Monday, October 23, 2017

மண்டைதீவு திருவெண்காடு புண்ணிய நாம சேஷத்திரத்தில் நலம் தரும் நாக சதுர்த்தி ! ! ! 23.10.2017


முழுமுதற்கடவுளெனப் போற்றப்படும் ஸ்ரீவிநாயகருக்கு உகந்த நாள் இன்று (23 Oct 2017) . இன்றைய தினம் நாக சதுர்த்தி ஆராதிக்கப்படுகிறது.

நாக சதுர்த்தி என்றால் ராகு கேதுவுக்கு உரிய அற்புதமான நாள்தான் இது. இந்த நாளில் விநாயகப் பெருமானை வணங்குவதே வளம் சேர்க்கும் என்கின்றன ஞானநூல்கள்!

ஐப்பசி மாத சுக்ல பட்சத்தில் வருகிற நாக சதுர்த்தியில் விநாயகப் பெருமானை வணங்கி , இந்த நாளில் வழிபட்டால் வளம் பெறலாம் என்பது உறுதி.!

Friday, October 20, 2017

மண்டைதீவு திருவெண்காடு புண்ணிய நாம சேஷ்திரத்தில் கந்தன் கருணை புரியும் கந்தசஷ்டி விரதம் ! ! ! 20.10.2017 - 25.10.2017


ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் தேய்பிறை சதுர்தசி என்ற 14-ம் நாளில் தீபாவளி வருகிறது. அன்றிரவு நரக சதுர்தசி ஸ்னானம் என்று தீபாவளி கங்கா ஸ்னானம் செய்கிறோம். மறுநாள் அமாவாசை வருகிறது.

இதற்குப் பிறகு வரும் வளர்பிறையில் பிரதமை, துவிதியை, த்ருதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி எனும் ஆறு நாட்களில் கந்த சஷ்டி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. இதனை ஆண்டுக்கு ஆண்டு கந்தர் சஷ்டி சமயத்தில் 6 நாட்கள் மட்டும் அனுஷ்டிப்பவர்களும் உண்டு. இந்த கந்த சஷ்டி தொடங்கி மறு கந்த சஷ்டி வரை மாதாமாதம் வரும் சுக்ல சஷ்டியில் ஒரு வருடம் தொடர்ந்து விரதமிருப்பவர்களும் உண்டு.

Monday, October 16, 2017

திருவெண்காடு புண்ணிய நாம சேஷத்திரத்தில் சிவனருள் கிட்டும் பிரதோஷ வழிபாடு ! ! ! 17.10.2017


பிரதோசம் என்பது சைவ சமயத்தில் சிவபெருமானை வழிபட உகந்ததாகக் கருதப்படும் காலமாகும். இப்பிரதோச காலத்தில் நிகழும் வழிபாடு பிரதோச வழிபாடு எனவும், பிரதோச தினத்தில் கடைபிடிக்கப்படும் விரதம் பிரதோச விரதம் எனவும் அழைக்கப்படுகின்றது. 

பிரதோசத்திற்காக கூறப்படும் புராணக் கதையில் செல்வத்திற்காக அசுரர்களும், தேவர்களும் பாற்கடலைக் கடையும் பொழுது ஆலகாலம் எனும் விசம் வெளிப்பட்டது. அதற்கு அஞ்சிய தேவர்களும், அசுரர்களும் சிவபெருமானின் தங்களை காக்கும் படி வேண்டினர். அவர்களுக்காக சிவபெருமான் ஆலகால விசத்தினை உண்டார். அவ்விசம் சிவபெருமானின் வயிற்றினை அடையாமல் இருக்க அருகிலிருந்த பார்வதி சிவபெருமானின் கழுத்தினை இறுகப்பிடித்தார். இதனால ஆலகாலம் சிவபெருமானின் கழுத்தினை நீலமாக மாற்றிவிட்டது.

Saturday, October 7, 2017

திருவெண்காடு புண்ணிய நாம சேஷத்திரத்தில் சங்கடங்கள் தீர்க்கும் சங்கடஹர சதுர்த்தி ! ! ! 08.10.2017


ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக்கொழுந்தினைப்
புந்தியில் வைத்து அடிபோற்று கின்றேனே.

விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதற்கு பல விரத தினங்கள் இருந்தாலும், விரதத்தில் மிகச் சிறந்ததும், பழமையானதும், சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடிய சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்தால் அளவு கடந்த ஆனந்தத்தை அடையலாம். சகல சௌபாக்கியங்களையும் பெறலாம். 

ஒவ்வொரு மாதமும் வரும் "சங்கடஹர சதுர்த்தி" நாளில் விரதம் இருந்தால் குடும்பத்தில் சுபிட்சமும், தடைகளின்றி எல்லா காரியங்களும் வெற்றியடையும்.

Tuesday, October 3, 2017

திருவெண்காடு புண்ணிய நாம சேஷ்திரத்தில் அம்பலத்தாடுவானுக்கு புரட்டாதி மாத சதுர்த்தசி திருநீராடல் - 04.10.2017


புரட்டாதி மாத நடராஜர் அபிஷேகம் சிவகாமசுந்தரி சமேத ஶ்ரீமந் ஆனந்த நடராஜ மூர்த்திக்கு மஹாபிஷேகம் நடைபெறுகிறது.

அனைத்து சிவாயலங்களிலும் எழுந்தருளியுள்ள ஆனந்த மூர்த்திக்கு புரட்டாதி மாத சதுர்த்தசி திருநீராடல் நடைபெற உள்ளது. அனைவரும் கலந்துக் கொண்டு அம்பலக் கூத்தனின் அருளினை பெறுவோம். சகல புவனங்களையும் ஆட்டுவிக்கும் ஆனந்த கூத்தனின் அருள் அபிஷேகம் கண்டு நன்மையடைவோமாக.