Wednesday, March 19, 2014

திருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான இராஜகோபுர கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை .. 19.03.2014 (வீடியோ இணைப்பு)


மண்டைதீவு திருவெண்காடு சித்தி விநாயகர் ஆலய பஞ்ச தள இராஜ கோபுர திருப்பணி வேலைகள் எம் பெருமான் துணைகொண்டு மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்று வருகின்றது.

அந்த வகையில் இது வரையில் பூர்தியாகியுள்ள திருப்பணி வேலைகளின் வீடியோ,படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.


Monday, March 17, 2014

பாவங்கள் போக்கும் பங்குனி உத்திரம் ..... ! ! !பங்குனி உத்தரம் என்பது சைவக் கடவுளாகிய முருகனுக்குரிய சிறப்பு விரத தினமாகக் கொண்டாடப்படுகிறது. இது பங்குனி மாதத்தில் வரும் உத்தர நட்சத்திர தினமாகும். தமிழ் மாதங்களில் 12ம் மாதம் பங்குனி. நட்சத்திரங்களில் 12ம் நட்சத்திரம் உத்தரம். எனவே 12 கை வேலவனுக்குச் சிறப்பான தினமாகக் கொண்டாடப்படுகிறது. அநேகமான முருகன் கோயில்களில் இத்தினத்தில் வருடாந்த திருவிழாக்கள் (மஹோற்சவம்) நடைபெறும்.

Friday, March 14, 2014

திருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சித்திவிநாயகப் பெருமான் . . . (படங்கள்)

மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தானம்


'வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் நோக்குண்டாம் மேனிநுடங்காது பூக்கொண்டு துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம் தப்பாமற் சார்வார் தமக்கே.’

Thursday, March 13, 2014

கவலைகள் போக்கும் கணேச பஞ்சரத்னம் . . . ! ! !


இந்த கணேச பஞ்சரத்னத்தை தினமும் காலையில் கணபதியை மனதில் தியானித்துக் கொண்டு பாராயணம் செய்து வந்தால் நோயின்றி, குறையேதுமின்றி, நல்ல கல்வி, நன்மக்கட்பேறு, அஷ்ட ஐஸ்வர்யங்களும் பெற்று நீண்ட ஆயுளுடன் வாழலாம்.

Monday, March 10, 2014

பிள்ளையார் எறும்பு என்ற பெயர் பிறந்த கர்ண பரம்பரைக் கதை ! ! !


முப்பத்து முக்கோடி தேவர்கள் முதல் ஓரறிவு கொண்ட உயிரினங்கள் வரை எல்லா ஜீவன்களுக்கும் படியளப்பவர் பரமேஸ்வரன். இதை அறியாதவளா பார்வதிதேவி ஆனாலும் அவளுக்கு, ‘இந்தத் தொழிலை ஈசன் சரிவர கவனிக்கிறாரா?’ என்றொரு சந்தேகம். அதற்குத் தீர்வு காண முனைந்தாள். 

சிறு பாத்திரம் ஒன்றை எடுத்து வந்து அதற்குள் கறுப்பு எறும்புகள் சிலவற்றைப் பிடித்துப் போட்டு மூடி விட்டாள். ‘இந்த எறும்புகளுக்கு ஈசன் எப்படி உணவு அளிக்கிறார், பார்க்கலாம்!’ என்பது அவளது எண்ணம்.

Thursday, March 6, 2014

விநாயகப்பெருமான் எந்த இடத்திலும் எந்த தோற்றத்தில் காட்சி தந்தாலும் பக்தர்கள் கேட்கும் பிரார்த்தனையை நிறைவேற்றி மகிழ்ச்சி தர வல்லவர்.
விநாயகப் பெருமான் அருள்பாலிக்கும் முக்கிய திருக்கோவில்களும் அவரின் தோற்றமும் அவரின் அற்புதச்செயல்களும் சிறப்புக்கட்டுரை 

ஆதிமுதல்வன் என்று போற்றப்படுபவர் பிரணவ வடிவினரான விநாயகப் பெருமான். அவர் இல்லாத இடமில்லை என்று சொல்லும்வண்ணம், எங்கெங்கும் கோவில் கொண்டுள்ளவர் அவர். அவரது சில திருத்தலங்கள்..

Monday, March 3, 2014

எந்தெந்த மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் பிள்ளையார் என்னென்ன பலன் தருவார் ...அரச மர நிழலும், வன்னி மர நிழலும் ஆனைமுகன் விரும்பி அமரும் இடங்கள். இவை மட்டுமின்றி, மேலும் பல்வேறு மரங்களின் கீழும் வீற்றிருந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். எந்தெந்த மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகப் பெருமானை, வழிபடும் அடியவர்களுக்கு என்னென்ன பலன் கிட்டும் என்பதைப் பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.