Wednesday, January 23, 2019

யாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காட்டில் எண்ணியவாறே எல்லா காரியங்களிலும் வெற்றி கிட்டும் சங்கடஹர சதுர்த்தி ! ! ! 24.01.2019

ங்கடஹர சதுர்த்தி வரும் அதிகாலையில் எழுந்து வீட்டில் உள்ள விநாயகரை முதலில் தரிசித்து விட வேண்டும். பின்னர் குளித்து முடித்து விநாயகருக்கு விளக்கேற்றி, அருகம்புல் அல்லது கிடைத்த மலர்களை வைத்து பூஜிக்கலாம். தூப தீப, நைவேத்தியம் செய்வது சிறப்பானது. அன்று முழுவதும் அதாவது மாலை வரை உபவாசம் இருப்பது நல்லது.


மாலை வேளையில் அருகில் உள்ள கணபதி கோயிலுக்குச் சென்று சங்கடஹர சதுர்த்தி பூஜையில் கலந்து கொள்ள வேண்டும். வசதி இருந்தால் அபிஷேகம், அர்ச்சனை செய்யலாம். பிரசாதமும் அளிக்கலாம்.

Sunday, January 20, 2019

யாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காட்டில் உலகம் போற்றும் வாழ்க்கை அமையும் தைப்பூச திருநாள் ! ! ! 21.01.2019


தைப்பூசம் அன்று விரதம் இருந்து, பால், பழம் சாப்பிட்டு மாலையில் கந்தன் புகழ்பாடி, கந்தப்பம் நைவேத்யம் படைத்து, முருகப்பெருமானை வழிபட்டால் எந்த நாளும் இனிய நாளாக அமையும்.

தமிழ் கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம். இது தை மாதத்தில் பூச நட்சத்திரத்தன்று பவுர்ணமி தினத்தன்றோ அல்லது அந்த தினத்தையட்டியோ ஓரிரு நாள் முன்பின் தைப்பூசம் கொண்டாடப்படுகின்றது. இந்த நாளில் ஆறுபடை வீடுகள் உள்ளிட்ட அனைத்து முருகன் கோவில்களிலும், எல்லா சிவன் கோவில்களிலும் திருவிழாக்கள் நடைபெறும்.

Friday, January 18, 2019

யாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காட்டில் சுபிட்சம் தரும் சுக்கிர வார பிரதோஷம் ! ! ! 18.01.2019


தை மாதத்தின் முதல் பிரதோஷம் இன்று. எனவே இன்றைய நாளில் (18.01.19), மறக்காமல் சிவ தரிசனம் செய்யுங்கள். மேலும் சுக்கிர வாரம் என்று சொல்லப்படும் வெள்ளிக்கிழமை அன்று வந்துள்ள பிரதோஷத்தில், நந்திதேவரையும் சிவனாரையும் தரிசித்தால், சுபிட்சம் நிலவும். வாழ்க்கை வளமாகும்!

தை மாதம் பிறந்து வருகிறது முதல் பிரதோஷம் இன்றைய தினம். தை மாதத்தில் வருகிற பிரதோஷ நாளில், சிவாலயம் சென்று வழிபடுவது வளமும் நலமும் தந்தருளும் என்பார்கள்.

Monday, January 14, 2019

யாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காட்டில் விண்ணுக்கும் மண்ணுக்கும் நன்றி செலுத்தும் தைப்பொங்கல் திருநாள் ! ! ! 15.01.2019


தை பொங்கல் திருநாளான நாளை 15ஆம் தேதி காலை 7.30 மணி முதல் 9 மணி வரை பொங்கல் வைக்கவும், சூரியனுக்கு படையல் போட்டு பூஜை செய்யவும் நல்ல நேரமாகும். உலகிற்கு ஒளி கொடுக்கும் கதிரவனின் வடதிசை பயணத்தின் துவக்கமும், தென்திசை பயணத்தின் முடிவும் பொங்கலாக கொண்டாடப்படுகிறது.

தை மாதம் முதல் நாள் அன்று உலகிற்கு வெளிச்சம் கொடுத்து விளைச்சலுக்கு உதவி புரியும் சூரியன், தாய் மண், கால்நடைகள் அனைத்துக்கும் மரியாதை செய்யும் விதமாக பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது.


மழைக்குக் காரணமான இந்திரன், பயிர் நன்றாக வளர்ந்து தானியங்கள் அதிகமாக விளைவதற்கு காரணமான சூரியன், இந்திரனுடைய சகோதரன் உபேந்திரன் ஆகியோர்களுக்கு நன்றி கூறும் விதமாகவும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

Wednesday, January 9, 2019

யாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காட்டில் விக்கினங்கள் தீர்க்க வல்ல விநாயகர் சதுர்த்தி வழிபாடு !!! 09.01.2019


விநாயகர் சதுர்த்தியன்று அவருக்கு இஷ்டமான 21 வகை யான பச்சிலைகளை வைத்து பூஜை செய்தால் இன்னும் விசேஷம். எவ்வளவு பலகாரங்கள், பழங்கள் என ஆடம்பரமாக வைத்தாலும் வைக்காவிட்டாலும் இந்த 21 இலைகள் வைத்து வழிபட்டால் நினைத்தது அத்தனையும் நிறைவேறும்.

Thursday, January 3, 2019

யாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காட்டில் வாழ்வை வளமாக்கும் குருவார பிரதோஷம்!


குருவாரத்தில், அதாவது வியாழக்கிழமையில் பிரதோஷ பூஜையைத் தரிசியுங்கள். குடும்பத்தில் எல்லா சத்விஷயங்களும் நடந்தேறும். இனிமையாக வும் குதூகலத்துடனும் வாழ்வீர்கள்.

குருவாரம் என்று சொல்லப்படும் வியாழக்கிழமை யில் பிரதோஷம் வருவது ரொம்பவே சிறப்பு வாய்ந்தது. இந்த நாளில், மாலை வேளையில், அருகில் உள்ள சிவாலயத்திற்குச் செல்லுங்கள். நந்திதேவர், சிவபெருமான், குருவாரம் என்பதால் நவக்கிரகத்தில் உள்ள குரு பகவான், கோஷ்டத்தில் உள்ள குரு தட்சிணாமூர்த்தி முதலானோரை கண்ணாரத் தரிசியுங்கள். மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள்.