Sunday, October 12, 2014

திருவெண்காட்டில் சந்தோஷம் அருளும் சங்கடஹர சதுர்த்தி‬ ! ! ! (11.10.2014)



"எளியோர்க்கு எளியோனாக இரங்கி வரும் எம்பெருமானே!..
எங்களுடைய குற்றங்களை எல்லாம் பொறுத்தருள்க!..
எல்லாக் குறைகளையும் நீக்கி எல்லாரையும் காத்தருள்க."

பிள்ளையாரை வழிபட சங்கடகர சதுர்த்தி நாள் மிகவும் ஏற்றது. பவுர்ணமியை அடுத்த நான்காம் நாள் தேய்பிறையில் வரும் சதுர்த்தி நாளையே ‘சங்கடஹர சதுர்த்தி’ என்பர். சங்கடங்களை அழிப்பதால் இது சங்கடஹர சதுர்த்தி எனப்படுகிறது.

கர்வ மிகுதியால் பிள்ளையாரின் கோபத்துக்கு ஆளான சந்திரன் தன் உடலில் பொலிவிழந்து வருந்தினான். இறுதியில் பிள்ளையாரிடமே சரணடைந்தான். பிள்ளையார் அருள்புரிந்ததோடு ‘சங்கடஹர சதுர்த்தி உதய நேரத்தில் எம்மை பூஜிப்பவர் யாவருக்கும் இன்னல்கள் நீக்கி அருள்புரிவேன்’ என்றருளினார் என்கிறது புராண தகவல்.
 


 "அல்லல்போம் வல்வினைபோம் அன்னை வயிற்றில் பிறந்த
தொல்லைபோம் போகாத் துயரம்போம் - நல்ல
குணமதிகமாம் அருணைக் கோபுரத்துள் வீற்றிருக்கும் செல்வக்
கணபதியைக் கைதொழுதக் கால்"


ஆகவே சங்கடஹர சதுர்த்தி நாளில் அதிகாலையில் நீராடி, விரதமிருந்து பிள்ளையாரை வழிபட நல்ல பலன் கிட்டும் என்பது ஐதீகம். சங்கடஹர சதுர்த்தி அன்று மாலை வரை உணவு அருந்தாமல் விரதம் இருக்க வேண்டும்.

முடியாதவர்கள் நீர் ஆகாரம் மட்டும் அருந்தி விரதமிருக்கலாம். மாலையில் அருகில் உள்ள விநாயகர் கோவிலுக்கு சென்று நெய் விளக்கு ஏற்றி அங்கு நடக்கும் பூஜையில் கலந்து கொண்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

                                                        
                                                            ஓம் கம் கணபதயே நமஹ...!!

தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!
மேன்மைகொள் சைவநீதி . . . !
விளங்குக உலகமெல்லாம் . . . !

திருச்சிற்றம்பலம்'' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்''