Saturday, April 18, 2015

பன்னிரண்டு இராசிகளுக்குமான மன்மத வருட இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 14.04.2015 - 13.04.2016

மன்மத வருடம் எனப்படும் இந்த தமிழ்ப் புத்தாண்டு இம்முறை மகர ராசியில் பிறக்கிறது.

மன்மத வருடத்தின் ஒரு சிறப்பம்சமாக இந்த தமிழ்ப் புதுவருடம் பிறக்கும் போது இயற்கைச் சுபர்களான குருவும் சுக்கிரனும் வலிமையுற்ற நிலையில் அதாவது குரு உச்சமாகவும், சுக்கிரன் ஆட்சியாகவும் சந்திரனைக் குரு பார்க்கும் விசேஷமான நிலையில் இந்த ஆண்டு பிறக்கிறது. 

மேலும் ஒரு தனித்துவமான விஷயமாக மனிதகுலத்திற்கு கசப்பான விஷயங்களை கடுமையான வகையில் தரக்கூடியவரான சனிபகவானை இவர்கள் இருவருமே ஒருசேர பார்ப்பதும் மிகமிகச் சிறப்பு. குருவும் சுக்கிரனும் வலுப்பெற்றுப் பார்ப்பதால் சனி தனது பாபத்தன்மையை இழந்து முற்றிலும் சுபத்தன்மை அடைந்து கெடுதல்கள் தரும் வலிமையை இழக்கிறார். 

இன்னொரு உன்னதமான அமைப்பைக் கூறவேண்டுமானால் ஆன்மிகத்தைக் குறிக்கும் குரு, சனி, கேது இந்த மூவரும் ஒருவருக்கொருவர் திரிகோணமாக இருப்பதும் சனியும், கேதுவும் உச்சகுருவின் பார்வையில் இருப்பதும், ஆன்மிகத்திற்கும், ஆலயங்களுக்கும், ஆன்மிகவாதிகளுக்கும், ஆன்மிகப்பற்று உடையவர்களுக்கும் மிகவும் நன்மைகளை தரும் விஷயம்.

எனவே என்னதான் மூளையைக் கசக்கிப் பிழிந்தாலும் இந்த தமிழ்ப் புத்தாண்டில் உலகத்திற்கும், மனிகுலத்திற்கும், கெடுபலன்களைச் சொல்லும் அமைப்பில்லை.

மெய்ஞானக் கிரகங்கள் வலுவாக இருப்பதால் ஆன்மிகத்தைப் போற்றும் மத்திய, மாநில அரசுகளுக்கு இந்த வருடம் மிகவும் சாதகமான வருடமாக இருக்கும். அரசை வழிநடத்தும் மந்திரிகள் தலைவர்கள் ஆகியோரின் ஆற்றல் பளிச்சிடும். ஆன்மிக வழி அரசுக்கு சாதகமான நல்ல நிகழ்ச்சிகள் இருக்கும். தெய்வத்தை நம்புபவர்களுக்கு தெய்வமே துணையிருந்து வழிகாட்டும். 

இந்து மதம் செழிப்புறும். ஆன்மிகவாதிகள் உயர்வு பெறுவார்கள். ஆலயங்கள் பொலிவு பெறும். பழமையான திருக்கோவில்கள் புதுப்பிக்கபட்டு கும்பாபிஷேகங்கள் நடத்தப்படும். பொதுவாக இந்த ஆண்டில் மக்களுக்கு ஆன்மிகப் பற்று கூடுதலாக ஏற்படும். அனைத்தும் அவன் செயல் என்ற எண்ணம் மேலோங்கும். நல்லவர்கள் வளம் பெறுவார்கள். நல்லவர்களின் சொல் எடுபடும். அவர்களின் எண்ணங்கள் நிறைவேறும். 


ஞானிகள் அடையாளம் காட்டப்படுவார்கள். மறைந்தும் அருள்புரியும் ஸ்ரீ ராகவேந்திரர், ஷீரடி பாபா, பகவான் ரமணர், மகாபெரியவர், சத்யசாயி போன்ற புனிதர்களின் மகிமை இந்த புத்தாண்டில் மேலோங்கும். இவர்களின் அற்புதங்கள் நிகழும். 

மக்களிடம் சகிப்புத்தன்மை கூடுதலாகத் தென்படும். நல்ல சிந்தனைகள் வளரும். சிறுபான்மை மக்கள் பாதுகாக்கப்படுவார்கள். அவர்களின் வழிபாடுகளும் உரிமைகளும் மதிக்கப்படும். எல்லா மதங்களும் அடையாளம் காட்டும் பரம்பொருள் ஒன்றே எனும் மனமாற்றம் நிகழும். 

தீவிரவாதம் குறையும். வன்முறை தடுக்கப்படும். அறிவால் அனைத்துக் காரியங்களும் நிகழ்த்தப்படும். மதகுருக்களின் மதிப்பு கூடும். மக்கள் அவர்களின் பேச்சுக்குக் கட்டுப்படுவார்கள். மதக்கலவரங்கள் நடக்கும் முன்பே கட்டுப் படுத்தப்படும். அறிவு மேலோங்கி ஆவேசம் மட்டுப்படும். 

நீர் ராசிகளான கடகம், விருச்சிகம் இரண்டிலும் வாயுக் கிரகங்களான சனியும், குருவும் வலுப்பெற்று இருப்பதால் இந்த வருடம் மழைக்குப் பஞ்சமில்லாத வருடமாக இருக்கும். நீர்வழி சம்மந்தப்பட்ட திட்டங்களின் தொடக்க ஆரம்பங்களும் இப்பொழுது இருக்கும். 

தேசம் முழுவதும் நதிகளை இணைக்கும் முதல் அடி இந்த வருடம் அறிவிக்கப்படும். மீனவர்களின் பிரச்னை கட்டுக்குள் இருக்கும். இலங்கை கடற்படையால் நம் மீனவர்கள் அடையும் துன்பம் முடிவுக்கு வரும். மீனவர்கள் அச்சமின்றி கடலுக்குள் செல்லும் நிலை உருவாகும். 

நீர் சம்பந்தப்பட்ட விளையாட்டுக்களும் சுற்றுலாக்களும் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும். நதிகளை ஒட்டிய பிரதேசங்கள் மிகப்பெரும் வளர்ச்சி பெறும். காய்கறி விளைவிப்பவர்கள், பால் உற்பத்தியாளர்கள், மாட்டுப் பண்ணைகள் நடத்துவோருக்கு உற்பத்திக்கு ஏற்ற விலை கிடைக்கும். 


சுபக்கிரகங்கள் வலுப்பெறுவதால் மக்களின் பொருளாதார நிலைமை மேம்பட்டு வாங்கும் சக்தி அதிகரிக்கும். விலைவாசி கட்டுக்குள் இருக்கும். எல்லோரும் தங்கம் வாங்கமுடியும். சகலதரப்பு மக்களும் ஆடம்பர பொருட்களை வாங்குமளவிற்கு பணநடமாட்டம் இருக்கும். 

எளிய மக்களின் வாழ்க்கைத்தரத்தில் நல்ல முன்னேற்றம் வரும். ஏழைகளில் சிலர் பணக்காரன் ஆவார்கள். வீட்டிற்குத் தேவையான சொகுசுப் பொருட்களான ஏ.சி, டி.வி, செல்போன். ப்ரிஜ், ஆகியவற்றின் வியாபாரம் அதிகரிக்கும். 

சுக்கிரனின் ஆட்சி பலத்தால் பெண்களுக்கு இந்த ஆண்டு மிக முக்கியமான திருப்பங்களைக் கொடுக்கும் ஆண்டாக அமையும். பெண்களின் மனம் விரும்பும்படியான நிகழ்ச்சிகள் அவர்களின் வாழ்க்கையில் இருக்கும். அலுவலகங்களில் தலைமைப் பொறுப்பில் இருக்கும் பெண்களுக்கு மிகவும் நல்ல பலன்கள் உண்டு. 

சில குறிப்பிட்ட பெண்மணிகள் இந்திய அளவிலும் உலக அளவிலும் சாதிப்பீர்கள். பெண்களின் சுதந்திரம் பாதுகாக்கப்படும். பெண்கள் உயர்ந்த நிலையில் இருப்பார்கள், பெண்ணினம் மதிக்கப்படும். கடந்த வருடங்களைப் போன்ற சோதனைகளால் பெண்ணினம் பாதிக்கப்படாது. பெண் அரசியல் தலைவர்கள் உயர்வு பெறுவார்கள். 

கலைத்துறைக்கு இதுவரை இருந்து வந்த தேக்கநிலை மாறும். தோல்விகள் குறையும். திறமையுள்ள புதியவர்கள் தங்களின் திறமைகளால் சாதிப்பீர்கள். இதுவரை இருட்டுக்குள் இருப்பவர்கள் வெளிச்சத்துக்கு வருவார்கள். வருட ஆரம்பத்தில் சுக்கிரன் ஆட்சிபலத்துடன் இருப்பதால் புதிய இசை அமைப்பாளர்களும் இயக்குனர்களும் வசனகர்த்தாக்களும் சூப்பர் ஸ்டார்களும் உருவாகும் ஆண்டு இது. 

இதுவரை அங்கீகாரம் இல்லாதவர்களுக்கு அரசு விருது கிடைக்கும். தமிழ்க்கலைஞர்களின் படைப்புக்கள் இந்திய மற்றும் உலக அளவில் பேசப்படும். இசை நடனம் பாட்டு போன்ற பாரம்பரிய இசைக்கலைஞர்கள் பாராட்டுப் பெறுவார்கள். நமது பாரம்பரியமும் பண்பாடும் இணைந்த விஷயங்கள் மேன்மை பெறும். 

வருடத்தின் ஆரம்பத்தில் செவ்வாயும் ஆட்சி வலுப்பெற்று இருப்பதால் இதுவரை சரிவான நிலையில் இருக்கும் ரியல் எஸ்டேட் தொழிலும், கட்டிடம் கட்டி விற்கும் பில்டர்கள் தொழிலும் சரிவில் இருந்து மீண்டு மறுபடியும் வெற்றிகரமாக லாபத்துடன் செயல்பட தொடங்கும்.

செவ்வாய் ஆட்சி வலுவுடன் இருப்பதால் சமூக விரோதிகள் அடக்கப் படுவார்கள். சட்டம் ஒழுங்கு நிலை நாட்டப்படும். தமிழக காவல்துறை உயர்வு பெறும். போலிகள் தண்டிக்கப் படுவார்கள். நீதித்துறையில் மிகுந்த மாற்றங்கள் நடந்து மக்களுக்கு நீதியின் பேரில் நம்பிக்கை ஏற்படும் வகையில் தீர்ப்புக்கள் கிடைக்கும். இந்திய நீதிமன்றங்களின் தீர்ப்புக்கள் உலக அளவில் பேசப்படும். 

அமைச்சர்கள், அரசுப்பணி செய்வோர், காவல்துறையினர், அதிகாரம் செய்யும் பொறுப்பில் இருப்போர், நிர்வாகிகள் உயர்வு பெறும் அதேநேரத்தில் புதன் பலம் பெறாததால் வியாபாரிகள் தகவல் தொழில்நுட்பத் துறை, கணக்குத் துறை, புத்தகம் சம்பந்தப்பட்டோர், எழுத்தாளர், பத்திரிக்கைத்துறை, கவிஞர்கள், கணிப்பொறித் துறையினர், ஜோதிடர்கள் ஆகியோருக்கு சுமாரான பலன்கள்தான். 

இளைஞர்களுக்கு அனைத்து துறைகளிலும் வாய்ப்பு கிடைக்கும். மாறுபட்ட எண்ணங்களை உடைய இளைஞர்கள் ஜெயிப்பார்கள். சில இடங்களில் முதியவர்களை பின்னுக்குத் தள்ளி இளைய பருவத்தினர் தங்கள் செயல் திறமையால் முதலிடம் பெறுவார்கள். 

விவசாயிகள் வளம் பெறுவார்கள். தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதி விவசாயிகளுக்கும் சிறப்பான பலன்கள் இருக்கும். மழைப்பொழிவு குறிப்பிடத்தக்க அளவில் இருக்கும். விவசாய முன்னேற்றத்திற்கான திட்டங்கள் அமுல்படுத்தப்படும். 

இந்தியாவின் பொருளாதாரம் வரும் ஆண்டில் மிகச் சிறப்பான நிலையை எட்டும். பொருளாதார வளர்ச்சி குறிப்பிடத்தக்க வகையில் முன்னேற்றம் காணும். நிதித்துறை செழிப்புறும். சாமான்ய மக்களின் அடிப்படைப் பிரச்னைகள் தீருவதற்கான ஆரம்பங்கள் இருக்கும். இந்தியாவின் பங்களிப்பு எல்லா வகையிலும் உலக நாடுகளுக்கு தேவைப்படும். 


பொழுதுபோக்கு விளையாட்டு ஆகிய துறைகளை விட அறிவால் சாதிக்கும் துறைகள் இளைஞர்களை அதிகம் ஈர்க்கும். வடிவமைப்பு உருவாக்கம் ஆகிய துறைகளில் இளைஞர்கள் சாதிப்பார்கள். குறிப்பிட்ட சிலர் புதிய கண்டுபிடிப்புக்களை நிகழ்த்துவீர்கள். 

கொள்ளை நோய்கள் தடுக்கப்படும். சுத்தம் சுகாதாரம் ஆகியவற்றில் விழிப்புணர்வு வரும். வெளிநாட்டுக் குடிமக்கள் சிகிச்சைக்காக இந்தியா வருவார்கள். இந்திய மருத்துவமனைகளின் புகழ் வெளிநாடுகளில் பரவும். இந்திய மருத்துவ முறைகள் மக்களால் அதிகம் விரும்பப்படும். குறிப்பாக நமது பாரம்பரிய ஆயுர்வேத மற்றும் சித்த மருத்துவ முறைகளை வெளிநாட்டினர் தெரிந்து கொள்ளும்படியான நிகழ்வுகள் நடக்கும். 

ராகு பகவான் கன்னி ராசியில் சுபத்துவம் பெறுவதால் நூதனக் கருவிகள் எனப்படும் செல்போன் துறை இமாலய வளர்ச்சியைப் பெறும். இந்திய தொழில் அதிபர்கள் சர்வதேச செல்போன் துறையில் ஏற்றம் பெறுவார்கள். செல்போன் தயாரிப்புத் துறை இந்தியாவில் நல்ல முன்னேற்றம் பெறும். 

இதுவரை செல்போன் பரவாத குக்கிராமங்களில் கூட டவர் அமைக்கப் பட்டு நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் செல்போன் இல்லாத இடமே இல்லை எனும் நிலை ஏற்படும். செல்போன் துறையில் இந்தியா நம்பர் ஒன் என்ற நிலை பெறும். 

சாமான்ய மக்களின் வாழ்வு சிறக்கும். உழைப்புக்கேற்ற ஊதியம் அவர்களுக்கு கிடைக்கும். தொழிற்சாலைகளில் பணிபுரியும் உழைப்பாளர்கள், தனியார் துறையினர், ஆட்டோ கார் லாரி போன்ற வாகனங்களை இயக்கும் துறையினருக்கு இதுவரை இருந்து வந்த சிக்கல்கள் விலகி அவர்களின் பிரச்னைகள் தீரும். 

மத்திய அரசால் வெளிநாட்டு தொடர்புகள் மேம்படும். சர்வதேச அளவில் இந்தியாவின் மதிப்பு உயரும். இந்திய ரூபாய் இழந்த மதிப்பை மீண்டும் பெறும். வெளிநாட்டு ஏற்றுமதி இறக்குமதியாளர்களின் தொழில் சிறக்கும். 
இனி ஒவ்வொரு ராசிக்கும் தனித்தனியான பலன்களை காணலாம்.மேஷ ராசிக்காரர்களுக்கு மன்மத வருடம் எனப்படும் தமிழ்ப் புத்தாண்டு பிறக்கும்போது உங்கள் ராசிநாதன் செவ்வாயும், தனாதிபதி சுக்கிரனும் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால் தொட்ட காரியங்கள் துலங்கும். பெரிய பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். சொத்து வாங்க முன்பணம் தருவீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேருவீர்கள்.

வருடம் பிறக்கும்போது உங்களின் பூர்வ புண்யாதிபதி சூரியனும் உங்கள் ராசியிலேயே உச்சம் பெற்று அமர்ந்திருப்பதால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகள் திருமணத்தை இந்த ஆண்டு சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு வேலை கிடைக்கும். அயல்நாடு செல்ல விசா வரும். புது வேலை அமையும். இந்த ஆண்டு முழுக்க சனிபகவான் 8-ல் அமர்ந்து அஷ்டமத்து சனியாக தொடர்வதால் ஏதோ ஒன்றை இழந்ததைப்போல இருப்பீர்கள். எதிர்வீட்டுக்காரர்களை அனுசரித்துப் போவது நல்லது. சின்னச் சின்ன பிரச்சினைகளையெல்லாம் பெரிதாக்கிக் கொள்ளாதீர்கள்.

மற்றவர்களுக்கு பணம், நகை வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம். ஐப்பசி மாதப் பிற்பகுதி கார்த்திகை மற்றும் மார்கழி மத்தியப் பகுதி வரை உங்கள் ராசிநாதன் செவ்வாய் கிரகண தோஷம் அடைவதாலும் மாசி மாதம் மத்தியப் பகுதி முதல் பங்குனி மாதம் வரை உள்ள காலக்கட்டத்தில் சனியுடன் சம்பந்தப்படுவதாலும் மேற்கண்ட காலக்கட்டங்களில் வீண் விரயம், ஏமாற்றம், குடும்பத்தில் சலசலப்பு, பண இழப்பு, சிறுசிறு வாகன விபத்துகள் வந்து செல்லும். 4.7.2015 வரை குரு 4-ம் வீட்டில் நிற்பதால் தாயாரிடம் கோபப்படாதீர்கள். முறையான அரசாங்க அனுமதியின்றி வீடு கட்டத் தொடங்க வேண்டாம்.

5.7.2015 முதல் குரு உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டிற்குள் நுழைவதால் பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் பலிதமாகும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். திருமணம், சீமந்தம், கிரகப்பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். பூர்வீக சொத்துப் பிரச்சினை முடிவுக்கு வரும். ஜனவரி 7-ம் தேதி வரை ராகு உங்கள் ராசிக்கு 6-ல் நிற்பதால் ஷேர் மூலமாக பணம் வரும். கேது ராசிக்கு 12-ல் மறைந்திருப்பதால் திடீர் பயணங்கள் உண்டு.

புண்ணியத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். தூக்கம் குறையும். 8.1.2016 முதல் ராகு 5-ம் வீட்டில் நுழைவதால் கர்ப்பிணிகள் பயணங்களை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். அவர்களை அன்பால் அரவணைத்துப் போங்கள். கேது உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் நுழைவதால் வசதி, வாய்ப்புகள் பெருகும். வருமானத்தை உயர்த்துவீர்கள். ஜூலை முதல் தொழில், வியாபாரம் செழிக்கும். ஆனி மாதம் முதல் வேலைச்சுமை குறையும்.

அதிகாரிகளின் மனநிலையைப் புரிந்து செயல்படத் தொடங்குவீர்கள். ஆவணி மாதங்களில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். புது வாய்ப்புகளும் வரும். இந்த மன்மத வருடம் இடையூறுகளை தந்தாலும், விடாமுயற்சியால் இலக்கை எட்டிப் பிடிக்க வைக்கும்.ரிஷப ராசிக்காரர்களுக்கு மன்மத வருடம் எனப்படும் தமிழ்ப் புத்தாண்டு மிகவும் நல்லபலன்களையும், வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புக்களில் லாபங்களையும் தனிப்பட்ட வாழ்க்கையில் வெற்றிகளையும் தரும்.

வருட ஆரம்பத்தில் உங்கள் ராசிநாதன் சுக்கிரன் ராசியிலேயே ஆட்சிபெற்று அமர்ந்திருப்பதும் பூரண ராஜயோகாதிபதி சனிபகவான் ராசியை பார்க்கும் நிலையிலும் அமைந்திருப்பது மிகவும் நல்ல யோகஅமைப்பு என்பதால் மன்மத வருடம் உங்களுடைய மனம் மகிழும் வருடமாக இருக்கும். 

இந்த தமிழ்ப்புத்தாண்டு தொழில் வேலை வியாபாரம் போன்றவைகளில் மாறுதலைக் கொடுக்கும் என்பதால் இதுவரை மேற்படி இனங்களில் இருந்து வந்த தேக்கநிலைகள் மாறி புதுவிதமான நல்ல அமைப்புகள் உருவாகும். கெடுதல்கள் எதுவும் நடைபெறப் போவது இல்லை. 

வெளியிடங்களில் மதிப்பு, மரியாதை கௌரவம் நல்லபடியாக இருக்கும். வியாபாரிகளுக்கு கொள்முதல் சம்பந்தமான அலைச்சல்கள் இருக்கும். இந்தவருடம் யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். யாரையும் நம்ப வேண்டாம். வியாபாரம் கண்டிப்பாக குறையாது என்றாலும் அதற்காக கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். வேலைக்காரர்கள் மேல் ஒரு கண் எப்போதும் இருக்கட்டும். 

சொந்தத் தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு அலைச்சல்களையும் மந்த நிலையையும் ஒருபுறம் கொடுத்தாலும் இன்னொரு புறம் தொழிலில் முன்னேற்றத்தையும் வருமானங்களையும் கண்டிப்பாகத் தரும். வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு துறைரீதியான இடமாறுதல்களோ அல்லது பதவி உயர்வுடன் கூடிய ஊர்மாற்றமோ இருக்கலாம். 

அரசு, தனியார்துறை ஊழியர்களுக்கு துறைரீதியான இடமாறுதல்களோ அல்லது பதவி உயர்வுடன் கூடிய ஊர்மாற்றமோ இருக்கலாம். தற்போது இருக்கும் வசதியான ஊரை விட்டு வேறு எங்கோ மாற்றம் இருக்கும் என்பதால் பதவி உயர்வு என்றாலும் அதை அரைகுறையான மனதுடன் தான் நீங்கள் ஏற்றுக் கொள்ளும்படி இருக்கும். 

வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு அவர்களுடைய விருப்பத்திற்கும் படித்த படிப்பிற்கும் பொருத்தமான வேலை கிடைக்கும். சிலர் தேவையற்ற விஷயங்களில் மாட்டிக் கொண்டு உங்களுடைய நல்ல பெயரைக் கெடுத்துக் கொள்வீர்கள் என்ற நிலை உள்ளதால் எல்லோரிடமும் பழகும் போது உஷார் தன்மை தேவை. 


இருக்கும் வாகனத்தை விட நல்ல வாகனம் அமையும். வாகன மாற்றம் செய்வீர்கள். பெற்றோர் வழியில் சுமாரான ஆதரவு நிலை இருக்கும். பங்காளிகள் மற்றும் உறவினருடன் சுமுக நிலையை கடைபிடிக்க வேண்டியது அவசியம். சகோதர சகோதரிகள் வழியில் உங்களுக்கு செலவு இருக்கலாம். அவர்களிடம் இருந்து உதவியை எதிர்பார்க்க வேண்டாம். 

என்னதான் பணவரவு நிறைவாக இருந்தாலும் பற்றாக்குறை இருக்கும் என்பதால் எல்லாவற்றிலும் சிக்கனமாக இருப்பது நல்லது. ஆனாலும் பண வரவும் பொருளாதார நிலைமையும் நன்றாகவே இருக்கும். எனவே நிதிநிலைமையைப் பற்றி கவலைப் பட வேண்டியது இருக்காது. ஆனால் வீண் செலவு செய்வதை தவிருங்கள். 

சனியின் பார்வை ராசிக்கு இருப்பதால் எந்த நேரமும் படபடப்பாக இருப்பீர்கள். டென்ஷன் அதிகமாக இருக்கும். எல்லா வேலைகளையும் நீங்கள் மட்டுமே இழுத்துப்போட்டுக் கொண்டு செய்ய வேண்டி இருக்குமாதலால் குழப்பமான சூழ்நிலையில் தவறான முடிவுகள் எடுக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே எதையும் ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்தும், வீட்டில் இருக்கும் அனுபவம் வாய்ந்த பெரியவர்களிடம் ஆலோசித்தும் முடிவு எடுப்பது மிகவும் நன்மையைத் தரும். 

கோர்ட் கேஸ், போலீஸ் விவகாரங்கள், நிலம் சம்பந்தமான வழக்குகள், கிரிமினல் வழக்குகள் உள்ளவர்கள் வழக்கை முடிப்பதற்கு அவசரப்பட வேண்டாம். தீர்ப்பு உங்களுக்கு எதிராக வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ரேஸ் லாட்டரி பங்குச்சந்தை சூதாட்டம் போன்றவைகள் இப்போது கை கொடுக்காது. 

உறவினர்களிடம் சுமுகமான உறவு ஏற்படுவது கடினம். சிலருக்கு இருக்கும் வாடகை வீட்டை விட்டு மாறுதல், புதியதாக வீடு ஒத்திக்கு எடுத்தல் அல்லது புதிய வீடு வாங்குதல் போன்ற மாற்றங்கள் இருக்கும். மனைவி குழந்தைகளுடன் உல்லாசப் பயணம் கேளிக்கை சுற்றுலாக்கள் நவக்கிரக யாத்திரைகள் போன்ற பயணங்கள் இருக்கும். 

தேவையற்ற விவகாரங்களில் தலையிடுவதும் அடுத்தவர்களுக்காக பரிந்து பேசி வீண்வம்பை விலைக்கு வாங்குவதும் இந்த காலகட்டங்களில் நடைபெற்று தேவையற்ற விரோதங்களை சம்பாதித்து கொள்வீர்கள் எனபதால் எங்கும் எதிலும் எச்சரிக்கை தேவை. 

வெளிநாடு சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களும் வெற்றிகரமாக கை கொடுக்கும். மாணவர்கள் உயர்கல்வி கற்பதற்கு மேல் நாடுகளுக்கு செல்ல முடியும். வெளிநாட்டு வேலைக்கு விண்ணப்பித்திருந்தவர்களுக்கு உடனடியாக அந்த வேலை கிடைக்கும். பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் குறுகிய கால பயணமாக வெளிநாடு சென்று திரும்புவார்கள். 

கணவன் மனைவி உறவில் விட்டுக் கொடுத்துப் போங்கள். ஏழில் சனி இருப்பதால் கெடுதல் எதுவும் இருக்காது. ஆயிரம் இருந்தாலும் சனி சனிதான் என்பதால் ஒருவருக்கொருவர் அனுசரித்துப் போவது நல்லது. கருத்து வேற்றுமைகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எதிலும் அவசரப்பட வேண்டாம். 


வயதான தாயாரை நன்கு கவனியுங்கள். அவரின் தேவைகளை பூர்த்தி செய்யுங்கள். தாயாரை விட்டு விலகி தூர இடங்களில் வசிப்பவர்கள் மாதம் ஒரு முறையாவது அவரைப் போய் பார்த்து அவரின் ஆசீர்வாதங்களை பெற்று வருவது நல்லது. 

விவசாயிகளுக்கு இது மிகவும் நல்ல வருடம். விளைந்த பயிருக்கு நியாயமான விலை கிடைக்கும். பணப்பயிர் மற்றும் எண்ணை வித்துகள் போன்றவை பயிரிட்டவர்களுக்கு இந்த வருடம் லாபம் வரும். கலைஞர்கள் பொதுவாழ்வில் உள்ளவர்கள் மாணவர்கள் உள்ளிட்ட சகலருக்கும் நன்மை தரும் வருடம் இது. 

பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் குறுகிய கால பயணமாக வெளிநாடு சென்று திரும்புவீர்கள். நீண்ட நாட்களாக விசா கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு தற்போது விசா கிடைக்கும். வயதானவர்களுக்கு வெளிநாட்டில் இருக்கும் பேரன், பேத்திகளை பார்ப்பதற்கு வாய்ப்பு கிடைக்கும். ஒரு சிலர் மகன், மகள்களுக்கு உதவி செய்ய வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வீர்கள். 

பெற்றோர் வழியில் சுமாரான ஆதரவு நிலை இருக்கும். பங்காளிகள் மற்றும் உறவினருடன் சுமூக நிலையை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். சகோதர சகோதரிகள் வழியில் உங்களுக்கு செலவு இருக்கலாம். அவர்களிடம் இருந்து உதவியை எதிர்பார்க்க வேண்டாம். 

ரேஸ் லாட்டரி பங்குச்சந்தை சூதாட்டம் போன்றவைகள் இப்போது கை கொடுக்காது. சிறிது லாபம் வருவது போல் ஆசைகாட்டி பிறகு மொத்தமாக இருப்பதையும் இழக்க வைக்கும் என்பதால் மேற்கண்ட இனங்களில் கவனமுடன் இருக்கவும். அதே நேரத்தில் பெரிய பணவரவு ஒன்று உங்களுக்கு இந்த புத்தாண்டில் கிடைக்கும். 

ஜூலை மாதத்திற்கு பிறகு தந்தையின் உடல் நிலை கவனிக்கப்பட வேண்டும். தந்தையால் செலவுகள் ஏற்படலாம். திருமணம் ஆகாதவர்களுக்கு ஜூலை மாதத்திற்கு மேல் திருமணம் நடக்கும். பெண்கள் சம்பந்தப்பட்ட பூப்புனித நீராட்டு விழா, வளைகாப்பு போன்ற வைபவங்கள் இல்லத்தில் நடைபெற வாய்ப்புகள் உள்ளன. 

ஐந்தாமிடத்தில் ராகு இருப்பதால் பள்ளி கல்லூரி செல்லும் வயதில் பிள்ளைகளை வைத்திருக்கும் ரிஷப ராசிக்காரர்கள் அவர்களின் மேல் சற்றுக் கவனம் செலுத்த வேண்டிய வருடம் இது. பிள்ளைகளின் கவனம் படிப்பிலிருந்து விலகி காதல், கத்திரிக்காய் என்று வேறு பக்கம் திரும்புவதற்கு வாய்ப்பிருக்கிறது. வேறு ஏதாவது வம்புகளில் சிக்கி உங்களை மனக்கஷ்டத்திற்கு ஆளாக்குவார்கள் என்பதால் அவர்களை கண்காணிப்பது நல்லது.

சரக்கு வாகனங்கள் இயக்குவோர், கூலியாட்களை வைத்து வேலை வாங்குவோர், மாற்றுத் திறனாளிகளை பராமரிப்போர், பெட்ரோல்பங்க், அநாதை விடுதிகளை நடத்துவோர், மதுபானத் தொழில் சம்பந்தப்பட்டோர், விவசாயிகள், நிலத்தரகர்கள், காலிமனை விற்கும் ரியல் எஸ்டேட்காரர்கள், மருத்துவமனையினர், கடைநிலை ஊழியர்கள், காவல்பணி செய்வோர், துப்புரவு தொழிலாளர்கள், ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சித் தலைவர்கள், கவுன்சிலர்கள் உள்ளிட்டவர்கள் மிகவும் வளம் பெறுவார்கள். வருமானமும் சிறப்பாக இருக்கும்.மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வருட தமிழ்ப் புத்தாண்டு அதிர்ஷ்டமான பலன்களையும் வாழ்க்கைத் துணைவர் விஷயத்தில் மிகவும் யோகங்களையும் தரும். குடும்பத்திலும் உங்களுக்கு நல்ல பெயரையும் அலுவலகத்தில் பதவி உயர்வு பாராட்டு போன்ற நன்மைகளும் நடக்கும் வருடமாக இருக்கும்.

ஜூலை மாதத்தில் நடைபெறப் போகும் குருப்பெயர்ச்சியினால் குருபகவான் சாதகமற்ற மூன்றாம் ராசிக்கு மாறுகிறார் என்றாலும் அங்கிருந்து அவர் ஏழு, ஒன்பது, பதினொன்றாமிடங்களைப் பார்வையிடுவார் என்பதால் குடும்பத்தில் மனமகிழ்ச்சியும் செய்தொழில் லாபங்களும், சுபகாரியங்களும் உள்ள வருடமாகவும் இது இருக்கும்.

குடும்பத்தில் இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். பிரிந்து வாழும் தம்பதியர் சேரக்கூடிய சூழல்கள் உருவாகும். தொழிலில் பங்குதாரர்களிடம் இதுவரை இருந்து வந்த சண்டை சச்சரவுகள் விலகி ஒருவருக்கொருவர் உதவிகரமாக இருப்பார்கள். பிரிந்த நண்பர்கள் ஒன்று சேருவார்கள்.

வேலை விஷயமாக வேறு வேறு ஊர்களில் பிரிந்து வேலை செய்யும் கணவன் மனைவிக்கு ஒரே ஊருக்கு டிரான்ஸ்பர் கிடைக்கும். வாரஇறுதி நாட்களில் மட்டும் குடும்பத்தோடு இருந்த நிலை மாறி குடும்பம் ஒன்று சேரும். குறிப்பிட்ட சிலர் தங்களுடைய எதிர்கால வாழ்க்கைத்துணையை இப்போது சந்திப்பீர்கள். காதல் வரும் நேரம் இது. சிலருக்கு மனம் விரும்பிய வாழ்க்கை கிடைக்கும். காதலர்களுக்கு பெற்றோர்களின் சம்மதம் கிடைக்கும்.

அரசு, தனியார் துறை பணியாளர்கள், இரும்பு சம்பந்தப்பட்ட துறையினர், உழைப்பாளிகள் போன்றவர்களுக்கு இந்த வருடம் மிகவும் நல்ல பலன்கள் கிடைக்கும் வருடமாக இருக்கும். குலதெய்வ வழிபாடு இதுவரை செய்யாதவர்கள் அதை உடனே செய்யும்படி இருக்கும். இதுவரை செலுத்தாத நேர்த்திக் கடன்களை உடனே செலுத்துங்கள்.

வியாபாரிகளுக்கு நல்ல வேலைக்காரர்கள் அமைவார்கள். புதுக்கம்பெனி ஸ்டாக்கிஸ்ட், டீலர்ஷிப் கிடைத்து வியாபாரம் பெருகும். வருமானம் இருக்கும். சொந்தத்தொழில் செய்பவர்கள் ஆர்டர்கள் நிறையக் கிடைத்து மேன்மை அடைவீர்கள். குறிப்பிட்ட நேரத்தில் டெலிவரி செய்து நல்ல பெயர் எடுப்பீர்கள். வருமானத்திற்கு குறைவிருக்காது. சிலருக்கு பயணம் சம்பந்தமான வேலைகள் அமைந்து அலைச்சல்களும் பிரயாணங்களும் அதிகமாக இருக்கும். பயணங்களால் லாபமும் இருக்கும்.

தொழில் விரிவாக்கங்கள் மற்றும் புதிய தொழில் ஆரம்பிப்பதை நன்கு யோசித்து செய்யுங்கள். இருக்கும் வேலையை விட்டு விட்டு புதிய வேலை தேடலாம் என்பதிலும் கவனம் தேவை. புதிதாக எந்த ஒரு செயலையும் ஆரம்பிக்கும் முன் அனைவரையும் கலந்து ஆலோசித்து செய்யவும். இருக்கும் வீட்டை விரிவாக்குவது அல்லது புதிதாக சொத்து வாங்குவது போன்றவைகளில் மிகுந்த கவனம் தேவைப்படும்.


நேர்மையற்ற செயல்கள் மற்றும் சட்டத்திற்கு புறம்பான தொழில்கள் போன்றவற்றில் தற்போது ஆர்வம் காட்டாதீர்கள். பங்குச்சந்தை யூகவணிகம் போன்றவைகளும் இப்போது கை கொடுப்பது கடினம். அரசு தனியார் துறை ஊழியர்களுக்கு இதர வருமானங்கள் போன்ற முறைகேடான வருமானங்கள் இப்போது வருவது கடினம். எனவே மேல் வரும்படி இல்லாததால் செலவுகளை சமாளிக்க திண்டாடுவீர்கள்.

பணியிடங்களில் எவரிடமும் வீண் வாக்குவாதம் செய்யாதீர்கள். அதனால் நண்பர்களும் விரோதியாவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இந்த காலகட்டத்தில் சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்பதால் யாரையுமே பகைத்துக் கொள்ள வேண்டாம். ஏற்கனவே கடன் சிக்கலில் இருப்பவர்களுக்கு புதிய கடன்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எக்காரணத்தைக் கொண்டும் அதிக வட்டிக்கு வாங்குவதை தவிர்ப்பது நல்லது.

தந்தைவழி உறவினர்களிடம் நெருக்கம் உண்டாகும். இதுவரை இருந்துவந்த பங்காளிப் பிரச்னை தீரும். பூர்வீக சொத்துக்களில் உங்கள் பாகம் சேதமில்லாமல் உங்களுக்கு கிடைக்கும். பெரியப்பா சித்தப்பாக்கள் மற்றும் தந்தையுடன் பிறந்த அத்தைகளால் லாபம் இருக்கும்.

ஆன்மீக உணர்வுகள் சிலருக்கு அதிகமாகும். ஆன்மீகம் சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் சிலரைத் தேடிவரும். ஆலயத்தில் பணி செய்ய சிலருக்கு வாய்ப்பு கிடைக்கும். இதுவரை தரிசிக்க வேண்டும் என்று ஏங்கியிருந்த புனிதத்தலங்களுக்கு சென்று மனநிறைவுடன் திரும்பி வருவீர்கள். ஞானிகளின் ஆசிர்வாதமும் அவர்களின் தொடர்பும் கிடைக்கும்.

சிலர் புனிதத்தலங்களுக்கு அருகில் வேலை மாறுதல்கள் பெறுவீர்கள். சிதிலம் அடைந்த ஆலயங்களை புனருத்தானம் செய்வீர்கள். கும்பாபிஷேக திருப்பணிகளில் கலந்து கொள்ளும் பாக்கியம் கிடைக்கும். காசி, ராமேஸ்வரம், ரிஷிகேஷ், ஹரித்துவார் போன்ற பயணங்கள் இப்போது உண்டு.

தந்தையிடமிருந்து ஏதேனும் ஆதாயம் இருக்கும். இளைஞர்களுக்கு நீங்கள் விரும்பிக் கேட்கும் ஒரு பொருளை உங்கள் அப்பா வாங்கித் தருவார். வீட்டில் குழந்தைகளில் உடல் நலத்தில் அக்கறையும், கவனமும் தேவைப்படும். சிறு குழந்தைகளுக்கு சாதாரண உடல்நலக் குறைவு என்றால் கூட அலட்சியமாக இருக்காமல் உடனடியாக மருத்துவரிடம் சிகிச்சைக்கு செல்வது நல்லது.

மூத்த சகோதரர், சகோதரிகளின் உறவு மேம்படும். அவர்களால் உதவிகள் இருக்கும். இதுவரை திருமணம் தாமதமான அக்கா அண்ணன் போன்றவர்களுக்கு நல்ல இடத்தில் திருமணமாகும். அதிகம் பெண்களுடன் பிறந்தவர்கள் தங்கள் சகோதரிகளின் வீட்டு சுபகாரியங்களுக்கு செலவு செய்ய வேண்டியிருக்கும்.

மாணவர்கள் படிப்பில் கவனமாக இருங்கள். இந்த வருடம் அரியர்ஸ் வரும் வாய்ப்பு இருக்கிறது. காலேஜிற்கு கட் அடிக்காதீர்கள். காலேஜ் உங்களைக் கட் அடித்து விடலாம். இளைஞர்களும், யுவதிகளும் தங்களின் வாழ்க்கைத் துணைவரை இந்த வருடம் பார்க்கும் வாய்ப்புக் கிடைக்கலாம். காதல் வரும் வருடம் இது.


வெளிநாடு சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களும் வெற்றிகரமாக கை கொடுக்கும். மாணவர்கள் உயர்கல்வி கற்பதற்கு மேல் நாடுகளுக்கு செல்ல முடியும். வெளிநாட்டு வேலைக்கு விண்ணப்பித்திருந்தவர்களுக்கு உடனடியாக அந்த வேலை கிடைக்கும்.

பெண்களுக்கு இந்த புத்தாண்டு நல்ல பலன்களைத்தான் அதிகம் தரும். இதுவரை உங்களை புரிந்துக் கொள்ளாத கணவர் இனிமேல் உங்களை புரிந்து கொண்டு, உங்கள் மனம் போல் நடந்து கொள்ள ஆரம்பிப்பார். பிள்ளைகள் உங்களின் கஷ்டங்களைப் புரிந்து கொள்வார்கள். வேலை செய்யும் இடங்களில் மதிப்பும், மரியாதையும் கிடைக்கும். உங்களின் அந்தஸ்து உயரும். கூட்டுக் குடும்பத்தில் மருமகளின் பேச்சு மாமியாரால் ஏற்கப்படும்.

உங்களின் உழைப்பும் முயற்சியும் மட்டுமே உங்களுக்கு வெற்றியைத் தரும் என்பதால் உண்மையாக கடுமையாக உழைத்தால் மட்டுமே இந்த வருடம் வெற்றி கிடைக்கும். அதே நேரத்தில் நீங்கள் உழைப்பிற்கு அஞ்சாதவர்கள் என்பதால் உங்களால் எதுவும் செய்ய முடியும் என்பதும் நிஜம்.

யூகவணிகம், பங்குச்சந்தை முதலீடு, வட்டிக்கு பணம் கொடுத்தல் போன்ற ரிஸ்க் எடுக்கும் தொழில்களில் கவனமுடன் இருப்பது நல்லது. ஆரம்பத்தில் சிறிது லாபம் வருவது போல காட்டி பிறகு மொத்த முதலீடும் சிக்கலுக்கு ஆளாகும் நிலை வரலாம்.

எந்த ஒரு செயலையும் கடும் முயற்சிக்குப் பின்னர்தான் செய்ய முடியும் என்பதால் அனைத்து விஷயங்களையும் நிதானமாகவும் திட்டமிட்டும் சரியாகச் செய்ய வேண்டி இருக்கும். குழப்பமான சூழ்நிலையில் தவறான முடிவுகள் எடுக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே எந்த ஒரு விஷயத்தையும் ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்தும், வீட்டில் இருக்கும் அனுபவம் வாய்ந்த பெரியவர்களிடம் ஆலோசித்தும் முடிவு எடுப்பது மிகவும் நன்மையைத் தரும்.

சிலருக்கு இருக்கும் வாடகை வீட்டை மாற்றி புதிதாக ஒத்திக்கு எடுத்தல் அல்லது புது வீடு வாங்குதல் போன்றவைகள் நடக்கும். நீண்டகால வீட்டுக்கடன் பெற்று வீடு வாங்க முடியும். எதை வாங்கினாலும் வில்லங்கம் இருக்கிறதா என்று தீர விசாரியுங்கள்.

பிள்ளைகள் விஷயத்தில் செலவுகள் இருக்கும். படிப்புச்செலவு மற்றும் அவர்களுடைய எதிர்கால வாழ்க்கைக்கான அடித்தளச்செலவுகள் போன்றவைகளுக்காக கையில் இருக்கும் சேமிப்பை நீங்கள் செலவிட வேண்டியது இருக்கும்.

அரசியல்வாதிகளுக்கு மறைமுக எதிரிகள் பின்னால் குழி பறிப்பார்கள் என்பதால் பேசும்போது வார்த்தைகளில் கவனமாக இருங்கள். பொது வாழ்க்கையில் உள்ள சிலருக்கு அதிகாரப் பதவிகள் தேடி வரும். கூடவே உங்கள் விரோதிகளும் உங்களை எதில் சிக்க வைக்கலாம் என்றும் அலைவார்கள்.

பத்திரிக்கை, ஊடகங்கள் போன்ற துறையில் இருப்பவருக்கு அலைச்சலும், வேலைப்பளுவும் அதிகமாக இருக்கும். உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்க சிரமங்கள் இருக்கும். கலைஞர்கள் வேலை செய்த பணத்தை பெற போராட வேண்டி இருக்கும்.கடக ராசிக்காரர்களுக்கு மன்மத வருடம் எனப்படும் இந்த தமிழ்ப் புத்தாண்டு நல்ல பொருளாதார வரவையும் தனலாபங்களையும் அள்ளித் தரும் வருடமாக இருக்கும். அதேபோல வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன விஷயங்களில் இதுவரை இருந்து வந்த தடைகள், தாமதங்கள் போன்றவைகள் உடனடியாக நீங்கி கடக ராசிக்கு சோதனைகள் நீங்கும் வருடமாகவும் இது இருக்கும்.

இதுவரை ஏற்ற இறக்கங்களுடன் இருந்து வந்த உங்களுடைய வருமானம் மற்றும் பொருளாதார நிலைமை இனிமேல் மாறி அதிக வருமானம், மனநிம்மதி எனும் வகையில் உங்களை இந்த வருடம் முதல் நிம்மதியாக இருக்க வைக்கும்.

மூன்றாமிடத்தில் ராகு பகவான் நிலைகொண்டு வருடம் முழுவதும் இருக்கப் போவதால் சகாயஸ்தானம் வலுப்பெற்று இந்த வருடத்தில் நீங்கள் கேட்கும் இடத்தில் உதவிகள் கிடைக்கும். குறிப்பாக அன்னிய மத, இனம், மொழிக்காரர்கள் உங்களுக்கு சரியான நேரத்தில் உதவிகளை செய்வார்கள்.

இளைய பருவத்தினருக்கு இதுவரை தாமதமாகி வந்த திருமண அமைப்புகள் கூடிவந்து ஜாம்ஜாம் என்று திருமணம் நடக்கும். காதலித்துக் கொண்டிருப்பவர்கள் பெற்றோர் சம்மதத்துடன் திருமண பந்தத்தில் நுழைவீர்கள். ஏற்கனவே முதல் வாழ்க்கை கோணலாகிப் போய் இரண்டாவது வாழ்க்கையை எதிர்பார்ப்பவர்களுக்கு அது நல்லபடியாக நடந்து நீடித்தும் இருக்கும்.

இதுவரை நல்லவேலை கிடைக்காமல் சோர்ந்து போயிருந்தவர்களுக்கு மனதுக்கு பிடித்த வகையில் நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும். பொதுவாழ்க்கையில் இருப்பவர்கள், ஊடகம் பத்திரிக்கை போன்ற துறையில் இருப்பவர்கள், கலைஞர்கள் உள்ளிட்டவர்களுக்கு இது வசந்த காலமாகும். கலைத்துறையினர் இதுவரை இல்லாத நல்ல திருப்பங்களைக் காண்பீர்கள். வாய்ப்புகள் வந்து வாசல்கதவைத் தட்டும்.

பொருத்தமில்லாத வேலையில் இஷ்டமில்லாமல் இருந்த இளைஞர்களுக்கு உடனடியாக மாற்றங்கள் உருவாகி நினைத்த மாதிரியான வேலை கிடைக்கும். உங்களைப் பிடிக்காத மேலதிகாரி மாறுதலாகி உங்களுக்கு அனுசரணையானவர் அந்த இடத்திற்கு வருவார். அலுவலகத்தில் இருந்த பிரச்னைகள் மறையும். ஏற்கனவே தொழில் ஆரம்பித்து இன்னும் காலூன்ற முடியாமல் சிரமப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த வருடம் தொழில் நல்ல முன்னேற்றமாக நடக்கும்.


அரசு தனியார்துறை ஊழியர்களுக்கு ‘இதர வருமானங்கள்’ சிறப்பாக சொல்லிக் கொள்ளும்படி இருக்கும். தொழிலாளர்களுக்கு வேலைப்பளு குறைந்து சம்பளஉயர்வு, பதவி உயர்வு போன்றவைகள் கிடைக்கும். தொழிற்சங்கங்களில் பதவியில் இருப்பவர்கள் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

வியாபாரிகள், சுயதொழில் செய்பவர்கள் உள்ளிட்டவர்கள் தொழில் மேன்மையும், புதிய தொழில் தொடங்குதலும் அடைவீர்கள். இதுவரை நல்ல வேலை கிடைக்காதவர்களுக்கு பெரிய சம்பளத்துடன் மனதிற்குப் பிடித்த வேலை கிடைக்கும்.

கூட்டுத் தொழிலில் இதுவரை இருந்த வந்த கருத்து வேறுபாடுகளும், மந்தமான நிலைமையும் மாறி தொழில் நல்லபடியாக நடக்கும். நண்பர்களும், பங்குதாரர்களும் உதவிகரமாக இருப்பார்கள். தந்தையின் ஆதரவு கிடைக்கும். தந்தை வழி உதவிகள் நன்றாக இருக்கும். அப்பா வழி சொத்துக்கள் மூலம் ஆதாயம் உண்டு. தர்ம காரியங்கள் செய்ய முடியும். அறப்பணிகளில் ஈடுபட்டு நல்ல பெயர் வாங்குவீர்கள்.

விவசாயிகளுக்கு இந்த புதுவருடம் மிகுந்த நன்மையை அளிக்கும். விளைந்த பயிர் சிந்தாமல் சிதறாமல் வீட்டிற்கு பொன்னாக வரும். குடியானவனின் வீட்டில் குதூகலமும், சுபநிகழ்ச்சிகளும் இருக்கும். பணப்பயிர் விளைவிக்கும் விவசாயிகளுக்கு மேன்மை உண்டு.

தொழிலதிபர்களுக்கு இதுவரை இருந்து வந்த முட்டுக்கட்டைகள் விலகும். அரசாங்க ஆதரவு உண்டு. இடைத்தரகர்களை நீக்கி நேரடியாக அமைச்சர்களையோ அதிகாரிகளையோ பார்த்து காரியங்களை வெற்றியாக்க முடியும். எந்த ஒரு காரியத்திலும் எடுக்கும் முயற்சிகள் இப்போது பலிதமாகும். தொழிலை விரிவுபடுத்தலாம். புதிய சோதனை முயற்சிகளை இப்போது செய்யலாம்.


இதுவரை சொந்த வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டும் வாய்ப்போ அல்லது கட்டிய பழைய வீடோ வாங்கும் யோகம் வருகிறது. மாணவர்களுக்கு பள்ளி கல்லூரிகளில் இனிய சம்பவங்கள் நிகழும். படிப்பது மனதில் பதியும். தேர்வுகளை நன்றாக எழுத முடியும்.

இதுவரை மனதில் இருந்து வந்த எதிர்மறை எண்ணங்கள், தாழ்வு மனப்பான்மைகள் இனிமேல் இருக்காது. எதை நினைத்து கலங்குகிறோம் என்று தெரியாமல் இதுவரை இனம் புரியாத கலக்கத்தில் இருந்து வந்தவர்கள் இந்த வருடத்தில் இருந்து புது உற்சாகம் அடைவீர்கள்.

தொழில் அதிபர்கள், உயரதிகாரிகள், அரசியல்வாதிகள், கலைஞர்கள் உள்ளிட்ட எல்லாத் துறையினருக்கும் இது மிகவும் நல்ல நேரம். எந்தக் காரியமும் உங்களுக்கு அதிக முயற்சி இல்லாமலேயே வெற்றி பெறும். ஊரில் இருக்க முடியாமல் வெளியூர் சென்றவர்கள் சொந்த ஊருக்குத் திரும்பி பழைய வாழ்க்கையைத் தொடரும்படி சம்பவங்கள் நடைபெறும். காதலால் மனஉளைச்சலுக்கு ஆளானவர்கள் மற்றும் காதலைப் பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்று சேருவார்கள் அல்லது புதிய துணை கிடைக்கும்.

இதுவரை உங்களைப் பிடிக்காமல் உங்களை எதிர்த்துக் கொண்டிருந்தவர்கள் இனிமேல் உங்களைப் பார்த்து பயப்படும்படியாக நிலைமை மாறும். கடன் பிரச்னைகள் தலை தூக்காது. புதிய கடன்கள் வாங்கும்படி நேரிட்டாலும் பழைய கடன்களை சுத்தமாக அடைத்துவிட்டு நிம்மதியாக இருப்பீர்கள்.

வேறு இன மொழி மதக்காரர்கள் உங்களிடம் நேசமாக இருப்பார்கள். வெளி மாநிலத்தவர்கள் இந்த வருடம் நண்பர்களாகக் கிடைப்பார்கள். அவர்களால் நன்மைகள் உண்டாகும். வெகு தூரத்தில் பணியிடம் அமையும். பிரயாணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். ஆனாலும் உற்சாகமாக இருப்பீர்கள்.

பூர்வீக சொத்து சம்பந்தமாக இது வரை இருந்து வந்த பாகப்பிரிவினை பிரச்னைகள், பங்காளித் தகராறு போன்றவைகள் இந்த வருடம் சுமுகமாக உங்களுக்கு லாபகரமாக முடிவுக்கு வரும். போலீஸ், கோர்ட், கேஸ் என்று அலைந்தவர்கள் உங்கள் கண்முன்பே உங்களுக்கு சாதகமாய் பிரச்னைகள் முடிவதைக் காண்பீர்கள்.2015-ம் வருடம் பிறக்கும் மன்மத வருடம் எனப்படும் தமிழ்ப் புத்தாண்டு சிம்ம ராசிக்காரர்களுக்கு இதுவரை இருந்து வந்த சாதகமற்ற நிலைகளை மாற்றி நன்மைகளை தரும் வருடமாக இருக்கும். அதே நேரத்தில் அனைத்து விஷயங்களிலும் மாற்றங்களும் எதிர்காலத்திற்கான திட்டமிடலும் இருக்கும்.

வருட ஆரம்பத்தில் அர்த்தாஷ்டமச் சனியாக நான்காமிடத்தில் இருந்து செயல்படும் சனிபகவான் தனது கெடுதலான பார்வையால் தொழில் ஸ்தானம் எனப்படும் பத்தாமிடத்தையும் உங்கள் ராசியையும் இந்த வருடம் முழுக்கப் பார்ப்பார் என்பதால் சிம்மராசிக்காரர்கள் இந்த தமிழ்ப் புத்தாண்டில் கூடுமானவரை தொழில், வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் எந்த வித ரிஸ்க்கும் எடுக்காமல் கவனமுடன் இருப்பது நல்லது.

ஜூலைக்கு பிறகு நடைபெற இருக்கும் குருப்பெயர்ச்சியின் மூலம் குருபகவானும் தற்போது இருக்கும் விரயஸ்தானம் என்று சொல்லப்படும் பனிரெண்டாமிடத்தில் இருந்து மாறி ஜென்மராசிக்கே வருவார் என்பதால் இந்த நிலையையும் சாதகமானது என்று சொல்ல முடியாது.

ஒரு அலுவலகத்தில் அல்லது ஒரு அமைப்பில் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுக்கும் ஒரு தொழிலில் முதலாளியாகவோ, மேனேஜர் போன்ற நிர்வாக அமைப்பில் இருப்பவர்களுக்கோ இந்த வருடம் சாதகமற்ற பலன்களைத் தரும் என்பதால் இந்த வருடம் சிம்மராசிக்காரர்கள் அனைத்து விஷயங்களிலும் நிதானமாகவும் கவனத்துடனும், பொறுப்புணர்வுடனும் செயல்பட்டால் அனைத்தையும் ஜெயித்து விடலாம்.

வியாபாரிகளுக்கு வியாபாரம் சுமராகத்தான் இருக்கும். எதிரில் போட்டிக்கடை உருவாகும். இத்தனை காலம் உங்களிடம் வாடிக்கையாளராக இருந்தவர்கள் எதிர்க்கடைக்குச் சென்று உங்கள் வியாபாரத்தைக் குறைய வைப்பார்கள். எல்லாம் கொஞ்சகாலத்திற்குத்தான் என்பதை அறிந்து கொண்டு பொறுமையாக இருங்கள்.

இளையபருவத்தினருக்கு வேலை கிடைப்பது சிரமமாக இருக்கும். உங்களுடைய திறமைகளை பிறர் அறிய மாட்டார்கள். உங்களை விட திறமைக்குறைவான மேலதிகாரியுடன் வேண்டா வெறுப்பாக வேலை செய்ய வேண்டியிருக்கும்.

அதே நேரத்தில் சென்ற வருடத்தை விட இந்த வருடம் வருமானம் மிகவும் நன்றாக இருக்கும். பணவரவும் சரளமாக இருக்கும். வெளிநாடு சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களும் உங்களுக்கு கை கொடுக்கும். வெளிநாட்டில் படிக்கவோ, வேலை செய்யவோ முயற்சிப்பவர்களுக்கு உடனடியாக விசா கிடைக்கும்.

சனிபகவான் ஜீவனஸ்தானத்தை பார்ப்பதால் தொழில், வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் கெடுதல்களை செய்வார். குறிப்பாக பணமின்றி நீங்கள் கஷ்டப்பட வேண்டும் என்பதால் பணத்தைத் தரும் அமைப்புகளை சனிபகவான் பாதிப்பார். எனவே வேலையில் இருப்பவர்கள் மிகுந்த கவனமாகவும் இருக்க வேண்டிய காலகட்டம் இது.

மேலதிகாரிகளிடம் மோதல் போக்கை கடைப்பிடிக்க வேண்டாம். அவர்களின் பேச்சைக் கேட்டு நடந்து கொள்வது நல்லது. இந்த நேரத்தில்தான் பணசிக்கல்களும், கடன்தொல்லைகளும் வந்து முறைகேடான வருமானத்திற்கு ஆசைவரும் என்பதால் குறிப்பாக அரசுப்பணியாளர்கள் இதர வருமானங்கள் தரக்கூடிய நேரத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

வேலையிழப்பு, தற்காலிக பணிநீக்கம் போன்ற அபாயங்கள் இருப்பதால் எதிலும் கவனமாக இருக்க வேண்டும். இந்தக் காலகட்டத்தில் யாரையும் நம்ப வேண்டாம். சுவருக்குக்கூட கண்களும், காதுகளும் இருக்கின்றன என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.


சனி இப்போது ராசியைப் பார்ப்பதால் இதுவரை இருந்து வந்த உங்களுடைய குணங்கள் சற்று மாறுப்படும். சற்று முரண்பாடானவராக, பிடிவாதக்காரராக மாறுவீர்கள். எவருக்கும் வளைந்து கொடுக்கமாட்டீர்கள். மனதில் குழப்பமான எண்ணங்கள் வரும். தேவையற்ற மனக்கலக்கம் இருக்கும். எதையும் அதிகாரம் செய்து பழக்கப்பட்ட ஆளுமைத்திறன்மிக்க உங்களை முடக்கிப் போட்டு சனி சற்று அசைத்துப் பார்ப்பார் என்றாலும் யாராலும் உங்களை ஜெயிக்க முடியாது என்பது நிச்சயம்.

சில தேவையற்ற விஷயங்களில் மாட்டிக் கொண்டு சிக்கல்கள் உண்டாகும் என்பதால் அவசியமில்லாதவர்களுக்கு ஜாமீன் போடுவது மற்றும் எவருக்காகவும் கியாரண்டி தருவது இப்போது கூடாது. பல நாள் சேர்த்து வைத்த நற்பெயர் ஒரு சில நிமிட செயல்களால் கெடக்கூடும் என்பதால் கவனமாக இருங்கள்.

வீண்விவகாரங்களில் தலையிடுவதும் அடுத்தவர்களுக்காக பரிந்து பேசி வம்பை விலைக்கு வாங்குவதும் இந்த காலகட்டங்களில் நடைபெற்று விரோதங்கள் வரும் என்பதால் எங்கும் எதிலும் எச்சரிக்கை தேவை.

அரசுவகை உதவிகள் எதிர்பார்ப்போருக்கு அனைத்திலும் சுணக்கம் இருக்கும். அரசு,தனியார்துறை ஊழியர்களுக்கு இடமாற்றம் உண்டு. பணியாளர்களுக்கு உங்களைப் புரிந்து கொள்ளாதவர் மேலதிகாரியாக வந்து மனச்சங்கடங்கள் தருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

பொதுவாக தொழிலாளர்களுக்கு வேலை செய்யுமிடத்தில் வேலைப்பளு அதிகமாக இருக்கும். சிலருக்கு வேலை அமைப்புகளில் மாற்றம் வரலாம். வீடுமாற்றம் தொழில்மாற்றம் வேலை மாற்றம் போன்றவைகள் இப்போது நடக்கும்.

பூர்வீக சொத்து விவகாரங்களில் பங்காளிகளுடன் கருத்து வேற்றுமை வர வாய்ப்பு இருக்கிறது. உறவினர்களுடன் கவனமாக பழக வேண்டியது அவசியம். தேவையற்ற பேச்சுக்கள் வேண்டாம். சிலருக்கு மறைமுக வழியில் தனலாபங்கள் இருக்கும். இதுவரை குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் தீரும்.

கணவன் மனைவி உறவு நல்லபடியாக மாறும். உடல்நலம் சரியில்லாமல் இருந்தவர்களின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் தெரியும். இதுவரை இருந்து வந்த விரயச் செலவுகள் இனிமேல் இருக்காது. எனவே ஏதேனும் ஒரு தொகையை அது சிறியதாக இருந்தாலும் சேமிக்க முடியும்.

இதுவரை மகன் மகள் விஷயத்தில் இருந்து வந்த மனக் கவலைகள் தீரப் போகிறது. வேலைக்குச் செல்லாமல் இருந்து வந்த இளைய வயதினருக்கு நல்ல வேலை கிடைக்கும். தாமதமாகிக் கொண்டே வந்த மகன், மகள் திருமணத்தை நடத்த முடியும். குழந்தைகளால் பெருமைப் படத்தக்க சம்பவங்கள் இருக்கும்.


நீண்ட தூர புனித யாத்திரைகள் இப்போது செல்ல முடியும். வயதானவர்கள் காசி கயா போன்ற புனித யாத்திரைகள் செல்வீர்கள். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் ஆகும். இதுவரை குழந்தை இல்லாதவர்களுக்கு இப்போது குழந்தை பிறக்கும் நேரம் கூடி வந்து விட்டது.

குலதெய்வத்தின் அருளைப் பெற வேண்டிய நேரம் இது என்பதால் முறையாக குலதெய்வ வழிபாடு செய்யுங்கள். இஸ்லாமியர்களுக்கு புனித ஹஜ் பயணம் செல்லும் வாய்ப்பை இறைவன் அருளுவார். பெரிய மகான்களின் தரிசனம் கிடைக்கும். ஞானிகளின் ஜீவ சமாதிக்கு சென்று அவர்களின் அருளாசி பெறும் பாக்கியம் கிடைக்கும்.

தேவையற்ற வீண் வாக்குவாதங்கள் எவரிடமும் வேண்டாம். நண்பர்களும் இப்போது விரோதியாவர்கள் என்பதால் எச்சரிக்கையாக இருங்கள். நடுத்தர வயதுக்காரர்கள் ஆரோக்கியத்தில் கவனம் வைக்க வேண்டும். ஒரு முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

பெண்களுக்கு பணிச்சுமை அதிகமாகும். அலுவலகத்திலும் வேலை செய்து வீட்டிலும் நீங்களே வேலை செய்ய வேண்டி இருக்கும். உங்களை புரிந்து கொள்ளாத மேலதிகாரி மாற்றலாகி வந்து தொல்லைகளை கொடுப்பார். ஆனாலும் வீட்டில் பிரச்னை எதுவும் இருக்காது.

ஏற்கனவே கடன் வாங்கி சிக்கலில் இருப்பவர்களுக்கு புதிய கடன்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எக்காரணத்தைக் கொண்டும் அதிக வட்டிக்கு வாங்குவதை தவிர்ப்பது நல்லது. அவசரம் என்று கிடைக்கும் இடத்தில் கிடைக்கும் வட்டியில் பணம் வாங்கினால் பின்னால் கடன் பிரச்னைகளால் மனக் கலக்கம் வரலாம்.

எந்தக்காரணம் கொண்டும் எவ்வளவு நெருக்கடியிலும் வீட்டுப் பத்திரத்தை அடமானம் வைத்து கடன் வாங்குவது மற்றும் தொழில் செய்வது இப்போது செய்யாதீர்கள். அது சரியாக வராது. அதுபோலவே இருக்கும் வீட்டை விற்று புது வீடு வாங்குவது போன்றவைகளும் இப்போது வேண்டாம். சொந்த வீட்டை விற்று அந்தப்பணம் வேறுவகையில் செலவாகி வாடகை வீட்டில் இருக்கச் செய்வார் நான்காமிட சனி .

பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு அதிகாரப் பதவிகள் தேடிவரும். அரசியல்வாதிகள் புகழ் பெறுவீர்கள். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புக்கள் கிடைக்கும். விவசாயிகள் வியாபாரிகள் போன்றவர்களுக்கு வருமானம் உண்டு. பொதுவில் அனைத்திலும் கவனமாக செயல்பட வேண்டிய வருடம் இது.மன்மத வருடம் எனப்படும் இந்த தமிழ்ப் புத்தாண்டு கன்னி ராசிக்காரர்களுக்கு நன்மைகளையும், நல்ல மாற்றங்களையும், இளைய பருவத்தினருக்கு எதிர்கால நல்வாழ்வுக்கான அஸ்திவாரம் போன்ற அமைப்புகளையும் செய்யும்.

கன்னி ராசிக்காரர்களுக்கு சென்ற வருடத்தோடு ஏழரைச்சனி முடிந்து விட்டதால் இனிமேல் படிப்படியாக வாழ்க்கை அனைத்து விதங்களிலும் முன்னேற்றத்தை நோக்கியே செல்லும். இதுவரை எந்த விஷயத்தில் உங்களுக்கு தடைகள் இருந்ததோ அவை அனைத்தும் இப்போது நீக்கப்படும்.

எது கிடைக்காமல் இருந்ததோ அது இப்போது கொடுக்கப்படும். எது நடக்காமல் இருந்ததோ அது இப்போது நடக்கும். எனவே இந்த மேன்மைமிகு தமிழ்ப் புத்தாண்டில் உங்களுடைய தயக்கங்கள் அனைத்தையும் தள்ளி வைத்து விட்டு முயற்சியுடன் அனைத்தையும் எதிர்கொண்டால் வெற்றி நிச்சயம்.

ஜூலை மாதத்தில் நடைபெறும் குருப்பெயர்ச்சியின் மூலம் குருபகவான் விரைய வீடு எனப்படும் பனிரெண்டாமிடத்திற்கு மாறினாலும் அவர் அவருக்கு பிடித்தமான சூரியனின் சிம்மவீட்டிற்கு மாறுவதால் வீட்டில் அனைத்து சுபகாரியங்களும் நிறைவேறி அதன் மூலம் சுப விரையங்களே இருக்கும். வீண் விரையங்கள் இருக்காது. செலவுகள் இருக்கும் என்பதால் செலவழிக்க பணவரவும் தாராளமாக இருக்கும். எனவே தமிழ்ப் புத்தாண்டு உங்களுக்கு தங்கப் புத்தாண்டுதான்.

வீட்டில் பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் வாங்க முடியும். புதிதாக வாகன யோகம் வந்து விட்டது. நீண்ட காலமாக வாங்க வேண்டும் என்று நினைத்திருந்த புதிய வாகனம் வாங்க முடியும். சொகுசு வாகனம் வாங்குவதற்கும் அமைப்பு இருக்கிறது.

இதுவரை வீடு வாங்க தடை இருந்தவர்களுக்கு இந்த தடை நீங்கி நல்ல வசதியான ஆடம்பர வீடு அமைய போகிறது. வாடகை வீட்டில் இருப்பவர்கள் இனிமேல் குத்தகை அடிப்படை வீட்டிற்காவது மாற முடியும். வீடு சம்பந்தப்பட்ட அனைத்துக் காரியங்களும் நினைத்தபடியே நிறைவேறும்.

வீடு கட்ட ஆரம்பித்து பாதியில் நிறுத்தியவர்கள் முழுதாக முடித்து கிரகப் பிரவேசம் செய்வீர்கள். கடன் பெற்று நல்ல பிளாட் வாங்க முடியும். எதிர்கால முதலீடாக குழந்தைகள் பெயரிலோ அல்லது உங்கள் பேரிலோ வீட்டுமனை வாங்குவீர்கள்.

செலவுகள் அதிகம் இருக்கும் எனபதால் வரும் வருமானத்தை முதலீடாக மாற்றி நல்ல விதமாக விரயம் செய்வது புத்திசாலித்தனம் என்பதால் வரப்போகும் வருமானத்தை முதலீடாக்குவது நல்லது. ஏற்கனவே இருக்கின்ற பழைய கடனை புதுக்கடன் வாங்கி அடைக்க நேரிடலாம். அல்லது குடும்பத்தில் நடக்க இருக்கும் சுபகாரியங்களுக்காகவோ அல்லது தொழில்விரிவாக்கம் வியாபாரம் போன்றவற்றிற்காகவோ கடன் வாங்க நேரிடலாம்.


ஜூலைக்குப் பிறகு குருபகவானால் மாறுதல்கள் இருக்கும். வீடு மாற்றம் தொழில் மாற்றம் வாழ்க்கைக்கு தேவையான முக்கியமான ஒரு விஷயத்தில் மாற்றம் போன்ற ஏதேனும் ஒன்று இப்போது நடக்கும். இயந்திரம் சம்பந்தப்பட்ட தொழில், நகரும் பொருட்கள் சம்பந்தப்பட்ட துறையினருக்கு இப்போது தொழில் மாற்றங்கள் இருக்கும். அது நல்லதாகவும் இருக்கும்.

பணிபுரியும் இடங்களில் டிரான்ஸ்பர் கேட்டு விண்ணப்பித்திருந்தவர்களுக்கு வெளியூருக்கு மாறுதல்கள் கிடைக்கும். இந்த ஆண்டில் அடிக்கடி பயணம் செய்ய வேண்டியிருக்கும். எனவே அதுபோன்ற நிலைகளில் வேலை அமையும் வாய்ப்பு உள்ளது.

நடுத்தர வயதுடையவர்கள் உடல்நலத்தில் அதிக கவனமுடன் இருப்பது நல்லது. வழக்கு போன்றவைகளில் சிக்கி அலையக் கூடிய வாய்ப்பு இருப்பதால் எல்லாவற்றிலும் உஷாராக இருங்கள். யாருக்கும் ஜாமீன் போட வேண்டாம். சமரசம் செய்து வைப்பது பஞ்சாயத்து பண்ணுவது போன்றவைகள் பக்கம் தலைவைத்துப் படுக்காதீர்கள். இதனால் மனவருத்தம் வீண் விரோதங்கள் வரலாம்.

குடும்பத்தில் கணவன் மனைவி உறவு சுமாராகத்தான் இருக்கும். கோபங்களைக் குறைத்துக் கொண்டு ஒருவருக்கு ஒருவர் அனுசரணை காட்ட வேண்டியது அவசியம். பிள்ளைகளால் பிரச்னைகளும் செலவுகளும் இருக்கலாம். கல்லூரி பள்ளி செல்லும் குழந்தைகளைக் கவனிப்பது நல்லது. சிலருக்கு திருமணயோகம் உண்டு.

இதுவரை கருத்து வேற்றுமைகளாலும், குடும்பச் சிக்கல்களினாலும் பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேர்வார்கள். கடந்த ஏழரைச்சனியில் திருமண வாழ்வில் பிரச்னைகள் ஏற்பட்டு விவாகரத்தானவர்களுக்கு இப்போது இரண்டாவது வாழ்க்கை நல்லபடியாக அமையும். இந்த வாழ்க்கை நீடித்தும் நிம்மதியாகவும் இருக்கும்.

குடும்பத்தில் இதுவரை தடைப்பட்டு கொண்டிருந்த மங்கள காரியங்கள் இனிமேல் வெகு சிறப்பாக நடைபெறும். காதலித்துத் கொண்டு இருப்பவர்களுக்கு பெரியவர்களின் சம்மதத்துடன் திருமணம் நடக்கும். சிலர் புதிதாக காதலிக்க ஆரம்பிப்பீர்கள். குழந்தை பாக்கியம் தாமதித்தவர்களுக்கு உடனடியாக நல்லமுறையில் குழந்தை பிறக்கும்.

வழக்கு கோர்ட் காவல்துறை போன்றவற்றில் சிக்கித் திண்டாடிக் கொண்டிருந்தவர்களுக்கு அனைத்தும் நல்லபடியாக முடிவுக்கு வரும். அநியாய வட்டிக்கு கடன் வாங்கி அதில் இருந்து மீள முடியாமல் அவஸ்தைப் பட்டு விழி பிதுங்கி கொண்டிருந்தவர்களுக்கு கடனை அடைப்பதற்கு நல்ல வழி பிறக்கும்.

தொழில் ரீதியான பயணங்கள் இனிமேல் அடிக்கடி இருக்கும். வெளிமாநிலங்களுக்கு செல்வீர்கள். நீண்டதூரப் பயணங்களால் லாபங்கள் இருக்கும். வெளிநாட்டுப் பயணங்களும் உண்டு. வேலைப்பளு அதிகம் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. வேலைக்காரர்களை அதிகம் நம்ப வேண்டாம்.


அதிக முனைப்பு இல்லாமலேயே தொழில் முயற்சிகளில் பெரிய லாபங்கள் கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது. கமிஷன் தரகு போன்றவைகளின் மூலமாக நல்ல பெரிய தொகை ஒரே நேரத்தில் ‘லம்ப்’பாக கிடைக்கும். பங்குச் சந்தை லாட்டரி போட்டி பந்தயங்கள் போன்றவைகள் இப்போது கை கொடுக்கும். வருகின்ற வருமானத்தை முதலீடாக்குவது நல்லது. வீட்டுமனை, நிலம் போன்றவைகள் இப்போது வாங்கிப் போடுவீர்கள். குழந்தைகளின் பேரில் டெபொசிட் செய்வீர்கள்.

தாய்வழி சொந்தங்களிடம் இதுவரை இருந்து வந்த கருத்து வேற்றுமைகள் தீரும். அம்மாவின் ஆதரவு கிடைக்கும். தாயார் வழியில் நன்மைகள் உண்டு. மாமன்கள், சித்திகள் உதவுவார்கள். உயர்கல்வி கற்க இருந்து வந்த தடைகள் நீங்கி சிலர் மேற்படிப்பு படிப்பீர்கள்.

கடன் வாங்கும் முன் ஒருமுறைக்கு இரண்டு முறை யோசித்து செயல்படுவது நல்லது. எக்காரணத்தை முன்னிட்டும் மீட்டர் வட்டி போன்ற அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டாம். தேவையில்லாமல் எவரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். யாரிடமும் அனாவசியமாக பேசி சிக்கலை உண்டாக்கிக் கொள்ள வேண்டாம்.

நிலம் வீடு போன்றவைகளை வாங்கும்போது பொறுமை தேவை. அவசரம் வேண்டாம். வில்லங்கம் சரியாகப் பார்க்கவும். வில்லங்கம் உள்ள இடத்தை தெரியாமல் வாங்கிவிட்டு பின்னால் கோர்ட் கேஸ் என்று அலைய வாய்ப்பிருப்பதால் ஆரம்பத்திலேயே அனைத்திலும் உஷாராக இருங்கள்.

கன்னிராசிப் பெண்களுக்கு இது சிறப்பான நன்மைகளைத் தரும் வருடமாகும். உங்களின் மதிப்பு உயரும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் இதுவரை இருந்த வந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும். அலுவலகத்தில் ஆண்கள் உங்களுக்கு ஒத்துழைப்பார்கள். புகுந்த வீட்டில் அந்தஸ்து, கௌரவம் கூடும். மாமியாரை நீங்கள் வேலை வாங்க முடியும்.

தொலைக்காட்சி சினிமாத்துறை போன்ற ஊடகங்களில் இருக்கும் கலைஞர்கள், பத்திரிகைத்துறையினர், காவல்துறையினர், நீதித்துறையினர், அன்றாடம் சம்பளம் வாங்குபவர்கள், கணிப்பொறி சம்பந்தப்பட்டோர், சொல்லிக்கொடுப்போர் போன்ற அனைத்துத் தரப்பினருக்கும் இந்த ஆண்டு மேன்மைகளைத் தரும்.

பொதுமக்கள் சம்பந்தப்பட்ட பணியில் இருக்கும் சில கன்னி ராசிக்காரர்கள், அரசியல்வாதிகள் போன்றவர்களுக்கு மதிப்பு வாய்ந்த பதவி, அல்லது அதிகாரம் தரும் பதவி மற்றும் அந்தஸ்து உண்டாகும் செயல்கள் கௌரவமான நிகழ்வுகள் நடந்து நீங்கள் புகழ் பெறுவதற்கான அமைப்பு இப்போது இருக்கிறது.

பொதுவாக ஏற்றுமதி இறக்குமதி போன்ற தொழில்கள் தொடர்புடையவர்கள் வெளிநாடுகளில் வர்த்தக அமைப்புகளை வைத்திருப்பவர்கள், மாநிலங்களுக்கு இடையே தொழில் செய்பவர்கள் போன்ற கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த புத்தாண்டு மிகுந்த யோகத்தை தரும்.துலாம் ராசிக்காரர்களுக்கு மன்மத வருடம் எனப்படும் இந்தத் தமிழ்ப் புத்தாண்டு நன்மைகளையே அதிகமாகத் தரும் என்பது நிச்சயமான ஒன்று.

ஏழரைச் சனியின் நிறைவுப் பகுதியில் இருக்கும் உங்களுக்கு சனிபகவான் கடைசி நேரத்தில் கெடுதல்கள் தரும் வலிமையை இழப்பார் என்பதால் புத்தாண்டின் ஆரம்பத்தில் இரண்டில் இருக்கும் சனியை குருபகவான் பார்ப்பதால் இந்த தமிழ்ப் புத்தாண்டு உங்களுக்கு மேன்மைகளை மட்டுமே தரும் என்பது உறுதி.

இந்த வருடம் முழுக்க உங்களின் பொருளாதார நிலைமை கவலைகள் இன்றி மிகவும் சரளமாகவும் மேன்மையாகவும் இருக்கும். வருடத்தின் ஆரம்பத்தில் இருந்தே. ஏதேனும் ஒரு வகையில் பணம் வந்து போய்க் கொண்டிருக்கும். என்பதோடு வருமானக் குறைவு என்பது இந்த வருடத்தில் இருக்கவே இருக்காது என்பதால் இந்த மன்மத வருடத்தை நீங்கள் வரவேற்கவே செய்வீர்கள்.

உங்களில் பெரும்பாலோருக்கு இதுவரை வேலை தொழில் வியாபாரம் போன்ற விஷயங்களில் மனதிற்குப் பிடிக்காத சம்பவங்களும், உழைப்பிற்கேற்ற ஊதியமும், நியாயமான பதவிஉயர்வும் கிடைக்காத நிலை இருந்து வந்தது.

இதுவரை பணவிஷயத்தில் புரட்ட முடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தவர்கள் இனிமேல் சிறிதளவு முயற்சி, பெரிதளவு அதிர்ஷ்டம், அதனால் நல்ல மேம்பாடான நிலை ஆகியவற்றை காண்பீர்கள். நீண்ட நாட்களாக மனதில் உருப்போட்டு வந்திருந்த எண்ணங்கள் திட்டங்கள் கனவுகள் ஆகியவை நடக்கப்போகும் காலம் இது. எனவே இனிமேல் உங்களின் உடல்நிலையும் மனநிலையும் தெளிவாகவும் உற்சாகத்துடனும் இருக்கும்.

இதுவரை நல்ல வேலை கிடைக்காமல் திண்டாடிக் கொண்டிருந்தவர்களுக்கு பொருத்தமான சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்கும். தொழிலில் முதலீடு செய்ய முடியாமல் திணறிக் கொண்டிருந்தவர்களுக்கு முதலீடு செய்வதற்கு பணம் கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு தள்ளிப் போயிருந்த பதவிஉயர்வு சம்பள உயர்வு ஆகியவை கிடைக்கும். எல்லா வகையிலும் வருமானம் நன்றாக இருக்கும்.

அலுவலகத்தில் இதுவரை புரமோஷன் கிடைக்காதவர்கள் பதவிஉயர்வு கிடைக்கப் பெறுவார்கள். நிலுவையில் இருந்த சம்பளஉயர்வு கிடைக்கும். இதுவரை உங்களை முறைத்துக் கொண்டிருந்த மேலதிகாரி மாறுதலாகி உங்களுக்கு சாதகமான, உங்களைப் புரிந்து கொள்ளும் நபர் உங்களுக்கு அதிகாரியாக வருவார்.

சுயதொழில் புரிபவர்களுக்கு இதுவரை இருந்து வந்த தேக்க நிலைகள் மாறி தொழில் சூடு பிடிக்கும். வருமானம் நன்கு வரும். வியாபாரிகள் அனைத்திலும் வெற்றி காண்பார்கள். உங்களின் எதிரிகள் ஓட்டம் பிடிப்பார்கள். விவசாயிகள், கலைஞர்கள், பொதுவாழ்வில் இருப்பவர்கள், தொழிலாளர்கள், அன்றாடம் சம்பளம் வாங்குபவர்கள் போன்ற எல்லாத்துறையினருக்கும் இது தடைகள் நீங்கும் வருடமாக இருக்கும்.


மத்திய மாநில அரசுகளின் போட்டித் தேர்வுகள் மற்றும் வங்கி சம்பந்த பட்ட தேர்வுகள் எழுதுவோருக்கு இம்முறை வெற்றி கிடைக்கும். ஏற்கனவே எழுதி முடிவுகளுக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும்.

வீட்டில் மங்களநிகழ்ச்சிகள் நடைபெறும் காலம் இது. இதுவரை திருமணம் ஆகாத இளைய பருவத்தினருக்கு திருமணம் நடைபெறும். நீண்ட காலமாக மகன், மகளுக்கு திருமணம் கூடி வரவில்லையே என்று வருத்தப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு அந்தக்கவலை இப்போது நீங்கும். இதுவரை புத்திரபாக்கியம் தாமதப்பட்டுக் கொண்டு வந்தவர்களுக்கு குழந்தை பிறக்கும்.

வாழ்க்கைத் துணைவரின் மூலம் பொருளாதார வசதிகள், ஆதரவான போக்கு மற்றும் அனுசரணையான பேச்சு இருக்கும். இதுவரை கோர்ட்கேஸ் போன்ற வழக்குகளில் சிக்கி அவதிப்பட்டவர்களுக்கு நல்ல திருப்புமுனையான நிகழ்ச்சிகள் நடந்து உங்கள் பக்கம் அனைத்தும் சாதகமாகும்.

தொழில் வியாபாரம் வேலை மற்றும் இருப்பிடங்களில் இடமாற்றம் ஏற்படும். வெளிநாட்டுத் தொடர்புகள் வலுப்பெறும். உங்களில் சிலர் வெளிநாட்டுப் பயணம் செய்வீர்கள். வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு தற்போது வேலை கிடைக்கும். பங்குச்சந்தை யூகவணிகம் போட்டி பந்தயங்களில் சிறிதளவு லாபம் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது.

இளம் பருவத்தினர் தங்களுடைய எதிர்கால வாழ்க்கைத் துணைவரை இந்த வருடம் சந்திக்க வாய்ப்பு இருப்பதால் உங்களுக்கு காதல் வரக்கூடும். முதல் வாழ்க்கை கோணலாகிப் போனவர்களுக்கு இரண்டாவது வாழ்க்கை நல்லபடியாக அமையும்.

வயதானவர்களில் இதுவரை தீர்த்தயாத்திரை செல்லாதவர்கள் நினைத்த புனிதத்தலத்திற்கு சென்று வருவீர்கள். மகன் மகள்களால் பெருமைப்படக் கூடிய செய்திகள் இருக்கும். வீடு வாங்குவதற்கு இருந்த தடை நீங்கி வீடு வாங்கவோ கட்டவோ முடியும்.

இதுவரை சேமிக்க முடியாதவர்கள் இந்த முறை குழந்தைகளின் பெயரில் அவர்களின் எதிர்காலத்திற்காக ஏதேனும் ஒரு வழியில் முதலீட்டு சேமிப்புகள் செய்ய முடியும். நண்பர்களால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் இருக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளும் சுற்றுலா செல்வது போன்ற மனதிற்கு இனிமை தரும் நிகழ்வுகளும் நடக்கும்.

சொல்லிக் கொடுக்கும் பணி, சாப்ட்வேர், அச்சகம், புத்தகம், அக்கவுண்ட்ஸ், பத்திரிக்கைத்துறை போன்ற துறைகளில் இருக்கும் துலாம் ராசிக்காரர்களுக்கு இந்தப் புத்தாண்டு அபரிதமான நன்மைகளைத் தரும். மேற்கண்ட துறைகளில் இருப்போரின் வாழ்க்கை லட்சியங்கள் இப்போது நிறைவேறும்.


ரியல் எஸ்டேட், வீடு கட்டி விற்போர், திரவம் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்கள், காய்கறி மொத்த வியாபாரம், வெளிநாட்டு ஏற்றுமதி இறக்குமதி, சிகப்பு மற்றும் வெள்ளை நிறம் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு பட்ஜெட்டை மீறி செலவுகளும் விரயங்களும் இருக்கும் என்றாலும் நல்ல வருமானம் வந்து அனைத்தையும் ஈடு கட்டும்.

இதுவரை இருந்து வந்த மந்த நிலைமை முற்றிலும் மாறி அனைத்தும் நல்லபலன்களைத் தரும் நிலை வந்திருக்கிறது. பூர்வீக சொத்து விஷயத்தில் பாகப் பிரிவினை செய்வதற்கு இருந்து வந்த தடைகள் மாறி சொத்து விஷயங்களில் அனைத்தும் நல்ல படியாக நடைபெறும். மொத்தத்தில் துலாம் ராசிக்கு இந்த புத்தாண்டு நல்ல யோகங்களை அளிக்கும்.

ராகு பகவான் உங்கள் ராசிநாதனான சுக்கிரனின் நண்பர் புதனின் வீடான கன்னியில் ஸ்தானபலம் பெறுவதால் வேறு இன மொழி மதக்காரர்கள் உங்களிடம் நேசமாக இருப்பார்கள். வெளிமாநிலத்தவர்கள் இந்த வருடம் நண்பர்களாகக் கிடைப்பார்கள். அவர்களால் நன்மைகள் உண்டாகும். தூரத்தில் பணியிடம் அமையும். பிரயாணங்களால் உற்சாகமாக இருப்பீர்கள்.

கைப்பொருளை எப்போதும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுவது நல்லது. வங்கியிலிருந்து பணம் எடுக்கும் போதோ அல்லது பெரிய தொகைகளை கையாளும்போதோ மிகவும் கவனமாக இருக்கவேண்டியது அவசியம். குடும்பத்தில் சொத்துச் சேர்க்கை இருக்கும். நகை வாங்க முடியும். அதிர்ஷ்டம் கை கொடுக்கும். நிலமோ, வீட்டுமனையோ வாங்க முடியும்.

பொதுமக்களோடு தொடர்புள்ள பணிகள் செய்யும் துறைகள், அரசியல்வாதிகள் போன்றோருக்கு கௌரவமான பதவிகள் மற்றும் அதிகாரம் செய்யக் கூடிய பதவி தேடி வரும். அரசு மற்றும் தனியார்துறை ஊழியருக்கு சம்பளம் தவிர்த்த ‘மேல்வருமானம்’ இருக்கும்.

பங்குதாரர்கள் இடையே இருந்து வந்த கருத்துவேறுபாடு விலகும். கூட்டுத்தொழில் லாபம் தரும். புதிதாக ஆடம்பர வாகனம் வாங்குவீர்கள். அரசாங்க வழியில் நன்மைகள் நடக்கும். மனம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். உங்களுடைய மாற்றங்களை அடுத்தவர்கள் உணரும்படி நடந்து கொள்வீர்கள்.

பெண்களுக்கு இது மிகச் சிறப்பான நன்மைகளைத் தரும் தமிழ் புத்தாண்டாகும். உங்களின் மதிப்பு உயரும். நான்கு பேர் கூடும் இடத்தில் தனித்துவமாக தெரிவீர்கள். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் இதுவரை இருந்த வந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும். உடல்நல விஷயத்தில் கவனமாக இருங்கள்.

சிறு சிறு உடல் கோளாறுகள் வரலாம். நீடித்த குறைபாடுகளான சர்க்கரை, ரத்தஅழுத்தம் போன்றவைகளால் பாதிக்கப் பட்டவர்கள் அடிக்கடி பரிசோதனை செய்து கொள்வது நல்லது. சிறிய பிரச்னை என்றாலும் ஆரம்பத்திலேயே மருத்துவரிடம் செல்லுங்கள்.

இதுவரை காணாமல் போயிருந்த உங்களின் மனதைரியம் இப்போது மீண்டும் வரும். எதையும் சமாளிப்பீர்கள். ஒரு சிலர் ஏதேனும் ஒரு செயலால் புகழ் அடைவீர்கள். சகோதர உறவு மேம்படும். இளைய சகோதரத்தால் நன்மை உண்டு. தம்பி தங்கையர்களுக்கு நல்லது செய்ய முடியும். மூத்த சகோதர சகோதரிகள் உதவுவார்கள்.விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த தமிழ்ப் புதுவருடம் கடுமையான பாலைவனப் பயணத்தின் நடுவே நிழல் தரும் சோலைவனத்தைக் கண்டது போல ஒரு இளைப்பாறுதலைத் தரும்.

விருச்சிக ராசியின் இளைய பருவத்தினரும் பிறந்த ஜாதகப்படி வலுவில்லாத தசாபுத்தி அமைப்பைக் கொண்ட நடுத்தர வயதைக் கடந்தவர்களும் உங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான காலகட்டத்தை இப்போது கடந்து கொண்டிருக்கிறீர்கள்.

சிலருக்கு கடந்த சில மாதங்களில் நடந்த சோதனைகளும், வேதனைகளும் சொல்ல முடியாதவை. ஆனால் மன்மத வருடம் எனப்படும் இந்த தமிழ்ப் புத்தாண்டு ஆரம்ப நாளன்று உங்களின் ராசிநாதன் செவ்வாய் பகவான் ஆட்சி பலத்துடன் இருப்பதோடு உங்களின் ராசியும் உச்சகுருவின் பார்வையில் இருப்பதால் ராசிநாதனும், ராசியும் புனிதம் பெற்று இந்த வருடத்தில் கெடுதல்கள் எதுவும் இல்லாமல் நன்மைகள் அதிகமுள்ள வருடமாகவே இருக்கும்.

அதேநேரத்தில் இன்னும் சில வாரங்களுக்குப் பிறகு நடக்க இருக்கும் குருப்பெயர்ச்சியில் குருபகவான் இப்போது நன்மைகளை தந்து கொண்டிருக்கும் ஒன்பதாமிடத்து நிலை மாறி பத்தாம் இடத்திற்கு மாறப்போகிறார்.

பத்தாமிடத்தில் இருக்கும் குரு வேலை, வியாபாரம், தொழில் போன்ற இனங்களில் தடைகளையும் தாமதங்களையும் தருவார் என்பது பொது விதி. எனவே விருச்சிக ராசிக்காரர்கள் மேலே கண்ட ஜீவன அமைப்புகளில் கண்ணும் கருத்துமாக கவனமாக இருந்து வரவேண்டியது அவசியம்.

தொழில் வேலை வியாபாரம் போன்றவற்றில் விழிப்புடன் இருங்கள். யாரையும் நம்பக்கூடாது. எந்த ஒரு விஷயத்திலும் அலட்சியமாக இருப்பது நல்லது அல்ல. விவசாயிகளுக்கும், கிராமப்புறத்தில் உள்ள சிறுதொழில் புரிபவருக்கும் சுமாரான பலன்கள்தான் நடக்கும். பணப்பயிர் விளைவிக்கும் சிலருக்கு நல்ல லாபங்கள் இம்முறை கிடைக்கும்.

யூகவணிகம், பங்குச்சந்தை முதலீடு, வட்டிக்கு பணம் கொடுத்தல் போன்ற ரிஸ்க் எடுக்கும் தொழில்களில் கவனமுடன் இருப்பது நல்லது. ஆரம்பத்தில் சிறிது லாபம் வருவது போல காட்டி பிறகு மொத்த முதலீடும் சிக்கலுக்கு ஆளாகும் நிலை வரலாம்.

பணவரவு சற்றுச் சுமாரான நிலையில்தான் இருக்கும் என்பதால் செலவுகளை சுருக்க வேண்டியது அவசியம். வீண் செலவுகள் செய்யாதீர்கள். எவருக்கும் உதவி செய்வதாக வாக்கு கொடுத்தால் அதை நிறைவேற்றுவது கடினமாக இருக்கும். என்ன இருந்தாலும் தேவையான நேரத்தில் பணம் வந்து விடும் என்பதால் பிரச்னைகளை சமாளித்து விடுவீர்கள்.


எந்த ஒரு செயலையும் கடும் முயற்சிக்குப் பின்னர்தான் செய்ய முடியும் என்பதால் அனைத்து விஷயங்களையும் நிதானமாகவும் திட்டமிட்டும் சரியாகச் செய்ய வேண்டி இருக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் கடின முயற்சிக்கு பிறகுதான் நடக்கும். உறவினர்களுடன் கருத்து வேற்றுமை வரும். குடும்ப பிரச்னைகளால் மனக்கஷ்டம் வரலாம்.

தொழில் ரீதியாகவோ, அல்லது வீடு கட்டுவது மற்றும் குடும்பத்தில் நடக்க இருக்கும் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்காகவோ கடன் வாங்க வேண்டியது இருக்கலாம். வெளிநாட்டு விஷயங்கள் நல்ல பலன் அளிக்கும் என்பதால் இப்போது வெளிநாட்டு வேலைக்கோ அல்லது வெளி தேசத்தில் மேற்படிப்பு படிக்கவோ செல்ல முடியும். அதனால் நன்மைகளும் இருக்கும்.

நாற்பது வயதை தாண்டியவர்கள் உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட எந்த ஒரு சிறு விஷயத்தையும் அலட்சியப் படுத்தாமல் மருத்துவச் சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள். முடிந்தால் ஒரு முழு உடல் பரிசோதனை கூட செய்து கொள்ளலாம்.

அரசு தனியார் துறை ஊழியர்கள் தங்களது வேலை விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். முறையற்ற வருமானத்திற்கு ஆசைப்பட வேண்டாம். கிரகங்கள் போடும் தூண்டிலுக்கு இரையாகி விடாதீர்கள். மேலதிகாரிகளால் பிரச்னை வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எனவே அதிகாரிகளை அனுசரித்துப் போங்கள். இருப்பதை விட்டு விட்டு பறப்பதற்கு ஆசைப்பட வேண்டாம். மறைமுக எதிரிகள் உருவாவார்கள் எனபதால் எவரிடமும் எச்சரிக்கையுடன் பழகுவது நல்லது. மனதில் உள்ளதை வெளிப்படையாக யாரிடமும் பேசவேண்டாம்.

சொந்தத் தொழில் செய்பவர்கள் பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் அதிக கவனமுடன் இருங்கள். வியாபாரிகள் தங்களிடம் வேலை செய்பவர்களின் மேல் ஒரு கண் வைத்திருங்கள். பொருட்கள் தொலையவோ, வீணாகவோ, திருடு போவதற்கோ வாய்ப்பு இருக்கிறது.

சுய தொழில் செய்பவர்களுக்கு நெருக்கடிகள் வரும். அரசாங்க உதவிகள் கிடைப்பது கடினம். தொழில் சம்பந்தப்பட்ட ஒப்பந்தங்களில் கையெழுத்து போடும்போது ஒன்றுக்கு இரண்டு முறை இதைச் செய்து முடிக்க முடியுமா என்று யோசனை செய்வது நல்லது.

சம்பந்தமில்லாத இடத்தில் இருந்து தொழிலுக்கு இடையூறுகள் வரக்கூடும். வியாபாரிகள் கொள்முதல் மற்றும் கடன் கொடுத்து வாங்குதல் போன்ற அனைத்து விஷயங்களிலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கடன் கொடுத்தால் திரும்பி வராது. அதே நேரத்தில் நீங்கள் கடன் வாங்கிய இடத்தில் இருந்து உங்களுக்கு நெருக்கடி இருக்கும்.

பெண்களுக்கு இது வேலைச்சுமையைத் தரும் காலமாகும். அலுவலகத்தில் ஒரு முட்டாள்தனமான மேலதிகாரியோடு நீங்கள் போராட வேண்டியிருக்கலாம். அங்கே அப்படி தாங்க முடியாத பணிகளை சமாளித்து விட்டு வீட்டிற்கு வந்தால் வீட்டிலும் நீங்கள்தான் அடி முதல் நுனிவரை அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டியது இருக்கும்.


எல்லாவற்றிலும் இப்போது உங்களுக்கு சலிப்பு வரும் என்பதால் யாரையும் நம்பி உங்கள் மனதில் உள்ளவைகளையோ குடும்ப விஷயங்களையோ பகிர்ந்து கொள்ள வேண்டாம். இந்த காலகட்டத்தில் எவருமே உங்கள் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருக்க மாட்டார்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

அதே நேரத்தில் கணவன் மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக இருக்கும். ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருப்பீர்கள். குழந்தைகளால் படிப்புச் செலவுகள் போன்றவைகள் இருந்தாலும் அவர்களைப் பற்றிய கவலை இருக்காது. குடும்பத்தில் பொருட் சேர்க்கை இருக்கும். வீட்டிற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவீர்கள்.

இளைய பருவத்தினர் உங்களுக்கு பொருத்தமான வேலை தேடி அலைவீர்கள். சின்ன வேலை கிடைத்தாலும் அதை பிடித்துக் கொண்டு அதிலேயே முன்னேறி மேலே போவது புத்திசாலித்தனம் என்பதால் கிடைக்கும் எந்த வேலையையும் அலட்சியப் படுத்த வேண்டாம்.

சிலருக்கு காதல் அனுபவங்கள் இந்த வருடம் ஏற்படலாம். அதனால் சில கசப்பான அனுபவங்களும் படிப்பினைகளும் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. லஞ்சம் கொடுத்து வேலை வாங்குவது போன்ற முறைகேடான வழிகளில் செல்லும்போது உஷாராக இருங்கள். வேலை வாங்கித் தருவதாக சொல்பவரிடம் முன்கூட்டியே நம்பி பணம் தர வேண்டாம். ஏமாறுவதற்கு சந்தர்ப்பம் இருக்கிறது.

அம்மா வழி உறவினர்களுடன் நல்ல சுமுகமான உறவு இருக்கும். அவர்களால் ஆதாயம் வரும். பூர்வீக தாயார்வழி சொத்துகள் தற்போது கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. இருக்கும் பழைய வாகனத்தை மாற்றி புதியதாக வாங்குவீர்கள். வாகனம் இல்லாதவர்களுக்கு வாகனயோகம் இப்போது உண்டு.

பூர்வீகச் சொத்தில் தகராறுகளோ வழக்கு விவகாரங்களோ ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. வீட்டுப் பிரச்னைகளாலும் கோர்ட் போலீஸ் என அலைய நேரிடலாம். ஏற்கனவே நீதிமன்றங்களில் வழக்கு இருப்பவர்கள் தீர்ப்பு வரும் நாள் பக்கத்தில் இருந்தால் அதைக் கொஞ்சம் தள்ளிப் போட முயற்சிப்பது நல்லது. போலீஸ், கோர்ட் வழக்கு போன்றவை இன்னும் சில மாதங்களுக்கு உங்களுக்கு சாதகமாக இருக்காது.

தொழில் விரிவாக்கத்திற்காகவோ அல்லது குடும்பத்தில் நடக்க இருக்கும் சுப காரியங்களுக்காகவோ கடன் வாங்க நேரிடும். ஏற்கனவே இருக்கும் கடனை அடைக்க புதிய கடன் வாங்குவீர்கள். ஹவுசிங் லோன், பெர்சனல் லோன் ஏற்படலாம்.

எந்த சூழ்நிலையிலும் மீட்டர் வட்டி போன்ற கந்து வட்டி வாங்க வேண்டாம். பின்னால் சிக்கல்கள் வரும். ஒரு சிலர் தொழில் சம்பந்தமாக கடல் தாண்டி வெளிநாடு செல்வீர்கள். குறிப்பாக ஆன்மிகம் சம்பந்தப்பட்டவர்களுக்கு வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள் ஏற்படும். வெளிநாடு சம்பந்தமான முயற்சிகள் வெற்றியாகும்.தனுசு ராசிக்கு மன்மத வருடம் மகோன்னத வருடமாக இருக்கும். ஏழரைச் சனியின் ஆரம்பத்தில் இப்போது நீங்கள் இருந்தாலும் ராசி புனிதமடையும் போது அல்லது ராசிநாதன் வலுவடையும் போது ஏழரைச் சனியின் கெடுபலன்கள் நம்மை பெரிதாக அணுகாது. மற்றும் நம்மால் உணரமுடியாத அளவிற்கு பெரிய அளவில் கெடுதல்கள் இருக்காது என்பதால் இந்த தமிழ்ப் புத்தாண்டு தனுசு ராசிக்காரர்கள் நன்மைகளைப் பெறும் வருடமாக இருக்கும்.

வருட பிறப்பிற்கு பிறகு நடக்க இருக்கும் குருப்பெயர்ச்சியில் உங்கள் ராசிநாதன் குருபகவான் தனக்கு மிகவும் பிடித்தமான சிம்மத்தில் ஒன்பதாம் வீட்டிற்கு மாறி தன்னுடைய ராசியைத் தானே பார்த்து வலுப்படுத்தப் போவதால் இந்த தமிழ்ப்புத்தாண்டு முழுமைக்கும் தனுசு ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களே நடக்கும்.

ராசி வலுவடைவதால் உங்களின் அந்தஸ்து, கௌரவம், மேம்படுவதோடு வருமானம், பணப்புழக்கம் ஆகியவைகள் சரளமாகவும் முழுமையாக இருக்கும் என்பதால் மனமும் மகிழ்ச்சியாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். நான்கு பேர் இருக்கும் இடத்தில் பளிச்சென தனித்து தெரிவீர்கள். எதையும் தன்னம்பிக்கையுடன் அணுகுவீர்கள். போட்டி, பந்தயங்களில் வெற்றி கிடைக்கும்.

இதுவரை திருமணம் ஆகாமல் இருந்த இளைய பருவத்தினருக்கு திருமணம் கூடி வரும். குழந்தை பிறக்காமல் தாமதமாகி வரும் தம்பதியினருக்கு உடனடியாக குழந்தை பாக்கியம் கிடைக்கும். உங்களின் உடல்நிலையும் மனநிலையும் மிகவும் தெளிவாகவும் உற்சாகத்துடன் இருக்கும்.

வியாபாரிகள் கொள்முதல் மற்றும் கடன் கொடுத்து வாங்குதல் போன்ற அனைத்து விஷயங்களிலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கடன் கொடுத்தால் திரும்பி வராது. அதே நேரத்தில் நீங்கள் கடன் வாங்கிய இடத்தில் இருந்து உங்களுக்கு நெருக்கடி இருக்கும்.

வழக்கு கோர்ட் காவல்துறை போன்றவற்றில் சிக்கித் திண்டாடிக் கொண்டிருந்தவர்களுக்கு அவை அனைத்தும் நல்லபடியாக முடிவுக்கு வரும். அநியாய வட்டிக்கு கடன் வாங்கி அதில் இருந்து மீள முடியாமல் அவஸ்தைப் பட்டு விழி பிதுங்கி கொண்டிருந்தவர்களுக்கு கடனை அடைப்பதற்கு நல்ல வழி பிறக்கும்.

தொழில் அதிபர்களுக்கு அரசு உதவி கிடைக்கும். தொழிலாளர்கள் உங்களுக்கு ஆதரவாக இருந்து உற்பத்தியை மேலும் பெருக்கித் தருவார்கள். இதுவரை மந்தமாக இருந்த வந்த கூட்டுத் தொழில் இனி சிறப்பாக நடைபெறும். பங்குதாரர்கள் உதவியாக இருப்பார்கள். நண்பர்களால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் இருக்கும்.


குடும்பத்தில் இதுவரை தடைப்பட்டு கொண்டிருந்த மங்கள காரியங்கள் இனிமேல் வெகு சிறப்பாக நடைபெறும். மருத்துவர்களே என்ன நோய் என்று கண்டு பிடிக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தவர்களுக்கு உடனடியாக உடல்நலம் குணமாகும்.

இளைய பருவத்தினருக்கு அவர்கள் படிப்புக்குத் தகுந்த நல்ல வேலை உடனடியாக கிடைக்கும். ஏற்கனவே வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கூடுதல் சம்பளம் மற்றும் நினைத்த இடத்திற்கு இடமாற்றமும் நடக்கும்.

இதுவரை கருத்து வேற்றுமைகளாலும் குடும்பச் சிக்கல்களினாலும் பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேர்வார்கள். குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். கமிஷன் தரகு போன்றவைகளின் மூலமாக நல்ல பெரிய தொகை ஒரே நேரத்தில் ‘லம்ப்’பாக கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

மூத்த சகோதரர்களிடம் நல்ல உறவும் நன்மைகளும் இருக்கும். சகோதர சகோதரிகள் உதவிகரமாக இருப்பார்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளும் சுற்றுலா செல்வது போன்ற மனதிற்கு இனிமை தரும் நிகழ்வுகளும் நடக்கும்.
இதுவரை தள்ளிப் போய் இருந்த வெளிநாட்டு தொடர்பான வேலை விஷயங்களும் வெளிநாட்டு பயணங்களும் தற்போது வெற்றிகரமாக கை கூடி வரும். வாழ்க்கைத் துணைவர் விஷயத்தில் ஆதரவுகளும் லாபங்களும் இருக்கும்.

பெண்களுக்கு குடும்பத்தில் நற்பெயரும் கௌரவமும் கிடைக்கும். பெண்களின் ஆலோசனை குடும்பத்தில் இருக்கும் ஆண்களால் ஏற்கப்படும். வேலைக்குச் செல்லும் மகளிருக்கு பதவிஉயர்வு கூடுதல்சம்பளம் போன்ற நல்ல பலன்கள் இருக்கும். அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். உடன் பணிபுரியும் ஆண்களின் ஒத்துழைப்பும் உங்களுக்கு கிடைக்கும்.

பெண்கள் நீண்டநாட்களாக நினைத்திருந்த காரியம் இப்போது நிறைவேறும். அனைவரிடமும் பாராட்டுப் பெறுவீர்கள். பட்டுச்சேலை முதல் பாதக்கொலுசு வரை வாங்குவீர்கள். கேட்டது கேட்ட இடத்தில் உங்களுக்கு கிடைக்கும். குடும்பத்திலும் அலுவலகத்திலும் கௌரவமாக நடத்தப் படுவீர்கள்.

வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க முடியும். மனதில் உற்சாகமும் புத்துணர்ச்சியும் இருக்கும். குடும்பத்தில் குதூகலம் நிலவும். இன்பச் சுற்றுலா சென்று வருவீர்கள். சகோதரர்கள் உதவுவார்கள். குடும்பத்தில் சொத்துச்சேர்க்கை, நகைகள் வாங்குதல், சேமிப்புகளில் முதலீடு செய்தல், எதிர்காலத்திற்கான திட்டங்கள் போன்றவைகளை இப்போது செய்ய முடியும்.

மாணவர்களுக்கு பள்ளி கல்லூரிகளில் இனிய சம்பவங்கள் நிகழும். படிப்பது மனதில் பதியும். தேர்வுகளை நன்றாக எழுத முடியும். மத்திய மாநில நிர்வாகப் பதவிகளுக்கான ஐ. ஏ. எஸ், குரூப்ஒன் தேர்வுகளுக்கு படிப்பவர்களுக்கும் ஏற்கனவே எழுதி முடிவுகளுக்கு காத்துக் கொண்டிருப்பவர்களுக்கும் நல்லசெய்திகள் கிடைக்கும். இதுவரை வெளிமாநில வேலைக்குச் செல்ல இருந்த தடைகள் விலகும்.


சொந்த வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டும் வாய்ப்போ அல்லது கட்டிய பழைய வீடோ வாங்கும் யோகம் வருகிறது. பெருநகரங்களில் இருப்பவர்கள் அருமையான ஒரு பிளாட் வாங்குவீர்கள். வாகனமாற்றம் உண்டு. இதுவரை வாங்க முடியாத நீங்கள் விரும்பிய வாகனம் இப்போது வாங்க முடியும். தாயராருக்கு இருந்துவந்த உடல்நலக்குறைவு சரியாகும்.

மூன்றாவது மனிதரால் குடும்பத்தில் ஏற்பட்டிருந்த குழப்பங்கள் அடையாளம் காணப்பட்டு நீங்களே பிறர் உதவியின்றி குழப்பங்களைத் தீர்த்துக் கொள்வீர்கள். கூட்டுக்குடும்பத்தில் ஒருவருக்கொருவர் துணையாக இருப்பீர்கள். வயதில் பெரியவர்கள் மூத்தவர்கள் மூலம் லாபம் உண்டு.

இதுவரை தீர்த்தயாத்திரை செல்லாதவர்கள் நினைத்த புனிதத்தலத்திற்கு சென்று வருவீர்கள். காசி கயா பத்ரிநாத் கேதார்நாத் கயிலை போன்ற வடமாநில புனித யாத்திரை செல்லும் பாக்கியம் சிலருக்கு கிடைக்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போயிருந்த குலதெய்வ வழிபாடு சிறப்பாகச் செய்ய முடியும். நேர்த்திகடன்கள் செலுத்துவீர்கள். ஞானிகள் தரிசனம் கிடைக்கும். ஷீரடி மகான் ராகவேந்திரர் மகாபெரியவர் பகவான்ரமணர் சத்யசாய் போன்ற ஆன்மிகத் திருவுருக்கள் அவதரித்து அருளாட்சி செய்த திருத்தலங்களை தரிசிப்பீர்கள்.

மகன் மகள்களால் பெருமைப்படக் கூடிய செய்திகள் இருக்கும். வெளிநாட்டில் வேலை செய்யும் பிள்ளைகளை தற்போது பார்க்க முடியும். பிள்ளைகள் விரும்பும் பள்ளி, கல்லூரிகளில் அவர்கள் விரும்பும் படிப்பில் சேர்க்க முடியும். இதுவரை சேமிக்க முடியாதவர்கள் இந்த முறை குழந்தைகளின் பெயரில் அவர்களின் எதிர்காலத்திற்காக ஏதேனும் ஒரு வழியில் முதலீட்டு சேமிப்புகள் செய்ய முடியும்.

எழுத்து சம்பந்தப்பட்ட துறைகளில் இருப்பவர்கள், அக்கவுண்டண்டுகள், கணிப்பொறித்துறையினர், செல்போன் போன்ற நூதன எலக்ட்ரானிக்ஸ் கருவிகள் விற்போர், காண்ட்ராக்டர்கள், நிர்வாகப்பணி சம்பந்தப்பட்டவர்கள், ஒரு துறைக்கோ அல்லது நிறுவனத்திற்கோ தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள், தந்தையின் தொழிலைச் செய்பவர்கள், நெருப்பு சம்பந்தப்பட்டவர்கள் போன்றோருக்கு இந்தப் புத்தாண்டு அற்புதமான பலன்களைத் தரும்.

விவசாயிகள் கலைஞர்கள் போன்றவர்களுக்கு இதுவரை இருந்து வந்த மந்த நிலைமை முற்றிலும் மாறி அனைத்தும் நல்லபலன்களைத் தரும் நிலை வந்திருக்கிறது. பாகப்பிரிவினை செய்வதற்கு இருந்து வந்த தடைகள் மாறி சொத்து விஷயங்களில் அனைத்தும் நல்லபடியாக நடைபெறும். இதுவரை சொன்னதை செய்து முடிக்க முடியாமல் இருந்த நிலை மாறி அனைத்தும் நல்லபடியாக நடக்கும் நேரம் இது.

கோவில் அர்ச்சகர்கள், நமது பாரம்பரியம் பண்பாடு சம்பந்தப்பட்ட கலைகளை கற்றுத்தருபவர்கள் நீதித்துறையில் பணிபுரிபவர்கள், மேன்மை தங்கிய நீதியரசர்கள், சட்டவல்லுனர்கள், பணம் புரளும் துறைகளான வங்கி சிட்பண்ட் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் இந்தப் புத்தாண்டு நன்மைகளையே தரும்.மகர ராசிக்காரர்களுக்கு மன்மத வருடம் மாற்றங்களுக்கான வருடமாக இருக்கும். இந்த ஒரு வருடம் உங்களுடைய வேகமான செயல்களுக்கு கடிவாளம் போட்டு உங்களை எதிலும் நிதானமாக செல்ல வைக்கக்கூடிய பக்குவத்தைத் தரும் வருடமாகவும் இருக்கும். மாற்றங்களுக்கான வருடம் இது என்பதால் மகர ராசிக்காரர்களுக்கு தொழில் மாற்றம், வீடு மாற்றம், அலுவலக மாற்றம் வேலைமாற்றம் ஊர் மாற்றம் போன்ற அமைப்புகள் இப்போது ஏற்படும்.

புதுவருடம் ஆரம்பித்த சில வாரங்களில் நடக்க இருக்கும் குருப்பெயர்ச்சியில் குருபகவான் எட்டாமிடத்திற்கு மாறி தன்னுடைய பனிரெண்டாமிடத்தை வலுப்படுத்துவார் என்பதாலும் தமிழ்ப் புதுவருடம் முழுவதும் அவர் அஷ்டமகுருவாக நிலைத்து இருப்பார் என்பதாலும் மன்மத வருடம் எதிர்கால நன்மைகளுக்கான மாற்றங்களுக்கான வருடமாக உங்களுக்கு இருக்கும்.

சொந்தத் தொழில் வைத்திருப்பவர்கள் தொழிலுக்காக கடன் வாங்கும்படி இருக்கும். வேறு சில அத்தியாவசியத் தேவைகளுக்கும் கடன் வாங்கியே ஆகவேண்டியது இருக்கும். எந்த காரணத்தைக் கொண்டும் அதிக வட்டிக்கு வாங்கினால் தொல்லையில் கொண்டு போய் விடும் என்பதால் எச்சரிக்கை தேவை. அரசு தனியார் துறை ஊழியர்களுக்கு வேலைப்பளு அதிகம் இருக்கும். அலுவலகங்களில் சுமுகமான சூழ்நிலை இருப்பது கடினம்.

மறைமுக எதிரிகள் உருவாவார்கள். முதுகுக்குப் பின்னே பேசுபவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். உடன் பணிபுரிபவர்களிடம் கருத்து வேற்றுமை ஏற்படலாம். அவர்களுடைய ஒத்துழைப்பு கிடைப்பது கடினம். மேலதிகாரிகளிடம் அனுசரித்து போவது நல்லது. வேலை செய்யும் இடங்களில் பிரச்னைகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

சம்பளம் தவிர்த்த ‘இதர’ வருமானங்கள் வரும் துறைகளில் இருப்பவர்கள் எங்கும் எதிலும் கூடுதல் கவனத்துடன் இருக்கவேண்டியது அவசியம். எந்த ஒரு விஷயத்திலும் அலட்சியமாகவோ கவனக்குறைவாகவோ இருக்க வேண்டாம்.

பணியாளர்களுக்கு உங்களைப் புரிந்து கொள்ளாதவர் மேலதிகாரியாக வந்து மனச்சங்கடங்கள் தருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. காவல்துறை, வனத்துறை போன்ற சீருடை அணிந்து வேலை செய்யும் துறையினருக்கும் இந்த வருடம் பதவி உயர்வு கண்டிப்பாக கிடைக்கும். சம்பள உயர்வு இதர படிகள் போன்றவை எதிர் பார்த்தபடி ஓரளவு கிடைக்கும்.

பொதுவாக தொழிலாளர்களுக்கு வேலை செய்யுமிடத்தில் வேலைப்பளு அதிகமாக இருக்கும். சிலருக்கு வேலை அமைப்புகளில் மாற்றம் வரலாம். ஆறுக்குடையவன் ராசியில் உச்சமாக இருப்பதால் சிலருக்கு வீடுமாற்றம் தொழில்மாற்றம் வேலை மாற்றம் போன்றவைகள் இப்போது நடக்கும்.


இந்த புத்தாண்டில் இடமாற்றங்கள் ஊர்மாற்றங்கள் வீடுமாற்றம் தொழில்மாற்றம் போன்றவைகள் நடக்கும். அந்த மாற்றங்கள் உங்கள் எதிர்காலத்திற்கு நல்லவைகளாகத்தான் இருக்கும் என்பதால் தயங்காமல் ஏற்றுக் கொள்ளுங்கள்.

உடன்பிறந்த சகோதரர்கள் வழியில் உதவிகளை எதிர்பார்க்க வேண்டாம். பெற்றோருடன் கருத்து வேற்றுமை வரலாம். பெரியவர்களின் அறிவுரைகளை கேட்டு அதன்படி நடந்து கொள்வது நல்லது.

போட்டி பந்தயங்களில் கலந்து கொள்வது வேண்டாம். கொடுக்கல் வாங்கல்களில் மிகவும் கவனமாக நடந்து கொள்வது நல்லது. வழக்கு விவகாரங்களை தற்போது முடிப்பதற்கு அவசரப்பட வேண்டாம்.

குடும்பத்தில் திருமணம் பூப்புனித நீராட்டுவிழா குழந்தைகளுக்கு காதுகுத்துதல் போன்ற பெண் குழந்தைகள் சம்பந்தப்பட்ட சுபகாரியங்கள் இந்த வருடம் இருக்கும். புதிதாக வீட்டுமனையோ விவசாயநிலமோ வாங்குவதற்கு முடியும்.

புதிதாக வேலை தேடிகொண்டிருக்கும் இளைய பருவத்தினருக்கு அவர்களின் தகுதிக்கு ஏற்ற வேலை உடனடியாக கிடைக்கும். ஒருசிலருக்கு வெளியூரிலோ வெளிமாநிலத்திலோ தூரதேசங்களிலோ தங்கி வேலை செய்ய கூடிய அமைப்புகள் உருவாகும். இருக்கும் இடத்தில் இருந்து தொலைதூரம் செல்லும் படியான மாற்றங்கள் சிலருக்கு உருவாகும்.

கணவன் மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக இருக்கும். ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருப்பீர்கள். குழந்தைகளால் படிப்புச் செலவுகள் போன்றவைகள் இருந்தாலும் அவர்களைப் பற்றிய கவலை இருக்காது. குடும்பத்தில் பொருட் சேர்க்கை இருக்கும். சேமிக்க முடியும் அளவிற்கு வருமானம் இருக்கும்.

வீட்டிற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவீர்கள். சிலருக்கு சொந்த வீடு அமையும் யோகம் மிகவும் அருமையாக இருக்கிறது. வாகன மாறுதல் கண்டிப்பாக இருக்கும். தற்போது இருக்கும் வாகனத்தை விட சிறப்பான புதிய வாகனம் வாங்க முடியும். இதுவரை வாகனம் இல்லாதவர்களுக்கு நல்ல வாகனம் வாங்கும் யோகம் இருக்கிறது.

உயர்கல்வி கற்பதற்கு இருந்து வந்த தடைகள் நீங்கி மேல்படிப்பு படிக்க முடியும். அம்மா வழி உறவினர்களுடன் நல்ல சுமுகமான உறவு இருக்கும். அவர்களால் ஆதாயம் வரும். பூர்வீக தாயார்வழி சொத்துகள் தற்போது கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.


பூர்வீக சொத்து விவகாரங்களில் ஏதேனும் வழக்கு போன்ற வில்லங்கம் வரும். பங்காளிகளுடன் கருத்து வேற்றுமை வர வாய்ப்பு இருக்கிறது. உறவினர்களுடன் கவனமாக பழக வேண்டியது அவசியம். தேவையற்ற பேச்சுக்கள் வேண்டாம்.

ஏதேனும் ஒரு விஷயத்தைப் பற்றிய தீவிர சிந்தனையும், மனக்குழப்பமும் எந்த நேரமும் இருக்கும். மனதைப் போட்டு உழப்பிக் கொண்டிருப்பீர்கள். சிலருக்கு மறைமுக வழியில் தனலாபங்கள் இருக்கும். எப்படி வந்தது என்று வெளியில் சொல்ல முடியாத வகையில் பண வரவுகளும் இந்த ஆண்டில் இருக்கும்.

அடிக்கடி ஞாபகமறதி வரும். எனவே கைப்பொருளை எப்போதும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுவது நல்லது. வங்கியிலிருந்து பணம் எடுக்கும் போதோ அல்லது பெரிய தொகைகளை கையாளும்போதோ மிகவும் கவனமாக இருக்கவேண்டியது அவசியம்.

பெண்களுக்கு இந்த புத்தாண்டில் நன்மைகள்தான் அதிகமாக இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் உங்களின் பேச்சு எடுபடும். நீங்கள் சொல்வதையும் கேட்கலாமே என்று கணவர் நினைப்பார். கணவர் மூலமாக நன்மையை பெறுவீர்கள். மாமியாரிடம் பாராட்டு கிடைக்கும். புகுந்த வீட்டில் மதிக்கப் பெறுவீர்கள். பணிபுரியும் இடத்தில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும்.

உங்கள் அந்தஸ்து கௌரவம் உயரும். வேலைக்குச் செல்லும் பெண்கள் மதிப்புடன் நடத்தப்படுவீர்கள். உங்களுக்கு கீழே வேலை செய்பவர்கள் உங்களுக்கு கட்டுப்பட்டு இருப்பார்கள்.

நீண்ட தூர புனித யாத்திரைகள் இப்போது செல்ல முடியும். வயதானவர்கள் காசி கயா போன்ற புனித யாத்திரைகள் செல்வீர்கள். இஸ்லாமியர்களுக்கு புனித ஹஜ் பயணம் செல்லும் வாய்ப்பை இறைவன் அருளுவார். பெரிய மகான்களின் தரிசனம் கிடைக்கும். ஞானிகளின் ஜீவ சமாதிக்கு சென்று அவர்களின் அருளாசி பெறும் பாக்கியம் கிடைக்கும்.

வெளிநாடு சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களும் உங்களுக்கு கை கொடுக்கும். வெளிநாட்டில் படிக்கவோ, வேலை செய்யவோ முயற்சிப்பவர்களுக்கு உடனடியாக விசா கிடைக்கும். இதுவரை வெளிநாடு செல்லாதவர்கள் இப்போது வெளிநாட்டுப் பயணம் செல்லும்படி இருக்கும். பயணங்கள் மூலம் நன்மைகள் இருக்கும்.

குழப்பமான சூழ்நிலையில் தவறான முடிவுகள் எடுக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே எந்த ஒரு விஷயத்தையும் ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்தும், வீட்டில் இருக்கும் அனுபவம் வாய்ந்த பெரியவர்களிடம் ஆலோசித்தும் முடிவு எடுப்பது மிகவும் நன்மையைத் தரும்.

ஏற்கனவே கடன் வாங்கி சிக்கலில் இருப்பவர்களுக்கு புதிய கடன்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எக்காரணத்தைக் கொண்டும் அதிக வட்டிக்கு வாங்குவதை தவிர்ப்பது நல்லது. அவசரம் என்று கிடைக்கும் இடத்தில் கிடைக்கும் வட்டியில் பணம் வாங்கினால் அடுத்த வருட ஆரம்பத்தில் கடன் பிரச்னைகளால் மனக் கலக்கம் வரலாம்.

கூடுமானவரை நேர்வழியிலேயே செல்ல முயற்சி செய்யுங்கள். குறுக்குவழி வேண்டாம். அரசுத்துறை, தனியார்துறை ஊழியர்கள் மேல்வருமானத்திற்கு ஆசைப்பட்டு விதிகளை மீறி யாருக்கும் சலுகை காட்ட வேண்டாம்.

மேலதிகாரிகளுக்கு தெரியாமல், அவர்களின் எழுத்துப்பூர்வமான அனுமதி இல்லாமல் எதுவும் செய்யாதீர்கள். பின்னால் தொந்தரவுகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

பத்திரிக்கை, ஊடகங்கள் போன்ற துறையில் இருப்பவருக்கு அலைச்சலும், வேலைப்பளுவும் அதிகமாக இருக்கும். உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்க சிரமங்கள் இருக்கும்.கும்ப ராசிக்காரர்களுக்கு தமிழ்ப் புதுவருடம் புத்துணர்ச்சியும், புதுத்தெம்பையும் அளிக்கும் வருடமாக இருக்கும். கடந்த ஒரு வருடமாக எந்தவித நன்மைகளும் நடக்காத உங்களுக்கு இந்த மன்மத வருடம் நல்ல பொருளாதார மேன்மையையும், நல்லவைகளையும், நன்மைகளையும் தரும்.

இதுவரை ஆறாமிடத்தில் இருந்து உங்களுக்கு வேதனைகளையும், சோதனைகளையும் கொடுத்துக் கொண்டிருந்த குருபகவான் புது வருடம் பிறந்து சில வாரங்களில் நடக்க இருக்கும் குருப்பெயர்ச்சியில் ஏழாமிடத்திற்கு மாறி உங்களுக்கு மிகுந்த நன்மைகளையும், பண வரவுகளையும் அளிப்பதோடு இந்த தமிழ்ப் புதுவருடம் முழுமைக்கும் அவர் ஏழாமிடத்திலேயே இருப்பார் என்பதால் கும்பராசிக்கு இந்த வருடம் முதல் நன்மையான காலகட்டம் ஆரம்பிக்கிறது.

இதுவரை முயற்சி செய்தும் நடைபெறாத பல விஷயங்கள் இனிமேல் தெய்வத்தின் அருளால் முயற்சி இல்லாமலேயே வெற்றி பெறும். பண வரவுகள் சரளமாகி குடும்பத்தில் பணப் பிரச்னைகள் எதுவும் இல்லாமல் நிம்மதி இருக்கும்.

இந்த ஆண்டு முழுவதும் உங்களின் பொருளாதார நிலை மிகவும் மேம்பாடானதாகவும் சரளமான பணவரவு இருந்து கொண்டே இருப்பதாகவும் அமையும். தொட்டது துலங்கும். இதுவரை வருமானம் இன்றி பணப்பற்றாக்குறையால் அவதிப் பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு பணப்பிரச்னை இல்லாத அளவுக்கு நல்ல வருமானம் இருக்கும்.

கடந்த காலங்களில் பெரும்பாலான கும்ப ராசிக்காரர்கள் மிகப் பெரிய மனக் கஷ்டங்களையும் வாழ்வில் தடைகளையும் சந்தித்தீர்கள். அப்படிப்பட்ட நிலை எதுவும் இப்போது இருக்காது. எல்லா விஷயங்களும் நிதானமாக நல்லபடியாக நடக்கும்.

வீட்டில் மங்கள நிகழ்ச்சிகள் நடைபெறும் காலம் இது. இதுவரை திருமணம் ஆகாத இளைய பருவத்தினருக்கு இந்த ஆண்டு திருமணம் நடைபெறும். நீண்ட காலமாக மகன், மகளுக்கு திருமணம் கூடி வரவில்லையே என்று வருத்தப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு அந்தக்கவலை இப்போது நீங்கும். காதலிப்பவர்கள் பெற்றோர்கள் சம்மதத்துடன் நீங்கள் நினைத்தவரை மணமுடிப்பீர்கள்.

இதுவரை புத்திரபாக்கியம் தாமதப்பட்டுக் கொண்டு வந்தவர்களுக்கு புத்திர காரகனாகிய குருபகவான் குழந்தைச் செல்வத்தை வழங்குவார். தாத்தா பாட்டிகள் உங்கள் வீட்டில் பேரக்குழந்தையின் மழலைச்சத்தத்தை கேட்கப் போகும் நேரம் வந்துவிட்டது.

கடன் பிரச்னைகளிலும் வழக்கு விவகாரங்களிலும் சிக்கித் தவித்து தூக்கத்தை இழந்திருந்தவர்களுக்கு அவைகள் நல்லபடியாக ஒரு முடிவுக்கு வந்து நிம்மதியைத் தரும். இதுவரை வேலை கிடைக்காதவர்களுக்கு அவர்களின் படிப்புக்கு ஏற்ற நல்ல வேலை உடனடியாக கிடைக்கும்.


அலுவலகங்களில் ஏதோ ஒரு சின்ன பிரச்னையால் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த பதவி உயர்வும் சம்பள உயர்வும் இனிமேல் கிடைக்கும். அரசு ஊழியர்களுக்கு இதுவரை மேலதிகாரிகளால் இருந்து வந்த மன உளைச்சல்களும் வேலைப் பளுவும் இனிமேல் நீங்கி உங்களை புரிந்து கொள்ளாமல் உங்களிடம் ‘கடுகடு’ வென இருந்த மேலதிகாரி மாறுதல் பெற்று அந்த இடத்திற்கு உங்களுக்கு அனுசரணையானவர் வருவார்.

வேலையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேருவார்கள். வேலையை விட்டு விடலாமா என்று யோசனையில் இருந்தவர்களுக்கு சூழ்நிலைகள் நல்ல விதமாக அமைந்து வேலையை விட வேண்டிய நிலை நீங்கும். தற்காலிகப் பணியாளர்களுக்கு வேலை நிரந்தரமாகும். வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு இனிமேல் முயற்சி பலிதமாகும்.

நீண்ட நாட்களாக போக முடியாமல் இருந்த குலதெய்வக் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று நேர்த்திக்கடன் செலுத்த முடியும். புனிதயாத்திரை செல்வீர்கள். ஞானிகள் மகான்களின் திருப்பாதம் பதிந்த இடங்களுக்கு சென்று தரிசித்து உங்களை புனிதப்படுத்திக் கொள்வீர்கள்.

அரசு ஊழியர்களுக்கு இந்தப் புத்தாண்டால் நல்ல நன்மைகள் உண்டு. குறிப்பாக அதிகாரமிக்க காவல்துறை மற்றும் நீதித்துறையில் இருப்பவர்களுக்கும், அமைச்சர்கள், நீதியரசர்கள், உயர் அதிகாரிகளின் அலுவலகங்களில் பணி புரிபவர்களுக்கும் மிகவும் நல்ல பலன்கள் நடக்கும்.

பொதுமக்கள் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள், பொதுவாழ்வில் இருக்கும் அரசியல்வாதிகள் ஆகியோருக்கு இது கூடுதல் நன்மைகளைத் தரும் காலகட்டமாக இருக்கும். அரசியல்வாதிகளுக்கு அதிகாரப்பதவிகள் தேடி வரும்.

பயணம் தொடர்பான விஷயங்களில் வருமானம் வரும். அடிக்கடி பிரயாணங்கள் செய்வீர்கள். தொலைதூர பிரயாணங்களோ வெளிநாட்டு பயணங்களோ நடக்கும். இதுவரை வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு உடனடியாக வேலை கிடைக்கும்.

வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல பலன்கள் உண்டு. வெகுநாட்களாக எதிர்பார்க்கும் குடியுரிமை கிடைக்கும். தாய் தந்தையை பார்க்க தாய்நாடு வந்து திரும்பலாம். இருக்கும் நாட்டில் சுமுக நிலை இருக்கும்.


பூர்வீகச் சொத்தில் இதுவரை இருந்து வந்த வில்லங்கம் தீர்ந்து உங்கள் பங்கு உடனே கிடைக்கும். பங்காளித் தகராறுகள் சுமுகமாகத் தீர்த்து வைக்கப்படும். மகன் மகள்களால் இதுவரை இருந்து வந்த மனச்சங்கடங்கள் விலகி அவர்களால் இனிமேல் சந்தோஷம் இருக்கும்.

சொந்தத் தொழில் செய்பவர்கள் தொழில் அதிபர்கள் வியாபாரிகள் ஆகியவர்களுக்கு தங்கள் தொழிலில் பங்குதாரர்களை சேர்த்துக் கொள்வதற்கு நல்ல நேரம் இது. அவர்கள் மூலம் முன்னேற்றங்கள் இருக்கும்.

சில தொழில்முனைவோர்கள் நல்ல சந்தர்ப்பங்கள் கிடைத்து அமோகமான தொழில் வெற்றியைப் பெற்று பெரும்பணக்காரர்கள் ஆவதற்கு தற்போது வாய்ப்பு இருக்கிறது. விடாமுயற்சியுடன் எதையும் செய்வதன் மூலம் கடவுள்அருள் உங்கள் பக்கம் இருக்கும் என்பது நிச்சயம்.

கூட்டுத் தொழிலில் இதுவரை இருந்த வந்த கருத்து வேறுபாடுகளும், மந்தமான நிலைமையும் மாறி தொழில் நல்லபடியாக நடக்கும். நண்பர்களும், பங்குதாரர்களும் உதவிகரமாக இருப்பார்கள். தந்தையின் ஆதரவு கிடைக்கும். தந்தை வழி உதவிகள் நன்றாக இருக்கும். அப்பா வழி சொத்துக்கள் மூலம் ஆதாயம் உண்டு. தர்ம காரியங்கள் செய்ய முடியும். அறப்பணிகளில் ஈடுபட்டு நல்ல பெயர் வாங்குவீர்கள். ஆலய சீரமைப்பு பணிகளில் சிலர் புகழ் பெறுவீர்கள்.

குடும்பத்தில் சொத்துச் சேர்க்கை, வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்குதல் நகைகள் வாங்குதல், சேமிப்புகளில் முதலீடு செய்தல், குழந்தைகளின் எதிர்காலத்திற்கான திட்டங்கள் போன்றவைகளை இந்தவருடம் செய்ய முடியும்.

கும்பராசி இளைஞர்களுக்கு எதிர்கால நன்மைக்கான மாற்றங்கள் நடக்க இருக்கும் காலம் இது. இருக்கும் இடத்தை விட்டு வெளியே சென்றால் ஒளிமயமான எதிர்காலம் காத்துக் கொண்டு இருக்கிறது என்பதை அறியாமல் தயங்கித் தயங்கி ஒரே இடத்தில் உழன்று கொண்டு இருப்பவர்களை கிரகங்கள் இதுபோன்ற நேரங்களில்தான் பிடரியில் உதைத்து வெளியே தள்ளும்.

அப்போதைக்கு அது கசப்பானதாகவும், வாழ்க்கையே இருண்டு விட்டதாகத் தோன்றினாலும் சிலகாலம் கழித்துத்தான் எல்லாம் நன்மைக்கே என்று நம் அறிவுக்குப் புலப்படும். அதன் பிறகுதான் நடந்தது கடவுள் செயல் என்பது உங்களுக்கு புரியும்.

எனவே எதிர்காலத்தில் நீங்கள் மிகவும் நன்றாக இருக்கக்கூடிய சூழலுக்கு மாறுவதற்கான ஆரம்பகட்ட அடிப்படை நிகழ்வுகள் இப்போது உங்களுக்கு நடக்கும். எனவே, கிரகங்கள் தரப்போகும் மாற்றத்தை முழுமனதோடு ஏற்றுக் கொண்டு அதற்குத் தயாராகுங்கள்.

தொலைக்காட்சி, சினிமாத்துறை போன்ற ஊடகங்களில் இருக்கும் கலைஞர்கள், பத்திரிகைத்துறையினர், வாகனங்களை இயக்குபவர்கள், அன்றாடம் சம்பளம் வாங்குபவர்கள், தொழில் அதிபர்கள், வெளிநாட்டுத் தொடர்புடையவர்கள், கணிப்பொறி சம்பந்தப்பட்டோர், சொல்லிக் கொடுப்போர் போன்ற அனைத்துத் தரப்பினருக்கும் இந்த வருடம் நல்ல பலன்களையே தரும்.

பெண்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி மிகவும் நல்ல பலன்களைக் கொடுக்கும். பிள்ளைகளால் பெருமைப்படுவீர்கள். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். வேலை செய்யும் இடங்களில் சிக்கல்கள் எதுவும் இருக்காது.

வீட்டிலும் உங்கள் பேச்சை கணவரும் பிள்ளைகளும் கேட்பார்கள். குடும்பத்தில் சுபகாரியங்களை மிகச் சிறப்பாக நடத்துவீர்கள். வேலைக்குச் செல்லும் மகளிருக்கு பணியிடங்களில் மகிழ்ச்சியும் மரியாதையும் நிச்சயம் உண்டு.மீன ராசிக்கு இந்த தமிழ்ப் புதுவருடம் நல்ல மாற்றங்களையும், ஏற்றங்களையும், பண வரவுகளையும் அளிக்கும் வருடமாக இருக்கும். கடந்த காலங்களில் அஷ்டமச் சனியால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த உங்களுக்கு சமீபத்தில்தான் சனி முடிந்து மேன்மையான காலம் ஆரம்பிக்கத் துவங்கி இருக்கிறது.

இந்த நிலையில் இந்த புது வருடம் பிறந்து சில வாரங்களில் நடக்க இருக்கும் குருப்பெயர்ச்சி இதுவரை நல்ல இடத்தில் நன்மைகளைத் தரும் அமைப்பில் இருந்து கொண்டிருந்த ஐந்தாமிடத்து குருபகவான் நமது மூலநூல்களில் துன்பங்களைத் தரும் இடமாக சொல்லப்படும் ஆறாமிடத்திற்கு மாறப்போவதால் மறுபடியும் தொல்லைகள் ஆரம்பித்து விடுமோ என்று அச்சப்பட வேண்டாம்.

குருபகவான் ஒருபோதும் உங்களுக்கு தொல்லைகளைத் தரமாட்டார் என்பது உறுதி. ஏற்கனவே அவர் ஐந்தாமிடத்தில் இருந்தபோது அஷ்டமச் சனியின் உச்சபார்வையை பெற்றதால் உங்களுக்கு முழுமையான நன்மைகளைச் செய்ய முடியவில்லை.

தற்போது அவர் ஆறாமிடத்திற்கு மாறினாலும் அந்த இடம் அவருக்கு மிகவும் பிடித்த நட்பு வீடு என்பதாலும் உபயராசிகளுக்கு குருபகவான் மறைவிடங்களில்தான் அதிக நன்மைகளை செய்வார் என்பதாலும் இந்த வருடம் முழுக்க உங்களுக்கு குருபகவானால் பணவரவும் நன்மைகளும் இருக்கும் என்பதால் நீங்கள் கவலைப்பட எதுவும் இல்லை.

தொழிலில் சிக்கல்களை சந்தித்துக் கொண்டிருந்தவர்கள் இனிமேல் தொழில் முன்னேற்றப் பாதையில் செல்வதைக் காண்பீர்கள். வியாபாரிகளுக்கும் விவசாயிகளுக்கும் கலைத்துறையினருக்கும் இது மிகவும் அதிர்ஷ்டமான கால கட்டம் என்பதால் நீங்கள் ஏற்கனவே மனதில் நினைத்திருந்த முன்னேற்றத் திட்டங்களைச் செயல்படுத்த அதிர்ஷ்டம் இனி கை கொடுக்கும்.

வீட்டிற்கு தேவையான பொருட்களை இப்போது வாங்க முடியும். பயணம் தொடர்பான விஷயங்களில் வருமானம் வரும். அடிக்கடி பிரயாணங்கள் செய்வீர்கள். தொலைதூர பிரயாணங்களோ வெளிநாட்டு பயணங்களோ நடக்கும். இதுவரை வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு உடனடியாக வேலை கிடைக்கும்.

அனைத்து விஷயங்களிலும் வீண் செலவுகள் நிச்சயம் இருக்கும். அதேநேரம் செலவு செய்வதற்கு ஏற்ற பணவரவும் கண்டிப்பாக இருக்கும். பணம் இருந்தாலே பாதிப்பிரச்னை தீர்ந்து விடும் என்பதால் பிரச்னைகளை பற்றி கவலைப்பட வேண்டாம்.

பொருத்தமில்லாத வேலையில் இஷ்டமில்லாமல் இருந்தவர்களுக்கு உடனடியாக மாற்றங்கள் உருவாகி நினைத்த மாதிரியான வேலை கிடைக்கும். சுயதொழில், வியாபாரம் போன்றவைகளில் இதுவரை இருந்து வந்த மந்தநிலை விலகி அனைத்தும் இனிமேல் சுறுசுறுப்பாக நடக்கும்.


விவசாயிகளுக்கு இந்த புத்தாண்டு மிகுந்த நன்மையை அளிக்கும். வீட்டில் குதூகலமும், சுபநிகழ்ச்சிகளும் இருக்கும். தொழிலதிபர்கள், கலைஞர்கள் போன்றவர்களுக்கு இதுவரை இருந்து வந்த முட்டுக்கட்டைகள் விலகும். எந்த ஒரு காரியத்திலும் எடுக்கும் முயற்சிகள் இப்போது பலிதமாகும். தொழிலை விரிவுபடுத்தலாம்.

இளைய பருவத்தினர் உங்களுக்கு பொருத்தமான வேலை தேடி அலைவீர்கள். சின்ன வேலை கிடைத்தாலும் அதை பிடித்துக் கொண்டு அதிலேயே முன்னேறி மேலே போவது புத்திசாலித்தனம் என்பதால் கிடைக்கும் எந்த வேலையையும் அலட்சியப் படுத்த வேண்டாம். சிலருக்கு காதல் அனுபவங்கள் இந்த வருடம் ஏற்படலாம்.

இதுவரை சொந்த வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டும் வாய்ப்போ அல்லது கட்டிய பழைய வீடோ வாங்கும் யோகம் வருகிறது. மாணவர்களுக்கு பள்ளி கல்லூரிகளில் இனிய சம்பவங்கள் நிகழும். படிப்பது மனதில் பதியும். தேர்வுகளை நன்றாக எழுத முடியும்.

மத்திய மாநில நிர்வாகப் பதவிகளுக்கான ஐ. ஏ. எஸ், குரூப்ஒன் தேர்வுகளுக்கு படிப்பவர்களுக்கும் ஏற்கனவே எழுதி முடிவுகளுக்கு காத்துக் கொண்டிருப்பவர்களுக்கும் நல்ல செய்திகள் கிடைக்கும். யூகவணிகம் பங்குச்சந்தை ரேஸ் லாட்டரி போன்றவைகளில் அதிகமாக ஈடுபாடு காட்டாமல் இருப்பது நல்லது.

பொது வாழ்க்கையில் இருக்கக் கூடியவர்களுக்கு இது மிகவும் மேன்மையை தரக்கூடிய காலமாக அமையும். அதிகாரப் பதவிகள் தேடி வரும். அரசு, தனியார்துறை பணியாளர்களுக்கு சம்பளத்தை தவிர்த்த மறைமுக வருமானம் இருக்கும். கலைத்துறையினருக்கும் இது மிகவும் அதிர்ஷ்டமான கால கட்டம் என்பதால் நீங்கள் ஏற்கனவே மனதில் நினைத்திருந்த முன்னேற்றத் திட்டங்களைச் செயல்படுத்த அதிர்ஷ்டம் இனி கை கொடுக்கும்.

உடல் உழைப்பை பிரதானமாகக் கொண்டவர்கள், கறுப்புநிறப் பொருட்கள் சம்பந்தப்பட்டவர்கள், ஆலைத் தொழிலாளர்கள், கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் போன்றவர்களுக்கு இந்த வருடம் மிகவும் நல்ல வருமானங்களும், மனது சந்தோஷப்படும் நிகழ்ச்சிகளும் நடைபெறும்.


அதேபோல ஆசிரியர்பணி, மார்கெட்டிங், விற்பனைப் பிரிவில் உள்ளவர்கள், ரியல் எஸ்டேட் தொழிலர்கள், ஆலோசனை சொல்பவர்கள், ஊராட்சி நகராட்சி மாநகராட்சி சம்பந்தப்பட்டவர்கள், இன்சூரன்ஸ் ஏஜெண்டுகள், வெரிபிகேசன் துறையில் இருப்பவர்கள், தபால் மற்றும் கூரியர்துறையில் இருப்பவர்கள் நல்ல பலன்களை பெறுவீர்கள்.

பெண்களுக்கு இது மிகச் சிறப்பான நன்மைகளைத் தரும் ஆண்டாகும். உங்களின் மதிப்பு உயரும். நான்கு பேர் கூடும் இடத்தில் தனித்துவமாக தெரிவீர்கள். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் இதுவரை இருந்த வந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும்.

அலுவலகத்தில் ஆண்கள் உங்களுக்கு அடங்கி இருப்பார்கள். இதுநாள் வரை இருந்து வந்த மேல் அதிகாரி தொந்தரவு இனி இருக்காது. புகுந்த வீட்டில் அந்தஸ்து, கௌரவம் கூடும். மாமியாரை நீங்கள் வேலை வாங்க முடியும். கணவரும், குழந்தைகளும் உங்கள் பேச்சை கேட்பார்கள்.

குடும்பத்தில் யாராவது ஒருவர் கோபத்தில் பேசினாலும் மற்றவர் அடங்கிப் போவதால் எல்லாவித பிரச்னைகளையும் சமாளிக்க முடியும். மேலும் அறிவுப் பூர்வமாக சிந்திக்கக் கூடிய பெண் ஒருவர் இருக்கும் குடும்பத்தில் பிரச்னைகள் எதுவும் பெரிதாக வராது.

கமிஷன் தரகு போன்றவைகளின் மூலமாக நல்ல பெரிய தொகை ஒரே நேரத்தில் ‘லம்ப்’பாக கிடைக்கும். மூத்த சகோதரர்களிடம் நல்ல உறவும் நன்மைகளும் இருக்கும். சகோதர சகோதரிகள் உதவிகரமாக இருப்பார்கள். பங்குச் சந்தை லாட்டரி போட்டி பந்தயங்கள் போன்றவைகள் இப்போது கை கொடுக்கும்.

வருகின்ற வருமானத்தை முதலீடாக்குவது நல்லது. வீட்டுமனை, நிலம் போன்றவைகள் இப்போது வாங்கிப் போடுவீர்கள். குழந்தைகளின் பேரில் டெபொசிட் செய்யலாம். தவிர்க்க முடியாத பிரச்னைகளால் முதல் திருமணம் முறிவடைந்து விவாகரத்து பெற்றவர்களுக்கு தற்போது இரண்டாவது திருமணம் நடக்கும். இரண்டாவது வாழ்க்கை நல்லபடியாக அமையும்.

குறிப்பிட்ட சிலர் எந்த ஒரு காரியத்தையும் சாதித்தே ஆகவேண்டும் என்றும் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற முனைப்புடனும் நிறைவேற்றிக் காட்டுவீர்கள். உங்களுடைய மனதைரியம் கூடும். எதையும் சந்திக்கும் ஆற்றல் பெறுவீர்கள். நாளைக்குப் பார்க்கலாம் எனற ஒத்திப்போடுதல் இருக்காது.

இதுவரை நீங்கள் பயந்து கொண்டிருந்த செயல்கள் விஷயங்களில் தலைகீழ் மாற்றங்கள் இருக்கும். அடுத்தவர்களின் உதவி உங்களுக்கு தேவைப்படும் நேரத்தில் கிடைக்கும். ஒரு சிலர் வலிய வந்து உதவுவார்கள். ஒரு சிலர் மதிப்பு மிக்க நகை வாங்கி மனைவிக்கு பரிசளிப்பீர்கள்.

இதுவரை தள்ளிப் போய் இருந்த வெளிநாடு தொடர்பான வேலை விஷயங்களும் வெளிநாட்டு பயணங்களும் தற்போது வெற்றிகரமாக கை கூடி வரும். வாழ்க்கைத் துணைவர் உறவு வழியில் ஆதரவுகளும் லாபங்களும் இருக்கும். பெற்றோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். பங்காளிச் சண்டை தீரும். பூர்வீக சொத்து பிரச்னை சுமுகமாக ஒரு முடிவுக்கு வரும்.

ரியல் எஸ்டேட், வீடு கட்டிக் கொடுக்கும் புரமோட்டர்கள், சிகப்பு நிறம் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்கள், செம்மண் பூமி, ஆறு, மலைப்பாங்கான இடங்களில் தொழில் வைத்திருப்பவர்கள் மேன்மைகளை அடைவீர்கள். காவல்துறை ராணுவம் போன்ற சீருடை அணிந்து செயல்படும் துறையினருக்கு இதுவரை இருந்த அனைத்துப் பிரச்னைகளும் விலகி நிம்மதி இருக்கும்.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு உங்கள் எதிர்கால முன்னேற்றத்திற்கான அடித்தளங்களை அமைத்துத் தருவதாக அமையும்.