Wednesday, August 12, 2015

மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகப் பெருமானின் வரலாற்றுப் புகழ்பாடும் “ஓங்காரநாதம்” இறுவட்டு வெளியீட்டு விழா..!!

மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகப்பெருமானின் வரலாற்றுப்புகழ்பாடும் “ஓங்காரநாதம்” என்ற இறுவட்டு 20/08/2015 (வியாழக்கிழமை) வருடாந்த மகோற்சவ முதலாம் நாள் கொடியேற்றம் அன்று திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகப்பெருமான் ஆலயத்தில் வெளியீடு செய்யப்படவுள்ளது அனைத்து எம் பெருமான் அடியார்களையும் வருக வருக என்று அன்போடு அழைக்கின்றோம்.




பாடல்களுக்கான இசையினை ஈழத்து இசையமைப்பாளர் S.P.ரூபன் அவர்களின் இசையமைப்பிலும் இசைக்கனி கலையகத்தின் ஒலிப்பதிவிலும் மிகவும் அற்புதமாக நயினை மண்ணின் மைந்தன் பாலகவிஞன் T.S.M. நவரூபன் (நயினை அன்னைமகன்) அவர்களின் கவிவரிகளுக்கு . இனிய குரல் கொடுத்திருக்கின்றார்கள் ஈழத்து முன்னணிப்பாடகர்கள் சாகித்திய சீரோண்மணி JR.சுகுமார், திருமதி பார்வதி சிவபாதம், SP.ரூபன், S.சுரேன், S.வாணி , மற்றும் பின்னணி குரல் கொடுத்துள்ளனர் S.சுபா , S.அபிராமி வழங்கியிருக்கின்றார்கள்.


01)
பாடல் :- சக்திக்கும் சிவனுக்கும்... பாடியவர்:- J.R.சுகுமார்.
02) பாடல்:- மூன்றுமுறை... பாடியவர்:- பார்வதி சிவபாதம்.
03) பாடல்:- பிள்ளையாரெனும் நாமம்... பாடியவர்:- S.P.ரூபன்.
04) பாடல் :- தலைத்தீவின் நாயகா... பாடியவர்:- S.சுரேன்.
05) பாடல்:- துதிபாட வைக்கின்ற... பாடியவர்:- வாணி.S
06) பாடல்:- தலைத்தீவின் நாயகனே... பாடியவர்:- J.R.சுகுமார்.
07) பாடல்:- ஆலமரம் பாடுதையா... பாடியவர்:- S.சுரேன்.
08) பாடல்:- மண்டைதீவின் நாயகனே... பாடியவர்:- வாணி.S
09) பாடல்:- ஞானம் தருவாய்... பாடியவர்:- J.R.சுகுமார்.
10) பாடல்:- மோதகப்பிரியனே... பாடியவர்:- S.சுரேன்.

மேலும் இப்பாடல்கள் மிகவும் சிறந்த முறையில் தென்னிந்திய கலைஞர்களுக்கு நிகராக அமைய கடும் முயற்சியோடும் உழைப்போடும் ஒத்துழைப்பும் நல்கிய அனைத்து ஈழக்கலைஞர்களுக்கும் மிக்க நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.




ஆலயம் தொழுவது சாலவும் நன்று
அனைவரும் வருக எம் பெருமானின் திருவருளை பெறுக ! 

சுபம் !


இங்ஙனம்
பொ.வி.திருநாவுக்கரசு
இரத்தினசபாபதி யோகநாதன் (இந்திரன்)
(தர்மகர்த்தாக்கள்),
திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம்
மண்டைதீவு , இலங்கை.