Thursday, October 30, 2014

பன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2014 - 2017


திருக்கணித பஞ்சாங்கப்படி எதிர்வரும் நவம்பர் 02.11.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 08.34 மணிக்கு சனி பகவான், துலா இராசியில் இருந்து விருச்சிக இராசிக்கு பெயர்ச்சியாகிறார்.

இந்த பெயர்ச்சியில், தளர்ச்சியை விட சற்று வளர்ச்சியே தருவார் சனி பகவான். குரு பகவானின் நட்சத்திரமான விசாக நட்சத்திரத்தில் சனி அமரப்போவதால், அசுபத்தை விட சுபமே நடக்கும். பொதுவாக ஜென்ம சனி, ஏழரை சனி, அஷ்டம சனி, அர்தாஷ்டம சனி உள்ளவர்கள் அதாவது மேஷ இராசி, சிம்ம இராசி, துலா இராசி, விருச்சிக இராசி, தனுசு இராசி ஆகிய இராசிகளில் பிறந்தவர்களுக்கு, இந்த சனி பெயர்ச்சியால் நேரம் சாதகமாக இல்லை என்று கூறுவார்கள்.

Wednesday, October 29, 2014

நான் எனும் மமதையை அழித்து மகத்துவமான வாழ்வியல் தத்துவங்களை போதிப்பதே சூரசம்ஹாரம்!!!


தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் தொடர்ந்து சண்டை-சச்சரவு ஏற்படுவதையும் இதில் அசுரர்கள் பெரும் அளவில் பாதிக்கப்படுவதையும் எண்ணி கவலை அடைந்தார் சுக்கிராசாரியார்.

தன் குலத்தில் பிறந்த அசுரர்களை மேலும் அசுர பலம் கொண்டவர்களாக மாற்ற முடிவு செய்தார். இதற்கு வழி தேடிய போது காசியப்ப முனிவரை பற்றி யோசித்ததார்.

Monday, October 27, 2014

திருவெண்காட்டில் ஐப்பசி சதுர்த்தி 27.10.2014 (சிறப்பு கர்ண பரம்பரைக் கதை)

http://www.thiruvenkadumandaitivu.com/2014/10/27102014.html

முப்பத்து முக்கோடி தேவர்கள் முதல் ஓரறிவு கொண்ட உயிரினங்கள் வரை எல்லா ஜீவன்களுக்கும் படியளப்பவர் பரமேஸ்வரன். இதை அறியாதவளா பார்வதிதேவி?! ஆனாலும் அவளுக்கு, ‘இந்தத் தொழிலை ஈசன் சரிவர கவனிக்கிறாரா?’ என்றொரு சந்தேகம். அதற்குத் தீர்வு காண முனைந்தாள். சிறு பாத்திரம் ஒன்றை எடுத்து வந்து அதற்குள் கறுப்பு எறும்புகள் சிலவற்றைப் பிடித்துப் போட்டு மூடி விட்டாள். ‘இந்த எறும்புகளுக்கு ஈசன் எப்படி உணவு அளிக்கிறார், பார்க்கலாம்!’ என்பது அவளது எண்ணம். மறு நாள், ”ஸ்வாமி, நேற்று எல்லா ஜீவராசிகளுக்கும் படியளந்தீர்களா?” என்று ஈசனிடம் கேட்டாள்.

Wednesday, October 22, 2014

திருவெண்காட்டில் கந்த சஷ்டி விரத அனுஷ்டானங்கள் 24.10.2014 - 29.10.2014 சிறப்புக்கட்டுரை ! ! !ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் தேய்பிறை சதுர்தசி என்ற 14-ம் நாளில் தீபாவளி வருகிறது. அன்றிரவு நரக சதுர்தசி ஸ்னானம் என்று தீபாவளி கங்கா ஸ்னானம் செய்கிறோம். மறுநாள் அமாவாசை வருகிறது.

இதற்குப் பிறகு வரும் வளர்பிறையில் பிரதமை, துவிதியை, த்ருதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி எனும் ஆறு நாட்களில் கந்த சஷ்டி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. இதனை ஆண்டுக்கு ஆண்டு கந்தர் சஷ்டி சமயத்தில் 6 நாட்கள் மட்டும் அனுஷ்டிப்பவர்களும் உண்டு.


Tuesday, October 21, 2014

திருவெண்காட்டில் தீபாவளித்திருநாள் வழிபாடு ! ! ! 22.10.2014 (சிறப்புக்கட்டுரை)


தீபம்’ என்றால் ஒளி விளக்கு. ‘ஆவளி’ என்றால் வரிசை. வரிசையாய் விளக்கேற்றி, இருள் நீக்கி, ஒளி தரும் பண்டிகையே தீபாவளி ஆகும். 

தீபத்தில் பரமாத்மாவும், நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து அருள் தருவதாக ஐதீகம்.

இந்த தீபாவளி திருநாளில் நமக்கு கிடைக்க முதற்காரணம் நரகாசுரன் தான். நரகாசுரன் மரணம் அடையும் தருவாயில் ஸ்ரீமஹாவிஷ்ணுவிடம் தான் மரணம் அடையும் இந்நாளில் எல்லோரும் ஸ்னானம் செய்து, புத்தாடை உடுத்தி, தீபங்கள் ஏற்றி மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டான். இந்த நாள் தான் தீபாவளி…

திருவெண்காட்டில் வாழ்வில் வளம்பெருகும் பிரதோச வழிபாடு ! ! ! 21.10.2014


 


இன்று செவ்வாய் பிரதோஷம் - மாலை வேலையில் 4 லிருந்து 6 குள் அருகில் இருக்கும் எல்லாம் வல்ல இறைவனான சிவபெருமானை வழிபடுங்கள் வாழ்வில் சகல வளமும் நலமும் கிட்டும்

Saturday, October 18, 2014

திருவெண்காட்டில் சகல வளங்களும் தரவல்ல ஐப்பசி ஏகாதசி ! ! ! 19.10.2014


"திருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் பரிபால மூர்த்தியாக வீற்றிருந்து திருவருள் பாலித்துக் கொண்டிருக்கும்  ஸ்ரீதேவி பூமிதேவி நாராயணர்"

‘காயத்ரிக்கு நிகரான மந்திரம் இல்லை. ஏகாதசிக்கு ஈடான விரதமில்லை’ என்பார்கள். விரதங்களிலேயே சிறந்ததாக கருதப்படுவது ஏகாதசி விரதம். ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் இருந்து 11&ம் நாள் ஏகாதசி. மாதத்துக்கு இரண்டு என ஒரு ஆண்டில் 24 அல்லது 25 ஏகாதசிகள் வரும். ஏகாதசியில் விரதம் இருப்பது ஒவ்வொரு மாதத்தில் ஒவ்வொரு பலன்களை தரும் என கூறப்படுகிறது.

Thursday, October 16, 2014

திருவெண்காடு சித்திவிநாயகரை வழிபட கைமேல் பலன் ! ! !


திருவெண்காடு திவ்வியநாம சேஷ்திரத்தில் மூலமூர்த்தியாக வீற்றிருந்து திருவருள் பாலித்துக்கொண்டிருக்கும் ஸ்ரீ அம்பலவாணர் சித்தி விக்கினேஸ்வரப்பிள்ளையார். 

கடன் தீர்க்கும் ஸ்ரீதோரண கணபதி!

'ணபதி வழிபாடு கைமேல் பலன்’ என்பது அவ்வையின் வாக்கு. ஆமாம்! ஒரே ஒரு கணம், கணபதியை மனதால் தியானித்து முறையிட்டால் போதும்; நமது கவலைகள் யாவும் சடுதியில் விலகும். வேண்டியது வேண்டியபடி நிறைவேறும்.

நாம் அவரைத் தேடிப் போக வேண்டியது இல்லை. அவரே, நம்மை நாடி வந்து அருளும் பொருட்டு, நாம் இருக்கும்- புழங்கும் இடங்களுக்கு அருகிலேயே... தெருக்கோடியிலும், மரத்தின் அடியிலும், நதிகளின் கரைகளிலுமாகக் கோயில் கொண்டிருக்கிறார்.

Sunday, October 12, 2014

திருவெண்காட்டில் சர்வ மங்களம் தரும் புரட்டாசி சனி விரதம் ! ! ! (11.10.2014)


http://www.thiruvenkadumandaitivu.com/2014/10/11102014_12.html

சனீஸ்வரன் காயத்ரி மந்திரம்:
பங்கு பாதாய வித்மஹே! சூர்ய புத்ராயா தீமஹி!!
தந்நோமந்த ப்ரசோதயாத்!!

"புரட்டாசி சனி" என அழைக்கப்படும் புரட்டாசி சனிக்கிழமை விரதம் புரட்டாசி மாதத்தில் (தமிழ் மாதம்) வரும் சனிக்கிழமைகளில் சனிபகவானை நினைந்து சனி தோஷம் நீங்க கடைப்பிடிக்கப்படும் விரதம் ஆகும். சனீஸ்வரன் கோசாரமாக சஞ்சரிக்கும் போது (தற்போதைய கிரக சஞ்சாரத்தில்) ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரன் நிற்கும் (சந்திர) இராசிக்கு 5 வது இராசியில் சஞ்சரிக்கும் காலம் பஞ்சம சனியென்றும்;

திருவெண்காட்டில் சந்தோஷம் அருளும் சங்கடஹர சதுர்த்தி‬ ! ! ! (11.10.2014)"எளியோர்க்கு எளியோனாக இரங்கி வரும் எம்பெருமானே!..
எங்களுடைய குற்றங்களை எல்லாம் பொறுத்தருள்க!..
எல்லாக் குறைகளையும் நீக்கி எல்லாரையும் காத்தருள்க."

பிள்ளையாரை வழிபட சங்கடகர சதுர்த்தி நாள் மிகவும் ஏற்றது. பவுர்ணமியை அடுத்த நான்காம் நாள் தேய்பிறையில் வரும் சதுர்த்தி நாளையே ‘சங்கடஹர சதுர்த்தி’ என்பர். சங்கடங்களை அழிப்பதால் இது சங்கடஹர சதுர்த்தி எனப்படுகிறது.

Friday, October 10, 2014

திருவெண்காட்டில் கேதார கௌரி விரதம் - சகல சௌபாக்கியங்களும் நல்கும் காப்பு விரதம் 03.10.2014 -23.10.2014 சிறப்பு கட்டுரை
மாங்கல்ய பாக்கியமும், கணவன் மனைவி இணை பிரியாது அன்போடு சுகவாழ்வு வாழும் வரமும், சகல சௌபாக்கியங்களும் நல்கும் காப்பு விரதம் - கேதார கௌரி விரதம்

ஆண்டு தோறும் புரட்டாதி மாத சுக்கிலபட்ச தசமி முதல் கிருஸ்ண பட்சத்து சதுர்த்தசியீறாக (ஐப்பசி மாதத்துத் தீபாவளி அமாவாசை) இருபத்தொரு நாட்கள் கைக்கொள்ளும் விரதமாகும். இவ் விரதம் இவ்வருடம் 03.10.2014 வெள்ளிக்கிழமை முதல் 23.10.2014 வியாழக்கிழமை வரை அமைவதாக சோதிடம் கணித்துள்ளது. இவ் விரதத்தை அனுஷ்டிப்போர் சிவ-சக்தி அருளால் சகல சௌபாக்கியங்களும் பெற்று தீர்க்க சுமங்கலியாக வாழ்ந்து வீடுபேறடைவர் என்பது ஐதீகம்.

Monday, October 6, 2014

திருவெண்காட்டில் சகல ஐஸ்வர்யங்களும் தர வல்ல பிரதோஷ வழிபாடு (06.10.2014)
சிவ குடும்பம் திருவெண்காடு மண்டைதீவு

 http://www.thiruvenkadumandaitivu.com/2014/10/06102014_6.html

திருவெண்காடு திவ்வியநாம சேஷ்திர பொற்சபையில்(பொன்னம்பலம்) வீற்றிருந்து ஆனந்த தாண்டவம் புரியும் அருள்மிகு  ஸ்ரீ சிவகாம சுந்தரி உடனுறை  அழகிய ஸ்ரீமத் ஆனந்த நடராஐமூர்த்தி ஸ்ரீ சித்தி விநாயகப்பெருமான்  ஸ்ரீ பாலமுருகன்  மாணிக்கவாசக சுவாமிகள்


சிவபெருமானுக்கு உகந்த விரதங்களில் பிரதோஷமும் ஒன்று. பிரதோஷ வழிபாடு சகல ஐஸ்வர்யங்களையும் தர வல்லது.

குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.திருமணமாகாத கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.வறுமை நீங்கி செல்வம் பெருகும். நோய்கள் நீங்கும்.எடுத்துக் கொண்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும்.


Saturday, October 4, 2014

திருவெண்காடு திவ்விய நாமச்சேஸ்திர சிறப்பு !!!


இந்தியாவின் தென்பகுதியல் கல்விக்கு அதிபதியான ஸ்ரீ புதன் பகவான் அமைந்துள்ள திருக்கோவிலே திருவெண்காடு. இக்கோவிலின் மூலவராக ஸ்ரீ சுவேதாரண்யேஸ்வரரும் (ஸ்ரீ புதன் பகவான்)

Wednesday, October 1, 2014

திருவெண்காட்டில் முப்பெருந்தேவிகளின் நவராத்திரி விழா சிறப்பு கட்டுரை ! ! !


http://www.thiruvenkadumandaitivu.com/2014/10/blog-post_1.html 

திருவெண்காடு  மண்டைதீவு 

www.thiruvenkadumandaitivu.com


சாக்த வழிபாடு என்பது சக்தியை, அம்பிகையை, அகிலாண்ட நாயகியை, அன்னை பராசக்தியை வழிபடும் பண்டிகைகளில் முக்கியமானது ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் மிகச் சிறப்பு வாய்ந்த நவராத்திரி விழாதான்.