட்சத்திரங்களில் பூச நட்சத்திரம் எட்டாவதாக அமைகின்றது. தைமாதத்தில் வரும் பூச நட்சத்திரம் பௌர்ணமியுடன் கூடிய நாளாக அமைவதும் சிறப்புடையது. இந்நாளை தைப்பூசநன்னாளென்று கொண்டு இறைவழிபாட்டிற்கு உத்தமமானநாளாகக் கொள்கின்றோம்.