Saturday, May 27, 2017

திருவெண்காட்டில் விநாயகர் சதுர்த்தி 28.05.2017 பன்னிரண்டு ராசிகாரர்களும் வழிபடவேண்டிய விநாயகப்பெருமான் ! ! !


வரவர் ராசிக்குரிய விநாயகப்பெருமானின் மூர்த்தங்களை வழிபட்டால் சிறப்பு இதோ.. 

12 ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய விநாயகர்

மேஷம்: செவ்வாயின் ஆதிக்கத்தைப் பெற்ற நீங்கள் இயற்கையில் வீரம் மிக்கவர்கள். எவருக்கும் அஞ்சாதவர்கள். மனதிற்கு சரியென்று பட்ட விஷயத்தை எவர் தடுத்தாலும் விடாது தைரியத்துடன் செயல்படுத்துபவர்கள். மனோ தைரியம் மிக்க நீங்கள் வழிபட வேண்டியவர் வீர கணபதி.

Monday, May 22, 2017

திருவெண்காடு புண்ணிய சேஷத்திரத்தில் பிரதான தோஷங்களை நீக்கும் பிரதோஷ வழிபாடு ! ! ! 23.05.2017



பிரதான தோஷங்களை நீக்குவதுதான் பிரதோஷ வழிபாட்டின் முக்கிய சிறப்பு. யார் ஒருவரது ஜாதகத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் குறைந்தது 4 தோஷங்களாவது இருக்கும். எத்தனை தோஷங்கள் இருந்தாலும், பிரதோஷ தினத்தில் சிவனை வழிபடுவதன் மூலம் பயன்பெறலாம். 

பொதுவாக பிரதோஷ தினத்தில் சிவனை அனைவரும் வணங்குகின்றனர். இந்த இடத்தில் “அனைவரும்” என்பது மனிதர்களை மட்டும் குறிக்கவில்லை. முப்பத்து முக்கோடி தேவர்கள், பிரம்மா, விஷ்ணு ஆகியோரையும் குறிக்கும். அந்த நேரத்தில் சிவனும் ஷேம நலத்திற்காக வழிபாட்டில் ஈடுபடுவார் என்பது ஐதீகம்.

Saturday, May 13, 2017

திருவெண்காடு சித்திவிநாயகப் பெருமானை சங்கடஹர சதுர்த்தி நன்நாளில் விரதம் இருந்து வழிபட்டால் கடன் தொல்லை நீங்கும் ! ! ! 14.05.2017



விரதம் என்றால் உண்ணா நோன்பு என்று பொருள். உணவு உண்ணாமல் இறைவனை முழுமனதோடு வழிபட்டால் நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கை. விரதம் என்றால் சிலர் முழுமையாக உணவு உண்ணாமல் இருப்பர், சிலர் காலையில் மட்டும் உணவு உண்ணாமல் இருப்பர். சிலர் பால் மற்றும் பழம், பழச்சாறு இவற்றை உண்டு விரதத்தைப் பூர்த்தி செய்வர்.

ஒவ்வொருவரும் தங்களுக்கு என்ன கோரிக்கை இருக்கிறதோ, அதற்கேற்ற கடவுளைத் தேர்ந்தெடுத்து அதற்குரிய நாளில் விரதத்தை மேற்கொள்ள வேண்டும். அந்த அடிப்படையில் இந்தக் காலக் கட்டத்தில் ஒரு மனிதனுக்கு சங்கடம் என்பது ஒன்று மனதால் வருகிறது அல்லது பணத்தால் வருகிறது. இந்த சங்கடங்கள் அகன்று சந்தோஷம் பெருக வேண்டுமானால், மூல முதற்கடவுளாம் கணபதிக்கு சங்கடஹர சதுர்த்தி விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும்.

Thursday, May 11, 2017

திருவெண்காடு புண்ணிய சேஷத்திரத்தில் சிறப்பான வாழ்வு தரும் சித்ரா பவுர்ணமி ! ! ! 10.05.2017


சிறப்பான வாழ்வு தரும் சித்ரா பவுர்ணமி விரத வழிபாடு பன்னிரண்டு மாதங்களில் வரும் பவுர்ணமியில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் சித்ரா பவுர்ணமி கருதப்படுகிறது. இந்த நாளில் விரதம் இருந்தால் கிடைக்கும் பலன்களை பார்க்கலாம்.

வழிபாடுகளே நம் வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். வழிபாடுகளிலும் கூட நிலவு நிறைந்த நாளிலும், நிலவு மறைந்த நாளிலும் மேற்கொள்ளும் விரதங்கள் உடனடி பலன்களை வழங்கக்கூடியவை.

Saturday, May 6, 2017

திருவெண்காடு புண்ணிய சேஷத்திரத்தில் பஞ்சமா பாவங்கள் விலகும் பிரதோஷ வழிபாடு ! ! ! 07.05.2017


பிரதோஷ வேளையில் சிவாலயங்களுக்குச் சென்று வழிபாடு நடத்தினால் 5 ஆண்டு தினமும் சிவாலயம் சென்று வழிபாடு நடத்திய பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை! 
பிரதோஷங்களில் 20 வகைகள் உள்ளன. அந்நாள்களில் நடத்தப்படும் வழிபாடுகள் அதன் பலன்கள்:
1. சோமவார பிரதோஷம்: திங்கள்கிழமையும் திரயோதசி திதியும் வரும் நாள் சோமவார பிரதோஷம். அன்று சிவ வழிபாடு செய்தல் மிகவும் சிறப்பு. குறிப்பாக ஜாதகத்தில் சந்திரன் நல்ல நிலையில் இல்லாதவர்கள் சோம வார பிரதோஷம் அன்று சிவன் கோயில்களில் அர்ச்சனைக்கு வில்வம் அளித்து வழிபட்டால் துயரங்கள் விலகும்.