Sunday, August 11, 2013

அடியவர்களின் அரோகரா கோசம் முழங்க மண்டைதீவு திருவெண்காடனுக்கு கொடியேற்றம்

மண்டைதீவு திருவெண்காடு சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவம்அடியவர்களின் அரோகரா கோசம் முழங்க கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. சித்தி விநாயகனின் திருவருளைப்பெறுவதற்கான பெருந்திரளா பக்தர்கள் ஆலயத்திற்கு வருகைதந்திருந்தனர்.

Thursday, August 1, 2013

பஞ்சதள இராஜகோபுர திருப்பணி வேலைகள்

கோபுர தரிசனம் - கோடி புண்ணியம். கருங்கல்லிலான பஞ்சதள இராஜகோபுர பணிகள் ஆரம்பிக்கப்பட்டு சித்தி விநாயகனின் துணை கொண்டு மிகவும் சிறப்பான முறையில் நடைபெறுகிறது.

யாழ் மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான ஆலய வரலாறு ! ! !














இந்துமா கடலின் முத்து என வர்ணிக்கப்படும் தெட்சணகைலாயம் என்னும்  ஸ்ரீ மத்லங்காபுரியின் வடபால் அமைந்த யாழ்ப்பாண பெருநகரின் தெற்கே வங்கக்கடலலைகள் தாலாட்டும் சப்த தீவுகளின் தலைத்தீவாக விளங்கும் மண்டைதீவில் திருவெண்காடு என்னும் புண்ணிய சேஸ்திரத்தில் வீற்றிருந்து மண்டைதீவு கிராம மக்களையும் அகில உலகத்து மக்களையும் அனைத்து ஐீவராசிகளையும் காத்து திருவருள் பாலித்துக்கொண்டு இருக்கும் அம்பலவாணர் ஸ்ரீ சித்திவிக்கினேஸ்வர பிள்ளையாரின் ஸ்தல வரலாறு.

மகோற்சவ விஞ்ஞாபனம்

மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் 11.8.2013 ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து பத்து தினங்கள் நடைபெறவுள்ளது.