Monday, January 2, 2017

திருவெண்காடு புண்ணிய சேஷத்திரத்தில் விநாயகர் பெருங்கதை விரத பூர்த்தி கஐமுகசூர சங்கார நிகழ்வு 03/01/2017


திருவெண்காடு புண்ணிய சேஷத்திரத்தில் விநாயகர் பெருங்கதை விரதம் 14.12.2016 ஆரம்பித்து மிகவும் சிறப்பான முறையில் இடம் பெற்று வருகின்றது. 

விரத பூர்த்தி நாளான நாளை 03.01.2017 செவ்வாய்க்கிழமை காலை 09 மணியளவில் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகளும் அதனை தொடர்ந்து காலை 11 மணியளவில் பிள்ளையார் கதைப்படிப்பும் இடம் பெற்று மாலை 04 மணியளவில் கஐமுகசூரசங்கார நிகழ்வும் இடம் பெற இருப்பதனால்

திருவெண்காடு சித்தி விநாயகப் பெருமானின் திருவருளைப் பெற மக்கள் மெய்வருத்தம் பாராது ஆலயத்திற்க்கு வருகை தந்து அவனது இஷ்ட சித்திகளை பெற்றுய்யும் வண்ணம் வேண்டுகின்றோம்.

இங்ஙனம்
ஆலய தர்மகர்த்தாக்கள்


ஓம் கம் கணபதயே நமஹ...!!

காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி!
கயிலை மலையானே போற்றி! போற்றி!

தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!

இன்பமே சூழ்க ... ! 
எல்லோரும் வாழ்க . . . !

மேன்மைகொள் சைவநீதி . . . !
விளங்குக உலகமெல்லாம் . . . !

அன்பே சிவம்