Showing posts with label Festival. Show all posts
Showing posts with label Festival. Show all posts

Sunday, August 9, 2020

இந்திரன், திருமால், பிரம்மன் எழிலார் மிகு தேவரெல்லாம் வந்து எதிர்கொள்ள வெள்ளை யானை அருள்புரிய திருவெண்காடு சித்தி விநாயகப்பெருமானுக்கு சார்வாரி வருட ஆவணி மாத மகோற்சவ பெருவிழா - 2020 சிறப்பிதழ் ! ! !

லகெலாம் நிறைந்து விளங்குகின்ற எல்லாம் வல்ல பரம்பொருளான சித்தி விநாயகப்பெருமான் தம்மை நினைத்து உள்ளமுருகி வணங்கி வாழும் அடியார்களுக்கு அருள்பாலிக்கும் புண்ணியக்ஷத்திரம் திருவெண்காடு சித்தி விநாயகர் திருக்கோயில்

வரலாற்றுப் பிரசித்திபெற்ற திருவெண்காடு சித்தி விநாயகர் தேவஸ்தான
கொடியேற்ற நாள் 24.08.2020 ஆகும்.

வானளாவ உயர்ந்த அழகான இராஜகோபுரத்துடன் அமைந்திருக்கின்ற இந்த சித்திவிநாயகப்பெருமான் ஆலயம் மிகவும் கீர்த்தி பெற்ற மூர்த்தி இருக்கும் புனித ஸ்தலமாகும்.

Wednesday, February 12, 2020

மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தானத்தில் சங்கடஹர சதுர்த்தி ! ! ! 12.02.2020


அற்புதக் கீர்த்தி வேண்டின் மண்டைதீவு சென்று சித்திவிநாயகரைத் தரிசிக்கவேண்டும் .

இன்று 12/2/2020 புதன்கிழமை சங்கடஹர சதுர்த்தி நாள் அன்று திருவெண்காடு சென்று சித்திவிநாயகரைத் தரிசிக்க அந்த சித்தி விநாயகரின் பரிபூரண அருளும் முக்தியும் கிடைத்த உணர்வு!-அதனை வார்த்தைகளால் விவரிக்க முடியாது பிள்ளையார் என்ன சொல்கிறார்? ‘யாமிருக்கும் இடத்தில் சகல செல்வங்களும் பெருகும் திருவெண்காடு சித்தி விநாயகர் திருவடிகளே சரணம் !

Friday, January 24, 2020

மண்டைதீவு திருவெண்காட்டில் மார்கழி திருவாதிரை ஆருத்திரா தரிசனம் ! ! ! 10.01.2020 படங்கள் இணைப்பு


மார்கழி திருவாதிரை ஆருத்ரா தரிசனத்தையொட்டி மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான  பொற்சபை பொன்னம்பலத்தில் வீற்றிருந்து ஆனந்த தாண்டவம் புரியும் அருள்மிகு ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்பாள் உடனுறை அழகிய ஆனந்த நடராஐமூர்த்திக்கு 10.01.2020 அன்று அதிகாலை 4 மணியளவில் சிறப்பு மஹாஅபிஷேகம் (திருமஞ்சனம்) அலங்காரம் தீபாராதனைகள் நடைபெற்று அதனைத் தொடர்ந்து அம்மையும் அப்பனும் திருவீதி உலா வலம் வந்து அடியவர்களுக்கு பூலோக கைலாய தரிசனம் கொடுத்தார்கள்.

Wednesday, September 11, 2019

மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான 2ம், 3ம், 4ம், 5ம், நாள் திருவிழா - 2019 (படங்கள் இணைப்பு)

ண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான 2ம், 3ம், 4ம், 5ம் நாள் திருவிழா பகல் இரவு சிறப்பு பூஜை வழிபாடும் அர்ச்சனை ஆராதனையும் அத்துடன் எம்பெருமான் இந்திரலோகத்து வெள்ளையானையில் திருவீதியுலா வலம் வரும் அற்புதக்காட்சியுடன் பண்ணிசை, சொற்பொழிவு போன்ற நிகழ்வுகளும் இடம் பெற்றது. படங்கள் இணைப்பு

Friday, September 6, 2019

அடியவர்களின் அரோகரா கோசம் முழங்க மண்டைதீவு திருவெண்காடனுக்கு துவஜாரோகணம் என்று சொல்லப்படுகின்ற கொடியேற்ற வைபவம் ! ! ! 04.09.2019 (படங்கள் இணைப்பு)


யாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவம் அடியவர்களின் அரோகராக்கோசத்ததுடனும் ஆலய காண்டா மணி ஒலிக்க மேளதாளங்கள் முழங்க கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. சித்தி விநாயகப்பெருமானின் திருவருளைப்பெறுவதற்கான பெருந்திரளா பக்தர்கள் ஆலயத்திற்கு வருகைதந்திருந்தனர். படங்கள் இணைப்பு

Saturday, August 10, 2019

யாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான விகாரி வருட மஹாற்சவ பெருவிழா - 2019


தெட்சணகைலாயம், சிவபூமி எனப் போற்றப்படும் ஈழமணி திருநாட்டில் தமிழர் வாழ்வோடும் வரலாற்றோடும் இரண்டறக் கலந்து , அடியவர்களுக்கு வேண்டுவனவற்றை அள்ளிக் கொடுக்கும் முழுமுதற் கடவுளின் கோயிலாக விளங்குவது மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் திருக்கோயில் ஆகும் .

ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதம் பௌர்ணமியை தீர்த்தமாக கொண்டு கொடியேறி தொடர்ந்து 10 நாட்கள் மகோற்சவ பெருவிழாக்கள் நடைபெற எம் பெருமானின் திருவருள் கைகூடியுள்ளது.

Monday, July 8, 2019

யாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானத்தில் இன்று ஆனந்த நடராஐமூர்த்திக்கு இடம்பெற்ற ஆனி உத்தர திருமஞ்சனம் ! ! ! (08.07.2019) படங்கள் இணைப்பு


னி உத்தர திருமஞ்சனத்தையொட்டி மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான பொற்சபை பொன்னம்பலத்தில் வீற்றிருந்து ஆனந்த திருநடனம் புரியும் அருள்மிகு ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்பாள் உடனுறை அழகிய ஆனந்த நடராஐமூர்த்திக்கு 08.07.2019 அன்று அதிகாலை 4 மணியளவில் சிறப்பு மஹாஅபிஷேகம் (திருமஞ்சனம்) அலங்காரம் தீபாராதனைகள் நடைபெற்று அதனைத் தொடர்ந்து அம்மையும் அப்பனும் திருவீதி உலா வலம் வந்து அடியவர்களுக்கு பூலோக கைலாய தரிசனம் கொடுத்தார்கள்.

Thursday, June 27, 2019

ஆனி உத்தர திருமஞ்சன உற்சவ அழைப்பிதழ் - 08.07.2019


னித் திருமஞ்சனம் போன்ற விழா சமயங்களில் கோவிலுக்குச் சென்று அபிஷேக, ஆராதனைகளில் கலந்து கொண்டால் அஷ்ட ஐஸ்வர்யங்கள் நிறைந்து பெருகும் என்பது அருளாளர்களின் வாக்கு.

ஆனித் திருமஞ்சனம் தரிசித்தால் 
வாழ்வில் பேறுகள் பல பெறலாம்.

அபிஷேகத்திற்கு பக்தர்கள் அளிக்கும் பொருட்களால் அவர்கள் குடும்பத்திற்கு நல்ல பலன்கள் கிட்டும் என்பது, அனைவருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கை.

Monday, December 24, 2018

பாலுக்குப் பாலகன் வேண்டி அழுதிடப் பாற்கடலை ஈந்த திருவெண்காட்டு பெருமானின் ஆருத்ரா தரிசனம் ( 23.12.2018 ) படங்கள் இணைப்பு


மார்கழி திருவாதிரை ஆருத்ரா தரிசனத்தையொட்டி மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான பொற்சபையில் (பொன்னம்பலம்) வீற்றிருந்து ஆனந்த தாண்டவம் புரியும் அருள்மிகு ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்பாள் உடனுறை அழகிய ஆனந்த நடராஐமூர்த்திக்கு 23.12.2018 அன்று அதிகாலை 4 மணியளவில் சிறப்பு மஹாஅபிஷேகம் (திருமஞ்சனம்) அலங்காரம் தீபாராதனைகள் நடைபெற்று அதனைத் தொடர்ந்து அம்மையும் அப்பனும் திருவீதி உலா வலம் வந்து அடியவர்களுக்கு பூலோக கைலாய தரிசனம் கொடுத்தார்கள்.

Friday, August 31, 2018

மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான சப்பரத்திருவிழா - 2018 (வீடியோ இணைப்பு)


மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான சப்பரத்திருவிழா சிறப்பு பூஜை வழிபாடும் அர்ச்சனை ஆராதனையும் இடம் பெற்று மங்கலவாத்தியங்கள் முழங்க சப்பரத்தில் அடியவர்கள் புடைசூழ திருவீதி வலம் வந்த ஸ்ரீ சித்திவிநாயகப்பெருமான். (வீடியோ இணைப்பு)


வீடியோ - அல்லையூர் இணையம், ஸ்ரீ அபிராமி வீடியோ - நயினாதீவு

Wednesday, August 29, 2018

மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான சப்பரதத் திருவிழா - 2018 (படங்கள் இணைப்பு)


மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான சப்பரத்திருவிழா சிறப்பு பூஜை வழிபாடும் அர்ச்சனை ஆராதனையும் இடம் பெற்று மங்கலவாத்தியங்கள் முழங்க சப்பரத்தில் அடியவர்கள் புடைசூழ திருவீதி வலம் வந்த ஸ்ரீ சித்திவிநாயகப்பெருமான். (படங்கள் இணைப்பு)

Tuesday, August 28, 2018

மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான தீர்த்தத்திருவிழா - 2018 (வீடியோ இணைப்பு)


மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான தீர்த்தத்திருவிழா சித்தி விநாயக பெருமானுக்கு சிறப்பு பூஜை வழிபாடும் அர்ச்சனை ஆராதனையும் இடம்பெற்று மங்கள வாத்தியங்கள் முழங்க ஆலய வெண்காட்டு ஆனந்ததீர்த்தக்கிணற்றில் தீர்த்தத்திருவிழா இடம் பெற்றது. (வீடியோ இணைப்பு)

Monday, August 27, 2018

மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்சவத் திருவிழா - 2018 (வீடியோ இணைப்பு)


வரலாற்று சிறப்புமிக்க மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்ஸவ திருவிழா அன்று (25.08.2018) அடியவர்கள் புடைசூழ அரோகரா கோசத்துடன் மங்கல வாத்தியங்கள் முழங்க சித்திரத் தேரிலே பவனிவந்து அடியவர்களுக்கு திருவருள் பாலித்த திருவெண்காடுறையும் சித்திவிநாயகப்பெருமான். (வீடியோ இணைப்பு)

Saturday, August 25, 2018

மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்சவத் திருவிழா - 2018 (படங்கள் இணைப்பு)


வரலாற்று சிறப்புமிக்க  மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்ஸவ திருவிழா  இன்று 25.08.2018 அடியவர்கள் புடைசூழ அரோகரா கோசத்துடன் மங்கல வாத்தியங்கள் முழங்க சித்திரத் தேரிலே பவனிவந்து அடியவர்களுக்கு திருவருள் பாலித்த திருவெண்காடுறையும் சித்திவிநாயகப்பெருமான்.  படங்கள் இணைப்பு

Friday, August 24, 2018

மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான ஏழாம் நாள் திருவிழா - 2018 (படங்கள் இணைப்பு)


மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான ஏழாம் நாள் திருவிழா பகல் இரவு சிறப்பு பூஜை வழிபாடும் அர்ச்சனை ஆராதனையும் அத்துடன் எம்பெருமான் பகல் திருவிழா இந்திரலோகத்து வெள்ளையானையிலும் இரவு திருவிழா அழகிய முத்துசப்ரதத்தில் திருவீதியுலா வலம் வரும் அற்புதக்காட்சியுடன் பண்ணிசை, சொற்பொழிவு போன்ற நிகழ்வுகளும் இடம் பெற்றது.படங்கள் இணைப்பு

Wednesday, August 22, 2018

மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான ஆறாம் நாள் திருவிழா - 2018 (படங்கள் இணைப்பு)


மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான ஆறாம் நாள் திருவிழா பகல் இரவு சிறப்பு பூஜை வழிபாடும் அர்ச்சனை ஆராதனையும் அத்துடன் எம்பெருமான் பகல் திருவிழா இந்திரலோகத்து வெள்ளையானையிலும் இரவு திருவிழா அழகிய முத்துசப்ரதத்தில் திருவீதியுலா வலம் வரும் அற்புதக்காட்சியுடன் பண்ணிசை, சொற்பொழிவு போன்ற நிகழ்வுகளும் இடம் பெற்றது. படங்கள் இணைப்பு

மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான ஐந்தாம் நாள் திருவிழா - 2018 (படங்கள் இணைப்பு)


மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான ஐந்தாம் நாள் திருவிழா பகல் இரவு சிறப்பு பூஜை வழிபாடும் அர்ச்சனை ஆராதனையும் அத்துடன் எம்பெருமான் இந்திரலோகத்து வெள்ளையானையில் திருவீதியுலா வலம் வரும் அற்புதக்காட்சியுடன் பண்ணிசை, சொற்பொழிவு போன்ற நிகழ்வுகளும் இடம் பெற்றது. படங்கள் இணைப்பு

Monday, August 20, 2018

மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான நான்காம் நாள் திருவிழா - 2018 (படங்கள் இணைப்பு)


மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான நான்காம் நாள் திருவிழா பகல் இரவு சிறப்பு பூஜை வழிபாடும் அர்ச்சனை ஆராதனையும் அத்துடன் எம்பெருமான் பகல் திருவிழா இந்திரலோகத்து வெள்ளையானையிலும் இரவு திருவிழா அழகிய எலி வாகனத்தில் திருவீதியுலா வலம் வரும் அற்புதக்காட்சியுடன் பண்ணிசை, சொற்பொழிவு போன்ற நிகழ்வுகளும் இடம் பெற்றது. படங்கள் இணைப்பு