Thursday, March 29, 2018

யாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காடு ஆனந்தபுவனத்தில் ஆனந்த வாழ்வளிக்கும் பங்குனி உத்திர திருநாள் ! ! ! 30.03.2018


ங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரம் வரும் நாள் பங்குனி உத்திரம் – இது நம் அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் அதைச் சிறப்பாக ஏன் கொண்டாட வேண்டும்?பொதுவாக, நம் முன்னோர் ஒவ்வொரு மாதமும் முழு நிலவு தினத்தை (பௌர்ணமியை)ச் சிறப்பாகக் கொண்டாடி வந்துள்ளனர். பொதுவாக மாதங்களின் பெயர்களே, அம்மாதங்களின் முழுநிலவு தின நட்சத்திரத்தின் பெயரை ஒட்டியே வழங்கப்பட்டு வந்துள்ளன.உதாரணமாக சித்திரை மாதத்து முழுநிலவு சித்திரை நட்சத்திரத்தை ஒட்டியே இருக்கும்.

Wednesday, March 28, 2018

யாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காடு ஆனந்தபுவனத்தில் பல கோடி புண்ணியத்தை தரவல்ல பிரதோஷ வழிபாடு ! ! ! 28.03.2018


பிரதோச வழிபாடு என்பது இந்துக்களால் அமாவாசை மற்றும் பௌர்ணமி முடிந்து பதிமூன்றாம் நாள் வரும் திரயோதசி அன்று மாதம் இரு முறை மேற்கொள்ளப்படுகிறது. இவ்வழிபாட்டின் கதாநாயகன் சிவபெருமான் ஆவார்.

சிவனை வழிபாடு செய்யும் முறைகளில் இவ்வழிபாட்டு முறை முக்கியமானதாகக் கருதப்படுகிறது. பிரதோச காலம் என்பது திரயோதசி அன்று மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை உள்ள காலமாகும்.

Tuesday, March 20, 2018

யாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காடு ஆனந்தபுவனத்தில் மங்களம் அருளும் சக்தி கணபதி சதுர்த்தி விரதம் ! ! ! 21.03.2018


தெய்வங்களுக்கு எல்லாம் தெய்வமாக வணங்கப்படுபவர் விநாயகர். அதனால்தான் அவரை முழு முதல் கடவுள் என்கிறோம். தடைகளை விலக்கி நாம் தொடங்கும் எல்லா செயல்களிலும் வெற்றியை அளிப்பவர் கணபதி.


1. விநாயகர் சகஸ்ரநாமம்:

சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம்
ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே

Tuesday, March 13, 2018

யாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காடு ஆனந்தபுவனத்தில் உலகை காத்த உத்தமனின் பிரதோச வழிபாடு ! ! ! 14.03.2018


சிவபெருமானை நாம் நாள் தோறும் வணங்குகிறோம். ஆனாலும் பிரதோஷ காலத்தில் எம்பெருமானை ஆலயம் சென்று வணங்குவது சிறந்த பயனை அளிக்கும். 

மாதந்தோறும் இருமுறை - வளர்பிறை, தேய் பிறை திரயோதசி ( 13 ம் நாள் ) நாட்கள் பிரதோஷ தினங்களாகும். 

இந்நாட்களில் மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரையிலான நேரம் பிரதோஷ காலமாகும். இந்த நேரத்தில் பரமசிவனை வணங்கி வழிபட்டால் மற்ற நாட்களில் ஏற்படும் துன்பங்கள் நீங்கி இன்பம் பெறலாம் என்பது நம்பிக்கை.

Saturday, March 3, 2018

யாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காடு ஆனந்தபுவனத்தில் ஆனந்த வாழ்வு தரும் சங்கடஹர சதுர்த்தி விரத அனுஸ்டானங்கள் ! ! ! 04.03.2018


வன் ஒருவன் மண்டைதீவு திருவெண்காடு சித்தி விநாயகப்பெருமானை தொடர்ந்து வழிபட்டு வருகிறானோ ...

அவன் எந்த நிலையில் இருந்தாலும், எவ்வளவு ஏழ்மையில் இருந்தாலும், அவன் செல்வம், செல்வாக்கு, புகழ் என உச்சத்திற்கு சென்று விடுவான். அவன் ஜாதகத்தில் கெடுதல் செய்யும் கிரஹங்கள் கூட அவனுக்கு நன்மை மட்டுமே செய்யும், அவன் விதிப்படி நடக்கும் கெடுதல் கூட சித்தி விநாயகபெருமானை வழிபாட்டால் மாறிவிடும். நினைத்தது நிறைவேறும், பாவங்களும், சாபங்களும் தீரும்.

மங்களத்து நாயகனே மண்ணாளும் முதல் இறைவா!
பொங்குதன வயிற்றானே பொற்புடைய ரத்தினனே!
சங்கரனார் தருமதலாய்ச் சங்கடத்தைச் சங்கரிக்கும்
எங்கள்குல விடிவிளக்கே எழில்மணியே
திருவெண்காடுறை சித்திவிநாயகனே!