ஆனித் திருமஞ்சனம் போன்ற விழா சமயங்களில் கோவிலுக்குச் சென்று அபிஷேக, ஆராதனைகளில் கலந்து கொண்டால் அஷ்ட ஐஸ்வர்யங்கள் நிறைந்து பெருகும் என்பது அருளாளர்களின் வாக்கு.
ஆனித் திருமஞ்சனம் தரிசித்தால்
வாழ்வில் பேறுகள் பல பெறலாம்.
அபிஷேகத்திற்கு பக்தர்கள் அளிக்கும் பொருட்களால் அவர்கள் குடும்பத்திற்கு நல்ல பலன்கள் கிட்டும் என்பது, அனைவருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கை.
அதனால், அபிஷேகத்திற்கு செல்லும் போது, நம்மால் முடிந்த அபிஷேகப் பொருட்களைச் கொண்டு சென்று...
சுமங்கலிகள் நீடுழி வாழ்கின்ற மாங்கல்ய பாக்கியத்தை பெறுவதோடும், இளம் வயதினருக்கு விரைவில், நல்ல இடத்தில் வரன் கூடி வந்து, திருமணத் தடை நீங்குவதோடும், இந்த உன்னத திருநாளில் முறைப்படி விரதம் இருந்து,பேராயிரம் பரவி வானோர் ஏத்தும் பெருமானை,வாராத செல்வம் வருவிப்பவனை, மந்திரமும், தந்திரமும், மருந்தும் ஆகி, தீராத நோய் தீர்த்து அருளும் ஆடல் வல்லானை....மனம் உருகி, வேண்டி ஆடல் அரசனின் அருளைப் பெற்று வாழ் வாங்கு வாழ....
அன்போடு அழைக்கின்றோம்.
இங்ஙனம்
திரு பொ.வி.திருநாவுக்கரசு
திரு இரத்தினசபாபதி யோகநாதன் [இந்திரன்]
ஆலய தர்ம கர்த்தாக்கள்.
மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தானம். யாழ்ப்பாணம் - இலங்கை.