Tuesday, January 31, 2017

திருவெண்காட்டில் விநாயகர் சதுர்த்தி ! ! ! 31.01.2017தினமும் காலையில் பூசையின் போதோ வழிபாட்டின் போதோ கீழ் கண்ட விநாயகர் துதி பாடல்கள் ஏதேனும் ஒன்றை பாடி வழி பட நன்மை பயக்கும் .மிக எளிமையான இனிமையான பாடல்கள் !! 

வாக்கு உண்டாம் நல்ல மணமுண்டாம் மாமலரான்
நோக்கு உண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு.       ஒளவையார் 

Thursday, January 26, 2017

திருவெண்காட்டில் முன்னோர்களின் ஆசியைப் பெற்றுத் தரும் தை அமாவாசை ! ! ! 27.01.2017


மாவாசை தினங்கள் என்பது மூதாதையர்களை வழிபடுவதற்குரிய தினமாகவே கருதப்படுகிறது. அன்றைய தினம் நம்முடைய முன்னோர்களின் பசியும், தாகமும் அதிகரிக்கும் என்றும், அந்த பசியைப் போக்க கறுப்பு எள் கலந்த தண்ணீரை தர்ப்பணம் செய்ய வேண்டும் என்றும், அவ்வாறு செய்தால் அவர்களின் பசி அடங்கி, நமக்கு ஆசிகளை வழங்குவார்கள் என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன. அமாவாசை தோறும், ஒவ்வொரு வீட்டு வாசலிலும், முன்னோர்கள் நின்று கொண்டு எள் தண்ணீர் பெறுவதற்காக காத்துக் கொண்டிருப்பார்களாம். சூரியனும், சந்திரனும் இணையும் தினமே அமாவாசை என்று அழைக்கப்படுகிறது.

Wednesday, January 25, 2017

திருவெண்காடு புண்ணிய சேஷத்திரத்தில் துன்பம் விலகி நல்வாழ்வு தரும் பிரதோஷ வழிபாடு ! ! ! 25.01.2017


பிரதோஷ வேளையில் பஞ்சபுராணம் பாடுவோம்

பஞ்சபுராணம் பாடுதல் என்ற வழக்கம் முற்காலத்தில் நன்றாக இருந்து வந்துள்ளது. தற்காலத்தில் அவ்வழக்கம் சில கோயில்களில் மட்டுமே உள்ளது. சமயக் குரவர்கள், திருமூலர், சேக்கிழார், திருமாளிகைத் தேவர் ஆகியோர் பாடியவை திருமுறைகள் எனப்படுகின்றன. அவற்றில் தேவாரம் (7 திருமுறைகள்),திருவாசகம் (திருக்கோவையார்),திருவிசைப்பா,திருப்பல்லாண்டு, திருத்தொண்டர் புராணம் (பெரிய புராணம்) ஆகிய ஐந்தில் ஒவ்வொரு பாடல் பாடுவது இன்று வழக்காற்றில் உள்ளது. இதுவே பஞ்சபுராணம் பாடுதல் எனப்படுகிறது.

Monday, January 16, 2017

திருவெண்காடு புண்ணிய சேஷத்திரத்தில் சங்கடஹர சதுர்த்தி ! ! ! 15.01.2017


ங்கடஹர சதுர்த்தியின் மகிமை

ங்கடஹர சதுர்த்தியின் மகிமையை முருகப் பெருமான் முனிவர்க்கு எடுத்துரைக்கிறார் ஸ்காந்தத்தில். எல்லா விரதங்களிலும் இவ்விரதம் மிகச் சிறந்தது சங்கடஹரணம் என்றும் இது அழைக்கப் பெறும். காட்டில் தருமபுத்திரர் இவ்விரதத்தை மேற்கொண்டார். பாண்டவர்க்கு இவ்விரதத்தை உபதேசித்தவர் கண்ணபிரான். முதல் முதலில் தன் தாய் பார்வதி தேவிக்குக் கணபதியே இவ்விரதத்தைச் சொல்லி அருளினார்.

Saturday, January 14, 2017

" இன்றைய கோபுர தரிசனம் " 14.01.2017


அனைத்து ஐஸ்வர்யங்களையும் தரும்  " திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம் " மண்டைதீவு - யாழ்ப்பாணம் - இலங்கை

Friday, January 13, 2017

திருவெண்காட்டில் உலகிற்கு ஒளி கொடுக்கும் சூரிய பகவானுக்கு பொங்கலிட்டு வழிபடும் தைத்திருநாள் ! ! ! 14.01.2017


பொங்கல் திருநாள், பழங்காலத்தில் சூரிய விழா என்றே கொண்டாடப்பட்டதாக கூறப்படுகிறது. அன்றைய தினம் சூரிய பகவானுக்கு விரதம் இருந்து பொங்கல் இட்டு, வழிபாடு செய்வார்கள்.

பொங்கல் திருநாளான தை மாதத்தின் முதல் நாளில்தான், சூரியன் மகர ராசிக்குள் பிரவேசிப்பார். இதனால்தான் பொங்கல் திருநாளை, ‘மகரசங்கராந்தி’ என்றும் அழைப்பதுண்டு. மார்கழி மாதம் வரை தெற்கு திசையில் பயணித்து வந்த சூரியன், தை மாதம் முதல் வடக்கு திசையை நோக்கி நகர்வார். இந்த காலத்தை ‘உத்திராயண புண்ணிய காலம்’ என்பார்கள். சுப காரியங்கள் செய்வதற்கு ஏற்ற காலமாக உத்திராயண காலம் உள்ளது. இது தேவர்களின் பகல் பொழுதாகும்.

Wednesday, January 11, 2017

யாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தானத்தில் இடம்பெற்ற மார்கழி திருவாதிரை ஆருத்ரா தரிசனம் ( 11.01.2017 ) படங்கள் இணைப்பு


மார்கழி திருவாதிரை ஆருத்ரா தரிசனத்தையொட்டி மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான பொற்சபையில் (பொன்னம்பலம்) வீற்றிருந்து ஆனந்த தாண்டவம் புரியும் அருள்மிகு ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்பாள் உடனுறை அழகிய ஆனந்த நடராஐமூர்த்திக்கு 11.01.2017 அன்று அதிகாலை 4 மணியளவில் சிறப்பு மஹாஅபிஷேகம் (திருமஞ்சனம்) அலங்காரம் தீபாராதனைகள் நடைபெற்று அதனைத் தொடர்ந்து அம்மையும் அப்பனும் திருவீதி உலா வலம் வந்து அடியவர்களுக்கு பூலோக கைலாய தரிசனம் கொடுத்தார்கள்.

Tuesday, January 10, 2017

தரிசிக்க முத்திதரும் திருத்தலம் திருவெண்காட்டில் பொன்னம்பலவாணரின் ஆருத்திரா தரிசனம். 11.01.2017


ஆரார் வந்தார் அமரர் குழாத்தில்
அணியுடை ஆதிரைநாள்
நாரா யணனொடு நான்முகன் அங்கி
இரவியும் இந்திரனும்
தேரார் வீதியில் தேவர் குழாங்கள்
திசையனைத்தும் நிறைந்து
பாரார் தொல்புகழ் பாடியும் ஆடியும்
பல்லாண்டு கூறுதுமே. 

மார்கழி திருவாதிரை என்பது மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரத்தோடு கூடிய பௌர்ணமியில் கடைபிடிக்கப்படும் வழிபாடாகும். மார்கழி மாதம் தக்ஷிணாயனத்தின் கடைசி மாதமாகும். தேவர்களுக்கு இது அதிகாலைப் பொழுதாகும். இந்த காலத்தை தேவர்களுக்கு பிரம்ம முகூர்த்தம் என அழைக்கப்படும். இவ்வேளையில் தில்லையில் குடிகொண்டு அருள்புரியும் எம்பெருமான் நடராஜனைக் காண தேவர்கள் கூடுவதாக ஐதீகம்.

Monday, January 9, 2017

திருவெண்காடு புண்ணிய சேஷத்திரத்தில் சிவனருள் கிட்டும் பிரதோச வழிபாடு ! ! ! 10.01.2017


சிவனை வழிபட ஏற்ற காலம் சாயரக்ஷை. அதிலும் சிறந்தது சோமவாரம். அதனினும் சிறந்தது மாத சிவாரத்திரி. அதனினும் சிறந்தது பிரதோஷம். சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமையன்று பிரதோஷ தரிசனம் செய்பவர்கள் எல்லா தேவர்களையும் தரிசித்த புண்ணியத்தை பெறுகிறார்கள். சிவபெருமானை நாம் நாள் தோறும் வணங்குகிறோம். ஆனாலும் பிரதோஷ காலத்தில் எம்பெருமானை ஆலயம் சென்று வணங்குவது சிறந்த பயனை அளிக்கும்.

Saturday, January 7, 2017

திருவெண்காட்டில் சொர்க்கலோக வாழ்வை தரும் வைகுண்ட ஏகாதசி ! ! ! 08.01.2017


ந்திரவதி என்ற நகரத்தில் ஜங்காசுரன் என்ற (முரன்) அவனுடைய மகன் மருவாசுரனும் தேவர்களை துன்புறுத்தி வந்தனர். இதனால் விஷ்ணுபகவானிடம் தேவர்கள், அசுரர்களால் தாங்கள் படும் துன்பத்தை எடுத்துரைத்தார்கள். 

இதனால் மகாவிஷ்ணு, அந்த அசுரர்களுடன் போர் புரிந்தார். இந்த போர் பல வருடங்கள் தொடர்ந்து நடந்துக் கொண்டே இருந்தது. இதனால் சோர்வடைந்த ஸ்ரீமந் நாராயணன், ஒரு குகையில் நன்றாக உறங்கினார்.

Friday, January 6, 2017

தரிசிக்க முத்திதரும் திருத்தலம் திருவெண்காட்டில் திருவெம்பாவை நோன்பு ! ! ! 02.01.2017 - 11.01.2017குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்,
பனித்த சடையும், பவளம் போல் மேனியில் பால் வெண் நீறும், 
இனித்தம் உடைய எடுத்த பொன்பாதமும் காணப் பெற்றால் 
மனி(த்)தப் பிறவியும் வேண்டுவதே, இந்த மா நிலத்தே!

பொருள் : வளைந்த புருவங்களையும், கொவ்வைக்கனி போன்ற சிவந்த வாயிலே முகிழ்க்கும் புன்னகையையும், கங்கையால் ஈரமான சடைமுடியையும், பவளம் போன்ற சிவந்த திருமேனியில் அணிந்த பால் போன்று வெண்மையான வெண்ணீற்றுப் பூச்சினையும், பேரின்பம் நல்கும் தூக்கிய திருவடிகளையும் காணும் வாய்ப்பினைப் பெறுவதாம்பட்சத்தில் இவ்வுலகில் மனிதராய்ப் பிறப்பெடுத்தலும் விரும்பத்தக்க செயலாகும்.

மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரத்துக்கு ஒன்பது நாட்களுக்கு முன் தொடங்கி இந்துக்களால் கடைப்பிடிக்கப்படும் நோன்பாகும். "பாவை நோன்பு" " கார்த் யாயனி விரதம் என்று அழைக்கப்படும் சிவ விரதமாகவும், வைணவ விரதமாகவும் இது போற்றப்படும்.

Monday, January 2, 2017

திருவெண்காடு புண்ணிய சேஷத்திரத்தில் விநாயகர் பெருங்கதை விரத பூர்த்தி கஐமுகசூர சங்கார நிகழ்வு 03/01/2017


திருவெண்காடு புண்ணிய சேஷத்திரத்தில் விநாயகர் பெருங்கதை விரதம் 14.12.2016 ஆரம்பித்து மிகவும் சிறப்பான முறையில் இடம் பெற்று வருகின்றது. 

விரத பூர்த்தி நாளான நாளை 03.01.2017 செவ்வாய்க்கிழமை காலை 09 மணியளவில் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகளும் அதனை தொடர்ந்து காலை 11 மணியளவில் பிள்ளையார் கதைப்படிப்பும் இடம் பெற்று மாலை 04 மணியளவில் கஐமுகசூரசங்கார நிகழ்வும் இடம் பெற இருப்பதனால்