Wednesday, May 27, 2015

திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான பஞ்சதள இராஜகோபுர கட்டுமான திருப்பணிகளின் தற்போதைய நிலை 27.05.2015 (படங்கள் இணைப்பு)


வெகுவிரைவில் மகா கும்பாபிஷேக பெருஞ்சாந்தி விழாவினை காண இருக்கும் திருவெண்காடு சித்திவிநாயகப் பெருமானின் பஞ்சதள இராஐ கோபுரத்திருப்பணிகள் எம் பெருமான் திருவருள் துணைகொண்டு மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. 

தற்பொழுது ஐந்தாம் தள கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து பண்டிகை அமைத்து சிற்பவேலைப்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன .  

Monday, May 25, 2015

வினைதீர்க்கும் நாயகன் திருவெண்காடுறை ஸ்ரீ சித்தி விநாயகன் ! ! !


க்தி மார்க்கத்தில் முதலில் விநாயகரை வழிபட்ட பிறகுதான் மற்ற தெய்வங்களை வணங்குவதற்கு பல அடிப்படைக் காரணங்கள் உள்ளன. விநாயகருக்கு ஞானத்தின் தெய்வம், தடைகளை அழிப்பவர், வினைகளைத் தீர்ப்பவர், வெற்றியின் சொரூபம், அஞ்சாநெஞ்சம் கொண்டவர், சகலகலாவல்லவன், அமைதியின் சொரூபம், பொறுமையின் சிகரம், விகாரங்களை அழிப்பவர், பற்றற்ற அன்பானவர், அசைக்க முடியாதவர், கருணையின் சொரூபம், மாயையை அழிப்பவர் என்றெல்லாம் பெரும்புகழ் உண்டு.

Wednesday, May 20, 2015

திருவெண்காட்டில் வளம் தரும் விநாயகர் சதுர்த்தி ! ! ! 20.05.2015


விநாயகர் சதுர்த்தி விரதத்தை ஒரு கொண்டாட்டமாகவே நாம் பாவிக்கலாம். விநாயகர் மிகவும் எளிமையான கடவுள். யார் கூப்பிட்டாலும் ஓடோடி வந்து அருள் தருவார். 

அதனால்தான் அவர் எல்லாருக்கும் பொதுவாகவும், யாரும் சுலபமாக வழிபடும் வகையிலும் இருக்கிறார்.

Saturday, May 16, 2015

திருவெண்காட்டில் நம் முன்னோர்கள் மோட்சம் அருளும் வைகாசி அமாவாசை விரதம் ! ! ! 17.05.2015


மனிதப் பிறவி மகத்துவம் மிக்கது. மனிதன் வாழ்ந்த காலத்தில் செய்த பாவ புண்ணியங்கள், அவனது அடுத்த பிறவியிலும் தொடரும் என்கிறது இந்துமதம். ஓடியிட்ட பிச்சையும், உவந்து செய்த தானமும், சாடியிட்ட குதிரை போல் தர்மமும் துணையாய் நிற்கும் என்கிறது ஒரு சித்தர் பாடல். 

Thursday, May 14, 2015

திருவெண்காட்டில் பிரதோச வழிபாடு ! ! ! 15.05.2015


சிவபெருமானுக்கு உகந்த விரதங்களில் பிரதோஷமும் ஒன்று. பிரதோஷ வழிபாடு சகல சௌபாக்கியங்களையும் தர வல்லது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணமாகாத கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும். வறுமை நீங்கி  செல்வம் பெருகும். நோய்கள் நீங்கும். எடுத்துக் கொண்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். ஒவ்வொரு மாதமும் வளர்பிறையில் ஒரு பிரதோஷமும் தேய்பிறையில் ஒரு பிரதோஷமுமாக பிரதோஷம் வரும்.

Wednesday, May 13, 2015

மண்டைதீவில் 500 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம் - இலங்கை (நேரடி ஒலிபரப்பு வீடியோ)


மண்டைதீவில் 500 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம். TamilOne  தொலைக்காட்சியின் மண்வாசனை நேரடி ஒலிபரப்பு வீடியோ 

Saturday, May 9, 2015

திருவெண்காட்டில் ஸ்ரீமத் ஆனந்த நடராஜ மூர்த்திக்கு சித்திரை திருவோண மஹா அபிஷேகம் ! ! ! 10.05.2015

திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம்
 மண்டைதீவு - இலங்கை
சிவகுடும்பம்


திருவெண்காடு சுவேதாரணியம்பதி பூலோக கைலாய புண்ணிய திவ்விய நாம சேஷ்திர பொற்சபையில் (பொன்னம்பலம்) வீற்றிருந்து ஆனந்த தாண்டவம் புரியும் அருள்மிகு ஸ்ரீ சிவகாம சுந்தரி ஸமேத ஸ்ரீமத் ஆனந்த நடராஐமூர்த்தி , ஸ்ரீ சித்தி விநாயகப் பெருமான் , ஸ்ரீ பாலசுப்பிரமணியர் , ஸ்ரீ மாணிக்கவாசக சுவாமிகள்

தேவர்கள் தினமும் ஆறு முறை நடராஜருக்கு அபிஷேகம் செய்து வழிபடுவதாக ஐதீகம். அவர்களுக்கு ஒருநாள் என்பது, பூலோகத்தில் ஒரு ஆண்டுக்குச் சமமானது. இதன் அடிப்படையில், சிவன் கோயில்களில் ஆண்டுக்கு ஆறுமுறை நடராஜர் அபிஷேகம் நடக்கிறது. 

Thursday, May 7, 2015

திருவெண்காட்டில் சங்கடம் அனைத்தையும் நீக்கிச் சௌபாக்கியம் தரவல்ல சங்கடஹர சதுர்த்தி ! ! ! 07.05.2015


விநாயகர் பிரணவத்தின் வடிவம். இதன் திரிந்த வடிவமே பிள்ளையார் சுழி. பிள்ளையார் சுழியை இட்டாலே ஆணவம் ஒழிந்து இறை உணர்வு உண்டாகும். சதுர்த்தி திதி விநாயகருக்கு மிகவும் உகந்த நாளாகும். சுக்ல பட்சம் (வளர்பிறை) சதுர்த்தியை "வர சதுர்த்தி'என்றும், கிருஷ்ண பட்சம் (தேய் பிறை) சதுர்த்தியை "சங்கடஹர சதுர்த்தி' என்றும் கூறுவார்கள்.

Monday, May 4, 2015

திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான பஞ்சதள ராஜகோபுர கட்டுமான திருப்பணிகளின் தற்போதைய நிலை 04-05-2015 (படங்கள் இணைப்பு)


வெகுவிரைவில் குடமுழுக்கு காண இருக்கும் திருவெண்காடு சித்திவிநாயகப் பெருமானின் பஞ்சதள இராஐ கோபுரத்திருப்பணிகள் எம் பெருமான் திருவருள் துணைகொண்டு மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. 

Saturday, May 2, 2015

திருவெண்காட்டில் சித்திரா பௌர்ணமி விரத அனுஸ்டானங்கள் ! 03.05.2015


மாதம் தோறும் தான் பௌர்ணமி வருகிறது. சித்திரைமாதப் பௌர்ணமியில் அப்படியென்ன சிறப்பு? சித்திரைமாதம் சித்திரை நட்சத்திரம்கூடி வரும் பௌர்ணமி நாள் சித்திரா பௌர்ணமி நாளாகும்.

Friday, May 1, 2015

திருவெண்காட்டு புண்ணிய சேஷ்திர பூலோக கைலாயத்தில் பிரதோச வழிபாடு ! ( 01.05.2015)


சிவனுக்குரிய வழிபாடுகளில் சிவராத்திரியும் பிரதோஷமும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றன. சிவன் ஆலகால விஷத்தை உண்டு தூங்காமல் இருந்த இரவே சிவராத்திரி என்று வழங்கப்படுகிறது. விஷமுண்ட சிவன் நந்தியின் கொம்புகளுக்கு இடையே நடனம் புரிந்தார். விஷம் உண்ட வேளை பிரதோஷ வேளை!