Friday, October 19, 2018

யாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காடு புண்ணிய நாம சேஷத்திரத்தில் தீர்க்க சுமங்கலி வரம் தரும் கேதார கௌரி விரதம் ! ! ! 19.10.2018 - 07.11.2018


கேதார கௌரி விரதம் என்பது சிவபெருமானை நினைத்து ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்படும் முக்கியமான‌ விரதம் ஆகும்.

கேதார கௌரி விரதம் மேற்கொண்டே பார்வதி தேவி சிவபெருமானின் இடப்பாகத்தைப் பெற்றார். அதனால் இறைவன் அர்த்தநாதீஸ்வரர் ஆனார் என்று கூறப்படுகிறது.

இது ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாத வளர்பிறையான தசமி (விஜய தசமி) முதல் ஐப்பசி மாதம் தீபாவளி அமாவாசை வரை மொத்தம் 21 நாட்கள் கடைப்பிடிக்கப்படுகின்றது.

Friday, October 12, 2018

யாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காடு புண்ணிய நாம சேஷத்திரத்தில் வல்வினைகள் போக்கும் விநாயகர் சதுர்த்தி வழிபாடு ! ! ! 12.10.2018



விநாயகர் என்றால் தனக்கு மேலே வேறொரு தலைவன் இல்லாதவன் என்று பொருள். விநாயகர் முழுமுதற் கடவுள் ஆவார். ‘ஓம்’ எனும் பிரணவ மந்திரம் எல்லாவற்றுக்கும் மூலமாக அமைந்துள்ளது.

‘ஓம்’ எனும் வடிவமாகவும், பிரணவ பொருளாகவும் விநாயகர் விளங்குகிறார். சிவபெருமானின் மகனான விநாயகர் பூதகணங்களின் தலைவரும் ஆவார். அதனால் அவருக்கு கணபதி என்ற பெயரும் உண்டு.

Tuesday, October 9, 2018

திருவெண்காடு புண்ணிய நாம சேஷத்திரத்தில் நலம் தரும் நவராத்திரி வழிபாடு ! ! ! 09.10.2018 - 18.10.2018


"கலையாத கல்வியும், குறையாத வயதும்
ஓர் கபடு வாராத நட்பும், கன்றாத வளமையும
குன்றாத இளமையும், கழுபிணி இலாத உடலும்
சலியாத மனமும் அன்பு அகலாத மனைவியும்
தவறாத சந்தானமும், தாழாத கீர்த்தியும்
மாறாத வார்த்தையும், தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும், கோணாத கோலும்
ஒரு துன்பம் இல்லாத வாழ்வும், துய்ய
நின்பாதத்தில் அன்பும், உதவிப் பெரிய தொண்டரொடு
கூட்டு கண்டாய் அலையாழி அறிதுயிலும்
மாயனது தங்கையே ஆதி கடவூரின் வாழ்வே!
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி
அருள்வாய்...! அபிராமியே..!!"

வராத்திரி பண்டிகை ஆண்டு தோறும் இலங்கை, இந்தியாவில் அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகின்றது. 

இந்த ஆண்டு நவராத்திரி பண்டிகை, (09-10-2018) ஆரம்பமாகி 18-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இன்று நவராத்திரி விழாவையொட்டி, கோவில்கள், வீடுகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்பில், கொலு வைத்து வழிபாடு நடத்தப்படும்.