Saturday, June 28, 2014

திருக்காளத்தி காளத்தீசுவரர் திருக்கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் ! ! !


ராகு, கேது கிரக தோஷம், சர்ப்ப தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், நீண்டகாலம் தீராத பிரச்சினையில் சிக்கி திண்டாடுபவர்கள் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வாக வழிபடக் கூடிய ஆலயமாக இருப்பது ஆந்திர மாநிலம் காளஹஸ்தியில் இருக்கும் காளஹஸ்தீஸ்வரர் கோயில் என்பது இந்து சமயத்தினரின் நம்பிக்கை.

Monday, June 23, 2014

திருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான பஞ்சதள ராஜகோபுர கட்டுமான பணியில் முதலாம் தள திருப்பணி ஆரம்பம்.

திருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான பஞ்சதள ராஜகோபுர கட்டுமான பணியில் வியாழவரி வரைக்குமான  வேலைகள் நிறைவுபெற்று, இன்று(23.06.2014) திங்கள் கிழமை நண்பகல் 12.30 மணிக்கு முதலாம் தளத்திற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இத் திருப்பணி  சுவிஸ் வாழ் மண்டைதீவு மக்கள் நிதி உதவியுடன் திரு.ஞானலிங்கம் பரணிதரன் அவர்கள் பொறுப்பேற்று ஆரம்பித்து வைத்துள்ளார் என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கெள்கின்றோம்.
ஏனைய புலம்பெயர்வாழ்  மக்கள்  அனைவரிடமிருந்தும் மற்றைய தளம்களுக்குமான திருப்பணி நிதி உதவியை அன்புரிமையுடன் நாடுகின்றோம்.

Friday, June 20, 2014

அர்த்தநாரீஸ்வரர் தோற்றம் தரும் விளக்கம் ! ! !


அர்த்தநாரீஸ்வரர் தோற்றம்

ர்த்தநாரீஸ்வரர் என்றால் பாதி ஆண் மற்றும் பாதி பெண் உருவில் உள்ள ஈஸ்வரர் என்று அர்த்தம். ஒரு முறை சிவபெருமானுக்கும் பார்வதிக்கும் இடையே கருத்து வேற்றுமை தோன்றியது. பார்வதிக்கு ஏற்பட்ட கோபம் என்ன என்றால் சிவனை தரிசிக்க வரும் அனைத்து பக்தர்களும் தம்மையும் வணங்குகையில் முனிவர்கள் மட்டும் சிவபெருமானை வணங்கிவிட்டுச் செல்கிறார்களே, அது தன்னை அவமதிப்பது போல உள்ளது. 

Wednesday, June 18, 2014

திருவானைக்கா ஜம்புகேசுவரர் திருக்கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் ! ! !


திருவானைக்கா ஜம்புகேசுவரர் திருக்கோயில் திருச்சிராப்பள்ளிக்கு அருகில் காவிரி வட கரையில் விளங்கும் தலம். இந்தத் தலம் பஞ்ச பூதங்களில் ஒன்றான நீரினைக் குறிக்கிறது. இறைவரின் திருப்பெயர்: நீர்த்திரள்நாதர். இத்திருப்பெயரை இவ்வூர்த் திருத்தாண்டகத்தில் அப்பர் பெருந்தகையார் ``செழுநீர்த் திரளைச் சென்று ஆடினேனே`` என எடுத்து ஆண்டுள்ளார். இதுவன்றி ஜம்புகேசுவரர் என்று வேறு திருப்பெயரும் உண்டு. வெண்ணாவல் மரத்தின் அருகில் எழுந்தருளியிருப்பதால் இப்பெயர் பெற்றார். (ஜம்பு -நாவல்) இறைவி திருப்பெயர் அகிலாண்டேஸ்வரி

Monday, June 16, 2014

திருவெண்காட்டில் சங்கடஹரசதுர்த்தி விரதம் 16.06.2014


ஒவ்வொரு மாதமும் தேய்பிறையில் வரும் கிருஷ்ணபட்ச சதுர்த்தி அன்று இருக்கும் விரதத்தைத் தான் சங்கடஹர சதுர்த்தி விரதம் என்று கூறுகின்றனர்.

சிவபெருமான் விநாயகரை கணங்களுக்குத் தலை வணங்கியதால், கணநாதன் என்ற பெயர் பெற்றார். நான்முகன் அஷ்டசித்திகளை ஒப்படைத்து சித்தி விநாயகர் என்ற சிறப்புப் பெயரைச் சூட்டினார்.

Saturday, June 14, 2014

காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் ! ! !


காம்பரேஸ்வரர் கோவில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பஞ்சபூத ஸ்தலங்களுள் இதுவும் ஒன்று. இந்தத் தலம் பஞ்ச பூதங்களில் ஒன்றான நிலத்தைக் குறிக்கிறது. இந்தக் கோவிலின் முக்கிய கடவுளான சிவன் ஏகாம்பரேஸ்வரர் என்ற பெயரிலும், அம்பிகை காமாட்சி அம்மன் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார்கள். மொத்தம் 40 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்கோவில், 600ஆம் ஆண்டே கட்டப்பட்டிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

Wednesday, June 11, 2014

"வைகாசி விசாகம்" - இந்துக்கள் புனிதமாக போற்றும் திருநாள் !


வைகாசி விசாகம் முருகக் கடவுள் அவதாரம் செய்த நாளாகும். வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திரத்தில் வரும் சிறப்பு நாள் இதுவாகும். விசாகம் ஆறு நட்சத்திரங்கள் ஒருங்கு கூடியதொன்று. இதனால் முருகனும் ஆறு முகங்களோடு திகழ்பவர் என்பது ஐதீகம். உயிர்களுக்கு நேரும் இன்னலை நீக்கும் பொருட்டு சிவன் ஆறுமுகங்களாய்த் தோன்றி தம் திருவிளையாடலால் குழந்தையானது இந்நாளில். மக்கள், பிராணிகள், தாவரங்கள் எல்லாம் ஓருயிராகி இணைக்கப்பட்டிருக்கும் உண்மையை விளக்குதலே இந்நாளின் கருத்தாகும். இதனால் சைவர்கள் இந்நாளில் விரதமிருந்து ஆலயங்களில் சிறப்பாகக் கொண்டாடுவர். 

Monday, June 9, 2014

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் ! ! !


திருவண்ணாமலைத் தலம் நடுநாட்டுத் தலங்களுள் முதன்மையானது. பஞ்சபூதத் தலங்களுள் இது அக்னித் தலம். நால்வராலும் பாடப்பட்ட தலம். எங்கிருந்து நினைத்தாலும் முக்தி கொடுக்கும் தலம் இதுதான். இத்தலத்தில்தான் திருப்புகழ், கந்தர் அனுபூதி, திருவெம்பாவை, திருவம்மானை, அருணாச்சல அஷ்டகம் போன்ற புனித நூல்கள் பிறந்தன.

Wednesday, June 4, 2014

ராஜயோகம் அளிக்கும் ராகு கிரகத்தை வணங்குவதால் ஏற்ப்படும் நன்மைகள் ! ! !


சுவர்பானு எனும் அசுரன், சூரியனை மறைத்து இருளைப் பரப்பினான். சூரிய கிரணம் வெளிவராத நிலையில், உலக இயக்கமும் உயிரினங்களின் வேலைகளும் தடைப்படுமோ என்று பயந்தனர் தேவர்கள். அசுரனிடமிருந்து சூரியனை விடுவிக்க, பரிகாரத்தில் ஈடுபட்டனர். இதில் இருள் விலகி, இளஞ்சிவப்பாகக் காட்சி தந்தான் சூரியன். கடைசியில், அவனது இயல்பான நிறமான வெண்மை பளிச்சிட்டது என்கிற தகவல் வேதத்தில் உண்டு (சுவர்பானு ராஸுர: ஸுர்யம் தமஸாவித்யத்...).

Monday, June 2, 2014

விஞ்ஞான நோக்கில் விநாயகர் உருவினைப் பார்க்கும்பொழுது ! ! !


ந்து சமயம் போற்றும் கடவுள் திருவுருவங் கள் அனைத்தும் மிக உயர்ந்த உட்கருத்தினை உணர்த்தும் வடிவங்களாகவே அமைந்துள்ளன. விஞ்ஞான நோக்கில் பார்க்கும் பொழுதும், அத்திரு வடிவங்கள் எவ்வளவு உயர்ந்த தெய்வீக உட்கருத்துகளையும்- விஞ்ஞானக் கோட்பாடு களையும் மக்களுக்கு உணர்த்துவதாக உள்ளன என்பது விளங்குகின்றது.