Monday, August 31, 2015

மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான தீர்த்தத்திருவிழா - 2015 (வீடியோ இணைப்பு)


மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான தீர்த்தத்திருவிழா சித்தி விநாயக பெருமானுக்கு சிறப்பு பூஜை வழிபாடும் அர்ச்சனை ஆராதனையும் இடம்பெற்று மங்கள வாத்தியங்கள் முழங்க ஆலய வெண்காட்டு ஆனந்ததீர்த்தக்கிணற்றில் தீர்த்தத்திருவிழா இடம் பெற்றது. வீடியோ இணைப்பு

Saturday, August 29, 2015

மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்சவத் திருவிழா - 2015 (வீடியோ இணைப்பு)


வரலாற்று சிறப்புமிக்க மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்ஸவ திருவிழா அன்று (27.08.2015)  அடியவர்கள் புடைசூழ அரோகரா கோசத்துடன் மங்கல வாத்தியங்கள் முழங்க சித்திரத் தேரிலே பவனிவந்து அடியவர்களுக்கு திருவருள் பாலித்த திருவெண்காடுறையும் சித்திவிநாயகப்பெருமான். வீடியோ  இணைப்பு

மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான சப்பரதத் திருவிழா - 2015 (வீடியோ இணைப்பு)


மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான சப்பறத் திருவிழா சிறப்பு பூஜை வழிபாடும் அர்ச்சனை ஆராதனையும் இடம் பெற்று மங்கலவாத்தியங்கள் முழங்க சப்பறத்தில் அடியவர்கள் புடைசூழ திருவீதி வலம் வந்த ஸ்ரீ சித்திவிநாயகப்பெருமான். வீடியோ  இணைப்பு

மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான வேட்டைத் திருவிழா - 2015 (வீடியோ இணைப்பு)


மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான வேட்டைத்திருவிழா சித்தி விநாயக பெருமானுக்கு சிறப்பு பூஜை வழிபாடும் அர்ச்சனை ஆராதனையும் இடம்பெற்று மங்கள வாத்தியங்கள் முழங்க மண்டைதீவு முகப்புவயல் கந்தசுவாமி ஆலயத்திற்கு சென்று வேட்டைத்திருவிழா  இடம் பெற்றது. வீடியோ இணைப்பு

Friday, August 28, 2015

மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான முத்துச்சப்பறத் திருவிழா - 2015 (வீடியோ இணைப்பு)


மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான ஆறாம் திருவிழா சிறப்பு பூஜை வழிபாடும் அர்ச்சனை ஆராதனையும் இடம் பெற்று எம் பெருமான் அழகிய முத்துச்சப்பரதம் மீது ஏறி வலம் வந்து அடியவர்களுக்கு திருவருள் காட்சி கொடுத்தருளினார். அத்துடன் பண்ணிசை, சொற்பொழிவு போன்ற நிகழ்வுகளும் இடம் பெற்றது.வீடியோ இணைப்பு

Thursday, August 27, 2015

மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான ஆறாம் நாள் திருவிழா - 2015 (படங்கள் இணைப்பு)


மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான ஆறாம் திருவிழா சிறப்பு பூஜை வழிபாடும் அர்ச்சனை ஆராதனையும் இடம் பெற்று எம் பெருமான் அழகிய முத்துச்சப்பரதம் மீது ஏறி வலம் வந்து அடியவர்களுக்கு திருவருள் காட்சி கொடுத்தருளினார். அத்துடன் பண்ணிசை, சொற்பொழிவு போன்ற நிகழ்வுகளும் இடம் பெற்றது.படங்கள் இணைப்பு

Monday, August 24, 2015

மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான நான்காம் நாள் திருவிழா - 2015 (படங்கள் இணைப்பு)


மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான நான்காம் திருவிழா சிறப்பு பூஜை வழிபாடும் அர்ச்சனை ஆராதனையும் இடம் பெற்று எம் பெருமான் அழகிய வெள்ளையானை மீது ஏறி வலம் வந்து அடியவர்களுக்கு திருவருள் காட்சி கொடுத்தருளினார். அத்துடன் பண்ணிசை, சொற்பொழிவு போன்ற நிகழ்வுகளும் இடம் பெற்றது.படங்கள் இணைப்பு

மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான மூன்றாம் நாள் திருவிழா - 2015 (படங்கள் இணைப்பு)


மண்டைதீவு திருவெண்காடு சித்தி விநாயகர் தேவஸ்தான மூன்றாம் திருவிழா சிறப்பு பூஜை வழிபாடும் அர்ச்சனை ஆராதனையும் அத்துடன் பண்ணிசை, சொற்பொழிவு போன்ற நிகழ்வுகளும் இடம் பெற்றது.படங்கள் இணைப்பு

Saturday, August 22, 2015

மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரண்டாம் நாள் திருவிழா - 2015 (படங்கள் இணைப்பு)


மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரண்டாம் திருவிழா சிறப்பு பூஜை வழிபாடும் அர்ச்சனை ஆராதனையும் அத்துடன் பண்ணிசை, சொற்பொழிவு போன்ற நிகழ்வுகளும் இடம் பெற்றது.படங்கள் இணைப்பு

Friday, August 21, 2015

மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வருடாந்த கொடியேற்றத் திருவிழாவின் முழுமையான வீடியோ இணைப்பு



மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவம் அடியவர்களின் அரோகராக்கோசத்ததுடனும் ஆலய காண்டா மணி ஒலிக்க மேளதாளங்கள் முழங்க 20.08.2015 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.  (வீடியோ இணைப்பு)

அடியவர்களின் அரோகரா கோசம் முழங்க மண்டைதீவு திருவெண்காடனுக்கு கொடியேற்றம் ! ! ! 20.08.2015 (படங்கள் இணைப்பு)


மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவம் அடியவர்களின் அரோகராக்கோசத்ததுடனும் ஆலய காண்டா மணி ஒலிக்க மேளதாளங்கள் முழங்க கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. சித்தி விநாயகப்பெருமானின் திருவருளைப்பெறுவதற்கான பெருந்திரளா பக்தர்கள் ஆலயத்திற்கு வருகைதந்திருந்தனர்.படங்கள் இணைப்பு

Monday, August 17, 2015

திருவெண்காட்டில் நலம் தரும் நாகசதுர்த்தி விரத வழிபாடு ! ! ! 18.08.2015


நாகசதுர்த்தி விரத பூஜை வழிபாடு . வம்சம் விளங்க, நாக பயம், தோஷம் இல்லாமல் இருக்க வேண்டி செய்யப்படும் விரதம்.

உப்பு இல்லாத ஆகாரத்துடன், நாகராஜனுக்கு அபிஷேகம் செய்து, எறும்புக்கு உணவாக அரிசி வெல்லம் சேர்த்தரைத்தது, மற்றும் எள்ளும் வெல்லமும் சேர்த்தரைத்தது  வைத்தல்.

Saturday, August 15, 2015

திருவெண்காட்டில் ஆனந்த வாழ்வு தரவல்ல ஆடிப்பூர வழிபாடு ! ! ! 16.08.2015


லகை ஆளும் அம்பிகை அவதரித்த தினம் ஆடிப்பூரம் ஆகும். ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரத்தில் இந்த விழா அனைத்து அம்மன் கோவில்களிலும், வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. உலக மக்களை காக்க சக்தியாக, அம்பாள் உருவெடுத்த புண்ணிய தினம் இது  என்று கூறப்படுகிறது. இந்த தலைசிறந்த நாளிலேயே பெரும்பாலும் சித்தர்களும், யோகிகளும் தவத்தை தொடங்குவதாக புராணங்கள் தெரிவிக்கின்றன.

Thursday, August 13, 2015

திருவெண்காட்டில் புண்ணியத்தை சேர்க்கும் "ஆடி அமாவாசை" சிறப்பு வழிபாடு ! ! ! 14.08.2015


விரதம் மேற்கொள்வதன் மூலம் நாம் விரும்பிய பலன்களை விரும்பியவாறே பெற்றுக்கொள்ள முடியும். விரதத்தில் வழிபாடு செய்வது முக்கியமானது. 

‘அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம், ஆலயம் தொழுவது சாலவும் நன்று’ என்பது ஆன்றோர் வாக்கு. மாதா, பிதா, குரு, தெய்வம் என்போர் வணக்கத்துக்கு உரியவர்கள். விரதங்களில் பலவகை உண்டு. இறைவன், இறைவி குறித்து கடைப்பிடிக்கப்படும் விரதங்கள், தெய்வங்களாகி விட்ட தாய், தந்தை ஆகியோரை எண்ணி மேற்கொள்ளப்படும் விரதங்கள் என்று அவை பலவகைப்படும்.

Wednesday, August 12, 2015

மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகப் பெருமானின் வரலாற்றுப் புகழ்பாடும் “ஓங்காரநாதம்” இறுவட்டு வெளியீட்டு விழா..!!

மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகப்பெருமானின் வரலாற்றுப்புகழ்பாடும் “ஓங்காரநாதம்” என்ற இறுவட்டு 20/08/2015 (வியாழக்கிழமை) வருடாந்த மகோற்சவ முதலாம் நாள் கொடியேற்றம் அன்று திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகப்பெருமான் ஆலயத்தில் வெளியீடு செய்யப்படவுள்ளது அனைத்து எம் பெருமான் அடியார்களையும் வருக வருக என்று அன்போடு அழைக்கின்றோம்.



Tuesday, August 11, 2015

திருவெண்காட்டில் பாவங்களை போக்கி முக்தி பேற்றினை தரவ வல்ல பிரதோஷ வழிபாடு ! ! ! 11.08.2015




சிவபெருமானுக்குரிய விரதங்களுள் மிகவும் விசேஷமானது பிரதோஷ விரதம். தோஷம் என்றால் குற்றம் என்றும், பிரதோஷம் என்றால் குற்றமற்றது என்றும் பொருள் தரும். மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையிலான காலம் பிரதோஷ காலமாகும். இதை சந்தியாகாலம் என்றும் அழைப்பார்கள். ஒவ்வொரு மாதமும் வளர்பிறை, தேய்பிறை என்னும் 2 காலங்களிலும், திரயோதசி திதியில் வருவது பிரதோஷ தினமாகும்.

Monday, August 10, 2015

திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான பஞ்சதள இராஜகோபுர கட்டுமான திருப்பணிகளின் தற்போதைய நிலை 10.08.2015 (படங்கள் இணைப்பு)


"கோபுர தரிசனம் கோடி புண்ணியம்" கோபுரத்தை தரிசிப்பதே கோடிபுண்ணியம் என்றால் அக்கோபுரத்தை அமைக்கும் திருப்பணிக்கு உதவுவது  எவ்வளவு பெரிய புண்ணியம். எனவே இப் பெருங் கைங்கரியத்தில் உங்களுடைய பங்களிப்பும் சேர விரும்பினால் விரைந்து இணைந்து வெண்காட்டு பெருமானின் பெருங்கருணைக்கு பாத்திரமாகி மனிதப் பிறவியின் பெரும் பேற்றை அடைவோம்.

பஞ்சதள இராஐ கோபுரத்திருப்பணிகள் எம் பெருமான் திருவருள் துணைகொண்டு மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. 

கோபுரத்திருப்பணிகள்  முழுமைபெற . . .

சிற்ப வேலைப்பாடுகள்
பொம்மைகள் அமைத்தல்
வர்ணம் பூசுதல்

ஆகிய வேலைப்பாடுகள் இருக்கின்றன.

Wednesday, August 5, 2015

‪"இன்பமே எந்நாளும் துன்பமில்லை" துன்பங்களில் இருந்து விடுதலை பெறும் வழி‬ ! ! !


லகத்தில் பிறந்துவிட்டால் துன்பங்களையே அதிகம் சந்திக்க வேண்டியிருக்கிறது. நடு நடுவில் வரும் இன்பங்கள் அவற்றைத் தற்காலிகமாக மறக்கச் செய்கின்றன. "இன்ப முண்டேல் துன்பமுண்டு ஏழை மனை வாழ்க்கை" என்று சுந்தரர் தேவாரத்தில் வரும். துன்பங்களில் இருந்து விடுதலை பெறும் வழியை மகான்கள் மட்டுமே காட்ட முடியும். ஏனென்றால், அவர்கள் உலகம் உய்வதற்காகவே அவதரித்தவர்கள். "இன்பமே எந்நாளும் துன்பமில்லை" எனக் கூறி அபயம் அளித்தவர்கள்.

Monday, August 3, 2015

திருவெண்காட்டில் சங்கடங்கள் அனைத்தையும் நீக்கி சௌபாக்கியம் தரவல்ல "சங்கடஹர சதுர்த்தி " 03.08.2015




"திருவும் கல்வியும் சீரும் தழைக்கவும்
கருணை பூக்கவும் தீமையைக் காய்க்கவும்
பருவமாய் நமது உள்ளம் பழுக்கவும்
பெருகும் திருவெண்காடுப் பிள்ளையைப் பேணுவாம். "

விநாயகர் பிரணவத்தின் வடிவம். இதன் திரிந்த வடிவமே பிள்ளையார் சுழி. பிள்ளையார் சுழியை இட்டாலே ஆணவம் ஒழிந்து இறை உணர்வு உண்டாகும். சதுர்த்தி திதி விநாயகருக்கு மிகவும் உகந்த நாளாகும். சுக்ல பட்சம் (வளர்பிறை) சதுர்த்தியை "வர சதுர்த்தி" என்றும், கிருஷ்ண பட்சம் (தேய் பிறை) சதுர்த்தியை "சங்கடஹர சதுர்த்தி" என்றும் கூறுவார்கள்.