நவராத்திரி பெண் தெய்வங்களை போற்றும் விழா. இந்து சமயத்தின் இறைவிகளின் முக்கியத்துவத்தை போற்றும் தினம். ஒரு வகையில் இது இந்து மத மகளிர் தினத்தை போன்றுதான்.
நவராத்திரி பண்டிகையின் முக்கிய விழாவான ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி பண்டிகைகளை கொண்டாட மக்கள் தயாராகிவருகின்றனர்.
கல்விக்கு உரிய சரஸ்வதி தேவியையும், செல்வத்துக்கு உரிய லட்சுமி தேவியையும், வீரத்துக்கு உரிய பார்வதி தேவியையும் போற்றி வணங்கும் பண்டிகையாக நாடு முழுவதும் உற்சாகமாகவும் பக்தி பெருக்குடனும் நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படுகிறது.