Monday, December 24, 2018

பாலுக்குப் பாலகன் வேண்டி அழுதிடப் பாற்கடலை ஈந்த திருவெண்காட்டு பெருமானின் ஆருத்ரா தரிசனம் ( 23.12.2018 ) படங்கள் இணைப்பு


மார்கழி திருவாதிரை ஆருத்ரா தரிசனத்தையொட்டி மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான பொற்சபையில் (பொன்னம்பலம்) வீற்றிருந்து ஆனந்த தாண்டவம் புரியும் அருள்மிகு ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்பாள் உடனுறை அழகிய ஆனந்த நடராஐமூர்த்திக்கு 23.12.2018 அன்று அதிகாலை 4 மணியளவில் சிறப்பு மஹாஅபிஷேகம் (திருமஞ்சனம்) அலங்காரம் தீபாராதனைகள் நடைபெற்று அதனைத் தொடர்ந்து அம்மையும் அப்பனும் திருவீதி உலா வலம் வந்து அடியவர்களுக்கு பூலோக கைலாய தரிசனம் கொடுத்தார்கள்.

Friday, December 21, 2018

யாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காடு புண்ணிய நாம சேஷத்திரத்தில் பிரபஞ்சத்தின் உண்மையை உணர்த்தும் ஆருத்திரா தரிசனம் ! ! ! 23.12.2018


யாழ்ப்பாணம் மண்டைதீவில் புகழ்பெற்ற திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் திருக்கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் ஆனி திருமஞ்சனமும், மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனமும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

சிகர நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசனம் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. அன்று அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை பொற்சபை பொன்னம்பலத்தில் ஆனந்தநடராஐ மூர்த்திக்கும், சிவகாமசுந்தரி அம்பாளுக்கும் மகாஅபிஷேகம் நடக்கிறது.

தேவ தேவனாகிய சிவபெருமானது மார்கழித்திருவாதிரைத் திருவிழாவைத் இந்திரன் முதலான தேவர்கள் பலரும் ஒருங்கு கூடி சிறப்பித்தனர் என்பதை "ஆரார் வந்தார் அமரர் குழாத்தில் அணிவுடை ஆதிரை நாள் நாராயணனோடு நான்முகன் அங்கி இரவியும் இந்திரனும் தேரார்வீதியில் தேவர் குழாங்கள் திசையனைத்தும் நிறைந்து பாரார் தொல்புகழ் பாடியும் ஆடியும் பல்லாண்டு கூறுதுமே" என்று சேந்தனார் பாடிப்பரவுகிறார். 

Monday, December 17, 2018

யாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காடு புண்ணிய நாம சேஷத்திரத்தில் முத்தி தரும் வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பு ! ! ! 18.12.2018


வைகுண்ட ஏகாதசி (18.12.2018) நாளில், அதன் பெருமையையும் சாந்நித்தியத்தையும் உணர்ந்து பெருமாளை ஸேவிப்போம். சகல செளபாக்கியங்களையும் பெறுவோம்!
தேவர்கள் முதலான அனைவரையும் துன்புறுத்தி வந்தான் அசுரன் முரன். அசுரனிடமிருந்து தங்களை காக்குமாறு ஈசனை சரணடைந்தனர் தேவர்கள். ஈசனோ, தேவர்களை மகாவிஷ்ணுவிடம் முறையிடச் சொன்னார்.

Friday, December 14, 2018

யாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காடு புண்ணிய நாம சேஷத்திரத்தில் பூர்வ ஜன்ம பாவம் போக்கும் திருவெம்பாவை!!! 14.12.2018 - 23.12.2018


திருவெம்பாவை விரதத்தை சைவ சமயத்தவர்கள் மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நாளுக்கு ஒன்பது நாட்களுக்கு முன்னர் நோன்பை ஆரம்பித்து பத்தாவதுநாள் திருவாதிரை அன்று நிறைவு செய்வார்கள். ஆனால் வைணவ சமயத்தவர்கள் மார்கழி மாதம் முழுவதும் நோன்பு இருந்து வணங்குவார்கள்.
மார்கழி மாதம் தஷிண அயனத்தின் இறுதி மாதமாகும். மார்கழி மாதத்தில் தில்லைச் சிதம்பரத்தில் கோயில் கொண்டருளிய நடராஜப் பெருமானைத் தரிசிக்க தேவர்கள் ஒன்றுகூடுவதாக ஐதீகம் உண்டு. தேவர்களுக்கு இம்மாதம் அதிகாலைப் பொழுதாகும். இக்காலத்தில் (வைகறையில்) சுவாமி தரிசனம் செய்வது உத்தமமாகக் கருதப்படுகின்றது. அக்காலத்தைப் பிரம்ம முகூர்த்தம் என்றும் அழைப்பர்.