Thursday, February 25, 2016

திருவெண்காட்டில் துன்பங்கள் போக்கி இன்பங்கள் தரவல்ல சங்கடஹரசதுர்த்தி ! ! ! 26.02.2016


விநாயகர் பிரணவத்தின் வடிவம். இதன் திரிந்த வடிவமே பிள்ளையார் சுழி. பிள்ளையார் சுழியை இட்டாலே ஆணவம் ஒழிந்து இறை உணர்வு உண்டாகும். சதுர்த்தி திதி விநாயகருக்கு மிகவும் உகந்த நாளாகும். சுக்ல பட்சம் (வளர்பிறை) சதுர்த்தியை "வர சதுர்த்தி" என்றும், கிருஷ்ண பட்சம் (தேய் பிறை) சதுர்த்தியை "சங்கடஹர சதுர்த்தி" என்றும் கூறுவார்கள்.

Tuesday, February 23, 2016

திருவெண்காட்டில் மகத்துவம் மிக்க மாசி மகம் ! ! ! 22.02.2016


ன்று (22.02.2016) மாசி மகம். மகாவிஷ்ணு, உமாமகேஸ்வரன், முருகன் ஆகிய 3 தெய்வங்களுக்கும் உகந்த நாள் மாசி மகம். கும்ப ராசியில் சூரியன் இருக்கும் போது சந்திரன் சிம்ம ராசியில் மக நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வார். இந்நாளே மாசி பவுர்ணமியுடன் கூடிய மாசி மகமாக திகழ்கிறது. உமா தேவியார் மாசி மாதம் மக நட்சத்திரத்தில்தான் தட்சணின் மகள் தாட்சாயணியாக அவதரித்தார் என்பதால் மிகவும் புண்ணிய நாளாக கருதப்படு கிறது. பெண்களுக்குரிய விரத தினமாகவும் போற்றப்படுகிறது. பாதாளத்தில் இருந்த பூமியை பெருமாள் வராக அவதாரம் எடுத்து வெளிகொணர்ந்த நாளும் மாசி மகத்தன்றுதான்.

Friday, February 19, 2016

திருவெண்காட்டில் பயவுணர்வு, பகைமை, தீராப்பிணிகள் தீர்க்க வல்ல சனி மகா பிரதோஷம் ! ! ! 20.02.2016


நாளைய தினம், 20.02.2016 சனிக்கிழமை "மகா பிரதோஷம் ( சனிப்பிரதோஷம்) சென்ற 06.02.2016 இல் சனிப்பிரதோஷத்தை தவறவிட்ட அன்பர்களுக்கு இன்னொரு சந்தர்ப்பம் இதை தவறவிடாதீர்கள். மெய்வருத்தம் பாராது ஆலயங்களுக்கு செல்ல வேண்டும் என்பதே எங்களது பிரார்த்தனையும், வேண்டுகோளும்!

Wednesday, February 10, 2016

திருவெண்காட்டில் காரிய சித்தி தரவல்ல விநாயகர் சதுர்த்தி விரத வழிபாடு ! ! ! 11.02.2016


விநாயகர் சதுர்த்தி தினத்தன்று அதிகாலையில் எழுந்து காலைக் கடன்களாகிய உள்ளத்தையும், உடலையும் சுத்தம் செய்த பின்பு விநாயகரை மனம் உருகப் பிரார்த்தனை செய்ய வேண்டும். சூரியன் உதிக்கும் வரை எந்த உணவையும் உட்கொள்ளாமல் விநாயகரை நினைத்திருந்து என் சங்கடங்களை நீயே தீர்க்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு பூஜையைத் தொடங்க வேண்டும்.

Saturday, February 6, 2016

திருவெண்காட்டில் வசந்தமான வாழ்வை தரும் மகிமை நிறைந்த தை அமாவாசை ! ! ! 08.02.2016


தை அமாவாசை சிறப்பைப் பற்றி தெரிந்து கொள்வோமா ! அமாவாசைகளில் மிக விசேஷமானது தை அமாவாசையாகும். அன்று பித்ருக்கள் பூலோகம் செல்ல யமதர்மராஜர், அனுமதி தருவார். அதனால் யம காவலர்கள், பித்ருக்களை அழைத்துக்கொண்டு சூரியன் இருக்கும் இடத்திற்கு வருவார்கள்.

Friday, February 5, 2016

திருவெண்காட்டில் ஆயிரம் மடங்கு பலன் தரவல்ல சனிப் பிரதோஷம் ! ! ! 06.02.2016


சிவனுக்குரிய வழிபாடுகளில் சிவராத்திரியும் பிரதோஷமும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றன. சிவன் ஆலகால விஷத்தை உண்டு தூங்காமல் இருந்த இரவே சிவராத்திரி என்று வழங்கப்படுகிறது. விஷமுண்ட சிவன் நந்தியின் கொம்புகளுக்கு இடையே நடனம் புரிந்தார். விஷம் உண்ட வேளை பிரதோஷ வேளை!