Saturday, November 22, 2014

திருவருள் மிகு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம் மண்டைதீவு - இலங்கை



இந்துசமுத்திரத்தின் முத்து என வர்ணிக்கப்படும் ஸ்ரீமத் இலங்காபுரியில் சைவத் தமிழர்கள் செறிந்து வாழும் வட மாநிலத்தின் தலை நகராம் யாழ்ப்பாணத்தின் தென் திசையில் வங்கக்கடலலைகள் தாலாட்டும் சப்த தீவுகளின் தலைத்தீவாக விளங்குவது மண்டைதீவு.  இங்கு திருவெண்காடு என்னும் புண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து திருவருள் பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ அம்பலவாணர் சித்தி விக்கினேஸ்வரப் பிள்ளையாரின் வரலாற்றுச் சிறப்புக்களும் பழமைகளும் இக்கட்டுரையில் இணைக்கப்பட்டுள்ளது.


மூலவர் :  ஸ்ரீ அம்பலவாணர் சித்தி விக்கினேஸ்வரப்பிள்ளையார்

  
உற்சவர் : ஸ்ரீ சித்திவிநாயகப்பெருமானும் ஸ்ரீ பாலசுப்பிரமணியரும்

 
அம்மை:     ஸ்ரீ சிவகாமியம்பாள் , ஸ்ரீ காசிவிஸாலாட்சியம்பாள்


அப்பன் : ஸ்ரீ ஆனந்த நடராஐ மூர்த்தி , ஸ்ரீ காசிவிஸ்வநாதமூர்த்தி


பரிவாரமூர்த்திகள் :

ஸ்ரீ தம்பவிநாயகர், கொடிமரம், ஸ்ரீ நந்தி பலிபீடம், ஸ்ரீ காசிவிஸ்வநாதமூர்த்தி சமேத ஸ்ரீ காசிவிசாலாட்சியம்பாள் , ஸ்ரீ தட்சணாமூர்த்தி ,ஸ்ரீ மாணிக்கவாசகர், ஸ்ரீ மஹாலட்சுமியம்பாள்,  ஸ்ரீ லக்ஷ்மிகணபதி, ஸ்ரீதேவி பூமிதேவி நாராயணர், ஸ்ரீ கஐவல்லி மகாவல்லி சமேத செந்தில்நாதர் , ஸ்ரீ சனிஸ்வரபகவான், ஸ்ரீ துர்க்கைஅம்பாள், ஸ்ரீ சண்டேஸ்வரர், ஸ்ரீ நவக்கிரகங்கள், ஸ்ரீ காலவைரவர், ஸ்ரீ தேரடிவைரர்.

தல விருட்சம் : ஆலமரம்

தீர்த்தம் : வெண்காட்டு ஆனந்ததீர்த்தம்

ஆகமம்/பூஜை : சிவாகமம்

பழமை :  500 வருடங்களுக்கு முற்பட்ட ஆலயம்

புராண பெயர் : திருவெண்காடு

ஊர் : மண்டைதீவு
             

வலயம் : தீவகம்
 
மாவட்டம் : யாழ்ப்பாணம்

மாநிலம் : வடமாநிலம்
 

வழிபட்டோர் :

இலங்கைநாயக முதலியார், குலநாயக முதலியார், ஐயம்பிள்ளை உடையார் வழித்தோன்றல்கள்  மண்டைதீவு கிராமமக்கள், அயல் கிராமமக்கள்

பூசித்தோர் : ஸப்த கன்னியர்கள் 

(பிராம்மி, மகேசுவரி, கௌமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, சாமுண்டி)

பாடியவர்கள்:

அகிலேஸ்வர சர்மா ( திருவுஞ்சல் , கும்மி , எச்சரிக்கை , பராக்கு , லாலி , மங்களம் )

திருவிழாக்கள்: 

ஆவணிமாத பூரணையை  தீர்த்தோற்சவமாக கொண்டு பத்துதினங்கள் மகோற்சவ பெருவிழா  இடம்பெறும்.

வருடத்திற்கு ஒருமுறை 1008 சங்காபிஷேகம் (மகாகும்பாபிஷேகதினம்) இடம்பெறும்.

தைப்பொங்கல், தைப்பூசம், மகாசிவராத்திரி, சங்கடஹரசதுர்த்தி, பிரதோசவிரதம், சதுர்த்திவிரதம், நடராஐர்அபி்ஷேகம், ஏகாதசிவிரதம், ஆனிஉத்தர திருமஞ்சனதரிசனம், கந்தசஷ்டிவிரதம், கௌரிகாப்புவிரதம் ஆடிஅமாவாசை, ஆடிப்பூரம், வரலட்சுமிவிரதம், நவராத்திரி விரதம், கார்த்திகை சர்வாலயதீபம், விநாயகர் ஷஷ்டிவிரதம், பிள்ளையார் பெருங்கதை, ஆவணிச்சதுர்த்தி, கந்தபுராணப்படிப்பு, மார்கழி திருவாதிரை ஆருத்திராதரிசனம், திருவெம்பாவை, திருவாதவுர்புராணப்படிப்பு  முதலிய விசேட திருவிழாக்களும்  இடம்பெறும்.

தல சிறப்பு:  

மூர்த்தி தலம் தீர்த்தம்  இந்த மூன்று சிறப்பு அம்சங்களும் இணைந்த அற்புததலம்.

திருக்கைலாயம் தேவலோகம் இந்திரலோகத்து வெள்ளையானை திருவெண்காடு எனும் புண்ணிய பதியில் சிறுபராயம் முதல் சிவபக்தனாக விளங்கிய ஐயம்பிள்ளை உடையாருக்கு ஆலமரநிழலில் காட்சி கொடுத்து ஆலயாமாகிய ஸ்ரீ அம்பலவாணர் சித்தி விக்கினேஸ்வரப்பிள்ளையார்.

ஸப்த கன்னியர்கள்  அர்த்தயாமப் பூசை செய்தார்கள்.
      
திறக்கும் நேரம்: 

காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும் 

பூஜை நேரம்: 

காலை 7 மணி
மதியம் 12மணி
மாலை 5 மணி
  
முகவரி:

அருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம்
திருவெண்காடு - மண்டைதீவு.
யாழ்ப்பாணம்  - இலங்கை.
  
போன்:
  
00 94(0)21 321 3937

00 94(0)77 638 4031
00 33(0)62 010 8123

இணையத்தளம்:

ஈமெயில் :


போக்குவரத்து: 

யாழ்ப்பாண பெருநகரில் இருந்து திருவெண்காடு மண்டைதீவை நோக்கி பேருந்து மணித்தியாலத்திற்கு ஒருதடவை செல்கின்றது.
  
பொது தகவல்:
 

திருவெண்காடு சிவத்தமிழ் அறநெறிப்பாடசாலை  திருவெண்காடு அமுதசுரபி அன்னதானமடம்    திருவெண்காடு வணிக நிலைய கட்டடம் .


பிரார்த்தனை :

எந்த காரியங்கள் தொடங்கினாலும் சித்திவிநாயகரை வணங்கி விட்டு தொடங்கினால் காரியங்களில் வெற்றி உறுதி. வழிபடுவோர்க்கு மனநிம்மதி 
கிடைக்கும். உடல் சம்பந்தப்பட்ட எந்த நோயானாலும் தீரும். இத்தலத்தின் மேல் அதீத ஆர்வம் கொண்டு பிரார்த்தனை செய்தால் அவரவர் விரும்பிய வண்ணம் சிறப்பான எதிர் காலம் அமையும் என்பது நம்பிக்கை. குடும்ப ஐஸ்வர்யம் குழந்தை பாக்கியம், திருமணத்தடை, கல்வி, தொழில், வியாபாரம் ஆகியவற்றுக்காகவும் இத்தலத்தில் பக்தர்கள் பிரார்த்தனை செய்து கொள்வது வழக்கமாக உள்ளது.
  
நேர்த்திக்கடன்: 

சித்தி விநாயகருக்கு சிதறு தேங்காய் போடுதல், மோதகம் படைத்தல், அருகம்புல் மாலை சாற்றி வஸ்திரம் அணிவித்தல், பாலாபிஷேகம் செய்தல் முதலியன. இவை தவிர சதுர்த்தி விரதம் இருத்தல், ஏழைகளுக்கு அன்னதானம் செய்தல், திருப்பணிக்கு பொருளுதவி செய்தல் ஆகியவை இத்தலத்துக்கு வருபவர்கள் நேர்த்திகடன்களாக செய்கிறார்கள்.

     
தலபெருமை:

இங்கே அழகிய சிவகாமியம்பாள் உடனுறை அழகிய ஆனந்த நடராஐமூர்த்தி பொற்சபையில் (பொன்னம்பலம்) வீற்றிருந்து ஆனந்த தாண்டவம் புரிகிறார்கள் இவர்களுக்கு வருடத்தில் ஆறு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. அதில் இரண்டு விஷேடமாக நடைபெறுகின்றது. அதில் ஒன்று ஆனி உத்தர திருமஞ்சன தரிசனம் மற்றையது மார்கழி திருவாதிரை ஆருத்திரா தரிசனம் இவ்விரண்டிலும் அம்மையும் அப்பனும் திருவீதிஉலா வலம் வந்து அடியவர்களுக்கு புலோக கைலாய தரிசனம் கொடுப்பார்கள்.

ஸ்ரீ நடராஜபெருமானின் 6  அபிஷேக தினங்கள்

எமது ஒருவருடமே தேவர்களின் ஒருநாளாகும். எமக்கு எவ்வாறு சிவாலயங்களில் 6 கால பூஜை ஆகமங்களில் விதிக்கப்பட்டதோ அவ்வாறே தேவர்களும் சிவபெருமானை 6 காலங்களும் பூஜித்து அருள் பெறுகின்றனர். அந்த 6 காலங்களுமே ஆனந்த நடராஜ மூர்த்தியின் 6 அபிஷேக  தினங்களாகும். இந்தத் தினம் தவிர வேறு எந்த நாட்களிலும் நடராஜருக்கு அபிடேகம் நடப்பதே இல்லை. அவையாவன…

1, **மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரம்,- தேவர்களின் அதிகாலை பூஜை, (தனுர்மாத பூஜை),- சிறப்பு அபிசேகம் , நடராஜர் உற்சவம்

2, மாசி மாதம் வளர்பிறை சதுர்த்தசி திதி - தேவர்களின் காலை சந்தி பூஜை,-அபிசேகம் மட்டும்.

3, சித்திரை மாதம் திருவோண நட்சத்திரம் – தேவர்களின் உச்சிக்கால பூஜை,- அபிசேகம் மட்டும்.

4, ***ஆனி மாதம் உத்திர நட்சத்திரம் – தேவர்களின் சாயங்கால பூஜை.- சிறப்பு அபிசேகம் , நடராஜர் உற்சவம்.

5, ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தசி திதி - தேவர்களின் இரண்டாம் கால பூஜை,- அபிசேகம் மட்டும்.

6, புரட்டாசி மாதம் வளர்பிறை சதுர்த்தசி திதி – தேவர்களின் அர்த்தஜாம பூஜை.- அபிசேகம் மட்டும்.

 

சிறப்பம்சம்: 

அதிசயத்தின் அடிப்படையில்: முருகப்பெருமானுக்கு 6 படை வீடு இருப்பது அனைவருக்கும் தெரியும். அதே போல் விநாயகப்பெருமானுக்கும் ஆறு படை வீடு இருக்கிறது.

  1.  திருவண்ணாமலையார்  கோவிலில் (அல்லல் போக்கும் விநாயகர்)
  2. விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் (ஆழத்துப்பிள்ளையார்)
  3. திருக்கடையூர் அபிராமி கோவிலில் (கள்ளவாரணப்பிள்ளையார்) 
  4. மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் (சித்தி விநாயகர்) 
  5. பிள்ளையார்பட்டி கோவிலில் (கற்பக விநாயகர்) 
  6. திருநாரையூர் கோவிலில் (பொல்லாப்பிள்ளையார்)

7வது படைவீடாக மண்டைதீவு திருவெண்காடு திவ்விய நாமசேஷ்திர ஆலமர நிழலில் வீற்றிருந்து திருவருள் பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ அம்பலவாணர் சித்தி விக்கினேஸ்வரப்பிள்ளையார்.

  
தல வரலாறு:
  
தெட்சண கைலாயம் எனப் போற்றப்படும் இலங்கா புரியில் சைவத் தமிழர்கள் செறிந்து வாழும் வட மாநிலத்தின் தலை நகராம் யாழ்ப்பாணத்தின் தென் திசையில் அமைந்துள்ள சப்த தீவுகளின் தலைத்தீவாக விளங்குவது மண்டைதீவு.

செந்நெல் வயல்களும், சிறு தானியங்களும், புகையிலையும், மா, பனை, தென்னை முதலிய விருட்சங்களும் செழித்து விளங்குவதும், செந்தமிழ் கற்றறிந்த பண்டிதர்களும், சைவநெறி வழுவாத சான்றோர்களும், செல்வந்தர்களும் வாழுகின்ற குரைகடல் நித்திலம் ஒலிக்கும் கிராமம் மண்டைதீவாகும்.

இப்பதியின் கண் வசித்து வந்த வேளான்குடி மக்களில் இலங்கை நாயக முதலியின் புதல்வன் குலநாயக முதலி அவர்களின் புதல்வன் ஐயம்பிள்ளை உடையார்.

இவர்களின் குடும்பத்தவர்கள் சிறந்த ஒழுக்கமும் சமய ஆசார விதிகளில் ஒழுங்கு தவறாமலும், சீவகாருண்யம் உள்ளவர்களாகவும், மக்களில் அன்புள்ளவர்கள்களாகவும், சிவ தொண்டு செய்பவர்களாகவும், செல்வச் சீமான்களாகவும் விளங்கினார்கள். ஐயம்பிள்ளை உடையார் இளம் பராயம் முதல் சிறந்த சிவ பக்தராக விளங்கியதுடன் சிவதொண்டு மக்கள் தொண்டு செய்வதில் அதிக விருப்புடனும் செயற்பட்டு வந்தார்.

இவர் 1773ம் ஆண்டு மண்டைதீவின் மையப் பகுதியில் அமைந்துள்ள திருவெண்காடு என அழைக்கப்படும் பகுதியில் ஸ்ரீ அம்பலவாணர் சித்தி விக்னேஸ்வரப் பிள்ளையார் கோயிலை ஸ்தாபித்தார்.

இவ்வாலயத்தை இவர் அமைப்பதற்கு ஏதுவாக ஓர் ஐதீகக் கதை கூறப்பட்டு வருகிறது.


 வெள்ளையானை வடிவில் தோன்றிய விநாயகர் :

 மண்டைதீவின் மையப்பகுதியில் அமைந்துள்ள திருவெண்காடு எனும் குறிச்சி அக்காலத்தில் பற்றைகளும், திருக்கொன்றை, வேம்பு முதலிய மரங்களும் நிறைந்த அடர்ந்த காட்டுப்பகுதியாக திகழ்ந்தது.

இக்காட்டில் ஓர் பெரிய ஆல விருட்சமும் காணப்பட்டது. இக்கிராமத்தின் வட பகுதியில் வசித்த மக்கள் தென்பகுதிக்கு இக்காட்டின் ஊடாகவே சென்று வந்தார்கள். அவர்கள் சென்ற பாதை அந்த ஆல விருட்சத்தின் அருகாமையில் அமைந்து இருந்தது.

ஒரு நாள் மாலை நேரம் ஐயம்பிள்ளை உடையார் இப்பாதை வழியாக சென்று இவ் ஆல விருட்சத்தை கடந்து கொண்டிருக்கையில், தன்னை பின் பக்கத்தினால் ஏதோ ஒன்று பிடித்து இழுப்பது போன்ற பிரமை அவருக்கு ஏற்பட்டது.

அவர் திணுக்குற்று திரும்பிப் பார்த்த போது ஆல விருட்சத்தின் கீழ் பெரிய வெள்ளை யானை ஒன்று தன் துதிக்கையை அவரை நோக்கி நீட்டிய வண்ணம் நின்றது.

இதைக் கண்ணுற்ற ஐயம்பிள்ளை உடையார் ஆச்சரியப்பட்டார். இதன் போது யானை ஆலமரத்தின் மறுபக்கம் சென்று மறைந்துவிட்டது. இச்சம்பவம் அவருக்கு ஓர் அதிசயமாகவும், மிகுந்த பயமாகவும் இருந்த போதும் அவர் அவ் யானையை பார்க்க வேண்டும் என்ற ஆவலுடன் அச்சுற்றாடலில் தேடினார்.

ஆனால் அவரால் யானையை மீண்டும் காண முடியவில்லை. அவர் இச்சம்பவத்தை தனது உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், ஊர்மக்களுக்கும் தெரிவித்து அவர்களுடன் கலந்து ஆலோசித்தார்.

அவர்கள் எல்லோரும் பிள்ளையார் தான் இவ்வாறு காட்சி அளித்தார் என்ற கருத்தை கூறினார்கள். இதன் காரணமாகவே அவர் அவ் ஆலய விருட்சத்தின் அருகில் பிள்ளையார் ஆலயத்தை அமைத்தார் என்று கூறப்படுகிறது.


பிற்காலத்தில் கோயிலுடன் கூடிய தொடர்பு கொண்டும் திருத்தொண்டுகள் செய்தும் வந்த மக்களில் பலர் தாம் காணும் கனவுகளில் கோயிலில் இருந்து வெள்ளை யானை ஒன்று வெளிப்பட்டு ஊரைச்சுற்றி வருவதாகவும் தங்கள் அருகில் வந்து நிற்பதாகவும் கூறி அதிசயித்தனர்.




போரின் பின் மீண்டெழுந்து அருள்பாலிக்கும் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் ! ! !



திருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து  அருள்பாலிக்கும் சித்திவிநாயகப் பெருமான் . . . (படங்கள்)

மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தானம்


'வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் நோக்குண்டாம் மேனிநுடங்காது பூக்கொண்டு துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம் தப்பாமற் சார்வார் தமக்கே.’



இவ்வாலயத்தில் மூலமூர்த்தியாக அம்பலவாணர் ஸ்ரீ சித்தி விக்கினேஸ்வரப் பிள்ளையாரும் ஸ்ரீ சிவகாமிஅம்பாள் சமேத ஸ்ரீ ஆனந்தநடராஐமூர்த்தியும் பரிவாரமூர்த்திகளாக ஸ்ரீ தம்பவிநாயகர் கொடிமரம் ஸ்ரீ நந்தி பலிபீடம் ஸ்ரீ காசிவிஸ்வநாதர் சமேத ஸ்ரீ விசாலாட்சியம்மை, ஸ்ரீ தட்சணாமூர்த்தி ,ஸ்ரீ மாணிக்கவாசகர், ஸ்ரீ மஹாலட்சுமி,  ஸ்ரீ லக்ஷ்மிகணபதி, ஸ்ரீதேவி பூமிதேவி நாராயணர், ஸ்ரீ வள்ளி தெய்வனை சேனாதிபதி, ஸ்ரீ சனிஸ்வரபகவான், ஸ்ரீ துர்க்கைஅம்பாள், ஸ்ரீ சண்டேஸ்வரர், ஸ்ரீ நவக்கிரகங்கள், ஸ்ரீ காலவைரவர், ஸ்ரீ தேரடிவைரவரும்

அம்பலவாணர் ஸ்ரீ சித்தி விக்கினேஸ்வரப் பிள்ளையார்

ஸ்ரீ சிவகாமி அம்பாள் சமேத  ஸ்ரீ ஆனந்த நடராஐ மூர்த்தி


ஸ்ரீ தம்பவிநாயகர் கொடிமரம்




ஸ்ரீ நந்தி பலிபீடம்



ஸ்ரீ காசிவிஸ்வநாதர்


ஸ்ரீ காசிவிசாலாட்சியம்மை

ஸ்ரீ தட்சணாமூர்த்தி

ஸ்ரீ மாணிக்கவாசக சுவாமிகள்

ஸ்ரீ மஹாலட்சுமி

ஸ்ரீ லக்ஷ்மி கணபதி

ஸ்ரீதேவி பூமிதேவி நாராயணர்

ஸ்ரீ கஐவல்லி மகாவல்லி சமேத செந்தில்நாதர்

ஸ்ரீ சனிஸ்வரபகவான்

ஸ்ரீ துர்க்கை அம்பாள்

ஸ்ரீ கால வைரவர்

ஸ்ரீ நவக்கிரகங்கள்

ஸ்ரீ சண்டேஸ்வரர்

ஸ்ரீ தேரடிவைரவர்

எழுந்தருளி மூர்த்திகளாக
ஸ்ரீ சித்தி விநாயகப்பெருமானும்  ஸ்ரீ பாலமுருகனும்


ஸ்ரீ சித்தி விநாயகப்பெருமானும்  ஸ்ரீ பாலமுருகனும்


மண்டைதீவு திருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து மண்டைதீவு கிராம மக்களையும் அகில உலக மக்களையும் அனைத்து ஐீவராசிகளையும் காத்து திருவருள் பாலித்துக் கொண்டு இருக்கின்றார்.

மண்டைதீவு திருவெண்காடு திருவருள் மிகு சித்திவிநாயகர் தேவஸ்தான சுற்று சூழல் (படங்கள்)



பஞ்சதள இராஐகோபுர வாசல்




ஆலய முன்றல்


ஆலய  தெற்கு நுழைவாயில்

தெற்கு திருவீதி

ஸ்ரீ சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீ ஆனந்த நடராஐ மூர்த்தி 
தெற்கு வாசல்






மேற்கு திருவீதி




வடக்கு திருவீதி




ஆலய வடக்கு நுழைவாயில்

                                             
                               
                                                  ஆலய வணிக நிலைய கட்டடம்
         இங்கே ******  
                               
     * அஞ்சல் அலுவலகம்
     * கிராம சேவகர் அலுவலகம்
     * மளிகை கடை
     * அரைக்கும் ஆலை    (மில்)
     * திருவெண்காடு சித்திவிநாயகர் ஆலய பஸ் தரிப்பு நிலையம் 
                              (பிள்ளையார் கோவிலடி மண்டைதீவு)

பாலமுருகனின்  தேர்க்கொட்டகை

ஈசான மூலை
ஆலய மணிக் கோபுரம்

ஆலய மடம் 


சித்திவிநாயகரின்  தேர்க்கொட்டகை வாயில்



சித்திவிநாயகரின் ஸ்தலவிருட்சம் (ஆலமரம்)


                                           சித்திவிநாயகரின்  தேர்க்கொட்டகை 


                                                          ஆலயக் கேணி




ஆலயக் கேணிக்கு அருகாமையில்
வேலணை பிரதேசசபை நன்னீர் தாங்கி


ஆலய மேற்குவீதியில் அமைந்துள்ள

      *  சிவத்தமிழ் அறநெறிப்பாடசாலை
     * அமுதசுரபி அன்னதான மடம்          
         *  வெண்காட்டு தீர்த்தக்கிணறு              
* ஆலய அர்ச்சகரின் வீடு                   
               



சித்திவிநாயகர் ஆலய அமுதசுரபி அன்னதான மடம்




ஆலய வெண்காட்டு தீர்த்தக்கிணறு

ஆலய அர்ச்சகரின் வீடு

 ஆலய வடக்கு உள் வீதியில் அமைந்துள்ள நந்தவனம்




ஓம் கம் கணபதயே நமஹ...!!

தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!
மேன்மைகொள் சைவநீதி . . . !
விளங்குக உலகமெல்லாம் . . . !
இன்பமே சூழ்க . . . !
எல்லோரும் வாழ்க . . . ! 


 "திருச்சிற்றம்பலம்" '' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்''