Tuesday, May 24, 2016

திருவெண்காட்டில் சகல சௌபாக்கியமும் தரவல்ல ‪சங்கடஹர சதுர்த்தி விரத வழிபாடு ! ! ! 25.05.2016


விநாயகரை வழிபாடு செய்வதற்கு பல விரத தினங்கள் இருந்தாலும், சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்தால் சங்கடங்கள் தீர்ந்து மகிழ்ச்சியைப் பெறலாம் எனக் கூறப்படுவதுண்டு."ஹர" என்ற சொல்லுக்கு அழித்தல் என்று பொருள். ஒவ்வொரு மாதமும் பௌர்ணமிக்கு அடுத்ததாக வரும் சதுர்த்தி திதியே சங்கடஹர சதுர்த்தி ஆகும்.

Friday, May 20, 2016

திருவெண்காட்டில் முன்வினைப் பயன் நீங்கி இன்பம் பெற வைகாசி விசாக வழிபாடு ! ! ! 21.05.2016


காசி விசாகத் திருநாள் அன்று விரதம் மேற்கொண்டு முருகப் பெருமானை வழிபட்டு வந்தால் முன்வினைப் பயன் நீக்கி இன்பம் வழங்குவார் என்று புராணம் கூறுகிறது. இது குறித்து புராணம் கூறும் ஒரு நிகழ்வு:

Wednesday, May 18, 2016

திருவெண்காட்டில் பாவங்களை போக்கி புண்ணியம் அருளும் பிரதோஷ வழிபாடு ! ! ! 18.05.2016



பிரதான தோஷங்களை நீக்குவதுதான் பிரதோஷ வழிபாட்டின் முக்கிய சிறப்பு. யார் ஒருவரது ஜாதகத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் குறைந்தது 4 தோஷங்களாவது இருக்கும். எத்தனை தோஷங்கள் இருந்தாலும், பிரதோஷ தினத்தில் சிவனை வழிபடுவதன் மூலம் பயன்பெறலாம். 


Saturday, May 14, 2016

திருவெண்காட்டில் இராஜகோபுர பொம்மைகள் அமைக்கும் பணிகள் நிறைவடையும் தருவாயில் 14.05.2016 (படங்கள் இணைப்பு)



சித்திவிநாயகப் பெருமான் மெய்யடியார்களே !

வெகுவிரைவில் (04.09.2016) திருவெண்காட்டு பெருமானுக்கு குடமுழுக்கு நடைபெற இருப்பதனால் பஞ்ச தள இராஐகோபுரத்திற்கு பொம்மைகள் அமைக்கும் பணிகள் துரித கெதியில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. 

எனவே எங்கள் மண்டைதீவு பிள்ளையாருக்கு, எங்கள் சித்திவிநாயகருக்கு, எங்கள் வெண்காட்டு பெருமானுக்கு, எங்கள் குலதெய்வத்திற்கு, எங்கள் இஷ்ர தெய்வத்திற்கு, நாங்கள் எதாவது பொருள் உதவி செய்யவேண்டும் நிதி உதவி செய்யவேண்டும் என மனதார நினைத்து கொண்டிருக்கும் எம் பெருமான் மெய்யடியார்கள் விரைந்து இணைந்து சித்தி விநாயகப் பெருமானின் பெருங்கருணைக்கு பாத்திரமாகும் வண்ணம் வேண்டுகின்றோம் .

Monday, May 9, 2016

திருவெண்காட்டில் அள்ள அள்ளக் குறையாது அள்ளித் தரும் அற்புதத் திருநாள் அட்சய திரிதியை ! ! ! 09.05.2016


அக்‌ஷய திரிதியை ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாத வளர்பிறையின் (சுக்ல பக்‌ஷத்தின்) மூன்றாவது நாள் வரும். ‘அக்‌ஷய’ என்றால் எப்போதும் குறையாதது எனப் பொருள்படும். ’திரிதியை’ என்றால் மூன்றாவது நாள் எனப் பொருள்படும்.

Saturday, May 7, 2016

திருவெண்காட்டில் சகல செல்வங்களும் பெற கார்த்திகை விரத வழிபாடு ! ! ! 07.05.2016


ஒவ்வொரு மாதத்திலும், முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திரமாகிய கிருத்திகை நட்சத்திரம் அன்று முருகப்பெருமானை நினைத்து விரதம் இருந்து வழிபடுவார்கள். அன்றைய தினம் விரதம் மேற்கொள்வதால், முருகனின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம். அன்று முருகன் கோவில்களில் விசேஷ ஆராதனைகள் நடைபெறும். 

Tuesday, May 3, 2016

திருவெண்காட்டில் ஏழ்மையை விரட்டும் பிரதோஷ வழிபாடு ! ! ! 04.05.2016


பிரதோஷ நாளின் சிறப்பினையும், அதனை யார் யார் எப்பொழுது கடைபிடிக்க வேண்டும் என்பதனையும் கூறுங்கள். ஏனென்றால், பிரதோஷத்தைப் பொறுத்தவரையில் முக்கியமாக யார் யார் கடைபிடிக்க வேண்டும் என்பது தெரிந்தால் அது அவர்களுக்கு வழிகாட்டுதலாக இருக்கும்.