Thursday, July 31, 2014

நல்லூர் கந்தசுவாமி திருக்கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் ! ! !


இலங்கையில் மிகவும் புகழ் பெற்ற இந்துக் கோயில்களுள் முக்கியமானது. இது இலங்கையின் வடபகுதியிலுள்ள யாழ்ப்பாணக் குடாநாட்டில், யாழ்ப்பாண நகரத்திலிருந்து சுமார் இரண்டு மைல் தொலைவிலுள்ள நல்லூர் என்னும் இடத்தில் அமைந்துள்ளது. நல்லூர் 12ம் நூற்றாண்டு தொடக்கம் 17ம் நூற்றாண்டின் முற்பகுதிவரை இருந்த யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகரமாக இருந்தது. இக்கோயிலின் தோற்றம் பற்றிச் சரியான தெளிவு இல்லையெனினும், யாழ்ப்பாண அரசு காலத்தில் மிகவும் முக்கியமான ஒரு கோயிலாக இருந்ததாக அறியப்படுகிறது.

Monday, July 28, 2014

திருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான தற்போதைய பஞ்சதள இராஐ கோபுர தரிசனம் ! ! ! (வீடியோ இணைப்பு)




வீடியோ www.senniyoor.com 
நன்றி.

திருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான தற்போதைய பஞ்சதள இராஐ கோபுர தரிசன படங்கள்

Saturday, July 19, 2014

திருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான பஞ்சதள ராஜகோபுர கட்டுமான பணியில் முதலாம் தள திருப்பணி ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. 19-07-2014 (படங்கள் இணைப்பு)

திருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான பஞ்சதள ராஜகோபுர கட்டுமான பணியில் வியாழவரி வரைக்குமான  வேலைகள் நிறைவுபெற்று, 23.06.2014 திங்கள் கிழமை நண்பகல் 12.30 மணியளவில் முதலாம் தளத்திற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டது.

இத் திருப்பணி  சுவிஸ் வாழ் மண்டைதீவு மக்களின் நிதி உதவியுடன் திரு.ஞானலிங்கம் பரணிதரன் அவர்கள் பொறுப்பேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

Thursday, July 17, 2014

திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயக பெருமானை தரிசித்த வட மாகாண முதலமைச்சர் மான்புமிகு சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் (படங்கள் இணைப்பு)



யாழ்.மண்டைதீவு பிரதேச வைத்தியசாலை திறப்பு விழாவிற்கு வருகை தந்து பிரதம விருந்தினராக கலந்து கொண்ட வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட வடமாகாண சுகாதார சுதேச வைத்தியத்துறை அமைச்சர் வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை. சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், ஈ.சரவணபவன், சி.சிறிதரன் ஆகியோரும் கெளரவ விருந்தினர்களாக வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா, வட மாகாணசபை உறுப்பினர்களான பா.கஜதீபன், இ.ஆனோ ல்ட் மற்றும் வட மாகாண சுகாதார சுதேச வைத்தியத் துறை அமைச்சின் செய லாளர் இ.ரவீந்திரன், வேலணை பிரதேச சபைத் தவிசாளர் சி.சிவராசா, வேலணை பிரதேச செயலாளர் திருமதி ச.மஞ்சுளாதேவி ஆகியோர் திருவெண்காட்டிற்கு வருகைதந்து திருவெண்காட்டில் விற்றிருந்து திருவருள் பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ சித்தி விநாயக பெருமானை தரிசித்துச்சென்றனர்.

Wednesday, July 16, 2014

திருவெண்காட்டில் சௌபாக்யம் அருளும் சங்கடஹர சதுர்த்தி 15.07.2014


விநாயகரை வழிபட சங்கடகர சதுர்த்தி நாள் மிகவும் ஏற்றது. பவுர்ணமியை அடுத்த நான்காம் நாள் தேய்பிறையில் வரும் சதுர்த்தி இன்றைய (15.07.2014) ‘சங்கடஹர சதுர்த்தி’ என்பர். சங்கடங்களை அழிப்பதால் இது சங்கடஹர சதுர்த்தி எனப்படுகிறது. 

Monday, July 14, 2014

திருக்கோணேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் ! ! !


ஈழத்தில் வரலாற்று சிறப்புமிக்க திருத்தலங்களுள் திருக்கோணேச்சரம் (திருக்கோணேஸ்வரம்) இலங்கையில் திருகோணமலையில் உள்ள திருஞானசம்பந்தரின் பாடல் பெற்ற தலமாகும். வருடா வருடம் ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவனின் விக்கிரகம் நகர்வலம் வருவதும் குறிப்பிடத்தக்கது. இக்கோயிலின் தீர்த்தம் பாவனாசம் என அழைக்கப் படுகின்றது. அதன் அர்த்தம் பாவங்களை கழுவித் தீர்க்க வல்லது.

Thursday, July 3, 2014

திருவெண்காட்டில் ஆனி உத்தர திருமஞ்சன தரிசனம் இரண்டாம் பாகம்! ! ! (படங்கள் இணைப்பு)

மண்டைதீவு - திருவெண்காடு பொற்சபையில் (பொன்னம்பலம்) வீற்றிருந்து அருள்பாலித்துக்கொண்டு ஆனந்தத் தாண்டவம் புரியும் ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீ ஆனந்த நடராஐமூர்த்திக்கு சிறப்பு பூஜை வழிபாடும் அர்ச்சனை ஆராதனையும் இடம் பெற்றது. படங்கள் இணைப்பு

திருவெண்காட்டில் ஆனி உத்தர திருமஞ்சன தரிசனம் ! ! !

                 

ஆனி மாதம் (04.07.2014)வரும் ஆனித் திருமஞ்சனம் மிகவும் விஷேசமானது. இந்த ஆனித் திருமஞ்சனம் சிவபெருமானுக்கு உகந்தது. சிவாலயங்களில் சிவனக்கு திருமஞ்சனம் நடைபெறும் இன்று விரதமிருந்து சிவனை வழிபட்டால் சகல விதமான பாவங்களும் தீரும். சிவனுக்கு உகந்த விரதங்களில் இந்த திருமஞ்சனமும் ஒன்று.

மண்டைதீவு - திருவெண்காடு பொற்சபையில் (பொன்னம்பலம்) வீற்றிருந்து அருள்பாலித்துக்கொண்டு ஆனந்தத் தாண்டவம் புரியும் ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீ ஆனந்த நடராஐமூர்த்திக்கு சிறப்பு பூஜை வழிபாடும் அர்ச்சனை ஆராதனையும் இடம் பெறும்.