
ஈழத்தைப் பொறுத்தவரையில் சித்திரா பௌர்மணிஅல்லது சித்திரா பூரணை தாய்மாரை வழிபடும் நாளாகும். இறந்துபோன தம்முடைய தாய்மாருக்காக விரதம் இருக்கும் வழக்கம் ஈழத்தில் பன்நெடுங்காலமாக நிலவி வருகிறது. ஆலயங்களில் பொங்கல் பொங்கி, கஞ்சி காய்ச்சி வழிபாடுகளில் ஈடுபடுவர். ஈழத் தமிழ் சமூகத்தின் தாய் வழிபாட்டுப் பண்பாடு சார்ந்த ஒரு நிகழ்வாகவும் சித்திரா பூரணை முக்கியத்துவம் பெறுகிறது.
“சித்திரைப் பாவையே உன்றன் வருகையால் தரணி செழிக்க வேண்டும்! செகமே வளம் பெற நன்மழை பெய்தென்றும் தீமைகள் நீங்க வேண்டும்”