Friday, April 24, 2015

திருவெண்காட்டில் முருகப்பெருமானுக்கு சுக்ல சஷ்டி விரத அனுஸ்டானங்கள் ! ! ! (24.04.2015)


முருகக் கடவுளுக்காக சிறப்பாக அனுஷ்டிக்கப்படும் விரதங்களில் ஒன்றான சுக்ல சஷ்டி விரதம் இன்றாகும்.

இன்றைய தினம் அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் இடம்பெறும்.

Wednesday, April 22, 2015

திருவெண்காட்டில் செல்வச் செழிப்பு தரும் சதுர்த்தி விரத அனுஸ்டானங்கள் ! ! ! (22.04.2015)



சதுர்த்தியில் விரதமிருந்து ஆனை முகனை முறையாக வழிபட்டால், வேண்டிய வரத்தையும் காரிய அனுகூலத் தையும் அவர் பெருமையுடன் நமக்கு அளிப்பார். எந்த வொரு காரியத்தை தொடங்கினாலும், விநாயகரை வழிபட்டுத் தான் நாம் தொடங்குவது வழக்கம். 

Tuesday, April 21, 2015

திருவெண்காட்டில் அள்ளி அள்ளி தரும் அட்சய திருதியை திருநாள் ! ! ! 21.04.2015

துவும் இல்லாத ஏழை, எளியவர்களுக்கு உணவு, ஆடைகள் என தேவையான உதவிகளை செய்தால், கஷ்டங்கள் நீங்கும்; வளம் பெருகும். இப்படி வாரி வழங்கும் நாளைதான் அட்சய திருதியை என்கின்றனர்.

Thursday, April 16, 2015

திருவெண்காட்டில் ‎பாவங்களை போக்கும் பிரதோஷ வழிபாடு‬ (16.04.2015)

பிரதோஷ வழிபாட்டின் சிறப்புகள் என்ன?

பிரதான தோஷங்களை நீக்குவதுதான் பிரதோஷ வழிபாட்டின் முக்கிய சிறப்பு. யார் ஒருவரது ஜாதகத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் குறைந்தது 4 தோஷங்களாவது இருக்கும். எத்தனை தோஷங்கள் இருந்தாலும், பிரதோஷ தினத்தில் சிவனை வழிபடுவதன் மூலம் பயன்பெறலாம். 

Tuesday, April 14, 2015

திருவெண்காட்டில் அனைவருக்கும் சகல ஐஸ்வர்யங்களும் தரவல்ல தமிழ் புத்தாண்டு "மன்மத" வருட சிறப்பு ஆராதனைகள் 14.04.2015


"திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொற்
பெருவாக்கும்  பீடும் பெருக்கும் – உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானை
காதலால் கூப்புவார்தம் கை."

Wednesday, April 8, 2015

திருவெண்காட்டில் சங்கடங்கள் அனைத்தையும் நீக்கி சௌபாக்கியம் தரவல்ல சங்கடஹர சதுர்த்தி 08.04.2015


அங்கிங்கெணாதபடி எங்கும் வியாபித்திருக்கும் ஓம் எனும் ஓங்கார வடிவமாக விளங்குபவர் ஸ்ரீ விநாயகப் பெருமான்.
யானை முகமும், மனித உடலும், நான்கு கரங்களும், பெருத்த வயிறும், முறம் போன்ற காதுகளும் கொண்டு அருளே வடிவாக அமைந்தவர் ஸ்ரீ விநாயகப் பெருமான். மிகவும் எளிமையான கடவுள் கணபதி. வேண்டுவோருக்கு வேண்டுவன அருளக் கூடியவர்.

Friday, April 3, 2015

திருவெண்காட்டில் அனைத்து நலன்களும் தரவல்ல பங்குனி உத்தர திருவிழா ! ! ! 03.04.2015


மிழ்மாதத்தில் நிறைவான மாதமாக வருவது பங்குனி மாதம்.

இது குடும்ப ஒற்றுமையை உருவாக்கும் புனித மாதமாக அமைகிறது. பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரமும், பவுர்ணமியும் சேரும் நாள் நட்சத்திரத்தால் பவுர்ணமியின் பலன் கூடுதலாக அமையும் நாளாக அமைகின்றது.

Wednesday, April 1, 2015

திருவெண்காட்டில் பிரதோச வழிபாடு ! ! ! 01.04.2015 பிரதோச காலம் தோன்றிய கதை ! ! !


பிரதோச வழிபாடு சிவ வழிபாட்டிற்குரிய மிகச் சிறப்பான மிக முக்கியமான வழிபாடாகும். தோசம் என்ற வடமொழிச் சொல்லிற்கு குற்றம் என்று பொருள். பிரதோசம் என்றால் குற்றமற்றது என்று பொருள். குற்றமற்ற இந்தப் பொழுதில் ஈசனை வழிபட்டால் நாம் செய்த சகல பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம். பிரதோச காலமென்பது மாலை 4 மணி முதல் 6 மணி வரையான காலமாகும்.