Wednesday, February 20, 2019

யாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காட்டில் பித்ரு தோஷம் போக்கி வாழ்வை வளமாக்கும் மாசி மகம் வழிபாடு !!! 19.02.2019


மாசி மகத்தை ‘கடலாடும் நாள்’ என்று இலக்கியங்களும் ‘தீர்த்தமாடும் நாள்’ என்றும் சாஸ்திரங்களும் போற்றுகின்றன. `அன்றைய தினம் விரதமிருந்து, நீராடி இறைவனை வழிபட்டால் மறுபிறப்பு கிடையாது' என்கின்றன புராணங்கள்.

Sunday, February 17, 2019

யாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காட்டில் பாவங்களை நீக்கி, புண்ணியங்களைத் தந்தருளும் ஞாயிறு பிரதோஷ விரத வழிபாடு ! ! ! 17.02.2019


ன்று 17.2.19ம் தேதி மாசிப் பிரதோஷம். ஞாயிறுப் பிரதோஷம். எனவே இன்றையதினம் மறக்காமல், சிவாலயம் சென்று சிவனாரையும் நந்தியையும் தரிசித்து வணங்குங்கள். தடைப்பட்ட காரியங்கள் அனைத்தும் கைகூடும்.

பிரதோஷம் என்பது சிவனாருக்கு உரிய அற்புத வேளை. பிரதோஷ வேளையில் சிவ தரிசனம் செய்வது, பாவங்களை நீக்கி, புண்ணியங்களைத் தந்தருளும். சிவனாரின் பரிபூரண அருளைப் பெற்று, ஞானத்துடனும் யோகத்துடனும் வாழலாம் என்பது ஐதீகம்.

Friday, February 8, 2019

யாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காட்டில் வாழ்வில் வசந்தத்தை அளிக்க வல்ல விநாயகர் சதுர்த்தி ! ! ! 08.02.2019


மாதந்தோறும் வருகின்ற பூர்வபட்சச் சதுர்த்தி நாட்களில் விநாயகருக்கு விரதம் இருப்பது மிகவும் விசேஷமானதாகும். இந்த விரதம் குறித்து விரிவாக பாக்கலாம்.

எந்த செயலை ஆரம்பிப்பதற்கு முன்னர் பிள்ளையாரை வழிபட்ட பின்னரே ஆரம்பிக்கும் வழக்கம் சைவ மக்களிடையை காலாதிகாலமாக நிலவிவருகின்றது. அவரை வழிபட்டுத் தொடங்கினால் செய்கருமம் இடையே எதுவித விக்கினங்களும் இன்றி நிறைவுபெறும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. 

Monday, February 4, 2019

யாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காட்டில் புண்ணியம் தரும் தை அமாவாசை விரத வழிபாடு ! ! ! 04.02.2019


ப்பூமியில் உள்ள உயிர்களிலேயே உயர்ந்த பிறவியாக கருதப்படுவது மனிதப் பிறவி. மனித வாழ்வில் ஏற்படும் அனைத்து நிகழ்வுகளும் 9-ம் பாவம் என்னும் பாக்ய ஸ்தானத்தினால் தீர்மானம் செய்யப்படுகிறது. அந்த ஸ்தானம் வலிமை பெற்றவர்கள் சாதிக்க பிறந்தவர்கள். பாக்ய ஸ்தானத்தை வலிமைப்படுத்த பிரபஞ்சம் வழங்கிய மாபெரும் கொடைகள் இரண்டு. ஒன்று பித்ருக்கள் பூஜை, மற்றொன்று குலதெய்வ வழிபாடு.

Friday, February 1, 2019

யாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காட்டில் செல்வமும் செல்வாக்கும் தரும் சனி மகாபிரதோஷம் ! ! ! 02.02.2019

திரயோதசி திதி சனிக்கிழமைகளில் வருவதால் சனி மகாபிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. சனி மகாபிரதோஷ நாளில் இருக்கும் விரதம் ஆயிரம் சாதாரண தினப் பிரதோஷப்பலனைத் தரும். நாளை சனிப்பிரதோஷ நாளில் தன்வந்திரி பீடத்தில் சிவலிங்க ரூபமாக உள்ள 468 சித்தர்களுக்கும், ஸ்ரீ மரகதாம்பிகை சமேத மரகதேஸ்வரருக்கும் சிறப்பு பிரதோஷ பூஜைகள் நடைபெற உள்ளது.