பஞ்ச தள இராஜ கோபுர திருப்பணி வேலைகள்

Wednesday, March 15, 2017

திருவெண்காடு புண்ணிய சேஷத்திரத்தில் சங்கடஹர சதுர்த்தி ! ! ! 16.03.2017


சங்கடஹர சதுர்த்தி நன்நாளில் மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான திருப்பல்லாண்டை பாடி துன்பங்களை தீர்க்கும் தும்பிக்கையான் திருக்கோவில் நாடி தூயவனின் திருவடியை வணங்குவோம்.

Friday, March 10, 2017

திருவெண்காடு பொற்சபையில் ஆடல் அரசனுக்கு மாசி மாத வளர்பிறை சதுர்த்தி திருநீராடல் ! ! ! 11.03.2017


நாள் : 11-03-2017 சனிக்கிழமை மாலை மாசி மாத வளர்பிறை சதுர்த்தசி திதி

இடம் : அருள்மிகு திருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தானம்
மண்டைதீவு யாழ்ப்பாணம் இலங்கை

இவ்வுலகில் நம் ஆலயங்களில் ஆறுகாலப் பூசை நிகழ்வதைப்போல், தேவர்களும் இறைவனுக்கு தினமும் ஆறு நேர பூசை செய்வதாக சாத்திரங்கள் கூறுகின்றன.

Thursday, March 9, 2017

திருவெண்காடு புண்ணிய சேஷத்திரத்தில் எல்லா தேவர்களையும் தரிசித்த புண்ணியம் கிட்டும் பிரதோஷ வழிபாடு ! ! ! 10.03.2017


மசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதியபடி பிரதோஷ காலத்தில் ஈசனைப் பிறையணிந்த பெருமானாக தேவியோடும், முருகனோடும் சோமாஸ்கந்த மூர்த்தியாகத் தரிசித்து கண்ணீர் மல்க வழிபாட்டால் வேறு புண்ணியம் செய்ய வேண்டுமோ?

நந்தியம்பெருமான் தன்னை நாடோறும் வணங்குவோருக்கு
புந்தியில் ஞானம் சேரும் பொலிவுறு செல்வம் கூடும்
குலமுறை தழைத்தே ஓங்கும் குணம் நிறை மக்கள் சேர்வர்
சிந்தையில் அமைதி தோன்றும் சிறப்புறும் வாழ்வு தானே."

Thursday, March 2, 2017

திருவெண்காட்டில் இடையூறுகளை விலக்கி காரிய வெற்றியளிக்கவல்ல சதுர்த்தி ! ! ! 01.03.2017


"அன்பினுக்கு இரங்கும் அருக்கடல்!..
திருவெண்காடுறை சித்திவிநாயகனின்
திருக்கழல் சிந்தை செய்வோம்!."

விநாயகர் சதுர்த்தி வேளையில் ஔவையார் அருளிய விநாயகர் அகவலைப்பாடி சித்தி விநாயகப்பெருமானை வணங்கி வளம் பெறுவோம் ! ...

விநாயகர் அகவல் 

சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலவிசை பாடப்
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் (05)

Friday, February 24, 2017

திருவெண்காட்டில் மகத்துவம் நிறைந்த மஹா சிவராத்திரி சிறப்புக்கட்டுரை ! ! ! 24.02.2014


சிவ சிவ என்கிலர் தீவினையாளர்
சிவ சிவ என்றிடத் தீவினை மாளும்
சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவார்
சிவ சிவ என்னச் சிவகதி தானே!
லகம் சிவமயமாக இருக்கின்றது என்று முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். மாசி மாதம் என்றாலே மகம் நட்சத்திரம் தான் நினைவிற்கு வரும். அது போல சிவராத்திரி திருநாளும் மறக்கமுடியாத மகத்துவம் நிறைந்த நாளாகும். அம்பிகைக்கு உகந்த நாள் நவராத்திரி. அது ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுகின்றது. அணிதிகழும் சிவனுக்கு கொண்டாடும் விழா சிவராத்திரி விழா. அது ஓரிரவு முழுவதும் விழித்திருந்து கொண்டாடப்படுகிறது.

Wednesday, February 22, 2017

திருவெண்காட்டில் நலம் தரும் பிரதோஷ வழிபாடு ! ! ! 23.02.2017பிரதோஷ வேளையில் பஞ்சபுராணம் பாடுவோம்

தேவாரம்

நங் கடம்பனைப் பெற்றவள் பங்கினன்
தென் கடம்பைத் திருக்கரக் கோயிலான்
தன் கடன்அடி யேனையும் தாங்குதல்
என் கடன்பணி செய்து கிடப்பதே.

Monday, February 13, 2017

திருவெண்காட்டில் சங்கடஹர சதுர்த்தி விரத அனுஸ்டானங்கள் ! ! ! 14.02.2017விநாயகர் துதி

கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி
கப்பிய கரிமுக ...... னடிபேணிக்

கற்றிடு மடியவர் புத்தியி லுறைபவ
கற்பக மெனவினை ...... கடிதேகும்

மத்தமு மதியமும் வைத்திடு மரன்மகன்
மற்பொரு திரள்புய ...... மதயானை

மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
மட்டவிழ் மலர்கொடு ...... பணிவேனே

முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய ...... முதல்வோனே

முப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம்
அச்சது பொடிசெய்த ...... அதிதீரா

அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்
அப்புன மதனிடை ...... இபமாகி

அக்குற மகளுட னச்சிறு முருகனை
அக்கண மணமருள் ...... பெருமாளே.

Thursday, February 9, 2017

திருவெண்காட்டில் குமரக் கடவுள் உமையம்மையிடம் வேல் பெற்ற திருநாள் தைப்பூசத்திருநாள் (09.02.2017)

தைப்பூசம் என்பது சைவ சமயத்தவர்களால் கொண்டாடப்பட்டு வரும் ஒரு விழாவாகும். நட்சத்திர வரிசையில், பூசம் எட்டாவது நட்சத்திரமாகும். தைமாதப் பூச நட்சத்திரம் பெரும்பாலும் பவுர்ணமியில் வரும். முருகனுக்கு உகந்த நாள்.

Tuesday, February 7, 2017

திருவெண்காட்டில் எல்லா தேவர்களையும் தரிசித்த புண்ணியத்தை பெறும் பிரதோஷ வழிபாடு ! ! ! 08.02.2017


பிரதோஷம் என்னும் இவ்விரதம் சிவமூர்த்திக்கு உரிய விரதங்களால் தலையாயது. விரதம் ஏற்பவர்கள், வளரபிறை, தேய்பிறை என்ற இரண்டு பட்சங்களாலும் வரும் திரயோதசி திதியில் அதிகாலையில் எழுந்து நீராடி நித்திய கடன்களை முடிக்க வேண்டும். பிறகு சிவபுராணம், சிவ நாமாவளாகளை படித்து, முடிந்தவர்கள் மௌன விரதம் இருந்து, மாலையில் கோயில் சென்று, சிவதரிசனம் செய்து, நந்திக்கு பச்சரிசி வெல்லம் படைத்து, நெய்தீபம் ஏற்றி வணங்கி வருதல் வேண்டும். பிரதோஷ விரதம் முடிந்ததும், வேதம் ஓதும் அந்தணர்களுக்கு தானம் வழங்கி விரதத்தை பூர்த்தி செய்தல் நலம்.