Friday, April 24, 2015

திருவெண்காட்டில் முருகப்பெருமானுக்கு சுக்ல சஷ்டி விரத அனுஸ்டானங்கள் ! ! ! (24.04.2015)


முருகக் கடவுளுக்காக சிறப்பாக அனுஷ்டிக்கப்படும் விரதங்களில் ஒன்றான சுக்ல சஷ்டி விரதம் இன்றாகும்.

இன்றைய தினம் அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் இடம்பெறும்.

திருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தானம் மண்டைதீவு - இலங்கை


"திருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் பரிவார மூர்த்தியாக வீற்றிருந்து திருவருள் பாலித்துக் கொண்டிருக்கும்  ஸ்ரீ வள்ளி தெய்வனை சேனாதிபதி"

முருகக்கடவுளின் சிறப்பு விரதமான கந்த சஷ்டி ஐப்பசி மாதத்தில் தொடர்ந்து 6 நாட்களுக்கு அனுஷ்டிக்கப்படுகின்றது என்றாலும் ஒருவருடத்தின் கந்த சஷ்டி ஆரம்பித்து அடுத்த வருடம் வரும் கந்த சஷ்டி வரையில் ஒவ்வொரு மாதமும் அனுஷ்டிக்கப்படும் சஷ்சி விரதம் சுக்ல சஷ்டி அல்லது பூர்வட்ச சஷ்டி எனப்படும்.


வருடத்தின் ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்திற்கு பின்னர் வரும் சிறப்பு தினத்தில் இந்த விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

ஒருவருடத்திற்கு அல்லது முன்று வருடத்திற்கு தொடர்சியாக ஒவ்வொரு மாதமும் இந்த விரத்தினை முருக பக்தர்கள் உபவாசமிருந்து மேற்கொள்ளுகின்றனர்.

சஷ்டி விரதமானது முருகக் கடவுளுக்கு சிறப்பு வாய்ந்தது என்பதால் கார்த்திகை மாதத்தில் வரும் சஷ்டி விரதம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.


இதன்போது முருகன் ஆலயங்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் கிரிகைகள் மேற்கொள்ளப்படுகின்றது.

விரதத்தினை அனுஷ்டிக்கும் பக்தர்கள் ஒருவேளை உணவுண்பர் அல்லது பால் பழம் அருந்தி இந்த விரதத்தினை கடைப்பிடிப்பர்.

அத்துடன் விரதத்தின் போது தகாத வார்த்தை பிரயோகங்களை தவிர்த்து முருகன் திருவுருவத்தினை எந்நேரமும் தியானித்து அனுஷ்டிக்க வேண்டும் என்பது நியதி ஆகும்.




ஓம் கம் கணபதயே நமஹ...!!

தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!
மேன்மைகொள் சைவநீதி . . . !
விளங்குக உலகமெல்லாம் . . . !
இன்பமே சூழ்க . . . !
எல்லோரும் வாழ்க . . . ! 


 "திருச்சிற்றம்பலம்" '' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்'