Monday, December 29, 2014

திருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் இடம்பெற்ற கஐமுக சூர சங்காரம் (27/12/2014) படங்கள் வீடியோ இணைப்பு


திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானத்தில் 27-12-2014 அன்று எம் பெருமானிற்கு மாலை 2 மணியளவில்  சிறப்பு அபிஷேக ஆராதனைகள் ஆரம்பமாகி அதனைத் தொடர்ந்து விநாயகப் பெருமானிற்கு விசேட பூசைகள் நடைபெற்று பிள்ளையார் கதைப்படிப்பைத் தொடர்ந்து மாலை 4:30 மணியளவில் கஜமுகாசூரன் போர் இடம்பெற்றது. படங்கள் வீடியோ இணைப்பு.

Friday, December 26, 2014

திருவெண்காட்டில் திருவெம்பாவை விரத ஆரம்பம் (27/ 12 / 2014) திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடல் வரிகள் . . .


மாதங்களிலெல்லாம் சிறந்த மார்கழியை இறை வழிபாட்டிற்கே உரிய மாதமென்றே சொல்லலாம். வெள்ளத்தில் ஏற்படும் சுழியானது துவக்கத்தில் மெதுவானதாகவும், அதன் தன்மையை உணர்வதற்குள், மிக வேகமானதாகவும், ஆழ்த்திவிடுவதாகவும் உள்ள படுசுழியான தன் தன்மையைக் காட்டிவிடுகிறது. அதுபோல மயக்கத்தில், செல்லும் திசை தெரியாது ஆழச் செல்லும் உயிர்களை உணர்வூட்டி, "கண்ணைத் துயின்று அவமே காலத்தைப் போக்காதே" என்ற பொன்னான வாசகத்தால் கைதூக்கி விடுவன திருவெம்பாவையும் திருப்பள்ளியெழுச்சியும்.

Thursday, December 25, 2014

திருவெண்காட்டில் விநாயகர் சதுர்த்தி விரத அனுஸ்டானங்கள் ! ! ! 25/12/2014


பார்வதி, பரமேஸ்வரர் ஆகியோரின் பிரார்த்தனைக்கு இணங்க அவர்களுக்கு புத்திரனாக அவதரித்த நாள் விநாயக சதுர்த்தி எனப்படுகிறது. எல்லாப் பண்டிகைக்கும் முதலாக வருவது விநாயர் சதுர்த்தி.

Tuesday, December 23, 2014

இரு மடங்கு பலன் தரும் இரட்டைப் பிள்ளையார் வழிபாடு ! ! !

http://www.thiruvenkadumandaitivu.com/2014/12/blog-post_23.html

ஒரு சமயம் சிவபெருமானைப் பிரிந்து பார்வதிதேவி தனியாகத் தவம் செய்ய நேரிட்டது. அப்போது விநாயகர் தன்னைப் போலவே ஒரு வடிவத்தை தன்னருகே உருவாக்கி, அந்தத் திருவுருவத்தையே-அதாவது தன்னையே சங்கல்பம் செய்து கொண்டு, பிரிந்த தன் பெற்றோர் விரைவில் ஒன்று சேரப் பிரார்த்தித்தாராம்.

Friday, December 19, 2014

திருவெண்காட்டில் சுகவாழ்வு தரும் பிரதோச வழிபாடு ! ! ! (19.12.2014)

http://www.thiruvenkadumandaitivu.com/2014/12/19122014.html

பிரதோச விரதம் சைவ மக்களால் கடைப்பிடிக்கப்படும் சிவ விரதங்களில் ஒன்று. இது ஒவ்வொரு மாதமும் வளர்பிறை, தேய்பிறை ஆகிய இரண்டு பட்சங்களிலும் வருகின்ற திரயோதசித் திதியில் சூரியன் மறைவதற்கு முன் மூன்றேமுக்கால் நாழிகையும், பின் மூன்றேமுக்கால் நாழிகையும் உள்ள பிரதோஷ காலத்திற் சிவபெருமானை குறித்து அநுட்டிக்கப்படும் விரதமாகும்.

Tuesday, December 16, 2014

மார்கழி மாத விரதங்களின் மகிமையும் சிறப்புக்களும் ! ! !


மார்கழி மாதம் நாளை பிறக்கிறது. இது, மனிதனை உயர்வழிக்கு அழைத்துச் செல்லும் மாதம். நம் சம்பிரதாயப்படி, குறிப்பிட்ட ஆடி, புரட்டாசி, மார்கழி மாதங்களில் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் நடத்துவதில்லை. நம் வாழ்வை அர்த்தமுள்ள தாக்கி கொள்ளவேண்டுமானால், சரணாகதி என்னும் உயர் தத்துவத்தை கடை பிடிக்கவேண்டும்.

Friday, December 12, 2014

"கோபுர தரிசனம் கோடி புண்ணியம்" ( ஒரு விஞ்ஞான பூர்வமான விளக்கம்)


ஞானிகள்,முனிவர்கள்,சித்தர்கள் சிறந்த கோயில்களையும்,அதில் தெய்வ திருவுருவச் சிலைகளையும் ஏற்படுத்தும் முறைகளை வகுத்து கொடுத்து கோயில் திசை நான்கிலும் விண்ணை முட்டும் பெரிய கோபுரங்களை நிர்மாணித்து அவற்றின் சக்தியால் உயிர்கள் நல்ல முறையில் வாழும் அமைப்பை ஏற்படுத்தி கொடுத்தார்கள்.

கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம். ஆலயம் தொழுவது சாலவும் நன்றே என்ற முன்னோர்களின் பொன் மொழிகள் இதன் பயன் கருதி கூறியவை.

Wednesday, December 10, 2014

திருவெண்காட்டில் சங்கடங்கள் போக்கும் சங்கடஹர சதுர்த்தி விரதம் ! ! ! 10.12.2014



பிள்ளையாரை வழிபட சங்கடகர சதுர்த்தி நாள் மிகவும் ஏற்றது. பவுர்ணமியை அடுத்த நான்காம் நாள் தேய்பிறையில் வரும் சதுர்த்தி நாளையே ‘சங்கடஹர சதுர்த்தி’ என்பர். சங்கடங்களை அழிப்பதால் இது சங்கடஹர சதுர்த்தி எனப்படுகிறது. 

Monday, December 8, 2014

திருவெண்காடு திவ்விய நாம சேஷ்திரத்தில் விநாயகர் பெருங்கதை விரதம் ஆரம்பம் 06 - 12 - 2014


விநாயகர் விரதங்கள் பல. அவற்றுள் கார்த்திகை மாசம் அபரபக்கப் பிரதமை முதல் மார்கழி மாசத்துப் பூர்வ பக்கச் சஷ்டி வரையும் உள்ள இருபத்தொரு நாட்கள் அனுஷ்டிக்கும் விரதமும் ஒன்றாகும். இது, விஷ்ணு மூர்த்தியை பாம்பாக இருக்கும்படி தேவி சபித்ததை விமோசனஞ் செய்யச் சாதனமாயிருந்தது. இவ்விரதம் இவ்வருடம் 06-12-2014 ஆரம்பமாகி 27-12-2014 பூர்த்தியாகின்றது.

Friday, December 5, 2014

திருவெண்காட்டில் மன இருள் போக்கும் திருக்கார்த்திகை தீபத்திருவிழா ! ! ! 05/12/2014


கார்த்திகை விளக்கீடு என்பது கார்த்திகை மாதத்தில் வரும் பெளர்ணமி திதியும், கார்த்திகை நட்சத்திரமும் கூடிய திருக்கார்த்திகை நாளில் கோயில்களிலும், வீடுகளிலும் இடம்பெறும் சிறப்பான தீபத் திருவிழாவாகும்.

கார்த்திகை மாதம் பெளர்ணமி நாளில் கார்த்திகை நட்சத்திரம் வருவதால், இம்மாதம் கார்த்திகை எனப் பெயர் பெற்றது.

Thursday, December 4, 2014

தங்கம் பெருகிட தங்க கணபதியை வழிபடுவோம் சிறப்பு கட்டுரை ! ! !


தங்கத்தை விரும்பாத மனிதனே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அனைவருக்கும் தங்கத்தின் மீது பற்று உண்டு.

வெறும் அழகு ஆபரணங்களாக மட்டுமே இல்லாமல், சேமிப்புக்குத் தகுதியான பொருள் அது. அவசர கால பொருளாதாரத் தேவைக்கும் தங்கம் பயன்படும்.

அப்படிப்பட்ட தங்கத்தைச் சேமிக்கவும், சிறுகச் சிறுக சேமித்து தங்க ஆபரணங்கள் வாங்கி அணிந்து மகிழவும் உகந்த தினம்தான் தங்க கணபதி தினம்.

திருவெண்காட்டில் சர்வமங்களம் தரும் பிரதோஷ வழிபாடு 04 - 12 - 2014


இறைவழிபாடு குறைகளை களைந்து நிறைவினை தரும். முக்கியமாக, புண்ணிய நாட்களில் இறைவனை வழிபாடு செய்வது நிறைந்த பயனைத் தரும். இறைவனை எப்பொழுதும் வழிபட வேண்டும். ஆனால் புண்ணிய தினங்களில் வழிபட்டால், ஒன்றுக்கு கோடி மடங்கு மிகுதியான உயர்ந்த பயன் விளையும். இந்நாட்களில் அன்புடன் இறைவழிபாடு புரிபவர்கள் பாவங்களிலிருந்து நீங்கி புண்ணியம் பெற்று, இகம், பரம், வீடு என்ற மும்மை நலன்களையும் பெற்று வாழ்வாங்கு வாழ்வார்கள்.