Thursday, December 31, 2015

ஆங்கில புத்தாண்டு இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் - 2016 சிறப்பு வீடியோ ! ! !



01.01.2016, வெள்ளிக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு விருப்பமான நாள். அருமையான தினத்தன்று புத்தாண்டு பிறக்கிறது.

Monday, December 28, 2015

திருவெண்காட்டில் சங்கடம் அனைத்தையும் நீக்கிச் சௌபாக்கியம் தரவல்ல சங்கடஹர சதுர்த்தி 28-12-2015


"திருவும் கல்வியும் சீரும் தழைக்கவும்
கருணை பூக்கவும் தீமையைக் காய்க்கவும்
பருவமாய் நமது உள்ளம் பழுக்கவும்
பெருகும் ஆழத்துப் பிள்ளையைப் பேணுவாம்."


"ஓம் விக்னேஸ்வராய நமஹ"

வரும் சங்கடம் அனைத்தையும் நீக்கிச் சௌபாக்கியம் தரவல்லது சங்கடஹர சதுர்த்தி இன்று. விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதற்கு பல விரத தினங்கள் இருந்தாலும், விரதத்தில் மிகச் சிறந்ததும், பழமையானதும், சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடிய சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்தால் அளவு கடந்த ஆனந்தத்தை அடையலாம். சகல சௌபாக்கியங்களையும் பெறலாம்.

Saturday, December 26, 2015

திருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் இடம்பெற்ற ஆருத்ரா தரிசனம் ( 26-12-2015) படங்கள் இணைப்பு


மார்கழி திருவாதிரை ஆருத்ரா தரிசனத்தையொட்டி மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான பொற்சபையில் (பொன்னம்பலம்) வீற்றிருந்து ஆனந்த தாண்டவம் புரியும் அருள்மிகு ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்பாள் உடனுறை அழகிய ஆனந்த நடராஐமூர்த்திக்கு 26.12.2015 அன்று அதிகாலை 4 மணியளவில் சிறப்பு மஹாஅபிஷேகம் (திருமஞ்சனம்) அலங்காரம் தீபாராதனைகள் நடைபெற்று அதனைத் தொடர்ந்து அம்மையும் அப்பனும் திருவீதி உலா வலம் வந்து அடியவர்களுக்கு பூலோக கைலாய தரிசனம் கொடுத்தார்கள்.

Friday, December 25, 2015

திருவெண்காட்டில் ஆடல் அரசனுக்கு ஆருத்ரா தரிசனம் ! ! ! 26-12-2015


குறிப்பு : சிதம்பரம் தில்லை ஆனந்த நடராஐர் திருக்கோவிலில் நடைபெறுவதைப் போன்று மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான பொற்சபையில் (பொன்னம்பலம்) வீற்றிருந்து ஆனந்த தாண்டவம்புரியும் அருள்மிகு ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீமத் ஆனந்த நடராஐமூர்த்திக்கும் திருவாதிரை ஆருத்ரா தரிசனம், ஆனி உத்தரத் திருமஞ்சன தரிசனமும் சிறப்பாக நடைபெறுவது வழமை.





Tuesday, December 22, 2015

திருவெண்காட்டில் துன்பங்கள் நீங்கி இன்பங்கள் பெற பிரதோஷ வழிபாடு ! ! ! 22-12-2015


சிவபெருமானை நாம் நாள் தோறும் வணங்குகிறோம். ஆனாலும் பிரதோஷ காலத்தில் எம்பெருமானை ஆலயம் சென்று வணங்குவது சிறந்த பயனை அளிக்கும். மாதந்தோறும் இருமுறை - வளர்பிறை, தேய் பிறை திரயோதசி (13 ம் நாள்) நாட்கள் பிரதோஷ தினங்களாகும். 

Monday, December 21, 2015

திருவெண்காட்டில் வையகம் போற்றும் வைகுண்ட ஏகாதசி ! ! ! 21.12.2015


திருவோண நக்ஷத்திரமும், திருவாதிரை நக்ஷத்திரமும் தனிச்சிறப்புடன் கூடிய நக்ஷத்திரங்களாக “திரு” என்ற ஆரம்ப எழுத்துகளுடன் அமைந்துள்ளன. திருவோணம் திருமாலுக்கும், திருவாதிரை சிவபெருமானுக்கும் உரிய நக்ஷத்திரங்களாகும். அதுபோல திருவோண நக்ஷத்திரத்தில் ஆழ்வார்களில் முதலாழ்வரான பொய்கையாழ்வாரும் சிறந்த மஹநீயர்களாக விளங்கிய வேதாந்த தேசிகனும் மற்றும் பிள்ளைலோகாச்சாரியாரும் முறையே புரட்டாசி திருவோண நன்னாளிலும் ஐப்பசி திருவோண நன்னாளிலும் அவதரித்தவர்கள்.

Friday, December 18, 2015

திருவெண்காட்டில் தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் ஆனந்த வாழ்வு தரும் திருவெம்பாவை நோன்பு ! 17.12.2015 - 26.12.2015 சிறப்புக்கட்டுரை


திருவெம்பாவை விரதத்தை, சைவ சமயத்தவர்கள் மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நாளிற்கு ஒன்பது நாட்கள் முதல் "நோன்பை" ஆரம்பித்து பத்தாவது நாள் திருவாதிரை அன்று நிறைவு செய்வார்கள். ஆனால் வைணவ சமயத்தவர்கள் மார்கழிமாதம் முழுவதும் நோன்பு இருந்து வணங்குவார்கள்.

Monday, December 14, 2015

திருவெண்காட்டில் வெற்றி தரும் திருவோண விநாயக சதுர்த்தி ! ! ! 14.12.2015



விநாயகர் சதுர்த்தியன்று அதிகாலையிலேயே எழுந்து வீட்டைத் தூய்மை செய்து மாக்கோலமிட வேண்டும். பூஜை அறையில் மணைப்பலகையை  வைத்து, அதன்மேல் தலை வாழையிலையை வைத்து அரிசியைப் பரப்ப வேண்டும். அரிசியின் மேல் நம் வலதுகை மோதிர விரலால் பிள்ளையார்  சுழியிட்டு, அதன்கீழ் ஓம் என எழுத வேண்டும். மணையின் இருபுறமும் குத்துவிளக்கை வைத்து, தேவையான பூஜைப் பொருட்கள், நிவேதனப்  பொருட்கள், அபிஷேகப் பொருட்களை தயாராக வைக்க வேண்டும்.

Wednesday, December 9, 2015

பன்னிரண்டு இராசிகளுக்குமான ஆங்கில புத்தாண்டு இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் - 2016

01.01.2016, வெள்ளிக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு விருப்பமான நாள். அருமையான தினத்தன்று புத்தாண்டு பிறக்கிறது. இந்த புத்தாண்டு பிறப்பின் விசேஷம் என்னவென்றால், 12 இராசிகாரர்களுக்கும் “கெஜகேசரி யோகம்” என்கிற சிறப்புக்குரிய யோகத்தை கொடுத்து மகிழ்விக்க போகிறது.

Tuesday, December 8, 2015

திருவெண்காட்டில் பூர்வ ஜென்ம வினைகளை போக்கும் பிரதோஷ வழிபாடு ! ! ! 08.12.2015


பிரதான தோஷங்களை நீக்குவதுதான் பிரதோஷ வழிபாட்டின் முக்கிய சிறப்பு. யார் ஒருவரது ஜாதகத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் குறைந்தது 4 தோஷங்களாவது இருக்கும். எத்தனை தோஷங்கள் இருந்தாலும், பிரதோஷ தினத்தில் சிவனை வழிபடுவதன் மூலம் பயன்பெறலாம்.

Saturday, December 5, 2015

திருவெண்காடு நினைக்க முத்தி தரும் அதிசய திருத்தலம் ! ! !


ந்துசமுத்திரத்தின் முத்து என வர்ணிக்கப்படும் ஸ்ரீமத் இலங்காபுரியில் சைவத் தமிழர்கள் செறிந்து வாழும் வட மாநிலத்தின் தலை நகராம் யாழ்ப்பாணத்தின் தென் திசையில் வங்கக்கடலலைகள் தாலாட்டும் சப்த தீவுகளின் தலைத்தீவாக விளங்குவது மண்டைதீவு.

இங்கு திருவெண்காடு என்னும் புண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து திருவருள் பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ அம்பலவாணர் சித்தி விக்கினேஸ்வரப் பிள்ளையாரின் வரலாற்றுச் சிறப்புக்களும் பழமைகளும் இக்கட்டுரையில் இணைக்கப்பட்டுள்ளது.