Wednesday, February 28, 2018

மண்டைதீவு திருவெண்காடு புண்ணிய நாம சேஷத்திரத்தில் பாவங்களை போக்கும் மாசி மகம் ! ! ! 01.03.2018


சிவன், விஷ்ணு, முருகனுக்கு உகந்த நாள்

நாளை (01.03.2018) மாசி மகம். மகாவிஷ்ணு, உமாமகேஸ்வரன், முருகன் ஆகிய தெய்வங்களுக்கும் உகந்த நாள் மாசி மகம். கும்ப ராசியில் சூரியன் இருக்கும் போது சந்திரன் சிம்ம ராசியில் மக நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வார். இந்நாளே மாசி பவுர்ணமியுடன் கூடிய மாசி மகமாக திகழ்கிறது. உமா தேவியார் மாசி மாதம் மக நட்சத்திரத்தில்தான் தட்சணின் மகள் தாட்சாயணியாக அவதரித்தார் என்பதால் மிகவும் புண்ணிய நாளாக கருதப்படு கிறது. பெண்களுக்குரிய விரத தினமாகவும் போற்றப்படுகிறது. பாதாளத்தில் இருந்த பூமியை பெருமாள் வராக அவதாரம் எடுத்து வெளிகொணர்ந்த நாளும் மாசி மகத்தன்றுதான்.

Tuesday, February 27, 2018

மண்டைதீவு திருவெண்காடு ஆனந்தபுவனத்தில் நாளும் துணையிருக்கும் ஆனந்தநடராஜருக்கு மாசி மாத வளர்பிறை சதுர்த்தசி மகா அபிஷேகம் !!! 28.02.2018


லயம், ஆன்மா லயித்துப் போகின்ற இடம். ஆலயங்களில் கதிர்வீச்சுகளின் தாக்கம் அதிகம் இருப்பதால், ஆன்மாவை லயிக்க செய்யும் இடமாக விளங்குகிறது. அதனாலேயே கோயிலுக்குச் சென்றால் ஒருவித அமைதி மனதில் ஏற்படுவதை உணரமுடிகிறது. எங்கும் வியாபித்து நீக்கமற நிறைந்திருக்கும் இறைவனை மனதால் ஸ்பரிசித்து, அவன் மேல் உள்ள அன்பைத் தூண்டி விடுவதற்காகவே உருவ வழிபாடு நமது சமயத்தில் வந்தது.

கருவறையில் காணப்படும் மூலவர் திருமேனி பிரபஞ்ச சக்திகளை எல்லாம் ஈர்த்து அதை கோயில் முழுவதும் பரவச் செய்கிறது.

தெய்வ மூர்த்தங்களுக்கு அபிஷேகங்கள் செய்கையில் அனைத்து சக்திகளையும் கதிர்வீச்சுகளையும் சேமித்து நேர்மறையான சக்திகளை வெளியிடுகின்றன.

Monday, February 26, 2018

மண்டைதீவு திருவெண்காடு ஆனந்தபுவனத்தில் சகல காரியங்களில் வெற்றி கிடைக்கும் பிரதோஷ வழிபாடு ! ! ! 27.02.2018


சிவனுக்கு உகந்த விரதங்களில் முக்கியமானது பிரதோஷ விரதம் ஆகும். பிரதோஷ விரதம் மேற்கொண்டால் திருமணம் கைகூடும், பிள்ளை பாக்கியம் கிடைக்கும், வறுமை விலகும், நோய்கள் நீங்கும், சகல காரியங்களில் வெற்றி கிடைக்கும், சகல சௌபாக்கியங்களையும் தரக்கூடியது பிரதோஷ விரதம். 

பிரதோஷ காலம் என்பது சூரியன் அஸ்தமனத்திற்கு முன் மூன்றே முக்கால் நாழிகையும் சூரியன் அஸ்தமனத்திற்கு பின் மூன்றே முக்கால் நாழிகையும் ஆகும். ஒருநாழிகை என்பது 24 நிமிடங்கள். ஒரு மணிக்கு இரண்டரை நாழிகைகள். ஆக சராசரியாக மாலை 4 மணியில் இருந்து இரவு 7.30 வரை பிரதோஷ காலம் உண்டு. சவுகரியத்திற்காக மாலை 4.30 முதல் 6.00வரை என சொல்லப்படுகிறது.

Monday, February 19, 2018

மண்டைதீவு திருவெண்காடு ஆனந்தபுவனத்தில் துன்பங்கள் விலகி இன்பங்கள் தரவல்ல விநாயகர் சதுர்த்தி ! ! ! 19.02.2018விநாயகர் சதுர்த்தியை மிகவும் சிரத்தையுடன் கடைபிடிப்பவர்கள் சிறந்த கல்வி அறிவும், தெளிந்த ஞானமும், சிறந்த செல்வமும், பிள்ளைப் பேறும் துன்பங்கள் விலகி இன்பமும் பெறுவார்கள். காரிய அனுகூலமும் உண்டாகும். இடையூறு விலகும். பெரும் புகழுடன் சகல நோய்களும் நீங்கி, சகல பாக்கியங்களுடன் வாழ்வார்கள்.

ஆனைமுகனான விநாயகப்பெருமானை, பல்வேறு வடிவங்களில் வழிபடலாம். இதில் 16 வகையான வடிவங்களையும், அவற்றிற்கான பலன்களையும் பார்க்கலாம்.

Monday, February 12, 2018

மண்டைதீவு திருவெண்காடு ஆனந்தபுவனத்தில் சிவலோக பதவி கிட்டும் மகா சிவராத்திரி விரதம் ! ! ! 13.02.2018


காசிவராத்திரியன்று இரவில் முறைப்படி விரதம் இருந்து சிவனை வழிபட்டால் கோடி பிரம்மஹத்தி தோஷம் விலகும். சிவலோக பதவி கிட்டும்.

சிவபெருமானை வழிபடுவதில் முக்கியமான, முக்தியைத் தரும் விரதம் மகாசிவராத்திரி விரதம். இந்த விரதம் மாசிமாதம் தேய்பிறை சதுர்த்தியன்று கடைப்பிடிக்கப் படுகிறது. அன்று இரவு முழுவதும் சிவாலயங்களில் பூஜைகளும், அபிஷேகங்களும் நடைபெறும். பஞ்சாட்சர மந்திரம் ஒலிக்கும். சிவராத்திரி விரதம் இருப்போருக்கு சிவனின் இடப்பாகத்தில் வீற்றிருக்கும் அம்பிகையும் அருள்புரிகிறாள்.

Tuesday, February 6, 2018

மண்டைதீவு திருவெண்காடு சித்தி விநாயகப்பெருமானை அர்த்தயாமப்பூசை செய்து வழிபட்ட சப்த கன்னியர்கள் ! ! !


ப்தமாதாக்கள் என்று அழைக்கப்படும் சப்த கன்னியர் வழிபாடு என்பது ஆதியில் இருந்தே அம்பிகை வழிபாட்டின் ஒரு அங்கமாக விளங்குகிறது. சக்தி வழிபாட்டில் சப்த கன்னியர் வழிபாடு முக்கியத்துவம் பெறுகிறது.

அண்ட முண்டர்கள் என்ற அரக்கர்களை அழிக்க, ஆண் பெண் இருவர் உறவில் பிறக்காமல், அம்பிகையின் அம்சத்திலிருந்து பிறந்தவர்களே இந்த சப்த கன்னிகைகள். ப்ராம்மி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வராஹி, இந்திராணி, சாமுண்டி முதலான ஏழு கன்னிகைகளும் சப்த மாதர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.

Saturday, February 3, 2018

மண்டைதீவு திருவெண்காடு ஆனந்தபுவனத்தில் காரியங்களில் வெற்றி (சித்தி) கிடைக்க சங்கடஹர சதுர்த்தி விரத அனுஸ்டானங்கள் ! ! ! 03.02.2018

ணங்குவதற்கு எளியராகவும், வாழ்வில் எல்லா வளங்களையும் தருபவராகவும் இருப்பவர் விநாயகப்பெருமான். அவரை எண்ணி வணங்கும் எல்லா நேரமும் விசேஷமானவைதான். எனினும் சதுர்த்தி நாளில் மேற்கொள்ளப்படும் சங்கடஹர சதுர்த்தி விரதம் கணபதிக்கு என்றே உருவான அருமையான விரதம். இதை மேற்கொண்டு கணபதியை பூஜிக்கும் பக்தர்களுக்கு எந்தக் குறையும் இருப்பதில்லை என்றே சொல்லப்படுகிறது.