Friday, April 28, 2017

திருவெண்காடு புண்ணிய சேஷத்திரத்தில் செல்வம் பெருகும் விநாயகர் சதுர்த்தி ! ! ! 29.04.2017


விநாயகர் சதுர்த்தியன்று அதிகாலையிலேயே எழுந்து வீட்டைத் தூய்மை செய்து மாக்கோலமிட வேண்டும். பூஜை அறையில் மணைப்பலகையை  வைத்து, அதன்மேல் தலை வாழையிலையை வைத்து அரிசியைப் பரப்ப வேண்டும். அரிசியின் மேல் நம் வலதுகை மோதிர விரலால் பிள்ளையார்  சுழியிட்டு, அதன்கீழ் ஓம் என எழுத வேண்டும். மணையின் இருபுறமும் குத்துவிளக்கை வைத்து, தேவையான பூஜைப் பொருட்கள், நிவேதனப்  பொருட்கள், அபிஷேகப் பொருட்களை தயாராக வைக்க வேண்டும்.

Monday, April 24, 2017

திருவெண்காடு புண்ணிய சேஷத்திரத்தில் அனந்தகோடி பலனைத் தரும் பிரதோஷ வழிபாடு ! ! ! 23.04.2017


பிரதோச வழிபாடு சிவ வழிபாட்டிற்குரிய மிகச் சிறப்பான மிக முக்கியமான வழிபாடாகும். தோசம் என்ற வடமொழிச் சொல்லிற்கு குற்றம் என்று பொருள். பிரதோசம் என்றால் குற்றமற்றது என்று பொருள். குற்றமற்ற இந்தப் பொழுதில் ஈசனை வழிபட்டால் நாம் செய்த சகல பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம். பிரதோச காலமென்பது மாலை 4 மணி முதல் 6 மணி வரையான காலமாகும்.

Friday, April 21, 2017

திருவெண்காடு எனும் புண்ணிய பதியில் ஆலயமாகிய வரலாற்று பதிவு !


திருவெண்காடு எனும் புண்ணிய பதியில் சிறுபராயம் முதல் சிவபக்தனாக விளங்கிய ஸ்ரீ மான் இலங்கைநாயக முதலியாரின் பேரனாகிய ஐயம்பிள்ளை உடையாருக்கு இந்திரலோகத்து வெள்ளையானை (ஐராவதம்) ஆலமர நிழலின் கீழ் காட்சி கொடுத்து ஆலயமாகிய வரலாற்று பதிவு !

இந்திரன் மால்பிரமன் எழிலார்மிகு தேவரெல்லாம்

வந்தெதிர் கொள்ள என்னை வெள்ளையானை அருள்புரிந்து

மந்திர மாமுனிவர் இவன்ஆர்என எம்பெருமான்

நம் தமர் ஊரன் என்றான் திருவெண்காடுறை உத்தமனே!!


திருவெண்காடு - மண்டைதீவு - யாழ்ப்பாணம் - இலங்கை

Wednesday, April 19, 2017

திருவெண்காட்டில் ஆனந்த நடராஐமூர்த்திக்கு சித்திரை திருவோணம் திருநீராட்டல் ! ! ! 20.04.2017


சித்திரை மாத நடராஜர் அபிஷேகம் இன்று மாலை 6:30-க்கு மேல் சிவகாமசுந்தரி சமேத ஶ்ரீமந் ஆனந்த நடராஜ மூர்த்திக்கு மஹாபிஷேகம் நடைபெறுகிறது.

ஆண்டுக்கு ஆறு முறை அபிஷேகம் காணும் ஆனந்த மூர்த்தி: 

ஆடல் வல்லானாகிய நடராஜப் பெருமானுக்கு ஒரு ஆண்டில் ஆறுமுறை அபிஷேகம் செய்ய வேண்டும் என்று ஆகம விதிகள் கூறுகின்றன. மூன்று முறை திதியிலும், மூன்று முறை நட்சத்திர நாளிலும் அபிஷேகங்கள் நடக்கின்றன. இதில் மிகச்சிறப்பானது மார்கழி திருவாதிரை. மற்றவை சித்திரை, திருவோணம் மற்றும் ஆனி உத்திர நட்சத்திர நாட்களாகும். ஆவணி, புரட்டாசி மாசி மாத வளர்பிறை சதுர்த்தசி திதிகளிலும் அவருக்கு அபிஷேகம் செய்யப்படும்.

Saturday, April 15, 2017

திருவெண்காடு புண்ணிய சேஷத்திரத்தில் சௌபாக்கியம் அருளும் சங்கடஹர சதுர்த்தி ! ! ! 14.04.2017


சௌபாக்யம் அருளும் சங்கடஹர சதுர்த்தி பூசையின் போதோ வழிபாட்டின் போதோ கீழ் கண்ட விநாயகர் துதி பாடல்கள் ஏதேனும் ஒன்றை பாடி வழி பட நன்மை பயக்கும் . மிக எளிமையான இனிமையான பாடல்கள் !!

வாக்கு உண்டாம் நல்ல மணமுண்டாம் மாமலரான் 
நோக்கு உண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு. 
ஒளவையார் 

Thursday, April 13, 2017

திருவெண்காட்டில் ஏவிளம்பி வருடப் பிறப்பு - 14.04.2017



ந்தப் புதுவருடம் பங்குனி 31-ம் தேதி இரவு (13-4-17) 12.43 மணிக்குப் பிறக்கிறது.

வரப்போகும் வசந்தத்துக்கு முன்னோட்டமாகத் திகழும் சித்திரை முதல் நாளை நாம் எப்படியெல்லாம் கொண்டாட வேண்டும், அன்றைக்கு நாம் என்னென்ன செய்ய வேண்டும் என்பது பற்றியெல்லாம் தெரிந்து கொள்ளலாமே.

தமிழ் கலாச்சாரம் சூரிய வழிபாடுபுதுவருடம் அன்று வீட்டை சுத்தம் செய்து, வாயில்களில் அழகாகக் கோலமிட வேண்டும். கதவுகளில், மஞ்சள், குங்குமம் இட்டு அலங்கரிக்க வேண்டும்.

Monday, April 10, 2017

திருவெண்காட்டில் தெய்வத் திருமணங்கள் நடந்த பங்குனி உத்தரத் திருநாள் ! ! ! 09.04.2017


ன்னிரெண்டாவது மாதமான பங்குனியும், பன்னிரெண்டாவது நட்சத்திரமான உத்திரமும் இணையும் புண்ணிய திருநாள் பங்குனி உத்திரம். தெய்வத் திருமணங்கள் அதிகம் நடைபெற்ற மாதம் பங்குனி என்கின்றன புராணங்கள்.

★முருகப் பெருமான்- தெய்வானை திருமணம் நடந்த நாள். வள்ளி அவதரித்த தினம். பார்வதி தேவியை பரமேஸ்வரன் கரம்பிடித்த நாள் இது. மேலும் மதுரையில் மீனாட்சிதேவி - சுந்தரேசர் திருக்கல்யாண வைபவம் பங்குனி உத்திரத்தன்று நடைபெறும்.

Saturday, April 8, 2017

திருவெண்காடு புண்ணிய சேஷத்திரத்தில் சர்வ பாவ விமோசனம் தரும் சனி பிரதோஷ வழிபாடு !!! 08.04.2017


னிப்பிரதோஷமான இன்று விரதமிருந்து சிவபெருமானை வழிபடுவது சகல தோஷங்களும், முன் ஜென்மத்தில் செய்த பாவங்களும் விலகும் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.

தோஷங்களை நீக்கும் நாளே பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. அந்த நாளில் சிவபெருமானையும், நந்தியையும் வழிபட்டால் எல்லாவிதமான தோஷங்களும் நிவர்த்தியாகிவிடும் என்பது நம்பிக்கை. சிவபெருமானை தேவர்கள் வழிபடுவதற்கு என்று ஒரு காலம் உண்டு. அதே போல மனிதர்கள் சிவனை வழிபடுவதற்காக அமையப்பெற்றதே பிரதோஷ காலம் ஆகும். இதில் தேய்பிறை பிரதோஷம் மனிதர்களுக்கு உரியது. வளர்பிறை பிரதோஷம் தேவர்களின் வழிபாட்டுக்குரியது என்கிறது புராணங் கள்.