சிவ சிவ என்கிலர் தீவினையாளர்
சிவ சிவ என்றிடத் தீவினை மாளும்
சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவார்
சிவ சிவ என்னச் சிவகதி தானே!
உலகம் சிவமயமாக இருக்கின்றது என்று முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். மாசி மாதம் என்றாலே மகம் நட்சத்திரம் தான் நினைவிற்கு வரும். அது போல சிவராத்திரி திருநாளும் மறக்கமுடியாத மகத்துவம் நிறைந்த நாளாகும். அம்பிகைக்கு உகந்த நாள் நவராத்திரி. அது ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுகின்றது. அணிதிகழும் சிவனுக்கு கொண்டாடும் விழா சிவராத்திரி விழா. அது ஓரிரவு முழுவதும் விழித்திருந்து கொண்டாடப்படுகிறது.