Monday, December 8, 2014

திருவெண்காடு திவ்விய நாம சேஷ்திரத்தில் விநாயகர் பெருங்கதை விரதம் ஆரம்பம் 06 - 12 - 2014


விநாயகர் விரதங்கள் பல. அவற்றுள் கார்த்திகை மாசம் அபரபக்கப் பிரதமை முதல் மார்கழி மாசத்துப் பூர்வ பக்கச் சஷ்டி வரையும் உள்ள இருபத்தொரு நாட்கள் அனுஷ்டிக்கும் விரதமும் ஒன்றாகும். இது, விஷ்ணு மூர்த்தியை பாம்பாக இருக்கும்படி தேவி சபித்ததை விமோசனஞ் செய்யச் சாதனமாயிருந்தது. இவ்விரதம் இவ்வருடம் 06-12-2014 ஆரம்பமாகி 27-12-2014 பூர்த்தியாகின்றது.

யாழ்ப்பாணத்தில் இருபத்தொரு நாளும் நியமமாக விநாயக வழிபாட்டுடன் அனுஷ்டிப்பவர்கள் பலர் இன்றுமுளர். சாந்தை சித்தி விநாயகர் ஆலயத்திலும், பறாளை ஈஸ்வர விநாயகர் ஆலயத்திலும் திருவெண்காடு சித்தி விநாயகர் ஆலயத்திலும் இவ்விழா வெகு சிறப்பாக அனுஷ்டிக்கப்பெறுகின்றது.

ஆடவர் வலக்கையிலும் பெண்கள் இடக்கையிலும் இருபத்தொரு இழையாலாகிய நூல் காப்பு அணிந்து விரதமிருத்தல் வேண்டும். இப்படிச் செய்ய இயலாதோர் மார்கழி மாத விநாயகர் சஷ்டியினன்று விரத சீலராக இருப்பது இன்பமூலமாகும். தன வைசியர்கள், மரகத விநாயகரைச் சஷ்டியினன்று மிகவும் வழிபாடு செய்து வருகின்றனர். "சாந்த" வழிபாடுகள் செய்யும் மக்கள் விரதங்களை அனுஷ்டிக்கின்றனர். விநாயகர், சுப்பிரமணியர், சிவன், சத்தி வணக்க உடைமையால் ஆன்ம உய்தி பெறலாம்.

விநாயகர் பெருங்கதைச் சுருக்கம்


ஒரு முறை சிவபெருமானும் உமாதேவியும் சொக்கட்டான் விளையாடிக் கொண்டிருந்த போது மகாவிஷ்ணு பொய்ச்சாட்சி சொல்லும்படி ஆகிவிட்டது (அவ்விளையாட்டில் சிவபெருமான் தோற்றுப் போகவே சிவபெருமான் சாட்சியாக நின்ற மகாவிஷ்ணுவை பார்த்து கண்ணால் ஜாடை காட்டி யார் வென்றது எனக் கேட்ட்க விஷ்ணுவும் செய்வதறியாது தோற்றவராகிய சிவபெருமானே வென்றதாகவும்,வென்ற உமாதேவியார் தோற்று விட்டதாகவும் பொய்ச்சாட்சி கூறிவிட்டார். அதனால் கோபமுற்ற உமாதேவி மகாவிஷ்ணுவைக் குருட்டு மலைப் பாம்பாகப் போகுமாறு சபித்துவிட்டார். அவருக்கு ஆறுதல் கூறிய சிவபெருமான் கயமுகாசுரவதம் நடைபெறும் வரைகாத்திருக்குமாறு சென்னார்.

விநாயகர் கயமுகாசுரனுக்கு முத்தி கொடுத்த பின்னர் கணபதீச் சரத்தில் இருந்து மூஷிஹ வாகனத்தில் திரும்பும் வழியில் ஆலங்காட்டில் மலைப் பாம்பாக மாறி இருந்த மகாவிஷ்ணுவைக் கண்ணுற்றார். அவர் பார்வை பட்ட மாத்திரத்தில் மகாவிஷ்ணு தம் சுய உருவைப் பெற்றார். மகிழ்ச்சி அடைந்தார்விநாயகரே! எனக்குக் காட்சியளித்து நன்மை புரிந்த இந்த மார்கழித் திங்கள் சஷ்டி நாளில் உம்மை யார் வழிபட்டாலும் அவர்கள் சகல துயரங்களில் இருந்தும் விடுபட்டுச் சகல விருப்பங்களையும் அடையும் படி அருள்புரியவேண்டும் என்று கோரினார். அதற்கு விநாயகரும் மகிழ்ச்சியோடு இசைந்தார்.

இது விநாயக சஷ்டி என்றும் மார்கழி சஷ்டி, குமார சஷ்டி, பெருங்கதை விதரம் என்றும் கூறப்பெறுகிறது. கார்த்திகைத் திங்கள் கிருஷ்ண பட்சப் பிரதமை முதலாக மார்கழித் திங்கள் (வளர்பிறை) சஷ்டி இறுதியாகவுள்ள இருபத்தொரு நாளும் இந்த விரதம் கடைப்பிடிக்கப்பெறுகிறது. சைவர்களுக்கு இக்காலம் மிகவும் புனிதமான காலமாகும்.

21 நாட்களும் ஒரு பொழுது உண்டு இறுதி நாளில் உபவாசம் இருந்து இளநீர் கரும்பு மோதகம் அவல் எள்ளுண்டை முதலானவற்றை நிவேதித்து சிறப்பு வழிபாடு செய்ய வேண்டும் 21 நாட்களும் பெருங்கதை எனப்பெறும் விநாயக புராணம் (பார்க்கவ புராணம் ) படிக்க வேண்டும் கேட்க வேண்டும் ( இந்த 21 நாட்களிலும் விநாயக கவசத்தை நாள் ஒன்றுக்கு 21முறை பாராயணம் செய்தால் நினைத்த காரியம் கைகூடும்).அடுத்த சஷநாள் ஏழை எளியவரோடு இருந்து உணவு உண்டு விதரத்தை நிறைவேற்ற வேண்டும்.


விநாயகரை வழிபட பதினாறு மந்திரங்கள்


ஒம் என்ற சிறப்பான பிரணவத்திற்கு கணபதியே தலைவர். விநாயகரை குறிப்பாக பதினாறு மந்திரங்களைச் சொல்லி வழிபடுதல் சிறப்பு. அவை:

ஒம் சுமுகாய நம:
ஒம் ஏக தந்தாய நம:
ஒம் கபிலாய நம:
ஒம் கஜகர்ணிகாய நம:
ஒம் விகடாய நம:
ஒம் விக்னராஜாய நம:
ஒம் கணாதிபாய நம:
ஒம் தூமகேதுவே நம:
ஒம் கணாத்யக்ஷ£ய நம:
ஒம் பாலசந்த்ராய நம:
ஒம் கஜாநநாய நம:
ஒம் வக்ரதுண்டாய நம:
ஒம் சூர்ப்பகர்ணாய நம:
ஒம் ஹேரம்பாய நம:
ஒம் ஸ்கந்த பூர்வஜாய நம:

விநாயகப் பெருமானை இந்தப் பதினாறு மந்திரங்களால் வழிபட்டால் பெருமானது அருள் பூர்ணமாகக் கிடைக்கும்.


சீனா, ஜப்பான், தாய்லாந்து, கம்பூச்சியா, மியன்மார் மொங்கோலியா, தீபெத்து ஆகிய நாடுகளிலுள்ள பௌத்த மக்களும் தங்கள் வணக்கத்தில் பிள்ளையாரையும் சேர்த்துக்கொண்டுள்ளனர். சீனாவில் காணப்படும் பல விநாயகர் சிலைகள் 1400 வருடங்கள் பழைமை வாய்ந்தவையென ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர் இப்படியே பல நாடுகளிலும் போற்றி வணங்கப்பட்ட, வணங்கப்பட்டு வருகின்ற விநாயகப் பெருமானை உலகுக்கு அறிமுகம் செய்துவைத்த பெருமை இந்து மதத்தையே சாரும். மகிமைபெற்ற எம்பிரானை நாமும் வாழ்த்தி வணங்கி உய்திபெறுவோம். “நற் குஞ்ரக் கன்று நண்ணில் கலைஞானம் கற்குஞ் சரக்கன்று காண்.” உமாபதி சிவாச்சாரியாரின் “திருவருட்பயன்” என்ற நூலின் காப்புச் செய்யுள்.

"ஓம் விக்னேஸ்வராய நமஹ"
ஓம் கம் கணபதயே நமஹ...!!

தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!
மேன்மைகொள் சைவநீதி . . . !
விளங்குக உலகமெல்லாம் . . . !
இன்பமே சூழ்க . . . !
எல்லோரும் வாழ்க . . . ! 


 "திருச்சிற்றம்பலம்" '' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்''