Wednesday, June 22, 2016

திருவெண்காட்டில் நமக்கு வரும் துன்பங்கள் தடைகள் அனைத்தையும் தீர்க்க வல்ல சங்கடஹர சதுர்த்தி ! ! ! 23.06.2016


விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதற்கு பல விரத தினங்கள் இருந்தாலும், விரதத்தில் மிகச் சிறந்ததும், பழமையானதும், சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடிய சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்தால் அளவு கடந்த ஆனந்தத்தை அடையலாம். சகல சௌபாக்கியங்களையும் பெறலாம்.

Thursday, June 16, 2016

திருவெண்காட்டில் சகல நலனும் தர வல்ல பிரதோஷ வழிபாடு ! ! ! 17.06.2016


பிரதான தோஷங்களை நீக்குவதுதான் பிரதோஷ வழிபாட்டின் முக்கிய சிறப்பு. யார் ஒருவரது ஜாதகத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் குறைந்தது 4 தோஷங்களாவது இருக்கும். எத்தனை தோஷங்கள் இருந்தாலும், பிரதோஷ தினத்தில் சிவனை வழிபடுவதன் மூலம் பயன்பெறலாம்.

Friday, June 10, 2016

மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான பாலஸ்தாபன கும்பாபிஷேக நிகழ்வுகளின் முழுமையான படங்கள் இணைப்பு 08,09-06-2016


மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானத்தில் எதிர்வரும் புரட்டாதி மாதம் 04.09.2016 மகா கும்பாபிஷேகம் இடம்பெற இருப்பதனால் ஆரம்ப நிகழ்வான பாலஸ்தாபன கும்பாபிஷேக நிகழ்வு எம் பெருமானின் திருவருளுடன் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

கிரியாகால பகல், இரவு நிகழ்வு (08.06.2016) மற்றும் பாலஸ்தாபன (09.06.2016) நிகழ்வுகளின் முழுமையான படங்கள் இணைப்பு.

Tuesday, June 7, 2016

திருவெண்காட்டில் வளம் தரும் விநாயகர் சதுர்த்தி விரத வழிபாடு ! ! ! 08.06.2016


விநாயகர் சதுர்த்தி விரதத்தை ஒரு கொண்டாட்டமாகவே நாம் பாவிக்கலாம். விநாயகர் மிகவும் எளிமையான கடவுள். யார் கூப்பிட்டாலும் ஓடோடி வந்து அருள் தருவார். அதனால்தான் அவர் எல்லாருக்கும் பொதுவாகவும், யாரும் சுலபமாக வழிபடும் வகையிலும் இருக்கிறார். 

Thursday, June 2, 2016

திருவெண்காட்டில் தெய்வீக தரிசனம் தரும் பிரதோச வழிபாடு ! ! ! 02.06.2016


பிரதோஷம் என்னும் இவ்விரதம் சிவமூர்த்திக்கு உரிய விரதங்களால் தலையாயது. விரதம் ஏற்பவர்கள், வளரபிறை, தேய்பிறை என்ற இரண்டு பட்சங்களாலும் வரும் திரயோதசி திதியில் அதிகாலையில் எழுந்து நீராடி நித்திய கடன்களை முடிக்க வேண்டும். பிறகு சிவபுராணம், சிவ நாமாவளாகளை படித்து, முடிந்தவர்கள் மௌன விரதம் இருந்து, மாலையில் கோயில் சென்று, சிவதரிசனம் செய்து, நந்திக்கு பச்சரிசி வெல்லம் படைத்து, நெய்தீபம் ஏற்றி வணங்கி வருதல் வேண்டும். பிரதோஷ விரதம் முடிந்ததும், வேதம் ஓதும் அந்தணர்களுக்கு தானம் வழங்கி விரதத்தை பூர்த்தி செய்தல் நலம்.