Monday, October 16, 2017

திருவெண்காடு புண்ணிய நாம சேஷத்திரத்தில் சிவனருள் கிட்டும் பிரதோஷ வழிபாடு ! ! ! 17.10.2017


பிரதோசம் என்பது சைவ சமயத்தில் சிவபெருமானை வழிபட உகந்ததாகக் கருதப்படும் காலமாகும். இப்பிரதோச காலத்தில் நிகழும் வழிபாடு பிரதோச வழிபாடு எனவும், பிரதோச தினத்தில் கடைபிடிக்கப்படும் விரதம் பிரதோச விரதம் எனவும் அழைக்கப்படுகின்றது. 

பிரதோசத்திற்காக கூறப்படும் புராணக் கதையில் செல்வத்திற்காக அசுரர்களும், தேவர்களும் பாற்கடலைக் கடையும் பொழுது ஆலகாலம் எனும் விசம் வெளிப்பட்டது. அதற்கு அஞ்சிய தேவர்களும், அசுரர்களும் சிவபெருமானின் தங்களை காக்கும் படி வேண்டினர். அவர்களுக்காக சிவபெருமான் ஆலகால விசத்தினை உண்டார். அவ்விசம் சிவபெருமானின் வயிற்றினை அடையாமல் இருக்க அருகிலிருந்த பார்வதி சிவபெருமானின் கழுத்தினை இறுகப்பிடித்தார். இதனால ஆலகாலம் சிவபெருமானின் கழுத்தினை நீலமாக மாற்றிவிட்டது.

பொருளடக்கம்

  
  • 1பிரதோச விரதம்
  • 2புராணக் கதை
    • 2.1பாற்கடற் கடைதல்
    • 2.2தேவ அசுர ஆவல்
    • 2.3ஆலகாலத் தோன்றல்
    • 2.4தீவினைத் தீர்த்தல்
  • 3பிரதோஷக் காலம்
  • 4பிரதோச வகைகள்
  • 5சோம சூக்தப் பிரதட்சணம்
    • 5.1திருமுழுக்குப் பொருள்களும் பலன்களும்
  • 6பிரதோசதலங்கள்
  • 7நந்தி தேவர் துதி
  • 8இவற்றையும் காண்க
  • 9ஆதாரங்கள்
  • 10வெளி இணைப்புகள்

1 .பிரதோச விரதம்


பிரதோச விரதம் சைவ மக்களால் கடைப்பிடிக்கப்படும் சிவ விரதங்களில் ஒன்று. இது ஒவ்வொரு மாதமும் வளர்பிறை, தேய்பிறைஆகிய இரண்டு பட்சங்களிலும் வருகின்ற திரயோதசித் திதியில் சூரியன் மறைவதற்கு முன் மூன்றேமுக்கால் நாழிகையும், பின் மூன்றேமுக்கால் நாழிகையும் உள்ள பிரதோசகாலத்திற் சிவபெருமானை குறித்து அநுட்டிக்கப்படும் விரதமாகும்.

இவ்விரதத்தை நோற்க விரும்புபவர்கள் சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய நான்கு மாதங்களில் வரும் சனிப் பிரதோச நாளில் விரத அநுட்டானத்தைத் தொடங்குதல் மரபு. பிரதோச விரதம் அநுட்டிப்போர் பகல் முழுவதும் உபவாசமிருந்து பிரதோச வேளையாகிய சூரிய அசுதமனத்தின் போது சிவாலயங்களில் சிவதரிசனம் செய்த பின் போசனம் செய்தல் வேண்டும்.

2.புராணக் கதை

மானிடர்கள் மட்டுமல்லாமற் பட்சிகள் தொடங்கி முப்பத்து முக்கோடி தேவர்களின் தலைவனகக் கூறப்படுபவன் தேவேந்திரன். துர்வாச முனிவரின் சாபத்தினால் தன் செல்வங்களை இழந்த இந்திரன், தேவகுருவின் ஆலோசனையின்படி பாற்கடலைக் கடைந்து ஐராவதம் எனும் வெள்ளையானை, பரிவாரம் முதலிய செல்வங்களை மீட்க திட்டமிட்டான். தேவர்களின் பலத்தினாற் மட்டும் பாற்கடலை கடைவது இயலாத காரியமென அறிந்த தேவேந்திரன், தனது குல எதிரியென்றும் பாராமற் அசுர பலத்தையும் நாடினான். பாற்கடலை கடையத் துணைப்புரிவதால் என்றும் மரணமெய்யா நிலைதர வல்ல அமிழ்தத்தில் தனக்கொர் பங்கு கிடைக்குமென எண்ணி ஒப்புகொண்டனர் அசுரர்கள். பாற்கடலில் பள்ளிகொண்டருளும் நாராயணனார் தனது இரண்டாவது அவதாரமாகிய கூர்மாவதாரமெடுக்க தருணம் வந்ததையறிந்து தேவேந்திரனுக்கு உதவிட எழுந்தருளினார்.

பாற்கடற் கடைதல்

வாசுகி பாம்பை கயிறாக்கி, மந்தர மலையை மத்தாக்கி, மலை கடலிலமிழா வண்ணம் கூர்மவதார கடவுள் தாங்கியபடி, தேவர்களும் அசுரர்களும் கடைய முற்பட்டனர். ஆனால் மலைமத்தோ அசைவேண்ணாவென்று அடம்பிடித்தது. இன்னும் பலவான்கள் தேவையெனயறிந்த இந்திரன், இராவணினிடமே மல்யுத்தம் செய்த சக்திசாலிகளாகிய ஆயிரங்கரங்களையுடைய கார்த்தவீரியார்ஜுனன் மற்றும் வானர வேந்தன் வாலியின் உதவியை நாடினான். அசுரர்களுடன் கார்த்தவீரியார்ஜுனன் பாம்பின் தலையினருகே சேர, தேவர்களுடன் வாலி பாம்பின் வாலினருகே சேர்ந்து மந்தர மலையை அப்படியும் இப்படியுமாக இழுத்துக் கடலை இனிதே கடைய ஆரம்பித்தனர்.

தேவ அசுர ஆவல்

தீராப் பகையரும் சாவா வரங்கிடைக்குமென ஒன்றுக்கூடி உழைக்கச் செய்ததந்த ஆவல்.

குணத்தாற் மாறுபட்டோரும் வயதேறா மேனிபெற ஒருமித்த எண்ணங் கொடுத்ததந்த ஆவல்.

நா இதுகாருமுணரா சுவையென கொண்டாடி நிற்கசெய்ததந்த ஆவல்.

முக்கனியுந் தேனுஞ் சர்க்கரையுடஞ் சேர்த்துப் பிசைந்தப் பழச்சாறும் வீணெனக் கூறச்செய்ததந்த ஆவல்.

உடற்கூறுபடினும் உயிரெனுஞ் சீவன் உடனுறைய காந்தத்தினைத் தரவல்லவெனப் போற்றச் செய்ததந்த ஆவல்.

அமிழ்தத்தினை அருந்தியவர் உலகயின்பமனைத்தும் சுவைத்தவரென பெருமைக் கொள்ளச் செய்ததந்த ஆவல்.

இவையன்றி பெறுவதற்கு வேறு பேறில்லையென மருளச் செய்ததந்த ஆவல்.

ஆலகாலத் தோன்றல்

சாகா நிலை தரவல்ல அமிழ்ததின்பாற் கொண்டபற்றினாற் கடைவதை தீவிரபடுத்த, அமிழ்த்தின் வரவை எதிர்நோக்கிட்ட வேளையில், அவர்களுக்கெல்லாம் பேரிடியாக கருகருவென திரண்டு நின்றது ஆலகாலம் எனும்விடம். இக்கொடியவிடத்தில் மேலும் வலுசேர்த்தாற் போல் வாசுகி வலிபொறுக்க முடியாமல் நஞ்சினை கக்கியது. சற்றும் எதிர்பாராமல் தலைப்பட்ட பேராபத்தினால், சித்தம் கலங்கிட, சிந்தை தடுமாறிட, மரணஓலம் கேட்டிட, கை காலெல்லாம் உதறிட, செய்வதறியாமற் பாலகர் போல் தன்னிலை எண்ணி மனந்நொந்து கண்ணீர் மல்கினர்.

மரணப்பயம் கொண்ட நெஞ்சினுள் சங்கரன் நினைவு இருளைக் கிழித்துத் தென்படும் ஒளியினைப் போலெழ, சதாசிவா!!! சங்கரா!!!அபயமென அலறி, பாற்கடலினிருந்து கயிலைநாதனின் திருவடியிற் தஞ்சம் புக கயிலைமலைக்கு விரைந்தனர். ஆலகாலமோ இவர்கள் செல்லும் வழிநெடுக்க தொடர்ந்துவர, தப்பித்தோம் பிழைத்தோமென மரணோலத்துடன் நந்தியம்பதியின் இருப்பிடத்திற்கு வந்தனர். விடயமறிந்த நந்தியோ அபயமருள பரம்பொருளின் கடைக்கண்பட அவ்வனைவரையும் உள்ளே அழைத்துச் சென்றார்.

சேதியறிந்து திகைத்தனர் அங்கிருந்தோர். எப்பணி தொடங்கினும் சிவனருளைப் பெறும் நெறியினை மறந்த காரணத்தினாலேயே இவ்வபாயத்தில் சிக்கிவிட்டோமென பரம்பொருளின் திருவடியில் சரணடைந்தனர் ஓடிவந்தோர்.

தீவினைத் தீர்த்தல்

மறுமொழியேதுங் கூறாமற் நாடிவந்தோர் உயிர்காக்க அபயந் தந்தருள மனமிறங்கினார் ஒப்பாரும் மிக்காருமில்லா சிவபெருமான். இந்நிலையில் கடைந்தோரின் உயிரைக்கவர காலனாக கயிலைக்கே வந்தது அவ்வாலகாலம். நெறிமறந்தாற் துன்பம் அவர்தம் செய்வினையாயினுந், தவறை யொப்புக்கொண்டு சரணடைந்தோர் இன்னல் போக்க, சித்தர்கள் கூடியிருக்குமந்த கயிலைமலையில், சிவகணங்கள் அஞ்சிய “அவ்விடத்தை, இவ்விடத்திற்குக் கொண்டு வருவாயாக!!!” யெனச் சுந்தரரை நோக்கி திருவாய் மொழிந்தார் விரிசடைப் பெருமான். பாரில்வுள்ளோர் பயந்து நடுங்கிய விடத்தினை ஒன்றுத்திரட்டி உருண்டையாக்கிட சுந்தரர், “நமச்சிவாய!!! நமச்சிவாய!!! நமச்சிவாய!!!” வென முன்மொழிய, அவையிலிருந்தோர் அதனை வழிமொழிய, அண்ட சராசரங்களும் இறைவனின் அத்திருநாமத்தையே உச்சரித்தவனவாக ஒருமித்த சிந்தனையிற் ஒடுங்க, அக்கொடியவிடமானது வடிவஞ் சிறுத்து உருண்டையானது.

பிரளயக் காலத்து அக்னியினைப் போன்ற வீரியமிகு விடத்தினை தன்னிருக் கரங்களால் ஏந்திய ஈசன் அவையோரை நோக்க, “ஐயனே!!! ஆலகாலத்திலிருந்து எங்களைக் காக்க உகந்த வழி செய்க” வென தேவ அசுரரனைவரும் வேண்டினர், நடப்பன யெண்ணி மலைமகள் பதற, அவள் தமையனார் தோள் நடுங்க, அடியவர்கட்கு அடியவராம் சிவனார் பக்தர்கள் வேண்டுகோளுக்கிணங்க அவ்விடத்தினை வாயிற்யிட்டு விழுங்கலானார்.

அம்மாசறுகோனின் அருளை காணுங்கால் பயங்கொண்டவராகத் திகைத்து நின்ற உமையும், பரந்தாமனும், எல்லா உயிர்கட்கும் உறைபவனாம் சிவனின் யுடலிற் நஞ்சு சேர்ந்தால் சகல யுயிர்க்கும் பாதிப்பினை உருவாக்குமென அஞ்சி, ஒடிவந்து சிவனாரின் கண்டத்தை யிருகப் பற்றிட, கண்டத்திலேயே உறைந்துப் போனது ஆலகாலம். ஆலகாலத்தின் சூட்டினாலும் விடத்தின் கருநிறத்தினாலும் கண்டம் நிறமாறிட நீலகண்டரென திருப்பெயர்ப் பெறலானார் சிவனார்.

இவ்வாறு கயிலையில் சகல தேவ அசுர படைசுல அபயந்தேடி ஒன்றாகக் கூடியிருக்கின்ற வேளையிற் நாமும் கோயினுளிருக்க வரவிருக்கின்ற அபாயம் ஆலாமேயாயினுங் ஈசனின் திருவருளால் மறைந்துப் போகுமென்பது உறுதி.

பிரதோசம் தொகுப்பு தொடரும் . . . 


"அவன் அருளாலே அவன் தாள் வணங்கி 


சிவன் அருள் பெறுவோமாக " !!

ஓம் கம் கணபதயே நமஹ...!!

காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி!
கயிலை மலையானே போற்றி! போற்றி!

தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!

இன்பமே சூழ்க ... ! 
எல்லோரும் வாழ்க . . . !

மேன்மைகொள் சைவநீதி . . . !
விளங்குக உலகமெல்லாம் . . . !

அன்பே சிவம்

திருச்சிற்றம்பலம்'' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்'