Thursday, April 13, 2017

திருவெண்காட்டில் ஏவிளம்பி வருடப் பிறப்பு - 14.04.2017



ந்தப் புதுவருடம் பங்குனி 31-ம் தேதி இரவு (13-4-17) 12.43 மணிக்குப் பிறக்கிறது.

வரப்போகும் வசந்தத்துக்கு முன்னோட்டமாகத் திகழும் சித்திரை முதல் நாளை நாம் எப்படியெல்லாம் கொண்டாட வேண்டும், அன்றைக்கு நாம் என்னென்ன செய்ய வேண்டும் என்பது பற்றியெல்லாம் தெரிந்து கொள்ளலாமே.

தமிழ் கலாச்சாரம் சூரிய வழிபாடுபுதுவருடம் அன்று வீட்டை சுத்தம் செய்து, வாயில்களில் அழகாகக் கோலமிட வேண்டும். கதவுகளில், மஞ்சள், குங்குமம் இட்டு அலங்கரிக்க வேண்டும்.

புதுவருடத்தில் அன்று காலையில் மருத்து நீரில் நீராடவேண்டும். இந்த மருத்து நீரானது தாழம்பூ, தாமரைப்பூ, மாதுளம்பூ, துளசி, விஷ்ணுகிராந்தி, சீதேவியார் செங்கழுநீர், வில்வம், அறுகு, பீர்க்கு, பால், கோசலம், கோமயம், கோரோசனை, மஞ்சள், திப்பிலி, சுக்கு போன்றவற்றைச் சேர்த்து காய்ச்சப்படும்.

மருத்துநீரை தலையில் தேய்த்து நீராடினால் நல்ல பலன்களைப் பெறலாம் என்பது நம்பிக்கை.

புதுவருடத்திற்கு முதல் நாள் அருகில் இருக்கும் கோயில்களில் மருத்து நீரானது கிடைக்கும். இது மருந்து நீர் என்றும் அழைக்கப்படுகிறது.

நீராடிய பின்பு புதிய ஆடைகளை அணிய வேண்டும்.

காலையில் பூஜை அறையில் சுவாமி படங்களைச் சுத்தம் செய்து,பொட்டு வைக்க வேண்டும். மேலும் பூக்களால் அலங்கரித்து விளக்கேற்றி வணங்க வேண்டும்.

காலையில் இல்லத்தில் சர்க்கரைப் பொங்கல் வைத்து நைவேத்தியம் செய்து தீபாராதனை செய்ய வேண்டும்.

நைவேத்தியம் செய்யப்பட்ட சர்க்கரைப் பொங்கலை அனைவருக்கும் பரிமாற வேண்டும்.

பாசிப்பருப்பு பாயசம், வெல்ல அவல் போன்ற இனிப்பு வகைகளும் செய்யலாம்.

அறுசுவை உணவுகள் மதிய உணவில் அறுசுவையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இனிப்பு, புளிப்பு, கசப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, கார்ப்பு ஆகிய அறுசுவைகளைக் குறிக்கும் சர்க்கரை பொங்கல், மாங்காய் பச்சடி, வேப்பம்பூ ரசம், நீர்மோர், வாழைப்பூ வடை, காரக் குழம்பு ஆகியவற்றைச் செய்து உண்ண வேண்டும்.

இன்பம், துன்பம், மகிழ்ச்சி, கவலை, வியப்பு என்று பலதரப்பட்ட அனுபவங்கள் கொண்டது தான் வாழ்க்கை என்பதை உணர்த்துவது போல் அன்று நாம் உண்ணும் உணவு பல சுவைகளில் இருக்கும்.

கண்டிப்பாக அன்று அசைவ உணவுகளைத் தவிர்த்துவிட வேண்டும்.

தமிழ்ப் புதுவருடத்தன்று கை விசேடம், கை நீட்டம் என்று ஒரு வழக்கம் பின்பற்றப்படுகிறது.

பெரியவர்கள் குழந்தைகளுக்கு அன்பளிப்பாகப் பணம் தருவதே இப்படிச் சொல்லப்படுகிறது.

அதற்கென்று ஒரு நேரம் பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த நேரத்தில் தாத்தா, அப்பா என்று வீட்டுப் பெரியவர்களின் காலில் அனைவரும் விழுந்து ஆசி பெற்று, அவர் தரும் பணத்தைப் பெற்றுக்கொள்வார்கள்.

இதனால், வருடம் முழுவதும் பணவரவுடன் பல நன்மைகளும் ஏற்படும் என்பது நம்பிக்கை.

இப்படிப் பெரியவர்கள் கொடுக்கும் பணத்தைப் பத்திரமாக வைத்துக்கொள்ளவேண்டும். அடுத்த புதுவருடம் வரை கூட சிலர் வைத்திருப்பர்.

உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள் பரிமாறி, மகிழலாம்.

மாலையில் அருகில் இருக்கும் ஆலயங்களுக்குச் சென்று வழிபடலாம்.

தமிழ்ப் புதுவருடத்தன்று குலதெய்வ கோயிலுக்குச் சென்று வழிபடுதல் அதிக நன்மைகளைத் தரும்.

இந்த ஆண்டிற்கு உரிய ராஜா புதன், எனவே சொக்கநாதருக்கு பூஜை செய்வது நல்லது.

மேலும், சூரியனை வழிபட்டால் மேன்மைகள் பெருகும்.நன்மைகள் விளையும்.

"அவன் அருளாலே அவன் தாள் வணங்கி 

ஓம் கம் கணபதயே நமஹ...!!

காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி!
கயிலை மலையானே போற்றி! போற்றி!

தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!

இன்பமே சூழ்க ... ! 
எல்லோரும் வாழ்க . . . !

மேன்மைகொள் சைவநீதி . . . !
விளங்குக உலகமெல்லாம் . . . !

அன்பே சிவம்

திருச்சிற்றம்பலம்'' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்'