Wednesday, July 29, 2015

திருவெண்காட்டில் ஏழ்மையை விரட்டும் பிரதோஷ வழிபாடு ! ! ! 28.07.2015


சிவனை வழிபட ஏற்ற காலம் சாயரட்சை. அதிலும் சிறந்தது சோமவாரம். அதனினும் சிறந்தது மாத சிவாரத்திரி. அதனினும் சிறந்தது பிரதோஷம். பிரதோஷ தரிசனம் செய்பவர்கள் எல்லா தேவர்களையும் தரிசித்த புண் ணியத்தை பெறு கிறார்கள். ஏழ்மை ஒழியவும், நோய் தீரவும், கெட்ட நோய்களின் துயர் மடியவும் பிரதோஷ வழிபாடு சிறந்ததாகும்.

Saturday, July 25, 2015

விநாயகர் அகவல் பிறந்த கதை !!!


"சீதக் களபச் செந்தாமரைப் பூம்பாதச்சிலம்பு' என்று ஔவையார்பாடிய விநாயகர் அகவல் தித்திக்கும் தேவகானம். இந்த அகவலில்சில வார்த்தைகள் நமக்குப் புரியாது. ஆனால், விநாயகருக்குமிகவும் பிடித்த பாடல் இது. விநாயகரே ஔவையார் முன் நேரில்தோன்றி, அவரைப் பாடும் படி சொல்லி, தலையாட்டிக் கேட்டபாடல் இது.!! (திருக்கோவிலூர் வீரட்டானத்தில் அருளியது)

Friday, July 24, 2015

பன்னிரண்டு இராசிக்காரர்களுக்கும் ராசியின் பலனைப் பெருக்கிடும் ராசி கணபதி வழிபாடு ! ! !



வாழ்வில் கணபதி வழிபாடு மிக முக்கியமானது. பன்னிரண்டு ராசிக்காரர்க்கும் உரிய கணபதி வழிபாட்டு முறைகளையும் வழிபாட்டு மந்திரங்களையும் அவற்றிற்கான அர்சனைகளையும் பற்றி  பார்ப்போம்.

Monday, July 20, 2015

மண்டைதீவு - திருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் இடம்பெற்ற "சதுர்த்தி" விரத வழிபாடு ( 19.07.2015) படங்கள் இணைப்பு


ண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தானத்தில் 19.07.2015 அன்று சதுர்த்தி விரத சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனைகள் நடைபெற்று அதனைத் தொடர்ந்து எம் பெருமான் திருவீதி உலா வலம் வந்து அடியவர்களுக்கு  தரிசனம் கொடுத்தார்.

Sunday, July 19, 2015

திருவெண்காட்டில் வல்வினைகளை போக்கும் "சதுர்த்தி" விரத வழிபாடு ! ! ! 19.07.2015


"அல்லல்போம் வல்வினைபோம் அன்னை வயிற்றில் பிறந்த 
தொல்லைபோம் போகாத் துயரம்போம் - நல்ல 
குணமதிகமாம் அருணைக் கோபுரத்துள் வீற்றிருக்கும் செல்வக்
கணபதியைக் கைதொழுதக் கால்"

விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதற்குப் பல விரத தினங்கள் இருந்தாலும், விரதத்தில் மிகச் சிறந்ததும், பழமையானதும், சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடிய சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்தால் அளவு கடந்த ஆனந்தத்தை அடையலாம். சகல சௌபாக்கியங்களையும் பெறலாம்.

Thursday, July 16, 2015

‪திருவெண்காட்டில் ஆன்மிக மணம் கமழும் ஆடி மாதம்‬ ! ! ! 17.07.2015


டி மாதத்தை அம்மன் மாதம் என்றும் அம்பாள் மாதம் என்றும் சிறப்பித்து கூறுவார்கள். அம்மன், அம்பாள், ஆண்டாள், சக்தி ஸ்தலங்களில் அபிஷேக ஆராதனைகள், சிறப்பு பூஜைகள், ஹோமங்கள் என்று பக்தி மணம் கமழும்.

Tuesday, July 14, 2015

திருவெண்காட்டில் துன்பங்கள் நீங்கி இன்பம் பெற பிரதோஷ வழிபாடு‬ (13.07.2015)

பிரதோஷ வழிபாடு தோன்றிய வரலாற்றுக் கதை ! ! ! 




சிவபெருமானை நாம் நாள் தோறும் வணங்குகிறோம். ஆனாலும் பிரதோஷ காலத்தில் எம்பெருமானை ஆலயம் சென்று வணங்குவது சிறந்த பயனை அளிக்கும். மாதந்தோறும் இருமுறை - வளர்பிறை, தேய் பிறை திரயோதசி (13 ம் நாள்) நாட்கள் பிரதோஷ தினங்களாகும். 

Friday, July 10, 2015

திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான பஞ்சதள இராஜகோபுர கட்டுமான திருப்பணிகளின் தற்போதைய நிலை 10.07.2015 (படங்கள் இணைப்பு)



வெகுவிரைவில் மகா கும்பாபிஷேக பெருஞ்சாந்தி விழாவினை காண இருக்கும் திருவெண்காடு சித்திவிநாயகப் பெருமானின் பஞ்சதள இராஐ கோபுரத்திருப்பணிகள் எம் பெருமான் திருவருள் துணைகொண்டு மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. 

இன்னும் எம் பெருமானின் திருப்பணிகள் முழுமைபெற

சிற்ப வேலைப்பாடுகள்
பொம்மைகள் அமைத்தல்
வர்ணம் பூசுதல்

ஆகிய வேலைப்பாடுகள் இருப்பதனால்

இவ் விரிந்த உலகில் பரந்து வாழும் எம் பெருமான் மெய்யடியார்கள் இப் பெருங் கைங்கரியத்தில் விரைந்து இணைந்து வெண்காட்டு பெருமானின் பெருங்கருணைக்கு பாத்திரமாவோம். மனிதப் பிறவியின் பெரும் பேற்றை அடைவோம்.

Monday, July 6, 2015

திருவெண்காட்டில் வினை தீர்க்கும் விநாயகர் வழிபாடு ! ! ! ( சிறப்புக் கட்டுரை )


துதிக்கையில் அருள்வான் துதிக்கையான்;  வினைகளைத் தீர்க்க வந்தவர் விநாயகர்;எறும்பு முதல் யானை வரை விநாயகர் அம்சம்;அறுகம்புல் முதல் அரச மரம் வரை விநாயகர் இருப்பிடம்;விலங்கு முதல் தேவர் வரை விநாயகர் திருவுருவம்;

திருமுறைகளில் விநாயகர்
'காணாபத்யம்’ என்னும் கணபதி வழிபாடு அறு வகைச் சமயங்களில் முதலாவது. இந்துக்கள், சமணர்கள், பௌத்தர்கள் யாவரும் விநாயகரை வழிபடுகிறார்கள். உலகெங்கும் விநாயகர் வழிபாடு உள்ளது. 'தனது அடி வழிபடும் அவர் இடர் கடிகணபதி’ என்று திருஞானசம்பந்தர், துன்பம் போக்கும் கடவுளாகக் கணபதியைப் பாடுகிறார். ஆம்! முழுமுதற் கடவுளாம் விநாயகரைச் சரணடைவதும் வழிபடுவதுமே சகல துன்பங் களுக்குமான பரிகாரமாக அமையும்.

Saturday, July 4, 2015

திருவெண்காட்டில் சௌபாக்கியம் அருளும் சங்கடஹர சதுர்த்தி விரத அனுஸ்டானங்கள் ! ! ! 05.07.2015


விநாயகருக்கு உரிய விரதங்களில் சங்கடஹர சதுர்த்தி விரதம் மிகவும் முக்கியமானது. இன்று ஞாயிற்றுக்கிழமை 05.07.2015 சங்கடஹர சதுர்த்தி தினமாகும். அதாவது... தொல்லைகள், இடையூறுகளை போக்குகின்ற நாளாகும். இது விநாயகருக்கு உகந்த நாளாகும்.

Wednesday, July 1, 2015

திருவெண்காட்டில் இறைவனுக்கு கனிகள் படைக்கும் ஆனி பவுர்ணமி திருநாள் ! ! ! 01.07.2015


பூரணை என்பது சந்திரன் முழு வட்டமாகத் தோற்றமளிக்கும் நாளாகும். பூர்ணிமா என்றும் பவுர்ணமி (பௌர்ணமி) என்றும் இந்நாள் அழைக்கப்பெறுகிறது.