Thursday, July 22, 2021

யாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானத்தில் இன்று ஆனந்த நடராஐமூர்த்திக்கு இடம்பெற்ற ஆனி உத்தர திருமஞ்சனம் ! ! ! (15.07.2021) படங்கள் இணைப்பு

னி உத்தர திருமஞ்சனத்தையொட்டி மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான பொற்சபை பொன்னம்பலத்தில் வீற்றிருந்து ஆனந்த திருநடனம் புரியும் அருள்மிகு ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்பாள் உடனுறை அழகிய ஆனந்த நடராஐமூர்த்திக்கு 15.07.2021 அன்று அதிகாலை 4 மணியளவில் சிறப்பு மஹாஅபிஷேகம் (திருமஞ்சனம்) அலங்காரம் தீபாராதனைகள் நடைபெற்று அதனைத் தொடர்ந்து அம்மையும் அப்பனும் திருவீதி உலா வலம் வந்து அடியவர்களுக்கு பூலோக கைலாய தரிசனம் கொடுத்தார்கள்.

Monday, July 12, 2021

மண்டைதீ திருவெண்காடு ஆனந்த புவனத்தில் ஆனந்த நடராஐ மூர்த்திக்கு ஆனிஉத்தர திருமஞ்சன மகாபிஷேகம் 15.07.2021

 

லங்கைநாயக முதலியார் வம்சத்தினரின் நி்ர்வாகத்துக்கு உட்பட்ட மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ அம்பலவாணர் சித்தி விக்கினேஸ்வரப்பிள்ளையார் தேவஸ்தானத்தில் வீற்றிருந்து திருவருள் பாலித்துக்கொண்டிருக்கும் சிவகாமசுந்தரியம்பாள் சமேத ஆனந்த நடராஐ மூர்த்திக்கு இந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்கள் நடார்த்தும் ஆனிஉத்தர திருமஞ்சன மகாபிஷேகம். எதிர்வரும் 15.07.2021 அதிகாலை 4 மணியில் இருந்து 6 மணி வரை