Monday, September 30, 2013

பிள்ளையார் என்ற பெயர் எப்படி வந்ததென்று தெரியுமா?



முதன்மைக் கடவுளான விநாயகரின் உண்மையான பெயர் தான் பிள்ளையார். அதன் பின்னர் வந்தது தான் விநாயகர், கணபதி, கணேஷ், விக்னேஷ்வரன், ஆனைமுகத்தோன் போன்ற பெயர்கள் எல்லாம். சரி, பிள்ளையார் பார்வதியால் உருவாக்கப்பட்டவர் என்பது அனைவருக்குமே தெரியும். 

Saturday, September 28, 2013

நவக்கிரகங்களால் மற்றொன்றுக்கும் இல்லாத சிறப்பு சனீஸ்வரனுக்கு உண்டு.


நவக்கிரகங்களால் மற்றொன்றுக்கும் இல்லாத சிறப்பு சனீஸ்வரனுக்கு உண்டு. ஈஸ்வரன் என்ற பெயர் சனீஸ்வரனுக்கு மட்டும் தான் சேர்கிறது. சனியைப் போல் கொடுப்பாரும்மில்லை கெடுப்பாரும் இல்லை என்று சொல்வார்கள்

Sunday, September 22, 2013

புரட்டாதி சனி விரதம் 21-09-2013 ஆரம்பம்




இவ்வாண்டுக்கான் சனி விரதமானது நிகழும் புரட்டாதி மாதம் 5 ஆம் நாள் செப்ரம்பர் 21 ஆம் திகதி ஆரம்பமாகின்றது. தொடர்ந்து வரும் நான்கு சனிக்கிழமையும் புரட்டாதி சனி விரதம் அனுஷ்டிக்க வாழ்வு சிறந்தோங்கும்.


Monday, September 16, 2013

Friday, September 13, 2013

விழாக்களின் போதும் திருவிழாகளின் போதும் மாவிலைத் தோரணம் கட்டுவது ஏன்?




விழாக்களின் சிறப்பே அதன் அலங்காரங்கள் எனலாம். விழாக்களின்போது அலங்காரத்துக்காகப் பயன்படுத்தப்படுகின்ற பொருள் தொன்றுதொட்டு ஒரே பொருளாக இருப்பதற்குக் காரணம் என்ன?

Thursday, September 12, 2013

தாடியும் சடாமுடியும் கொண்டதாகச் சித்தரிக்கப்படும் சங்கப் புலவர் கூட்டத்தில் விமானங்களை வடிவமைக்கும் திறன் தெரிந்த பொறியியலாளர்கள் !

Picture
சங்க இலக்கியமான புறநானூற்றிலே உறையூர் முதுகண்ணன் என்னும் புலவர் இன்றைய விஞ்ஞான உலகம் ஆச்சரியப்படும் வகையில் ஒரு குறிப்பைச் சொல்கிறார்.

Wednesday, September 11, 2013

விநாயக பெருமானுக்கு ஏற்ற விரத நாட்கள்

வெள்ளிக்கிழமை, சதுர்த்தி திதி, மார்கழி மாத வளர்பிறை சஷ்டி ஆகிய நாட்களில் விரதமிருந்து அவரை வழிபட்டால் அனைத்துவிதமான நன்மைகளை பெறலாம்.

விநாயகரை அவிட்ட நட்சத்திரத்தன்று நெற்பொரியால் அர்ச்சனை, அபிஷேகங்கள் செய்து வணங்குவதுடன் ஏழைப் பெண்களுக்கு முடிந்தவரை தானங்கள் செய்தால் திருமணத் தடைகள் நீங்கி நல்வாழ்க்கை அமையும்.

அவிட்ட நட்சத்திரத்தன்று வன்னி மரத்தடியில் வீற்றிருக்கும் விநாயகருக்கு பொரியை நைவேத்தியமாகப் படைத்து அதை குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால் தொழிலில் நல்ல லாபம் அடையலாம்.

விநாயகருக்கு பால் அபிஷேகம் செய்து அந்தப் பாலை அருந்திவிட்டு எந்த ஒரு இடத்துக்கும் சென்றால் அங்கு உணர்ச்சிவசப் படாமல் இருக்க முடியும். சென்ற வேலையில் வெற்றி உண்டாகும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், இலுப்ப எண்ணெய், விளக்கெண்ணெய், பசு நெய் ஆகிய ஐந்துவகை எண்ணெய்களால் பஞ்சதீபம் ஏற்றி விநாயகரை வழிபட்டால் பெண்கள் ஆசைபட்டபடி இல்லற வாழ்வு அமையும்.

செய்யும் தொழில் செழிப்பாக இருக்கும். பூச நட்சத்திரத்தன்று விநாயகருக்கு அன்னாபிஷேகம் செய்து வழிபட்டால் விளைச்சல் பெருகி விவசாயம் தழைக்கும், உறவினர்கள் மனம்மகிழ்ந்து உதவி புரிவார்கள்.

மூல நட்சத்திரத்தன்று விநாயகருக்கு பால்கோவாவை நைவேத்தியமாகப் படைத்தால் பதவி மாற்றம், இடமாற்றம் போன்றவை நடக்கும்.
திருவாதிரை நட்சத்திரத்தன்று விநாயகருக்கு கோதுமையால் செய்யப்பட்ட அல்வாவை படைத்து வணங்கி வந்தால் அபாண்டமாக பழிசுமத்தப்பட்டு பதவியை இழந்தவர்கள், மீண்டும் இழந்த பதவியையும், மனநிம்மதியையும் பெறுவார்கள்.

செவ்வாய்க்கிழமைகளில் வரும் சங்கடஹர சதுர்த்தி சனிப்பிரதோஷத்தைப்போல் மிகவும் சிறப்பான ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த விரதத்தை பார்வதி தேவியிலிருந்து, பஞ்சபாண்டவர்கள் வரை கடைப்பிடித்துள்ளனர். சிவபெருமானும் இந்த விரதம் இருந்துள்ளார்.


Tuesday, September 10, 2013

கணபதி ஹோமத்தின் சிறப்பு என்ன தெரியுமா?



எந்தத் தொழில் தொடங்கினாலும் கணபதி ஹோமம் செய்தபிறகு துவக்குவது மிகச்சிறந்த பலனைத்தரும். வீடுகளில் கிரகப்பிரவேசம் நடத்தும் போது கணபதி ஹோமம் நடத்தி, புதுவீடு புகுவது எக்காலமும் நன்மை தரும். குடும்பத்தில் தொடர்ந்து சுகவீனம் ஏற்பட்டால் கணபதி ஹோமம் நடத்தி உடல்நிலை நன்றாகப் பெறலாம். ஒரு கடிதம் எழுதும் போதும் கூட பிள்ளையார் சுழியுடன் துவங்குவது மரபு. விநாயகரே முழு முதற்கடவுள். 


சிவபெருமான் முப்புரங்களையும் அழிக்க புறப்பட்ட போது கணபதி மந்திரத்தை சொல்ல தவறிவிட்டார். எனவே செல்லும் வழியில் அவரது தேர் பழுதானது. பெற்ற பிள்ளையாக இருந்தாலும்கூட கணபதியை வணங்கிய பிறகே எந்த செயலையும் துவங்க வேண்டும் என உத்தரவிட்டவரே சிவபெருமான்தான். அவரே அந்த விதியை கடைபிடிக்காததால் இந்த நிலைமை ஏற்பட்டது. சிவபெருமானின் தேர் அச்சு முறிந்த இடத்தை இப்போது அச்சிறுபாக்கம் என்று அழைக்கிறார்கள்.

செங்கல்பட்டு அருகே இந்த ஊர் அமைந்துள்ளது. இங்குள்ள விநாயகரையும் அச்சிறு விநாயகர் என்றே அழைக்கிறார்கள். கணபதி ஹோமத்தை விநாயகர் வேள்வி என்றும் சொல்வதுண்டு. விநாயகரை வணங்கி, விநாயகர் குறித்த மந்திரங்கள் ஓதி, அவரை புகழ்ந்து பக்திப்பாடல்களை மனமுருகிப் பாடி கணபதி ஹோமத்தை நிறைவேற்ற வேண்டும். புதிய இயந்திரங்கள் வாங்கினால் அவை பழுதின்றி இயங்க விநாயகர் வேள்வி அவசியம்.

கணவன் - மனைவி ஒற்றுமைக்கு கேதார கௌரி விரதம்

கணவன் - மனைவி ஒற்றுமைக்கு கேதார கௌரி விரதம்  


பிருங்கி முனிவர் அதி தீவிர சிவ பக்தர். சிவனைத் தவிர வேறு யாரையும் வணங்கமாட்டார். ‘ஆதியும் அந்தமும் இ ல்லாத நாயகன் என் கயிலைநாதன்தான். 

அவனன்றி ஓர் அணுவும் அசையாது’ என்றெல்லாம் உள்ளார்ந்த பக்தியுட ன், ஆலவாய் அழகனை மட்டுமே துதித்து வந்தார். பிற கடவுளர்களை சற்றும் சிந்திக்காத அவருடைய போக்கு, சிலசமயம் அக்கடவுளர்களையே அவமதிக்கும் வகையிலும் அமைந்ததுண்டு. 

அப்படி ஒரு நிலைக்கு ஆளானவள் - பார்வதி. கயிலாயத்தில் தன் கணவருடன் அமர்ந்தி ருக்கும்போது, பிருங்கி முனிவர் நேராக வந்து சிவனை மட்டும் வணங்கி வலம் வருவதும், தன்னைத் திரும்பியே பார்க்காமல் போவதும் அவளுக்கு மன வருத்தத்தைத் தந்தது. 

எப்படியாவது பிருங்கி முனிவரை, தன்னையும் வணங்கச் செய்யவேண்டும் என்று விரும்பிய உமையவள், பெரு மானிடம் நெருங்கி அமர்ந்துகொண்டாள். இப்படி அமர்ந்திருக்கும்போது, தன்னைத் தவிர்த்து இவரை மட்டும் பிருங்கி  முனிவரால் எப்படி வலம் வர முடியும்? என்று நினைத்தாள். 

வழக்கம்போல பிருங்கி முனிவர் வந்தார். சிவனோடு உமையவள் நெருங்கி வீற்றிருப்பதைப் பார்த்தார்.  என்ன  செய்வது என்று குழம்பினார். பிறகு தெளிவாகி, ஒரு வண்டாக உருவெடுத்தார். இருவருக்கும் இடையே புகுந்து  சிவனை மட்டும் வலம் வந்தார்.  

இதைக் கண்டு வெகுண்டாள் தேவி. சக்தியும் சிவனும் ஒன்று என்ற தத்துவம் புரியாமல், தன் தலைவனை மட்டும்  வணங்கும் இந்த முனிவரின் ஆணவத்தை அடக்க எண்ணினாள்.  தன்னை அவமானப்படுத்திய முனிவரின் கால்கள்  முடமாகிப் போக சபித்தாள். 

அது உடனே பலித்தது. ஆனாலும், தன் பக்தனை அந்த நிலையிலேயே விட்டுவிட  இறைவனுக்கு சம்மதமில்லை. அவரது கால்களை சரிசெய்ததோடு, மூன்றாவதாக ஒரு காலையும் உருவாக்கித் தந்தார்.  அதோடு ஒரு கோலையும் அளித்து, பிருங்கி முனிவர் ஊன்றிச் செல்லவும் வழி செய்து கொடுத்தார். 

தன் கணவர் முனிவருக்கே ஆதரவாக நடப்பதைப் பார்த்து அன்னை வெகுண்டாள். உடனே, தன்னை அவருடைய  முழுமையான அன்புக்கு உரியவளாக ஆக்கிக் கொள்ள தீர்மானித்தாள். அதற்கு தவமே சிறந்த வழி என்று நம்பி,  பூலோகத்திற்கு வந்தாள். ஒரு வயல்வெளியைத் தேர்ந்தெடுத்தாள். சிவனை எண்ணி தவமிருந்தாள். 

கடுமையான தவம். அன்னையின் தவக் கடுமையினால் சுற்றி இருந்த மரங்களும், செடிகளும், கொடிகளும் கருகித்  தீய்ந்தன. மனம் இளகினார் மகாதேவன். மேலிருந்து இறங்கி வந்தார். உமையவளுக்கு தரிசனம் தந்து அவளை ஆட் கொண்டார். ‘ஒரு நாளும் உமைப் பிரியாத வரம் வேண்டும்’ என்று வேண்டினாள் அன்னை. ‘தந்தேன்’என்றார்  மகாதேவன். 

“உங்களைப் ‘பிரியாத’ என்றால் அருகிலேயே இருப்பதல்ல, உடலோடு ஒன்றியதாக... உடலைவிட்டுப் பிரிக்க  முடியாதவளாக...” என்று மகாதேவி வரம் கேட்டாள். புரிந்துகொண்டார் பரமன். உடனே அவள் வேண்டிய வரத் தை அளித்தார். அர்த்தநாரீஸ்வரர் ஆனார். 

தேவிக்கு சந்தோஷம். இனி பிருங்கி முனிவரல்ல, யாருமே என்னை என் தலைவனிடமிருந்து பிரிக்க முடியாது. சிவன்  வேறு, சக்தி வேறு என்று பிரித்துப் பார்ப்பவர்கள்,  இனி இரண்டும் ஒன்றே என்பதை பரிபூரணமாக உணர வேண் டும் என்று சிவனுடன் சேர்ந்து விதி செய்தாள். 

இவ்வாறு அம்பிகை, இறைவனின் உடலில் ஒரு பாதியாகி, கணவனிடமிருந்து எந்நாளும் பிரிக்க முடியாத பந்தத்தை  உருவாக்கிக் கொண்ட நாள்தான் கேதார கௌரி விரத நாள். 

கேதரம் என்றால் வயல். கௌரி என்ற பார்வதி வயல்வெளியில் தவமிருந்து சிவபெருமானின் அருளைப் பெற்றதால்  இந்த விரதம் ‘கேதார கௌரி விரதம்’ என்று மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  

குறிப்பாக தீபாவளி அன்றோ, அல்லது  தீபாவளிக்கு மறுநாளே இந்த விரதமும் மேற்கொள்ளப் படுகிறது. தீபாவளித் திருநாள் குடும்பத்தின் மகிழ்ச்சியைக்  கூட்டும் நாள். 

கணவன் - மனைவியிடையே மாறாத அன்பை வளர்த்துக் கொள்ள உதவும் பண்டிகை. தான், தன்  கணவர், தன் குழந்தைகள், வீட்டிலுள்ள பிற பெரியவர்கள் என்று அனைவரிடையேயும் அன்பும், பாசமும் நீடித்து  நிலைக்க வைக்கும் கொண்டாட்டம். 

தம் மாங்கல்ய பலம் நீடிக்கவும், தன் மீதான கணவரின் அன்பு என்றும் குறையாது நிலைத்திருக்க வேண்டும் என்ற  வரத்தைப் பெற கேதார கௌரி விரதத்தை சுமங்கலிகள் கடைபிடிக்கிறார்கள். 

அன்றைய தினத்தில், பண்டிகைக்கான பூஜைகளுக்குப் பிறகோ அல்லது முடிந்தால் அதற்கு முன்னதாகவோ,  பூஜையறையில் விளக்கேற்றி, சிவபெருமான் படம் அல்லது லிங்கம் அல்லது சிவ - பார்வதி படத்தின் முன்  பக்தியுடன் அமர்ந்து தியானம் செய்ய வேண்டும். 

சிவ துதிகளைப் பாட வேண்டும். அம்மன் - சக்தி பாடல் களைப்  பாடவேண்டும். ‘ஓம் நமசிவாய, சிவாய நம ஓம், ஓம் நமசிவாய சிவாய நம ஓம்’ என்று பஞ்சாட்சர மந்திரத்தை அன்று முழுவதும் ஓதிக் கொண்டே இருக்க வேண்டும்.  

தீபாவளிப் பண்டிகை என்பதால் பட்டினி இருக்க முடியாது.  ஆகவே, அன்று எடுத்துக் கொள்ளும் எந்த ஆகாரத்தையும் குறைந்த அளவு மட்டும் எடுத்துக் கொள்ளலாம். 

முடிந்தால், சிவலிங்கத்திற்கு பால் அபிஷேகம் செய்யலாம். அந்த அபிஷேகப் பாலையே பிரசாதமாக அருந்தலாம், கு டும்பத்தில் பிறருக்கும் கொடுக்கலாம். பாயசம் அல்லது அப்பம் நைவேத்யம் செய்யலாம். தம் கணவர் மற்றும் தம் குடும்ப உறுப்பினர் அனைவரது நலனுக்காகவும் உமையொரு பாகனை வேண்டிக் கொள்ளலாம். 

அதோடு உலகத்தில் உள்ள எல்லா தம்பதியரும் தமக்குள் அன்யோன்யம் பெருக்கி, பிரியாமல் வாழ வேண்டும் என்று  வேண்டிக் கொள்வது சிறப்பு.

இந்துக்களின் புனித தினமான ஆடி அமாவாசையின் சிறப்பு

இந்து சம­யத்­த­வர்­க­ளுக்கு மிகவும் புனி­தமும் சிறப்­பா­ன­து­மான தின­மாகும். ஆடி மாதத்தில் வரு­கின்ற அமா­வாசை ஆடி அமா­வாசை விரதம் எனச் சிறப்புப் பெறு­கின்­றது. வான­வியல் கணிப்பின் படி சூரி­யனும் சந்­தி­ரனும் ஒரே இரா­சியிற் கூடு­கின்ற போதுள்ள காலம் அமா­வாசை ஆகும். 




சூரி­யனைப் “பிதிர் காரகன்” என்­கி றோம். சந்­தி­ரனை “மாதுர் காரகன்” என்­கி றோம். எனவே, சூரி­யனும் சந்­தி­ரனும் எமது பிதா மாதாக்­க­ளா­கிய வழி­படும் தெய்­வங்­க­ளாகும். 

சூரிய பகவான் ஆண்மை,ஆற்றல்,வீரம் என்­ப­வற்றை எல்லாம் எமக்குத் தர­வல்­லவர். சந்­திரன் எமது மன­துக்கு அதி­ப­தி­யா­னவர். இதனால் மகிழ்ச்சி, தெளி­வான தெளிந்த அறிவு, இன்பம், உற்­சாகம் என்­ப­வற்றை எல்லாம் தர­வல்­லவர். இத்­த­கைய பெரு­மை­களை எல்லாம் தரு­கின்ற சூரிய, சந்­தி­ரனை தந்தை, தாய் இழந்­த­வர்கள் அமா­வாசை, பூரணை தினங்­களில் வழி­பாடு செய்வர். 

தை அமா­வாசை, ஆடி அமா­வாசை இரண்­டுமே பித்­ருக்­களைப் பூஜிக்கும் முக்­கிய நாட்­க­ளாகக் கரு­தப்­ப­டு­கின்­றன. என்ன காரணம்? சூரி­யனின் வட திசைப் பய­ண­மான உத்­த­ரா­யணம் தை மாதம் ஆரம்­ப­மா­கி­றது. தென்­திசைப் பய­ண­மான தட்­சி­ணா­யனம் ஆடி மாதம் தொடங்­கு­கி­றது. அத­னால்தான், ஆடி மற்றும் தை மாத அமா­வா­சைகள் விசே­ஷ­மா­ன­தாக விளங்­கு­கின்­றன. இந்த இரண்டு தினங்­களும் பித்­ருக்­களின் ஆசியை நமக்குப் பெற்­றுத்­தரும் அரு­மை­யான தினங்கள். ஏன்? தெரிந்தோ தெரி­யா­மலோ, வாழ்வில் நம்மை அறி­யாது பல பாவங்­க­ளுக்கு நாம் உட்­ப­டு­கிறோம். பல பிற­வி­களில் செய்த பாவங்­களும் இப்­பி­ற­வியில் நம்மை நிம்­ம­தி­யின்றி தவிக்க விடு­கின்­றன. ஆழ­மாகச் சிந்­தித்தால், நமது தவ­றுகள் நமக்குப் புரியும். 

வய­தான பெற்­றோர்­களை சரி­வர பரா­ம­ரிக்­காமல் அவர்­களை முதியோர் இல்லம் அனுப்­பு­வது... நக­ரத்தின் பழக்­கங்கள் அவர்­க­ளுக்குப் பிடிக்­காது என்று கூறி, கிரா­மத்தில் பெற்­றோரை தனியே வைக்­கி­றார்கள்... பெற்­ற­வர்­களை ஷிப்ட் முறை போல அடுத்த மக­ளிடம் அல்­லது மக­னிடம் அனுப்­பு­வது... என்ன வேதனை அந்தப் பெற்­றோர்­க­ளுக்கு! பெற்­றோரை உதா­சீ­னப்­ப­டுத்­தி­விட்டு பிற­ருக்கு கல்விச் செல­வுக்கு உத­வு­கிறேன்... கோயிலில் அன்­ன­தானம் செய்­கிறேன் என்­பதால், நம் பாவம் நீங்கி புண்­ணியம் பெரு­கி­வி­டாது. இவை அனைத்தும், இப்­பி­ற­வியில் நடை­முறை வாழ்வில் தினமும் நடப்­பதை நாமே பார்க்­கிறோம். இவற்றின் விளை­வுதான்,நமக்கு ஏற்­ப­டு­கின்ற கார­ண­மில்­லாத பிரச்­னைகள்.மனக்­கஷ்­டங்கள் 


இவற்­றுக்குப் பரி­கா­ரமே பித்­ருக்­களை பூஜிப்­பதும், குல­தெய்­வத்தை ஆரா­தனை செய்­வ­தும்தான் என சாஸ்­தி­ரங்கள் கூறு­கின்­றன. 

குடும்­பத்தில் ஓர் ஆண் வாரிசு தோன்­றி­யதும், ஆனந்­தப்­பட்டு தன்­னு­டைய பித்ரு கட­மை­களைச் செய்து தங்­களைக் கரை­யேற்­றுவான் என எதிர்­பார்த்துக் காத்­தி­ருக்­கின்­றனர். அதற்­கா­கவே ஏற்­பட்­டது பித்ரு தர்ப்­பண பூஜை. தேவ­லோக மூலி­கை­யான தர்ப்­பையைக் கொண்டு, எள் வைத்து ஜாதி, மத, பேத­மின்றி தர்ப்­பணம் செய்து மூதா­தை­யரை மகிழ்­விக்க வேண்­டி­யது ஒவ்­வொ­ரு­வரின் முக்­கியக் கட­மை­யாகும்.

திரு­வண்­ணா­ம­லையில் சிவ­பெ­ருமான் வல்­லாள மகா­ரா­ஜா­வுக்குத் தர்ப்­பணம் கொடுப்­பது வரு­டந்­தோறும் விழா­வா­கவே நடை­பெற்று வரு­கி­றது. குடந்­தையில் சார ங்க பாணிப் பெருமாள் தன் பக்­த­னுக்கு திதி கொடுக்­கிறார். தில­தர்ப்­ப­ண­பு­ரியில் ஜடா­யு­வுக்கு ஸ்ரீராமன் தர்ப்­ப­ண­ம­ளிக்­கிறார். 

செங்­கல்­பட்­டுக்கு அருகில் நென்­மேலி என்ற இடத்தில் உள்ள பெரு­மா­ளுக்கு ‘சிராத்த சம்­ரட்­சணப் பெருமாள்’ என்ற திரு­நாமம். தினமும் கோயில் குளக்­க­ரை யில் பெருமாள் எழுந்­த­ருளி மூதா­தை­ய­ருக்கு சிராத்தம் கொடுக்­கிறார். 

கொடு­முடி, பவானி,திருப்­புட்­குழி, ராமேஸ்­வரம், வேதா­ரண்யம், கன்­னி­யா­கு­மரி போன்ற இடங்­களில் ஆடி அமா­வாசை, தை அமா­வாசை தினங்­களில் விசேஷ பூஜைகள் நடை­பெறும். ‘கூடு­துறை’ எனப்­படும் ஆறுகள், கடல்கள் சங்­க­ம­மாகும் கரை­யோ­ரங்­களில் திர­ளாக மக்கள் கூடி அன்று பூஜை செய்­வது வழக்கம். 

முண்டம், தண்டம், பிண்டம் என்றே முறை­யாக பித்­ரு­பூஜை செய்யும் வழக்­கமும் உண்டு. முண்டம் என்­பது, அல­காபாத் திரி­வேணி சங்­க­மத்தில் பித்­ருக்­க ளைப் பூஜித்து, முடி களைந்து நீராடி அட்­சய வடத்தின் வேர்ப்­பா­கத்தைத் தரி­சிப்­பது. ‘தண்டம்’ என்­பது, காசி சென்று ‘பஞ்­ச­நதி சிராத்தம்’ செய்து, இறந்த முன்­னோர்­களைப் பூஜித்து கங்­கையில் நீராடி ஸ்ரீவி­சு­வ­நாதர், அன்­ன­பூ­ரணி, கால பைரவர் ஆகி ­யோரை தரி­சித்து தண்டம் சமர்ப்­பிப்­ப­தா கும். இங்கு அட்­சய வடத்தின் மத்­திம பாகத்தைத் தரி­சிக்க வேண்டும். அடுத்து ‘பிண்டம்’ கொடுப்­பது! கயையில் அட்­சய வடத்தின் நுனி பாகத்தைத் தரி­சித்து, பித்­ருக்­க­ளிடம் பூஜை செய்­தது திருப்தி தானா? குறை­களை மன்­னிக்­கவும் என வேண்டி, ஆல மரத்­த­டியில் நின்று வழி­பட்டு வர வேண்டும். 

இவ்­வாறு முறைப்­படி பூஜை செய்து பித்­ருக்­களைத் திருப்­தி­ப­டுத்­து­வதால் அவர்கள் நம்மை மனம் குளிர ஆசிர்வதிக்கின்றனர். அவர்கள் மனம் மகிழ்ந்து அளித்த நற் பலன்கள் அனைத்தும் சுவரில் எறிந்த பந்து போன்று நம்மிடம் திரும்பி வந்து சேரும். தெய்வத்தன்மை பொருந்திய பித்ருக்கள் கங்கை, அருகில் ஆடி அமாவாசை தினத் தன்று காத்து இருப்பது நம் ஐதீகம். சிரமம் பார்க்காமல் ஆடி அமாவாசை சென்று பித்ருக்களைக் கரைசேர்க்கும் பூஜையைச் செய்வது குடும்பத்துக்கு மிகவும் புண்ணி யம் சேர்க்கும். 

உங்கள் வீட்டு பூஜை அறை எப்படி அமைக்க வேண்டும் என்பது தெரியுமா?

மனதிற்கு நிம்மதியை தருவது ஆண்டவன் சன்னிதி. அது போலவே ஒரு வீட்டில் உள்ள பூஜை அறையும். அது எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சில முக்கிய குறிப்புகள் வருமாறு.


ஒரு வீட்டில் பூஜை அறை வட கிழ க்கில் அல்லது வடக்கில் அல்லது கிழக்கில் அமைக்கப்பட வேண்டும். பெரிய வீடாக இருந்தால் வீட்டின் மையப் பகுதியில் பூஜை அறை அமைக்கலாம்.

ஒரு பெரிய வீட்டில் இரண்டு தளங்கள் இருந்து எல்லோரும் அந்த வீட்டில் ஒரு குடும்பமாக வசித்தால் அவற்றில் தரை தளத்தில் பூஜை அறை இருக்க வேண்டும்.

பூஜை அறையில் கடவுளின் படம் அல்லது உருவம் கிழக்கு திசை பார் த்து இருக்க வேண்டும். அதாவது நாம் வணக்கும் போது கடவுளின் படங்கள் கிழக்கு பார்த்து இருக்க வேண்டும். மேற்கு நோக்கியும் இருக்கலாம்.

பூஜை அறையின் வழிபடும் பகுதியில் வட கிழக்கு மூலையில் ஒரு பித்த ளை சொம்பில் அல்லது டம்ப்ளரில் நீர் பிடித்து வைக்க வேண்டும். இந்த நீரை தினமும் மாற்ற வேண்டும்.

தென் – கிழக்கு மூலையில் குத்து விளக்கை வைத்து விளக்கேற்ற வேண்டும்.
முக்கியமாக கவனிக்க வேண்டிய து, பூஜை அறையில் இறந்து போன முன்னோர்களின் புகைப் படங்களை வைக்கக் கூடாது.

பூஜை அறையை குப்பைகள் இன் றி சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
பூஜை அறை சுவர்களின் வண்ணம் வெள்ளை அல்லது இள மஞ்சள் அல்லது நீல நிறத்தில் இருக்க வேண்டும்.பூஜை அறையை வழிபடுவதற்கு, தியானம் செய்வதற்கு மட்டும் பயன் படுத்த வேண்டும்.

சில வீடுகளில் இடப் பற்றாக்குறை கார ணமாக படுக்கை அறை அல்லது சமை யல் அறை சுவர்களில் உள்ள அல மாரிக ளை பூஜை அறையாக பயன் படுத்துவது ண்டு. அப்படி இருந்தால் வழி படும் நேரம் தவிர அந்த அலமாரியை மூடி வைக்க வேண்டும். அதாவது கதவு இருந்தால் அதை அடைத்து வைக்க வேண்டும். அப்படி இல்லா விட்டால் துணித் திரை கொண்டு மூடி வைக்க வேண்டும். சில சமயங்களில் கதவு உள்ள மரப் பெட்டிகளில் கடவுள் படங்களை வைத்து வழி படுவதும் உண்டு. இதை சமையல் அறையின் வட கிழக்கு மூலையில் வைக் கலாம்.

கழிப்பறையின் சுவர்களில் உள்ள அலமாரிகளில் மேற்கண்டவாறு பூஜை அறை அமைக்கக் கூடாது. அதை கண்டி ப்பாக தவிர்க்க வேண்டும்.
பூஜை அறைக்கு இரண்டு கதவுகள் இருக்க வேண்டும். அவை வெளிப் புற மாக திறக்கும்படி இருக்க வேண்டும்.

ஒரு பூஜை அறை மாடிப்படிகளின் கீழ் அமைந்து இருக்கக் கூடாது.
பூஜை அறையில் மந்திர உச்சாடனங் களை தினமும் ஒன்றிரண்டு தடவை ஒலிபரப்பாகும்படி செய்ய வேண்டும் அல்லது நாமும் வாய் விட்டு உச்சாடனம் செய்யலாம். இது வீட்டில் நேர்மறை எண் ணங்களை கொண்டு வரும்.

அனைத்தையும் விட பூஜை அறையில் மனதை ஒருமுகப் படுத்தி, தீர்க்கமாக நமது பிரார்த்தனையை கடவுளிடம் முன் வைக்க வேண்டும். அது ஒரு நிமிடம் நீடித்தாலும் கூட போதுமானது.

Sunday, September 8, 2013

மகோற்சவ விஞ்ஞாபனம் 2012 மீண்டும் ஒரு பார்வை

மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவம் 2012

Monday, September 2, 2013