Friday, May 1, 2015

திருவெண்காட்டு புண்ணிய சேஷ்திர பூலோக கைலாயத்தில் பிரதோச வழிபாடு ! ( 01.05.2015)


சிவனுக்குரிய வழிபாடுகளில் சிவராத்திரியும் பிரதோஷமும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றன. சிவன் ஆலகால விஷத்தை உண்டு தூங்காமல் இருந்த இரவே சிவராத்திரி என்று வழங்கப்படுகிறது. விஷமுண்ட சிவன் நந்தியின் கொம்புகளுக்கு இடையே நடனம் புரிந்தார். விஷம் உண்ட வேளை பிரதோஷ வேளை!

உலகை காக்கும் பொருட்டு நன்மையை நமக்குத் தந்து தீமையான விஷத்தை தான் ஏற்றுக் கொண்டார் இறைவன்.  இவ்வாறு உலகை காத்த உத்தமனான இறைவனை மனமுருக வேண்டி வழிபடும் தினமே பிரதோஷம். பிரதோஷம் நித்ய பிரதோஷம் , மாதப் பிரதோஷம், மஹா பிரதோஷம் என்று மூன்று வகைப்படும்.
திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம்
 மண்டைதீவு - இலங்கை
சிவகுடும்பம்


திருவெண்காடு புண்ணிய சேஷ்திர பூலோக கைலாய பொற்சபையில் (பொன்னம்பலம்) வீற்றிருந்து ஆனந்த தாண்டவம் புரியும் அருள்மிகு ஸ்ரீ சிவகாம சுந்தரி உடனுறை  அழகிய ஸ்ரீமத் ஆனந்த நடராஐமூர்த்தி , ஸ்ரீ சித்தி விநாயகப் பெருமான் , ஸ்ரீ பாலமுருகன் , ஸ்ரீ மாணிக்கவாசக சுவாமிகள்

தினம் தோறும் மாலை 4.30 மணி முதல் 6. 00 மணி வரையிலான காலம் நித்ய பிரதோஷ காலம் எனப்படும். இந்த சமயத்தில் இறைவனை வழிபடுவது மிகவும் சிறப்பு ஆகும். மாதம் தோறும் வரும் வளர்பிறை மற்றும் தேய்பிறை திரயோதசி தினங்களில் மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரையிலான காலம் மாதப் பிரதோஷம் எனப்படும். 

மஹா பிரதோஷம் : மாதங்களில் தேய்பிறை அல்லது வளர்பிறை திரயோதசியுடன் சனிக்கிழமை கலந்து வந்தால் அது மஹா பிரதோஷம் என்று வழங்கப்படுகிறது. இவை சித்திரை வைகாசி, ஐப்பசி கார்த்திகை மாதங்களில் வந்தால் மிகவும் உத்தமம் என்று புராணங்களும் ஆகமங்களும் கூறுகின்றன.

திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம்
 மண்டைதீவு - இலங்கை


திருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து திருவருள் பாலித்துக் கொண்டிருக்கும் அருள்மிகு ஸ்ரீ காசி விசாலாட்சியம்பிகை உடனுறை  ஸ்ரீ காசி விஸ்வநாதசுவாமி

மஹா விஷ்ணு முதலான தேவர்கள் அமிர்தம் அடைவதற்காக மகேந்திர மலையை மத்தாக கொண்டு வாசுகியை கயிறாக கொண்டு பாற்கடலை கடைந்தனர். அப்போது பல பொருட்கள் ஐராவதம், கற்பக விருட்சம், மஹா லஷ்மி போன்றவர்கள் பாற்கடலில் தோன்றினர். பின்னர் வாசுகி வலி தாங்க முடியாமல் விஷத்தை கக்கியது. 

அது மிகவும் கடுமையான ஆலகால விஷமாக அனைவரையும் துன்புறுத்தியது. தேவர்கள் அஞ்சி நாலாபுறமும் சிதறினர்.  தேவர்கள் பால் இறக்கம் கொண்ட சிவபெருமான் விஷத்தை திரட்டி விழுங்கி விட்டார். அதே சமயம் அது உள்ளே இறங்காதபடி பார்வதி தேவியார் கழுத்தை பிடித்து விட்டார்.


விஷம் கண்டத்தில் தங்கியது சிவன் திரூநீல கண்டன் ஆனார். அந்த விஷத்தின் பாதிப்பு நீங்க சிவன் பார்வதியுடன் நந்தியின் இரு கொம்புகளுக்கு இடையில் நர்த்தனம் புரிந்தார். இதுவே பிரதோஷ வரலாறு.  ஆகவேதான் பிரதோஷ காலத்தில் நந்தியம்பெருமானுக்கு முதல் வழிபாடு செய்யப்படுகிறது. பிரதோஷ தரிசனத்தால் கடன், வறுமை, நோய்ப்பயம் போன்றவை விலகும்.



ஓம் கம் கணபதயே நமஹ...!!

தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!
மேன்மைகொள் சைவநீதி . . . !
விளங்குக உலகமெல்லாம் . . . !
இன்பமே சூழ்க . . . !
எல்லோரும் வாழ்க . . . ! 


 "திருச்சிற்றம்பலம்" '' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்'