Friday, November 29, 2013

ஐயப்ப வழிபாடும் அதன் விதிமுறைகளும் . . . ( சுருக்கம்)


தர்மசாஸ்தா எழுந்தருளி இருக்கும் சபரிமலை, வனப்பகுதி என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அங்கே சிங்கம், புலி, கரடி போன்ற விலங்குகளுக்கு பஞ்சமில்லை. ஐயப்பனை வணங்கச் செல்லும் பக்தர்கள் தூய்மையை கடைப்பிடித்தால்தான் பாதுகாப்பாக சென்று வர முடியும். மனம், வாக்கு, சரீரம் இவற்றை சுத்தமாய் வைத்துக் கொண்டு, ஒளிமயமான ஐயப்பன் வடிவை உள்ளத்தில் பதித்து, விரதமிருக்க வேண்டும்.

Sunday, November 24, 2013

சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பி வணங்கும் திருவருள்மிகு திருவெண்காடு சித்தி விநாயகர்

சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பி வணங்கும் தெய்வம் விநாயகர். எந்த நல்ல காரியத்தையும் விநாயகரை வணங்கியபின் தொடங்கினால்தான்அக்காரியம் விக்னமின்றி நல்ல முறை யில் நடக்கும். தேவர்களும் வணங்கும் தெய்வம் இவர். ஆவணி மாத வளர்பிறை சதுர்த்திதான் விநாயகரின் அவதார தினமாகும்.

Wednesday, November 20, 2013

எங்கும் விளங்கும் தெய்வம் யாவரும் வணங்கும் தெய்வம் திருவெண்காட்டில் உறையும் தெய்வம்

திமுதல்வன் என்று போற்றப் படுபவர் பிரணவ வடிவினரான விநாயகப் பெருமான். “இல்லாத  இடமில்லை’ என்று சொல்லும்வண்ணம், எங்கெங்கும் கோவில் கொண்டுள்ளவர் அவர். அவரது சில திருத்தலங்களைக் காண்போமா….

Sunday, November 17, 2013

திருவெண்காட்டில் விநாயகர் பெருங்கதை விரதம் ஆரம்பம் . . . (18.11.2013)


பிள்ளையார் கதை விரதம் இந்து மக்களினால் கடைப்பிடிக்கப்படும் விநாயக விரதங்களுள் ஒன்று.

ஒவ்வொரு வருடமும்   கார்த்திகை மாத தேய்பிறைப் பிரதமை முதல் மார்கழி மாத வளர்பிறைச் சட்டித் திதி வரையுள்ள இருபத்தொரு நாட்கள் அனுட்டிக்கப்படும் விரதமாகும். இவ் வருடம் 18-11-2013  முதல்  07-12-2013 வரை விரதம்  கடைப்பிடித்து  பாரணையுடன் பூர்த்தி செய்வர். இதை பெருங்கதை விரதம், விநாயக சட்டி விரதம் எனவும் அழைப்பர்.

திருவெண்காட்டில் கார்த்திகைத் தீபம் .... 17.11.2013 (படங்கள்)

இரண்டாம் பாகம்...................

வாழ்வை பிரகாசமாக்கும் கார்த்திகை தீபத்தின் வரலாறு

இந்து மதத்தில் மும்மூர்த்திகள் எனப்படுபவர்கள் பிரம்மா, விஷ்ணு, மகேஸ்வர் ஆவார்கள். படைத்தல், காத்தல், அழித்தல் என்பது முறையே இவர்களுடைய பொறுப்பாகும். இவர்களில் மகேஸ்வர் எனப்படும் சிவனாருக்கு இந்தியா முழுவதிலும் கோவில்கள் உள்ளன. இந்த உலகமானது நீர், நிலம், நெருப்பு, வாயு, ஆகாயம் எனும் ஐந்து பூதங்களால் உருவாக்கப்பட்டுள்ளது.

Saturday, November 16, 2013

திருவெண்காட்டில் கார்த்திகைத் தீபம் (17.11.2013)



கார்த்திகைத் திங்களில், பெளர்ணமி என்கின்ற முழு மதியுடன் கார்த்திகை விண்மீன்(நட்சத்திரம்) கூடுகின்ற நன்னாளைக் கார்த்திகைத் திருநாள் என்கிறோம். தீபாவளியைப் போன்றே இதுவும் விளக்கு ஏற்றுகின்ற திருநாளே! தீபாவளியன்று விளக்குகளை வரிசை வரிசையாக ஏற்றி இறைவன் திருவருள் ஒளி வீடு எங்கிலும் நிறைவதாக எண்ணி மகிழ்கின்றோம். ஆனால் திருக்கார்த்த்கை அன்று விளக்குகளை ஏற்றிவைத்து அவற்றை இறை ஒளித்தோற்றமாக வழிபடுகின்றோம். இன்னொரு வகையில் கூறப்போனால் திருக்கார்த்திகையன்று இறைவனை ஒளி வடிவமாகக் கண்டு வழிபடுகின்றோம்.

Thursday, November 14, 2013

விநாயகனின் முப்பத்திரெண்டு திருவுருவங்கள்: !!!





பிரபஞ்ச சக்தி,காத்தல் சக்தியின் உருவ விளக்கம்தான் விநாயகர். பூமி, காற்று, நெருப்பு,நீர்,வானம் ஆகிய பஞ்சபூதங்களின் மூல வடிவம்தான் இந்த ஐங்கரன். அவருக்கு ஐந்து கைககள். `ஒரு கை தனக்கும்,ஒரு கை தேவர்களுக்கு, ஒரு கை பெற்றோர்களுக்கு,இரு கைகள் நம்மைக் காக்க'என்று தணிகைப் புராணத்திலே சொல்கிறார் கச்சியப்ப முனிவர்.

Sunday, November 10, 2013

நன்மைகள் தரும் நான்கு வகை விநாயகர்



அனைவருக்கும் பிடித்த கடவுள் விநாயகர் என்றால் அது மிகையில்லை. வித்தியாசமான உருவம் கொண்ட இவரை வணங்கினால் 16 வகையான செல்வங்களும் (பொருட்கள்) பெற்று சிறப்பாக வாழலாம் என்பது ஐதீகம். இதனால்தான் புராணத்தில் 16 வகையான விநாயகர் பற்றி சொல்லப்பட்டுள்ளது. 

Thursday, November 7, 2013

சூரன்போரும் கந்தபுராணம் தரும் விளக்கமும் . . . (சுருக்கம்)




சூரன்போர் அல்லது சூரசங்காரம் என்னும் நிகழ்வு சிவபக்தனான சூர-பதுமனின் ஆணவத்தை அடக்கி அவனை ஆட்கொள்ளவும், தேவர்களின் துயர் போக்கவும் இறைவனால் நிகழ்த்தப் பெற்ற ஒரு திருவிளையாடல் என கந்தபுராணம் வர்ணிக்கின்றது.

Monday, November 4, 2013

இழந்ததை மீட்டுத்தரும் ஈச்சனாரி விநாயகர்

அன்பு, ஆசை, பாசம், நோய் போன்றவை. ஒருவரிடம் அளவுகடந்த அன்பு செலுத்து கிறோம் என்றால் அது அன்புக்கடல். அந்த அன்பு மிகுதியாகும்பொழுது வருவது ஆசை. அது மிகுதியாகும்போது ஆசைக்கடல். அதுவும் மிகுதி யாகும்போது பாசக்கடல்.

Sunday, November 3, 2013

திருவெண்காடு சித்தி விநாயகர் தேவஸ்தான கௌரிக்காப்பு ... (03.11.2013)

திருவெண்காட்டில் கந்த சஷ்டி விரதம் . . .

ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் சுக்கில பட்சத்துப் பிரதமை முதல் சஷ்டி வரையிலான ஆறு நாட்களில் முருகன் பக்தர்கள் கந்த சஷ்டி விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும். இவ் வருடம்  04-11-2013  முதல்  08 -11-2013 வரை விரதம்  கடைப்பிடித்து 09-11-2013 பாரணையுடன் பூர்த்தி செய்வர்.

Friday, November 1, 2013

இறை அற்புதங்களை உணர்த்தும் தீபாவளி

தீபங்களை ஏற்றி வழிபாடு செய்து மகிழ்வுறும் நாள் தீபாவளி என்கின்றோம். 
தீப வரிசை எனும் பொருள்படும் தீபாவளி பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பெருமை பகரும் விழாவுமாகின்றது. கண்ணன் கட்டழகன் இவன் லீலைகள் பல்லாயிரம் அவனைச் சுற்றி கோபியர்கள் என்றெல்லாம் கண்ணன் பற்றிச் சொல்லப்படும் குறும்புகள் கேட்டால் உள்ளம் புளகாங்கிதமடையும்.