Thursday, July 16, 2015

‪திருவெண்காட்டில் ஆன்மிக மணம் கமழும் ஆடி மாதம்‬ ! ! ! 17.07.2015


டி மாதத்தை அம்மன் மாதம் என்றும் அம்பாள் மாதம் என்றும் சிறப்பித்து கூறுவார்கள். அம்மன், அம்பாள், ஆண்டாள், சக்தி ஸ்தலங்களில் அபிஷேக ஆராதனைகள், சிறப்பு பூஜைகள், ஹோமங்கள் என்று பக்தி மணம் கமழும்.

திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம்
மண்டைதீவு - இலங்கை
"திருவெண்காடு  சுவேதாரணியம்பதி பொன்னம்பலம் பூலோககைலாய புண்ணிய திவ்வியநாம சேஷ்திரத்தில் மூலமூர்த்தியாக வீற்றிருந்து திருவருள் பாலித்துக்கொண்டிருக்கும் ஸ்ரீ அம்பலவாணர் சித்தி விக்கினேஸ்வரப் பிள்ளையார்." 
இந்த வருடம் ஜூலை 17ம் தேதி ஆடி மாதம் பிறக்கிறது. அன்றைய தினம் வெள்ளிக்கிழமையும் சேர்ந்து வருவதால் மாதப் பிறப்பு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஆடி மாதத்தில் இருந்துதான் விரதங்கள், பண்டிகைகள், உற்சவங்கள் எல்லாம் ஒவ்வொன்றாக தொடங்குகிறது.
ஆடி மாதத்தில் வரும் அமாவாசை, பவுர்ணமி, கிருத்திகை, ஆடித்தபசு, ஆடிப்பெருக்கு, ஆடிப்பூரம், நாகசதுர்த்தி, கருட பஞ்சமி, வரலட்சுமி விரதம் என விசேஷ வைபவங்கள் தொடர்ச்சியாக வந்துகொண்டே இருக்கும்.
திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம்
 மண்டைதீவு - இலங்கை
ஸ்ரீ மஹாலட்சுமி அம்பாள்
திருவெண்காடு சுவேதாரணியம்பதி பொன்னம்பலம் பூலோககைலாய புண்ணிய திவ்விய நாமசேஷ்திர பரிவார மூர்த்தியாக வீற்றிருந்து திருவருள் பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ மஹாலட்சுமி
மாதங்களைப் பொறுத்தவரை உத்ராயணம், தஷ்ணாயணம் என இரு பிரிவுகள் உள்ளது. இதில் தஷ்ணாயணம் புண்ணிய காலம் ஆடி மாதத்தில் துவங்குகிறது.
ஆடி முதல் மார்கழி வரை தஷ்ணாயண காலமாகவும், தை முதல் ஆனி வரை உத்ராயணம் என பிரிக்கப்பட்டுள்ளது. சூரியனின் இயக்கத்தை (வடகிழக்கு, தென்கிழக்கு) வைத்து இது வரையறுக்கப்படுகிறது.
பொதுவாக ஆடி மாதம் எங்கு பார்த்தாலும் அம்மன் கோவில்களில் விழாக்கள் களைகட்டும். அம்மனுக்கு கூழ் காய்ச்சி ஊற்றுதல், முளைப்பாரி வளர்த்து திருவிழா கொண்டாடுதல், அம்மனுக்கு விரதம் இருந்து சமயபுரம் உள்ளிட்ட முக்கிய ஸ்தலங்களுக்கு பாதயாத்திரை செல்லுதல் என அம்மன் கோவில்கள் சார்ந்த அனைத்து இடத்திலும் இம்மாதம் விழாக்கோலமாக இருக்கும்.

மேலும் பிதுர்க்கடன் செய்வதற்கு ஏற்ற மாதமாகவும் இது விளங்குகிறது. பிதுர்க்கடன்களான திதி, தர்ப்பணம் போன்றவை ஆடி மாதம் வரும் அமாவாசையில் பெரும்பாலான மக்கள் தவறாமல் செய்வது சிறப்பு. இந்த நாட்களில் காசி, ராமேஸ்வரம் உள்ளிட்ட இடங்களில் நீராடி முன்னோர்களை வழிபடுவதற்கும் ஏற்ற ஆன்மிக மாதமாக உள்ளது.
மேலும் இந்த மாதத்தில் வரும் ஆடி 18ம் பெருக்கு நாள் மிக சிறப்பு வாய்ந்தது. புதிதாக மணமான பெண்களும், மற்ற பெண்கள் தாலியை மஞ்சள் கயிற்றில் கோர்த்து இந்த நாளில் மாற்றி அணிவார்கள்.
ஆடிப்பெருக்கு விழா காவிரி பாயும் ஸ்ரீ ரங்கம் அம்மா மண்டபம் உள்ளிட்ட இடங்களில் சிறப்பாக நடைபெறும். ஆடி மாதத்தில் இந்த ஒரு நாள் அனைத்து சுபகாரியங்களுக்கும் ஏற்ற நாளாக உள்ளது. இந்த நாளில் தான் புதிதாக அறுவடைக்காக விதைப்பார்கள். இதை ஆடிப்பட்டம் தேடி விதை என்று முன்னோர்கள் சொல்வார்கள்.

ஆடி மாதம் அம்மனுக்கு மட்டுமல்ல முருகனுக்கும் உகந்த மாதம். திருத்தணி முருகன் கோவிலில் சிறப்பாக கொண்டாடப்படும் ஆடி கிருத்திகை விழா மிகவும் பிரசித்தமானது. இதற்காக சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்து அனைவரும் கிருத்திகைக்கு சில நாட்கள் முன்பே விரதம் இருந்து திருத்தணி முருகனுக்கு காவடியை நேர்த்திக்கடனாக செலுத்துவர்.
தஷ்ணாயணம் துவக்கும் ஆடி மாதத்தில் சூரியனில் இருந்து சூட்சும சக்திகள் வெளிப்படும். வேத பாராயணங்கள், மந்திரங்கள், ஜெபங்கள், மாந்த்ரீகம் ஆகியவற்றிற்கு ஆடி மாதம் சிறந்ததாக கருதப்படுகிறது. பிரணாய வாயு அதிகமாக கிடைப்பதும் ஆடியில்தான். ஜீவ ஆதார சக்தி அதிகம் உள்ள மாதமாகவும் இது கருதப்படுகிறது.
ஆடி மாதத்தை சக்தி மாதம் என்றும் பண்டைய ஜோதிட நூல்கள் குறிப்பிட்டுள்ளன. உத்ராயண காலத்தில் சூரியனில் இருந்து வெளிப்படும் கதிர்களை விட, தஷ்ணாயண காலத்தில் (ஆடி) சூரியனின் ஒளிக் கதிர்கள் விவசாயத்திற்கு உகந்ததாக இருக்கும்.

ஓம் கம் கணபதயே நமஹ...!!


தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!
மேன்மைகொள் சைவநீதி . . . !
விளங்குக உலகமெல்லாம் . . . !
இன்பமே சூழ்க . . . !
எல்லோரும் வாழ்க . . . ! 

 திருச்சிற்றம்பலம்'' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்''